Pages

08/02/2014

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?



தமிழ் சினிமாவில் இன்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான். ரஜினி ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு மட்டும் உரிய பட்டம் இல்லை எனக்கு அடுத்து இன்னொருவர் வருவார் என்று சொன்னதிலிருந்து அடுத்த இடத்தில இருக்கும் நடிகர்களுக்கு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. எத்தனை நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று நினைத்தாலும் ரசிகர்கள் மனதில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நினைப்பது இரு நடிகர்களை தான். அந்த நடிகர்கள் யார் என்று நான் சொல்ல தேவையில்லை உங்களுக்கே தெரியும். விஜய் மற்றும் அஜித் தான் அந்த நடிகர்கள்.



அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்றால் முந்தய சூப்பர் ஸ்டாரிடம் இருக்கும் சில நற்பண்புகள் திறமைகள் இருக்க வேண்டும் மற்றும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன அவைகளும் இருக்க வேண்டும். அந்த நற்பண்புகள், திறமைகள் மற்றும் விதிமுறைகள் விஜய் மற்றும் அஜித்திடம் இருக்கிறதா என்று பாப்போம்.

முதல் தகுதி:

தான் நடிக்கும் படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் மறந்தும் கூட நடிக்க முயற்சி செய்யகூடாது.

இந்த தகுதி விஜய் மற்றும் அஜித்திடம் நூறு சதவிதம் உள்ளது. 

விஜய் தன படங்களில் பறந்து காட்டுவார். அஜித் தன படங்களில் நடந்து காட்டுவார். ஆனால் நடிப்பு என்பது இருவருக்கும் ஒவ்வாமை தான்.

இரண்டாவது தகுதி:

தான் என்ன பேசினாலும் செய்தாலும் அது சரி தான் என்று பிறரிடம் சண்டையிடும்   பெருமளவு ரசிகர்களை கொண்டிருக்க வேண்டும்.


இந்த விஷயத்தில் விஜயும் அஜித்தும் ரஜினியை விட கொடுத்து வைத்தவர்கள். இவர்களுக்காக உழைபதற்கு என்று பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஒரு கூட்டமே இருக்கிறது. தமிழர் பண்பாடு என்ன என்பதை விஜய் அஜித் ரசிகர்கள் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் போடும் ஸ்டேட்டஸ் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மூன்றாவது தகுதி:   

அரசியலுக்கு வருகிறேன் என்றும் சொல்லகூடாது வர மாட்டேன் என்றும் சொல்ல கூடாது. கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் ஆனால் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் என்று ரசிகர்களை குழப்ப நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய்க்கு வெகு நாட்களாகவே உள்ளது. நான் அரசியலுக்கு வரவில்லை ஆனால் அரசியலில் ஆர்வம் உள்ளது என்று ரசிகர்களை உசுபேத்துவது விஜயின் வழக்கம். அஜித்தும் வீரம் படத்தில் ஆசையில் வரல ஆத்திரத்தில் வந்திருக்கேன் என்று தன் பங்குக்கு கொளுத்திபோட்டுவிட்டார். 

நான்காவது தகுதி:

தனக்கு விளம்பரம் பிடிக்காது எளிமையாக இருப்பது தான் பிடிக்கும் என்பது போல் இரண்டு நாள் கழுவாத முகத்தோடும் ஒரு வரம் துவைக்காத துணி ஒன்றையும் அணிந்து அணைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவேண்டும். ஆனால் இமைய மலை செல்லும்போது மட்டும் தன்னுடன் ஒரு புகைப்படகாரரை கூட்டிசென்று அங்கு தான் குகையில் இறங்குவது ஏறுவது என்று பல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட வேண்டும்.

இந்த தகுதி விஜய் அஜித் இருவருக்கும் கிடையாது. விஜய் தனக்கு விளம்பரம் வேண்டும் என்பது போலவே அனைத்தையும் செய்வார். அஜித் தனக்கு விளம்பரமே வேண்டாம் என்று எந்த நிகழ்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். ஆனால் அம்மா அழைக்கும் விழா மட்டும் அஜித்திற்கு விழாவாக தெரியாது போல தவறாமல் கலந்துகொள்வார்.

ஐந்தாவது தகுதி:

தனது படம் ரிலிஸ் ஆகும்போது மட்டும் அரசியலுக்கு வருவேன் என்று எதாவது பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்து படத்தை விளம்பர படுத்த வேண்டும். மற்ற நாட்களில் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கவேண்டும். கேட்டால் எளிமை என்று சொல்லிகொள்ளவேண்டும்.

இந்த விஷயத்தில் விஜய்யை விட அஜித் அதிக தகுதி உடையவர் மற்ற நாட்களில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது ஆனால் படம் ரிலிஸ் ஆகும் சமயம் வந்துவிட்டால் பைக்கை எடுத்துக்கொண்டு வெளிவந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுப்பது அல்லது மொட்டை அடித்துக்கொண்டு போஸ் கொடுப்பது போன்று சில பப்ளிசிட்டி ஸ்டன்ட் களை செய்வார்.

ஆறாவது தகுதி:

நிஜ வாழ்வில் தான் ரொம்ப நல்லவன் போல காட்டிகொள்ள வேண்டும் ஆனால் சினிமாவில் தவாறன பாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு குடி, சிகரட், போன்ற மிக நல்ல பழக்கங்களை கற்று தர வேண்டும்.

இந்த தகுதி அஜித்திற்கு மட்டும் தான் உள்ளது என்பதை தனது மங்காத்த மூலம் உலகறிய எடுத்து சொல்லிவிட்டார் வெங்கட் பிரபு.

ஏழாவது தகுதி:

தனக்கு இணையாக உள்ள போட்டி நடிகர் தனக்கு நெருக்கமான நண்பர் என்பது போல காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் அவருக்கு சிறந்த விருது அல்லது அவரை பெருமை படுத்தும் விதமாக எதாவது நடந்தால் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய் அஜித்திற்கு சுத்தமாக கிடையாது. இருவரும் மோதிகொள்ளும்போது வசனங்கள் மூலம் நேரடியாக எதிரி என்று காட்டிகொண்டார்கள் இணைந்த போது இருவரும் பரஸ்பர அன்பு காட்டிவருகிறார்கள்.

எட்டாவது தகுதி:

தான் நடிக்கும் படங்களில் லாஜிக் என்று ஒன்றை எதிர்பார்கவே கூடாது என்ற அளவுக்கு ரசிகர்கள் முதல் படம் பார்க்கவரும் அனைவரையும் பழக்கபடுத்தி வைத்திருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய்க்கு அதிகமாகவே உள்ளது தனது பெரும்பாலன படங்களில் இதை அவர் மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறார். அஜித் எப்போதாவது இந்த வேலையை தனது ஒரு சில படங்களில் செய்வார்.

ஒன்பதாவது தகுதி:

சினிமாவில் நன்றாக நடிப்பதற்கு விருது என்று ஒன்று உள்ளது ஆனால் அப்படி ஒன்று உள்ளதா என்று கேட்கும் அளவிற்கு நல்ல மட்டமான மசாலா படங்களை தரவேண்டும். விருது எல்லாம் எவனுக்கு வேண்டும் எனக்கு என் பாதாம் ஹிட் ஆகி காசு வந்தால் போதும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் நான் நல்ல கமெர்சியல் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்று மறைமுகமாக சொல்லவேண்டும்.

இந்த விஷயத்தில் விஜய் இதை வெளிப்படையாக சொல்லிவிட்டு மசாலா படங்களை தருவார் ஆனால் அஜித் தனது பேட்டிகளில் நான் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு அதே மசாலா படங்களை தான் தருவார். ஆனால் இருவரின் ரசிகர்களும் அந்த மொக்கையை சூப்பர்  என்று சொல்லும் அளவிற்கு ஹிட் படமாக மாற்றுவார்கள்.

பத்தாவது தகுதி:

ஒவ்வொரு பட வெற்றியின் போதும் இந்த வெற்றிக்கு என் ரசிகர்கள் தான் காரணம் அவர்கள் தான் என் உயிர் ரசிகர்களுக்காக நான் எதையும் செய்வேன் என்று சொல்லி ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு கடைசிவரை ஒன்றுமே செய்யகூடாது.

இந்த தகுதி விஜய் அஜித் இருவருக்கும் கிடையாது. விஜய் ரசிகர்களை கவரும் வண்ணம் எனக்கு எல்லாமே ரசிகர்கள் தான் என்று சொன்னாலும் அதனை நிருபிக்கும் வண்ணமாக அவ்வப்போது ரசிகர்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அஜித் அப்படியே மாறுபட்டவர் என் படம் பிடித்தால் பாருங்கள் மற்றபடி எனக்காக நீங்கள் உங்கள் வாழ்கலையை வீணாக்கி என் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள் என்று சொல்லிபார்த்தார் கடைசியில் ரசிகர்கள் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் ரசிகர் மன்றத்தை கலைத்தேவிட்டார்.

எப்படி பார்த்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி விஜய் அஜித் இருவருக்கும் சொல்லும் அளவில் இல்லை. இவர்களுக்கு மட்டும் இல்லை மற்ற நடிகர்களுக்கும் கூட மேற்கூறிய நல்ல??? தகுதிகள் இருபதாக தெரியவில்லை எனவே இந்த அணைத்து சிறப்பு??? தகுதிகளையும் கொண்டிருக்கும் ஒரே நபர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பதை மிக பணிவுடன் தெரிவித்துகொள்வதில் மகிழிச்சியடைகிறேன்.



118 comments:

  1. vela vetti illaya ungallukku..pozhappu

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவின் தலைப்பை பார்த்த உடனேயே நீங்கள் அதை தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

      Delete
  2. முதல் தகுதி : இந்த தகுதி விஜய் அவர்களுக்கு இருக்கா இல்லையா என்ற ஆராய்ச்சி தேவையற்றது. ஆனால் ரஜினி மற்றும் அஜித்துக்கு நடிப்பு வராது என்ற உங்கள் கண்டுபிடிப்பை கல்வெட்டில்தான் செதுக்கவேண்டும்.

    இரண்டாவது தகுதி: இதற்கு அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

    மூன்றாவது தகுதி: அஜீத் எந்த காலத்திலும் இப்படி சொன்னதில்லை. நீங்களாக இட்டுக்கட்டி இருக்கிறீர்கள். இதற்கு முற்றிலும் ஒத்து வருபவர் விஜய். ஆனால் அரசியலுக்கு விஜய் சரிப்பட்டு வரமாட்டார் என்பது பலமுறை நிருபணமான ஒன்று. அது அவருக்கும் தெரியும். ஆனால் ஆசை யாரை விட்டது (இது அவரது அப்பாவின் ஆசை)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அஜித் ரசிகர் என்பதற்காக அந்த தகுதி விஜய்க்கு இல்லை என நினைக்கலாம். ஆனால் இருவருக்கும் அந்த தகுதி உண்டு என்பதை அவர்களின் ரசிகர்கள் அடிகடி நிருபித்து வருகிறார்கள்.

      நன்றாக படித்து பாருங்கள் ரஜினி, அஜித் விஜய் இவர்களுக்கு நடிக்க வராது என்று சொல்லவில்லை. தன் படத்தில் நடிப்பதில்லை என்று தான் சொல்லியிருக்கிறேன்.



      //இதற்கு அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. //



      அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பது தான் உண்மை.



      அஜித் தனது பேட்டியில் அப்படி சொன்னதாக சொல்லவில்லை. வீரம் படத்தில் அந்த வசனத்தை பேசியுள்ளார் நானாக வேண்டுமென்றே எழுதவில்லை. வீரம் படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.

      விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் என்பது தான் என் விருப்பம்.

      Delete
  3. நான்காவது தகுதி: இதற்கு என் கண்டனங்கள். ரஜினியின் எளிமை ஊரரிந்தது. அறைவேக்காட்டுதனமாக எழுதாதீர்கள். சண்டியர்கரணின் சகவாசமா? வாழ்த்துக்கள்.

    ஐந்தாவது தகுதி: இதில் பத்திரிக்கைகளுக்கு பெரும் பங்கு உண்டு. அஜீத் விஷயத்தில் கடந்த மூன்று ஆண்டுகள் மட்டுமே உங்களுக்கு பரிச்சயமா? அப்படியானால் இப்படித்தான் பேசுவீர்கள். ரஜினி உச்சத்தில் இருந்த காலத்தில் என்ன நடந்தது? இதுவரை பேட்டி மற்றும் கருத்துக்களை மிகவும் குறைவாக கொடுத்தவர்களுள் முதலிடத்தில் இருப்பவர் கவுண்டமணி. இரண்டாவது ரஜினி. மூன்றாவது கமல். நான்காவது அஜீத்(இவரது புகழ் காலம் குறைவாக இருக்கிறது)

    ReplyDelete
    Replies
    1. தன்னுடைய தனிப்பட்ட ஆன் மிக தேடலுக்காக செல்பவர் ஏன் புகைபடகாரரை கூட்டிசென்று படங்களை வெளியிட வேண்டும் அல்லது வெளியிட அனுமதிக்க வேண்டும்.



      இந்த பதிவு இப்போது உள்ள சூழ்நிலைக்காக எழுதப்பட்டது அஜித் இப்போது எப்படி இருக்கிறாரோ அதை பற்றி தான் எழுத முடியும்.



      கவுண்டமணி அதிகம் பேசாதவர். கமல் குறைவாக பேசினாலும் அவரது பேச்சு ஈர்க்கும் வண்ணமாக இருக்கும். அஜித் பேசவே மாட்டார் அவர் பேசினால் அதிகமாக பேசுவார் அதனால் பல பிரச்சனைகள் வரும். ஆனால் அஜித் பேசுவதில் ஒரு நியாயம் இருக்க தான் செய்கிறது. ரஜினி பேசினாலே எதாவது பிரச்சனையாக தான் பேசுவார் அதனால் அவரே மாட்டிகொள்வார் அதான் தான் பேசாமல் இருக்கிறார் என்பது தான் உண்மை.

      Delete
    2. தம்பி ரஜினி அஜித் இருவரும் விளம்பர பிரியர்கள் என்று கரெக்டா கண்டுபிடிச்சிட்டயே இந்த அறிவுதான் உன்னை விஜய் ரசிகனாக ஆக்கியிருக்கூ கீப் இட் அப் தம்பி இந்த அறிவு உன்னை எங்கயோ கொண்டு போகபோவுது பாரேன்

      Delete
    3. நான் சொன்னது உண்மையாக இருந்தும் அதை கிண்டல் செய்யும்உங்கள் அறிவு உங்களை எங்கயும் கொண்டுசெல்லாது.

      Delete
    4. இந்த பதில் மூலம் நீ என்னதான் சொல்ல வர தம்பி

      Delete
    5. நான் மேலே சொன்னவற்றில் தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டி தவறு இருகிறது என்று சொல்லவேண்டும் அதை விடுத்தது கலாய்க்கும் உங்கள் அறிவை பற்றி தான் சொல்லவரேன்.

      Delete
  4. ஆறாவது தகுதி: நிஜவாழ்வில் நடித்தார்களா? தளபதி வந்த சமயத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டே ரஜினி அளித்த பேட்டி குறித்து உங்களுக்கு தெரியுமா? பல மேடைகளில் தான் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டவர் ரஜினி. அதே போலத்தான் அஜித்தும்.

    இதில் விஜயை விட்டு விட்டீர்களே? சிவகாசி சமயத்தில் சிவகாசி நகருக்கு ஜீப்பில் வந்தபோது அவர் எத்தனை பாட்டீல் பியர் குடித்தார் என்பது எனக்கு தெரியாது. அது சரி நாயகி அம்மாவுக்கு சோப்பு போடுவது, நாயகியின் டிக்கியை பிடித்து பிசைவது (மூன்று படங்களில்) எல்லாம் ரொம்ப நல்ல பழக்கமோ? (ஆரம்பிச்சுட்டாங்கடா இந்த அஜீத் ரசிகனுங்க... என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது)

    ReplyDelete
    Replies
    1. பாலா அவர்களே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருகிறார்கள் என்பதை விட திரையில் எப்படி இருகிறார்கள் என்பதை தான் அதிகமாக கவனிகிறார்கள் அதை போல இருக்கத்தான் நினைகிறார்கள். அதிலும் பாமர ரசிகர்கள் திரை வடிவ நடிகர்கள் போல இருக்க தான் அதிகம் விரும்புகிறார்கள். நிஜத்தில் நற்பண்புகளை கொண்ட அஜித் திரையில் தவறான வழிகாட்டியாக அமைவது வருத்தத்திற்கு உரிய ஒன்று.


      விஜய் தனது பெரும்பான்மையான படங்களில் நெகடிவ் வசனங்களை தவிர்த்திருக்கிறார்.

      Delete
    2. என்னது காக்காமாமா நெகடுவ் வசனங்களை தவித்திருக்கிறாரா ஏலேய் போக்கிரி வில்லு போன்ற பிட்டு படங்களை நீ பாத்ததில்லையா தம்பி

      அப்பறம் சுட்டு போட்டாலும் உங்க ஆளுக்கு நடிப்பு வராதுங்கிறதுனால உங்களை பொறுத்த வரை தமிழ் நடிகர்கள் யாருக்கும் நடிப்பு வராதுனான் சொல்லுவீங்க நான் சில ரஜினி அஜித் படங்களை சொன்னால் என்னமோ சிவாஜிக்கே நீதான் நடிப்பு சொல்லி கொடுத்த ரேன்ஞ்ல இதெல்லாம் நடிப்பான்னு சொல்லுவ நரிய பொறுத்தவரை சிங்கத்தோட கர்ஜனையும் ஊளையாத்தான் தெரியும் அதுக்காக சிங்கமும் நரியும் ஒன்னாயிடாது

      Delete
    3. நீங்கள் தான் பில்லா 2 போன்ற பல பிட்டு படங்களை பார்த்து அனுபவம் உள்ளவர். நான் வில்லு படத்தை கடைசி வரை பார்க்கவே இல்லை.



      ரஜினி விஜய் அஜித் மூவருமே தனது ஆரம்ப காலங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எந்த படத்தில் நடித்தார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் விஜயாவது பரவாயில்லை சமீபத்தில் நண்பன் படத்தில் நடித்து விஜயை கிண்டல் செய்பவரின் பாராட்டையும் பெற்றார். ஆனால் அஜித் நடப்பதை தவிர வேற ஒன்றும் செய்யவில்லை.

      நரிக்கு சிங்கத்தின் கர்ஜனை ஊளையாக தெரியும் என்று கண்டுபிடித்த அந்த விஞ்ஞானி யாரு நீங்களா?

      Delete
    4. நண்பன் படத்தில் விஜய் பண்ணதுதான் நடிப்பா சொல்லவே இல்லை

      Delete
    5. நீ வாலி வில்லன் வரலாறு சிட்டிசன் பில்லா மங்காத்தா இதெல்லாம் பார்க்காத அல்லது பார்த்தும் இந்த படங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவமில்லாக சிறுவன் என்று நினைக்கிறேன்
      நண்பர் பாலா சொல்லியதை போலஅஜித்தாவது ஆம்பிள்ளையாக கம்பீரமாக நடக்கிறார் ஆனால் அண்டங்காக்கா மாமா ஜில்லாவில் எப்படி நடந்தார் என்று உனக்கே தெரியும்

      Delete
    6. நண்பன் படத்தில் விஜய் நடித்தது நடிப்பே இல்லை அதை பாராட்டியவர்கள் முட்டாள்கள் அப்படி தானே அண்ணே?

      அர்த்தம் புரியாமல் அவர் அந்த கமெண்டை போட்டிருக்கிறார் அதற்கு பதிலை நான் அவரிடம் சொல்லிகொள்கிறேன்.

      Delete
  5. ஏழாவது தகுதி: நோ கமெண்ட்ஸ்
    எட்டாவது தகுதி: இது தமிழ் சினிமா பாஸ்.
    ஒன்பதாவது தகுதி: இருவருமே பிலிம்பேர் உள்பட பல விருதுகள் வாங்கியவர்கள். உங்களுக்கு தெரியாது போலும்....
    பத்தாவது தகுதி: முற்றிலும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. இதே தமிழ் சினிமாவில் நல்ல படங்களை பலர் தருகிறார்கள்.



      பிலிம் பேர் விருது விஜய் டிவி விருது சிமா விருதுகள் எல்லாம் பொழுதுபோக்கு படங்களுக்கு தான் அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர் உண்மையான நடிப்பை அவர்கள் கண்டுகொள்வது இல்லை.

      Delete
    2. அந்த மொக்கை பிலிம்பேர் மற்றும் விஜய் டிவி விருதுகளில் கூட உங்க காக்கா மாமா நடுப்புக்குன்னு ஒரு விருதுகூட வாங்கலையே தம்பி கரடியே காறி துப்பிய புலிகேசிதான் உங்க காக்கா மாமா

      Delete
    3. விஜய் வேட்டைக்காரன் மற்றும் துப்பாகிக்கு விஜய் டிவி விருது பெற்றுள்ளார் அது உங்களுக்கு தெரியாதா அண்ணே... தெரியாமல் வார்த்தையை விட்டு அப்பறம் அசிங்கப்பட கூடாது.

      Delete
    4. ஏலேய் நீ லூஸா இல்ல லூசு மாதிரி நடிக்கிறையா நான் கேட்டது நடிப்புக்காக சிறந்த நடிகர் விருது வாங்கியதுண்டா சிறந்த நடிகன் விருதுக்கும் பேவரைட் ஹீரோவுக்கும் வித்தியாசம் தெரியுமா தெரியாதா

      Delete
    5. மன்னிக்கவும் நீங்கள் கேட்ட நடிகனுக்கான விருது என்பது நன் கவனிக்கவில்லை விருது என்று மட்டும் கேட்டதாக நினைத்து கொண்டேன்.

      Delete
  6. இறுதி வரிகள். அதானே பார்த்தேன். பொதுவாக விஜய் ரசிகர்களுக்கு ரஜினியை கண்டாலே மூக்கு வியர்க்கும். அவ்வப்போது வயிற்றெரிச்சல் இப்படி பல துவாரங்கள் வழியே வெளிவரும். இந்த பதிவின் நோக்கம் இப்போதுதான் தெரிகிறது. உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். சண்டியர்கரணை கேட்டதாக சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. விஜய் ரசிகர்கள் ரஜினியை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும். ரஜினி என்ன விஜயின் போட்டி நடிகரா அவர் உயர்ந்துவிட்டார் என்று விஜய் ரசிகர்கள் பொறமை படுவதற்கு? ரஜினி விஜயை விட பல படிகள் முன்னிலையில் உள்ளவர். அவரை பற்றி தவறாக எழுத விஜய் ரசிகர்களுக்கு எந்த அவசியமும் இல்லை. நான் இங்கு ரஜினி தன் படங்களில் செய்யும் உண்மையை தான் எழுதியிருக்கிறேன் சண்டியர் கரன் போல கமல் தான் ரஜினியை விட அதிக ரசிகர்களை கொண்டவர் அதிக வெற்றியை கொடுத்தவர் என்று ரஜினிக்கு எதிராகவோ அல்லது கமலுக்கு ஆதரவாகவோ பொய்யாக எழுதவில்லையே///

      Delete
    2. அடுத்த ரஜினியாக விஜய் ஆக வேண்டும் என்று நினைக்கும் உன்னை போன்ற ரசிகர்களுக்காக: அண்டங்காக்கா குயில் மேல ஆசைபடலாம் மயில் மேல ஆசைபடலாமா?

      Delete
    3. அடுத்த ரஜினியாக யாரும் ஆக முடியாது அவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லித்தான் பதிவை முடித்திருக்கிறேன். நீங்கள் பதிவையே படிக்காமல் வெறும் கமெண்டை மட்டும் பார்த்துவிட்டு பேசினால் இப்படி தான் இருக்கும்....

      Delete
    4. அண்டங்காக்கா குயில் மேல ஆசைபடலாம் மயில் மேல ஆசைபடலாமா?

      இதை இன்னொரு அண்டங்காக்க சொல்லலாமா அண்ணே...

      Delete
    5. விஜய் ரசிக கண்மனிகள் கடைசியாக என்ன செய்வார்களோ அதையே நீயும் செய்து விட்டாய் சரி நீ சொல்வது போல் நான் அண்டங்காக்காவாகவே இருந்தாலும் உங்கள் காக்கா மாமா அளவுக்கு கொடூரமான கண்றாவியான அண்டங்காக்கை கிடையாது தம்பி

      Delete
    6. அண்ணே தயவு செய்து மன்னிக்கவும் நான் உங்களை அண்டங்காக்கா என்று சொல்லவரவில்லை அண்டங்காக்கவின் ரசிகர்கள் சொல்லகூடாது என்று தான் டைப் செய்தேன் அது தவறாக வந்துவிட்டதை நான் கவனிக்கவில்லை.

      Delete
  7. அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று குழம்பி பிறகு விழித்துக்கொண்டவர் ரஜினி. அவரது நட்பினால் ஆரம்பத்திலேயே தப்பித்து கொண்டவர் அஜீத். பலமுறை சூடுபட்டும் திருந்தாத ஒருவர் எப்போது திருந்துவார் என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. விஜயின் அரசியல் விஷயத்தில் நான் எப்போதுமே அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்றே நினைக்கிறேன்.

      Delete
    2. தம்பி ஆண்டனி இப்பொழுதுதான் ஜில்லாவை டிவிடியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது உண்மையில் படம் பார்த்த பொழுது உன்னை போன்ற விஜய் ரசிகர்கள் மேல் எனக்கு பரிதாபம்தான் வந்தது உங்களுக்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா? அதற்கு விஜய் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலுக்கு வர வேண்டும் அப்பதான் நீங்கடீசண்டா ரிட்டயர்ட் ஆகலாம் இந்த மானங்கெட்ட பொழப்புல இருந்து

      Delete
    3. ஜில்லாவை பார்த்ததற்கே உங்களுக்கு இப்படி தோன்றினால் பில்லா 2 வை பார்த்த எண்களின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்.



      ஜில்லாவை இதுவரை பார்க்காமல் தான் என் முந்தய பதிவில் என்னவோ படத்தை பார்த்த மாதிரி அவ்வளவு வாக்குவாதமா??? இதுவரை உங்கள் மேல் எனக்கு இருந்த சந்தேகம் இன்று உறுதியாகிவிட்டது.. நீங்கள் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்.

      Delete
    4. தம்பி உன் முந்தைய பதிவில் நான் ஜில்லாவக்கு விமர்சனமா எழுதினேன் அந்த மொக்கையை பார்த்து விட்டு எழுத

      Delete
    5. அப்பறம் ஜில்லாவோடு சேர்த்து பில்லா டூ வை எழுதும் உன் நுண்னரசியல் புரிகிறது பாவம் உன் மன அரிப்புக்கு ஒரு மருந்தாக அதை எடுத்து கொள்கிறேன் பில்லா டூ ரொம் ராவான படம் என்பதால் உன்னை போன்ற சிறுவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை நீயெல்லாம் தேவையில்லாம எதுக்கு அந்த படத்தை பார்த்த ஆக்ச்வலா உன்னை போன்ற சிறுவர்கள் அந்த படத்தை பார்பது க்ரைம் தம்பி

      Delete
    6. படம் பார்த்தவர் போலேவே அல்லவே நீங்கள் என்னிடம் பேசினீர்கள். பார்பதற்கு முன்னே எதிர்மறையான சிந்தனை தான் உள்ளது என்பதால் தான் துப்பாக்கியே உங்களுக்கு பிடிக்கவில்லை இதில் ஜில்லா எப்படி பிடிக்கும்.

      Delete
    7. என்னது ஜில்லாவோடு சேர்த்தா பில்லா 2 அளவிற்கு ஜில்லா கேவலமாக இல்லையே. அண்ணே சரி நான் தான் அந்த படம் பார்க்க தகுதியில்லாதவன்(படம் பார்த்த உடனே தெரிந்துவிட்டது இதை பார்க்க தகுதி உடையவர் யார் என்று) ஆனால் படம் பார்த்த பெரியவர்கள் பலரும் மொக்கை என்று சொல்லி தானே அண்ணே படம் தோல்வி அடைந்தத. அது எப்படி அண்ணே?



      ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் விஜய் ரசிகர்கள் மட்டும் சொல்லி ஒரு அஜித் படம் தோல்வி அடைய போவது இல்லை அதே போல அஜித் ரசிகர்கள் மட்டுமே சொல்லி விஜய் படம் தோல்வி அடைய போவது இல்லை ஏன் என்றால் எல்லா விஜய் படங்களுக்கும் அஜித் ரசிகர்கள் நல்ல இல்லை என்று தான் சொல்கிறார்கள் அதே போல எல்லா அஜித் படத்துக்கும் விஜய் ரசிகர்க அனால் இல்லை என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அல்ல படமும் தோல்வி அடைவது இல்லை பொதுவானவர்கலும் நல்ல இல்லை என்று சொன்னால் தான் தோல்வி அடைகிறது.

      Delete
    8. என்னது ஜில்லா பில்லாடூவை விட நல்ல படமா டேய் தம்பி அண்ணனை கெட்ட வார்த்தை பேச வச்சிராதடா
      பில்லாடூ அஜித் ரசிகர்களை விடவும் சில பொதுவான ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது குத்து பாட்டு காமெடி செண்டிமென்ட் என்று எதிர்பார்க்கும் உங்களை போன்ற ரசிகர்களுக்கு அது கண்டிப்பாக பிடிக்க வாய்ப்பில்லை அது அவர்களின் ரசனை குறைபாடு

      Delete
    9. ஜில்லாவும் சில பொதுவான ரசிகர்களுக்கு பிடிதிருந்தது அண்ணே. தனியாக ரிலிஸ் செய்தும் தோல்வி அடைந்த பில்லா 2 விட அஜித்தின் படத்துடன் மோதி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும்( அஜித் படம் நன்றாக இருந்தும்) ஜில்லா நல்ல படம் தான். ரசனை என்பது எல்லாருக்கும் மாறுபடும் ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை குத்துபாட்டு காமெடி செண்டிமெண்ட் இவற்றை பிடிக்கும் ரசிகர்கள் தான் அதிகம்.

      ///அண்ணனை கெட்ட வார்த்தை பேச வச்சிராதட///



      பில்லா 2 வை நீங்கள் நல்ல படம் என்று சொல்லும்போது இதே பீலிங் தான் அண்ணே ஆனால் நான் கெட்ட வார்த்தையெல்லாம் பேசமாட்டேன் அண்ணே.

      Delete
    10. யோவ் என்னயா நீ பில்லா டூ மொக்க படம்னு நீயே சொன்ன அப்பறம் பில்லா டீவையும் ஜில்லாவையும் சேர்த்து வச்சி எழுதுன இப்ப ஜில்லலா பில்லா டீவை விட நல்ல படம்னு சொல்ற என்னையா ஆச்சி உனக்கு தௌிய கொஞ்சம் டைம் வேனூமா கொஞ்ச நாளைக்கு நாங்க இந்த பக்கம் வராம இருக்கோம்

      Delete
    11. பில்லா 2 வை ஜில்லாவுக்கு இணையான படம் என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன் அண்ணே?

      Delete
  8. //நீங்கள் அஜித் ரசிகர் என்பதற்காக அந்த தகுதி விஜய்க்கு இல்லை என நினைக்கலாம்.

    நான் அப்படி சொல்லவே இல்லையே?

    நடிப்பு என்பதற்கான அளவுகோல் என்று எதை நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. பக்கா மசாலா படங்களில் கூட நடிப்பை வெளிப்படுத்த முடியும். அஜீத் மற்றும் ரஜினி அதை செவ்வனே செய்திருக்கிறார்கள் சமீப காலத்தில் கூட...

    ReplyDelete
    Replies
    1. //நான் அப்படி சொல்லவே இல்லையே?//

      அந்த தகுதி விஜய்க்கு உள்ளதா என்று ஆராய்வது அவசியமற்றது என்று நீங்கள் சொன்னதன் அர்த்தம் என்ன ?

      நடிப்புக்கு அளவுகோல் கிடையாது. ஆனால் வெறும் நடப்பது கை காலை ஆட்டுவதும் நடிபாகாது.

      Delete
    2. நடிப்பு என்றால் என்ன விஜய்க்கு எந்த அளவுக்கு நடிப்பு வரும் என்பது குறித்து பின்னர் ஆராயலாம்.

      சும்மா நடக்கிறார் நடக்கிறார் என்று சொல்வது அர்த்தமற்றது. அஜித்தாவது ஆண்மகன் மாதிரி நடக்கிறார். ஜில்லாவில் விஜய் நடக்கும் நடையை என்னவென்று சொல்வது? (இதற்குத்தான் மெனக்கெட்டு பதில் போடுவீர்கள் என்று தெரியும்)

      Delete
    3. பார்த்தீர்களா யார் கேவலமானவர்கள் என்பதை நீங்களே நிருபித்துவிட்டீர்கள். நடிப்பை பற்றி பேசிய பொது தான் நான் அஜித் பல படங்களில் பாடல்களிலும் நடக்கிறார் பல காட்சிகளில் நடந்துகொண்டு தான் இருக்கிறார். இதை பலரும் விமர்சித்த வண்ணம் தான் உள்ளனர்.

      வரலாறு படத்தில் அஜித் நடந்தாரே அதை என்ன என்று சொல்வது சொல்லுங்கள் அண்ணே?

      Delete
    4. தம்பி, விவாதம் செய்யும் போது கிண்டல் செய்தால் இப்படித்தான் பதில் வரும். இதை வைத்து என்னை கேவலமானவன் என்று சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு நடக்கிறார், நடக்கிறார் என்று சொல்வதும் கேவலமான செயல்தான்.

      //வரலாறு படத்தில் அஜித் நடந்தாரே அதை என்ன என்று சொல்வது சொல்லுங்கள் அண்ணே?
      இங்கேதான் வருவாய் என்று தெரியும். வரலாறு படத்தில் அஜித்தின் பாத்திரமே பெண்மை கலந்த ஆண். ஆகவேதான் அவர் அப்படி நடந்தார். அதை எப்போதும் நான் ஒத்துக்கொள்வேன். ஜில்லாவில் விஜய் அப்படியா?

      Delete
    5. நான் என்ன அஜித் நடிக்கும் சீன்களை பார்த்தா கண்ணை மூடிக்கொண்டு நடக்கிறார் என்று கிண்டல் செய்கிறேன். தானே பில்லா அசல் மங்காத்தா பில்லா 2 ஆரம்பம் எல்லா படத்திலும் நடந்துகொண்டு இருக்கிறார் அது இல்லை என்று சொல்கிறீர்களா.



      விஜய் ஜில்லாவில் நடந்தது பெண்மை கலந்த நடையாக தெரியவில்லையே??? அந்த நடை பார்பதற்கு கேவலமாக உள்ளது உண்மை தான்.

      Delete
    6. ஆமாம் தம்பி ஜில்லாவில் விஜய் நடை பொம்பளை நடை போலவெல்லாம் இல்லை ரெண்டுங்கேட்டான் நடை போல கேவலமாகவே இஇருந்தது

      Delete
    7. அண்ணே ரெண்டுங்கெட்டனாக உள்ளவர்களின் நடையை நீங்கள் பார்த்ததில்லை என்று நினைகிறேன்.

      Delete
  9. பில்லா 2, மங்காத்தா போன்ற படங்களில் அஜீத் நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்று நீங்கள் கூறினால் படத்தை சரியாக பார்க்கவில்லை அல்லது வெறுப்பில் எழுதுகிறீர்கள் என்று அர்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. பில்லா 2 விலும் மங்காத்தாவிலும் அஜித் நடந்தார் என்று சொல்லுங்கள் நடித்தார் என்று சொல்லாதீர்கள்.

      Delete
    2. சரியான justification இல்லாமல் இப்படி பொதுவாக சொல்லிவிட முடியும். நான் கூட சொல்வேன். கமல் என்னத்த நடித்து விட்டார் என்று. இந்த கருத்துக்கு நீங்கள் என்ன பதில் சொன்னாலும் அது நடிப்பே அல்ல என்று திரும்ப திரும்ப சொன்னால் உங்களால் என்ன செய்ய முடியும். அதே போலதான் நீங்கள் செய்கிறீர்கள்.

      உதாரணமாக ஒரே ஒரு காட்சி. பில்லா2வில் தன் காதலியை கண் முன்னாலேயே கொலை செய்தவுடன், அங்கிருக்கும் அனைவரையும் கொன்று போதும் காட்சியில் அஜித்தின் முகத்தில் தெரியும் வேதனை கலந்த வெறிதான் அவரது நடிப்புக்கு உதாரணம்.

      Delete
    3. அண்ணே கமல் என்ன நன்றாக நடிக்கிறார் என்று ஒருவர் சொல்வது ரஜினி என்ன நடிகரிரார் என்று ஒருவர் சொல்வது இவை இரண்டில் எது வேண்டுமென்றே சொல்வது என்பது கேட்பவர்களுக்கு நன்றாக புரியும்.

      கமல் நன்றாக நடிக்கிறார் என்பது கமல் ரசிகர்கள் மட்டுமில்லை பொதுவானவர்கலாலும் ஒதுகொள்ள்கூடிய உண்மை. ஆனால் ரஜினி நன்றாக நடிக்கிறார் என்பது ரஜினி ரசிகர்களே சிலர் ஒத்துகொள்ள முடியாத ஒன்று.

      ///அஜித்தின் முகத்தில் தெரியும் வேதனை கலந்த வெறிதான் அவரது நடிப்புக்கு உதாரணம்///





      இது தான் நடிப்பு என்றால் பிறகு ஏன் இன்னும் நடிப்புக்கு கமலையும் விக்ரமையும் சொல் அவேண்டும் எல்லாருமே இப்படி நடிகிரார்களே?

      Delete
    4. எல்லாரும் நடிக்கிறார்கள் என்று சொல்லிருக்கையே அதில் விஜயும் வருகிறாரா கொஞ்சம் தௌிவா சொல்

      Delete
    5. கண்டிப்பாக பாலா சொல்கிற அந்த நடிப்பில் விஜயும் அடங்குவார் அண்ணே

      Delete
    6. //ரஜினி நன்றாக நடிக்கிறார் என்பது ரஜினி ரசிகர்களே சிலர் ஒத்துகொள்ள முடியாத ஒன்று.

      சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஒட்டுகிறீர்களே? ரஜினி நன்றாக நடிக்கிறார் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் கமல் அளவுக்கு என்று வரும்போதுதான் அதில் வித்தியாசம் வரும். இங்கே நான் சொல்ல வருவதும் அதுதான்.

      முந்திரிக்கொட்டை போல அவசரப்பட வேண்டாம். நான் அஜீத்தின் நடிப்புக்கு உதாரணம் என்று சொன்னேனே தவிர, அதுதான் நடிப்புக்கே உதாரணம் என்று சொல்லவில்லை. அதே போல அஜித்தை விக்ரம், கமலோடு ஒப்பிடவில்லை. தன்னளவில் அஜீத் நன்றாகவே நடிக்கிறார் என்றே சொன்னேன்.

      //விஜயும் அடங்குவார் அண்ணே
      விஜய்க்கு நடிப்பு வராது என்று நான் சொல்லவே இல்லை. ஆனால் வாய்ஸ் மாடுலேசன் என்ற பெயரில், அழகிய தமிழ் மகன், சுறா மற்றும் ஜில்லாவில் அவர் பேசியிருப்பது கடுப்பையே கிளப்பியது.

      Delete
    7. இது என்ன அவர் நன்றாக நடிப்பார் ஆனால் கமலோடு ஒப்பிட்டால் மட்டும் தான் குறைவாக தெரிவாரா? விக்ரம் அவரது மருமகன் தனுஷ் இவர்களோடு ஒப்பிடாலும் அவர் நடிப்பில் பின்னால் தான் இருப்பார்.



      சுறா அழகிய தமிழ் மகனில் அவரது பேச்சு நன்றாக இல்லை தான் அதை அவர் உணர்ந்து தான் பின் மாற்றிகொண்டார். ஜில்லாவில் அவர் ஒவ்வொரு இடத்திலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசியிருக்கிறார். அது சில காமெடி காட்சிகளில் தான் நன்றாக் இல்லை அவர் மற்ற இடங்களில் அவரது வசனம் நன்றாகவே உள்ளது. உதாரணம் மோகன்லாலும் விஜயும் இடைவேளை முன்பு பேசி பிரியும் காட்சிகள்.

      Delete
    8. //இது என்ன அவர் நன்றாக நடிப்பார் ஆனால் கமலோடு ஒப்பிட்டால் மட்டும் தான் குறைவாக தெரிவாரா? விக்ரம் அவரது மருமகன் தனுஷ் இவர்களோடு ஒப்பிடாலும் அவர் நடிப்பில் பின்னால் தான் இருப்பார்.//

      இல்லை இல்லை, விஜயோடு ஒப்பிட்டாலும் ரஜினி பின்னால்தான் இருப்பார். போதுமா மனது நிறைந்து விட்டதா? உங்களை மாதிரி பேசுபவரிடம் எப்படி பேசினாலும் எடுபடாது. உங்களுக்கெல்லாம் விதண்டா வாதம்தான் சரி. ரஜினி மோசமான நடிகராகவே இருந்துவிட்டு போகட்டும். அவரை வைத்து இரண்டு படங்கள் எடுத்த இயக்குனர் மகேந்திரன்தான் பெரிய முட்டாள். சரிதானே?

      Delete
    9. ரஜினியை விஜயோடு ஒப்பிட்டு இப்படி சமாளிப்பதால் விக்ரம் தனுஷ் பற்றி நான் சொல்லியவை உண்மை இல்லை என்று ஆகிவிடாது. விதண்டாவாதம் என்பது உண்மையை( கமல் நல்ல நடிகர்) தெரிந்தும் எற்றுகொள்ளதது பொய்யை (ரஜினி நன்றாக நடிப்பார்) எற்றுகொள்ளாதது இல்லை.

      Delete
    10. துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தில் கக்கூஸில் நின்று விஜய் அழுவார் பாரு ஒரு அழுகை அதை பாத்திட்டு அதுக்கப்புறம் இப்படி யாராலையும் நடிக்கவே முடியாதுன்னு நினைத்தேன் ரொம்ப வருஷத்துக்கு அப்றம் நம்ம சாம் ஆண்டர்சன் வந்துதான் என் நினைப்பு தப்புன்னு புரிய வச்சாப்ல

      தல பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடித்த வாலி போன்ற கதாபாத்திரத்தை இன்னும் பதினைந்து வருடம் ஆனாலும் வெஜினாவால் நடிக்க முடியாது என்பதுதான் உண்மை

      Delete
    11. தம்பி ரஜினி நடிப்பை பற்றி உனக்கு என்ன தெரியும் புவனா ஒரு கேள்வி குறி முள்ளும் மலரும் ராகவேந்திரா போன்ற படங்களையெல்லாம் பாத்திருக்கையா பதில் சொல்

      Delete
    12. தம்பி வரலாறு படத்தில் தல க்ராப் வைத்த கெட்டப்பில் வருவாரே இன்னும் உன்னை போன்ற சிறுவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால் விஸ்வா கமல் கெட்டப் அந்த கெட்டப்பில் காக்கா மாமாவை ஒரு நிமிஷம் நினைத்து பார் நீபய கெக்கே பிக்கே கெக்கே பிக்கேன்னு சிரிப்ப

      Delete
    13. காக்கா மாமாவை ஒரு குரூப் டான்ஸர்னு சொல்லு ஒத்துகிறேன் ஆனா நடிகனெல்லாம் சொல்லாத முடியல

      Delete
    14. அண்ணே நன்பனில் கல்லூரி மாணவர் கெட்டப்பில் சாதரணமாக தோன்றிய விஜய் பாத்திரத்தில் அஜித்தை நினைத்து பாருங்கள். ஏகனில் அவர் மாணவராக தோன்றிய காமெடி நினைவு இருக்கிறதா அண்ணே?

      Delete
    15. ///குரூப் டான்ஸர்னு சொல்லு ஒத்துகிறேன்///
      அஜித்துக்கு நடனம் ஆட வராததால் விஜயின் நடனத்தின் மீது உங்களுக்கு உள்ள காழ்புணர்ச்சி நன்றாக புரிகிறது.

      Delete
    16. துள்ளத மனம் துள்ளும் படத்தில் விஜயின் சாதாரண நடிப்பை பாராட்டியவர்கள் அதிகம். அந்த படம் பெற்ற வெற்றியும் அனைவரும் அறிந்ததே உங்களின் இந்த காமெடிக்கு நீங்கள் மட்டும் தான் சிரிக்க வேண்டும்.

      Delete
  10. //தன்னுடைய தனிப்பட்ட ஆன் மிக தேடலுக்காக செல்பவர் ஏன் புகைபடகாரரை கூட்டிசென்று படங்களை வெளியிட வேண்டும் அல்லது வெளியிட அனுமதிக்க வேண்டும்.

    நண்பரே ரஜினி என்பவர் நம்மைப்போல் அல்ல. அவர்கள் எங்கே சென்றாலும் புகைப்படக்காரர்கள் துரத்தி வருவார்கள். எவ்வளவுதான் தடுத்தாலும் புகைப்படம் எடுத்து விடுவார்கள். அவர்களை கடிந்து கொள்வது இயலாத காரியம். ஒரு காலத்தில் அதையும் செய்தவர்தான் ரஜினி. அதே போல ரசிகர்கள் ரஜினியை விருப்பப்பட்டு எடுத்துக்கொண்ட புகைப்படமும் அவ்வப்போது வெளிப்பட்டு விடுவதுண்டு. ஒரு வருடத்தில் ரஜினி பலமுறை இமயமலைக்கு செல்வார் இதுவரை அப்படி வெளியிடப்பட்ட படங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே என்பதை நினைவில் கொள்க. குற்றம் சுமத்துவது என்று முடிவு கட்டி விட்டால் எப்படி வேண்டுமானாலும் சுமத்தலாம்.


    //இந்த பதிவு இப்போது உள்ள சூழ்நிலைக்காக எழுதப்பட்டது அஜித் இப்போது எப்படி இருக்கிறாரோ அதை பற்றி தான் எழுத முடியும்.

    அஜீத் மற்றும் ரஜினி இருவரும் வெளியே தெரியாமல் செய்த உதவிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டு தெரியாமல் வெளிப்பட்டு விடுகின்றன. உடனே எதிர் கோஷ்டியில் இருந்து இதுதான் சமயம் என்று கிளம்பி விடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரஜினி தனது கல்யாணத்தில் புகைப்படம் எடுத்த ஒருவரை அடித்தார். அவரது புகைப்படமும் வெளியாகாமல் பார்த்துகொண்டார். கல்யாணத்தை ரசிகர்கள் பார்க்க கூடாது என்று இவ்வளவு முயற்சி செய்து தடுத்த ரஜினியால் இமையமலை செல்லும் புகைப்படம் தடுக்க எதுவும் செய்ய முடியாதா?

      வெளியில் தெரியாமல் செய்த உதவிகள் என்றால் அதுயாருக்கும் தெரியாமல் செய்தது என்று அர்த்தம் ஆனால் அது நூற்றுகணக்கில் உள்ளது என்று உங்களுக்கு தெரிந்திருப்பது தான் ஆச்சரியம்.

      Delete
    2. உண்மைதான். ரஜினியின் திருமண காலத்தில் அவருக்கு இளம் வயது. மேலும் பக்குவம் அற்ற நிலை. ஆனால் தற்போது வயது முதிர்ந்து விட்டார். ஆகவே நிதானம் வந்துவிட்டது. அதுவே காரணம். தன்னை புகைப்படம் எடுக்க வருபவரை எத்தனை முறை அடிக்க முடியும். ஒரே ஒரு முறை அடித்தவுடன் விலகி சென்று விடும் அளவுக்கு இங்கே பக்குவமான ரசிகர்கள் யாருமில்லை.

      //நூற்றுகணக்கில் உள்ளது என்று உங்களுக்கு தெரிந்திருப்பது தான் ஆச்சரியம்.
      புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கொள்ளவேண்டாம். நீங்கள் இலங்கை என்று நினைக்கிறேன். எங்கோ இருக்கும் உங்களுக்கே விஜய் பற்றி இவ்வளவு விபரங்கள் தெரிந்திருக்கும்போது, பல ஆண்டுகள் அஜீத் வசித்து வரும் அதே திருவான்மியூரில் வசித்த எனக்கு அதிக விபரங்கள் தெரிந்திருக்க கூடாதா? சென்னையில் என் நண்பர் (அவர் தீவிர விஜய் ரசிகர்) மூலம் சில தகவல்கள் எனக்கு தெரியும். அவரது வீட்டில் குடியிருந்த ஒரு பெண், அஜீத் வீட்டில் பல ஆண்டுகள் சமையல் வேலை செய்தவர்.

      Delete
    3. உதவி செய்தவன் வௌியில் தெரியும்படி செய்தால் விளம்பரம் உதவி வாங்கியவன் வௌியில் சொன்னால் அது மரியாதை என்னுடைய ப்ளாக்கில் தோற்கடிக்கபட முடுயாதவன் என்று ஒரு பதிவு உள்ளது அதில் உனக்கு உன்னை போன்றவர்களு்க்கு தௌிவான பதில் உள்ளது நேரமிருந்தால் படித்து கொள்

      Delete
    4. நான் இலங்கை எல்லாம் இல்லை தமிழ் நாட்டை சேர்ந்தவன் தான் இப்போது சென்னையில் தான் இருக்கிறேன். நான் இருவரும் தான் செய்யும் உதவிகளை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள் என்று சொல்லவில்லை. நான் சின்ன விளம்பரம் வேறுவிதம். அஜித் செய்த சில உதவிகளை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.அது சிறந்தது தான். நானும் இருவரும் செய்துவரும் உதவிகளை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள் என்று சொல்லவில்லை. தனது வீட்டில் இருக்கும் வேலைக்காரர்களுக்குசாதாரண மக்களும்ம் கூட சிலர் உதவி செய்கின்றனர் அது பெரிய விஷயம் இல்லை. அதே போல நான் இந்த பதிவில் அஜித் ரசிகர்களுக்காக எதையும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. ரஜினியை தான் சொல்லியிருக்கிறேன்.

      Delete
    5. அய்யா சாமி. அஜீத் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு உதவினார் என்று சொன்னேனா? அந்த பெண் பலமுறை பலபேர் வந்து அஜீத்திடம் உதவி பெற்றதை நேரில் பார்த்தவர் என்று சொன்னேன். ரஜினியையும் மேம்போக்காத்தான் சொல்லி இருக்கிறீர்கள். வேறு யாராவது வந்து விளக்கினால்தான் உண்டு.

      Delete
    6. அதை சற்று தெளிவாகவே சொல்லியிருக்கலாமே..

      Delete
  11. //அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பது தான் உண்மை.


    அவர்களால் என்ன செய்து விட முடியும்? மிஞ்சி மிஞ்சி போனால் ரசிகர் மன்றங்களை கலைக்க முடியும். அல்லது தன்னை பார்க்க வரும் ரசிகரை போய் வேலையை பார் என்று திட்ட முடியும். துரத்த முடியும். அப்படியும் சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. உடனே எதிர் கோஷ்டி சும்மா இருக்குமா? ரசிகனை மதிக்க தெரியவில்லை என்று அதிலும் நோட்டை சொல்ல்வார்கள். இவர்கள் என்ன செய்யலாம் என்று நீங்கள் ஒரு ஐடியா கொடுங்கள் பார்க்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்த போது எந்த எதிர்கோஷ்டி ரசிகர்களை மதிக்காமல் கலைத்துவிட்டார் என்று தவறாக சொன்னார்கள்.

      Delete
    2. மறுபடியும் விதண்டா வாதம். ரசிகர்களுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதுதான் உங்கள் கருத்து. அப்படி பார்த்தால் அஜீத் மன்றத்தை கலைத்து விட்டாரே? ஆனால் நீங்கள்தான் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று சொன்னீர்கள். மேலும் வேண்டுமென்றே ஒருவரை மன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து, பிறகு அவரை மன்னிப்பதுபோல மன்னித்து, பெரிய மனிதன் வேடம் போடுவது அஜீத் அல்ல.

      Delete
    3. விஜய் வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்துபின்பு மன்னித்தார் என்று நீங்கள் சொல்வது விதண்டாவாதமா இல்லை நான் சொன்னதா?

      Delete
    4. ரஜினி அஜீத் போன்றோர் குறித்த உங்களின் ஊகங்கள் போல இதுவும் ஒரு ஊகம். இது உண்மையாகவும் இருக்கலாம் இல்லையா?

      Delete
  12. //ரஜினி பேசினாலே எதாவது பிரச்சனையாக தான் பேசுவார் அதனால் அவரே மாட்டிகொள்வார் அதான் தான் பேசாமல் இருக்கிறார் என்பது தான் உண்மை.

    இதுவும் எதிர் கோஷ்டியினரின் விஷமம்தான். ரஜினி என்ன பேசினாலும் அதற்கு புது அர்த்தம் கற்பிப்பது. (வீரம் படத்தில் அஜீத் பேசிய வசனத்துக்கு நீங்கள் அரசியல் அர்த்தம் கற்பித்தது போல).

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் தான் பேசுகிறார்கள் அவர்கள் எல்லாம் மாட்டிகொள்வது இல்லையே ரஜினி தான் இப்படி அடிகடி மாட்டிகொள்கிறார். அவர் பேசும் விதம் அப்படி. ஒரு துணை நடிகை விபசார வழக்கில் சிக்கியபோது ரஜினி அவருக்கு சப்போர்ட் செய்து பேசினாரே ஒரு பேச்சு ரொம்ப அர்த்தம் உள்ளது அதை கேட்டுபாருங்கள் ரஜினியின் பேச்சுதிறமை எந்த அளவிற்கு உள்ளது என்று தெரியும்.

      அந்த இடத்தில அவர் பேசிய விதம் கண்டிப்பாக அரசியல் வசனமாக தான் தெரிகிறது இதை சில அஜித் ரசிகர்களும் கவனித்து சொல்லியிருகிறார்கள்.

      Delete
    2. அப்படி இருக்க 100 சதவீதம் வாய்ப்பே இல்லை. ஒருவேளை அஜித்துக்கு அரசியல் ஆசை வருமாயின், அன்று முதல் அஜித்தை வெறுக்கும் முதல் ஆள் நான்தான்

      Delete
    3. //அவருக்கு சப்போர்ட் செய்து பேசினாரே ஒரு பேச்சு ரொம்ப அர்த்தம் உள்ளது அதை கேட்டுபாருங்கள் ரஜினியின் பேச்சுதிறமை எந்த அளவிற்கு உள்ளது என்று தெரியும்.

      லிங்க் கொடுக்க முடியுமா?

      Delete
    4. தம்பி நீ சொல்லியிருக்கும் அந்த வசனம் அரசியல் வசனமாகவே இருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது ஒருவன் ஆசையில் அரசியலுக்கு வரவில்லை ஆத்திரத்தில்தான் வருகிறான் என்பதை மக்களுக்கு உணர வைத்து அரசியலுக்கு வந்தால் மக்கள் வரவேற்கதான் செய்வார்கள் ஆனனால் காக்கா மாமா ஆசையில்தான் வருகிறார் என்பது மக்களுக்கு நன்றாகவே புரிந்திருப்பதால்தான் கலலாய்க்கபடுகிறார்

      Delete
    5. நான் எனது நண்பனின் லேப்டபில் பார்த்தேன். புவனேஸ்வரி விபசார வழக்கு பற்றி அவர் ஒரு கருத்தை சொல்லியிருந்தார்.

      Delete
    6. அதில் தவறு இருக்கிறது என்று நான் சொல்லவில்லை அது அரசியல் வசனமே இல்லை என்று பாலா சொல்கிறார் அதற்கு தான் பதில் சொல்லியிருக்கிறேன்.

      Delete
  13. //விஜய் தனது பெரும்பான்மையான படங்களில் நெகடிவ் வசனங்களை தவிர்த்திருக்கிறார்.

    இதற்கு பெயர் சமாளிப்பா? அல்லது சப்பைக்கட்டா? விஜய் படங்களில் ரசிகர்களை கெடுக்கும் காட்சிகள் இருக்கிறதா இல்லையா? இதை பதிவிலேயே சொல்லி இருக்கலாமே? கருத்தில் சொல்வது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. நாம வாழறதுக்காக பிறரை கொள்ளலாம். எவ்ளோ நாள் நல்லவனாக நடிக்கிறது ஒரு பெண்ணை அசிங்கமான வார்த்தையால் திட்டுவது போன்றவை விஜய் படங்களில் இல்லை.

      Delete
    2. என் செல்ல பேரூ ஆப்பிள் என்னை சைஸா கடிச்சுக்கோ
      டாடி ்மம்மி வீட்டில் இல்லை தடை போட யாரும் இல்லை உள்ளே வா பப்ளிக் இடங்களில் பெண்ணின் டிக்கியை படித்து அமுக்குவது இதெல்லாம் பெண்மையை துக்கி படிக்கும் வரிகள் காட்சிகளா தம்பி

      Delete
    3. இன்று வரை சினிமாவில் தவாறன முன்னுதார படங்களாக பத்திரிகைகள் எழுதும் போது நீங்கள் சொல்லும் போக்கரி வில்லுவை விட மங்காத்தா தான் அதிகமாக இடம் பெறுகிறது.

      Delete
    4. ந்த பத்திரிக்கை தம்பி அது அஜித்தின் வளர்ச்சி பிடிக்காத சிலரின் எச்சகாசுக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கையா

      நான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல் அந்த வவரிகள் காட்சிகள் பெண்களை அசிங்கமாக காண்பிக்கிறதா இல்லையா

      Delete
    5. அமாம் உங்களை பொறுத்தவரை அஜித்தை பற்றி தவறாக எழுதும் எந்த பத்திரிக்கையும் நல்ல பத்திரிகை இல்லை அஜித்தை பற்றி நன்றாக எழுதினால் அது நல்ல பத்திரிக்கை அப்படி தானே?



      ஒரு பெண்ணை மங்காத்த படத்தில் அசிங்கமாக எல்லாருக்கும் புரியும்படி திட்டுவாரே அது பெண்மையை பெருமை படுத்தும் செயலா? அந்த இடத்தில் அப்படி ஒரு வார்த்தையை திட்ட வேண்டும் என்ற அவசியம் என்ன?

      Delete
    6. தம்பி நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் வரவே இல்லை வருமா வராதா

      Delete
    7. நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் கேட்டிருக்கும் எதிர்கேள்வியிலேயே பதில் அடங்கியிருகிறது. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.

      Delete
    8. தம்பி லூஸு மாதிரி பேசி கடுப்படிக்காத அந்த வரிகள் எல்லாம் பெண்மையை போற்றும் வரிகளா நேரடி பதில் சொல்

      Delete
  14. //நீங்கள் தான் பில்லா 2 போன்ற பல பிட்டு படங்களை பார்த்து அனுபவம் உள்ளவர்.

    என்ன நண்பரே ஏட்டிக்கு போட்டியாக பேசுகிறேன் என்று இப்படி பேசலாமா? பாலியல் உணர்வுகளை தூண்டும் காட்சிகள் நிறைந்த படங்களையே பிட்டு படம் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். நீங்கள் பில்லா 2வில் எதை பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் வில்லு உள்பட பல விஜய் படங்களில் இந்த மாதிரி காட்சிகள் தாராளம். ஒன்றுமில்லை இன்று தமிழில் மிட்நைட் மசாலாவில் முதலிடத்தில் இருப்பது கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல்தான்.

    ReplyDelete
    Replies
    1. பில்லா 2 படத்தை நீங்கள் நன்றாக பார்த்தீர்களா பெண்கள் அணிந்துவரும் உடைகள் அதிலும் மதுரைபோன்னு பாடல் முடிந்த உடன் வரும் கட்சி படத்திற்காக வெயியிட்ட புகைப்படங்கள் இவற்றில் எல்லாம் ஆபாசங்கள் இல்லையா. பில்லா 2007 படத்திலே நயன்தாரா அணிந்து வருவாரே ஒரு உடை அது ஆபாசம் இல்லையா?

      குஷி படத்தை எடுத்த இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா அவரது படங்கள் எப்படி இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். அவர் அஜித்துக்கு எடுத்த வாலி படத்திலும் பல ஆபாச காட்சிகள் இருகின்றன.

      Delete
    2. நான் உங்களை பிட்டு படம் பார்ப்பவர் என்று சொல்லவில்லை ராஜாவை தான் சொல்லியிருக்கிறேன். அதற்கு காரணமும் அவரது கமெண்டில் உள்ளது.

      Delete
    3. உங்கள் பதில்களில் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிட வேண்டும் என்ற அவசரம் மட்டுமே தெரிகிறது. விஜய் நடித்த படத்தை பிட்டு படம் என்று சொன்னால் உடனே ஒரு அஜீத் படத்தை சொல்லி விடவேண்டும் என்ற முனைப்பு மட்டுமே தெரிகிறது.

      பில்லா2வில் வரும் அந்த காட்சி பாலுணர்வை தூண்டும் காட்சி அல்ல. மாறாக அதீத வன்முறைக்கு லீட் காட்டும் ஒரு டார்க் கட்சி.

      என்ன நண்பரே அஜீத் பேசும் வசனங்களுக்கெல்லாம் அஜீத் பொறுப்பு. ஆனால் விஜய் பட வசனங்களுக்கோ பாடல்களுக்கோ இயக்குனரே பொறுப்பு. இதென்ன லாஜீக்?

      சரி குஷி படத்துக்கு சூர்யா பொறுப்பு, ஆரம்ப காலத்தில் இருந்து அவரது தந்தை படங்கள் எல்லாமே அப்படி பட்டவைதான். மேலும் அழகிய தமிழ் மகன் உள்பட பல படங்களில் தேவையே இல்லாத தினிப்பாக பாலியல் காட்சிகள் உள்ளதை நீங்கள் மறந்து விட்டீர்களா?

      Delete
    4. பில்லாடூவில் நீ சொல்லதை போல அதீத வன்முறையும் அதீத கவர்சியும் இருக்கிறது என்றே வைத்து கொள்வோம் அது அந்த படத்தின் டோனுக்கு தேவைபட்டது மேலும் அவர்கள் தைரியமாக ஏ சர்டிபிகேட் வாங்கிதான் வௌியிட்டார்கள் ஆனால் சில நடிகர்கள் இரருக்கிறார்கள் கைதைக்கு தேவையே இல்லாமல் பிட்டு சீன்களை வைத்து விட்டு வசூல் குறைந்து விட கூடாது என்பதறகாக கையில் காலில் விழுந்து யூ சர்டிபிகேட் வாங்கி வௌியிட்டு எல்லாரும் குடும்பத்தோடு வந்து பாருங்கள் என்று விளம்பரம் வேறு செய்வார்கள் உதாரணம் வில்லு போக்கிரி அதம ஜில்லா இதில் இவர்களை நியாயபடுத்தி பேச உ்ன்னை போல சிலர்

      Delete
    5. இதே போலநானும் சொல்லமுடியும் அண்ணே வில்லு படத்தில் வரும் காட்சிகள் பாலுணர்வை தூண்டும் காட்சிகள் அல்ல நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகள் என்று.

      நான் விஜயின் எல்லா படங்களுக்கும் இயக்குனர் தான் பொறுப்பு என்று சொல்லவில்லை குஷி படத்துக்கு மட்டும் தான் சொல்லியிருக்கிறேன்.

      Delete
    6. பில்லா 2 படத்திற்கும் செர்டிபிகேட்டுக்கு மீண்டும் முறையடப்பட்டது இந்த அளவிற்கு உள்ள படத்திற்கு த்ராதாதால் தான் அப்படியே ரிலிஸ் செய்தார்கள் அண்ணே.

      Delete
    7. பதில் சொல்ல முடியவில்லை என்றவுடன் வழக்கம் போல வாயில வடை சுடுறயே தம்பி நான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல் ஆபாச காட்சிகளை தேவையில்லாமல் நூழைத்து அதற்கு யூ சர்டிபிகேட் வாங்கி குடும்பத்தோடு வந்து பாருங்கள் என்று விளம்பரம் செய்வது தப்பா இல்லையா

      Delete
    8. அது தவறு தான் சினிமாவில் விஜய் மட்டும் செய்யவில்லை நடிகர்களும் செய்கிறார்கள்.அதில் தயாரிபாளர்களின் பங்கு பெருமளவில் உள்ளது.

      Delete
    9. விஜய் என்றால் மட்டும் தவறுகளை இயக்குனர், தயாரிப்பாளர் என்று பங்கு போடுகிறீர்கள். ஆனால் அஜீத் படத்தில் வரும் நெகட்டிவ் காட்சிகள் வசனங்களுக்கு அஜித்தை குற்றம் சொல்கிறீர்களே?
      நான் குஷியை உதாரணம் சொன்னதால், அதை மட்டும் சொல்கிறீர்கள். குஷியில் மட்டுமா ஆபாச காட்சிகள் இருந்தன? வேறு விஜய் படங்களில் இல்லையா? தேவையான காட்சிகளுக்கும், வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளுக்கும் வித்தியாசம் உண்டு. உதாரணமாக, வில்லு படத்தில் ஷாக் அடித்து, விஜய் நயன்தாரா, வடிவேலு இருவரிடமும் மாறி மாறி முத்தம் வாங்குவாரே? அதன் பிறகு, நயன்தாரா விஜய்யை திட்டிக்கொண்டே செல்லும்போது, தேவையே இல்லாமல் ஸ்லோ மோஷன் காட்சி வைத்தது, வலிந்து திணிக்கப்பட்ட காட்சி.

      Delete
    10. விஜய் படம் தோல்வி அடைந்தால் முழு காரணத்தையும் விஜயின் மேல் போடுகிறீர்கள் ஆனால் அஜித் படம் தோல்வி அடையும் போது இயக்குனர் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிட்டார் என்று இயக்குனர் மேல் பழி பொடுவ்பது இல்லையா சில அஜித் ரசிகர்கள்( பொதுவான ரசிகர்கள் என்று தங்களை சொல்லிகொள்கிரவர்களும் இதையே தான் செய்கின்றனர்). அந்த முத்தமிடும் காட்சி காமெடிக்காக என்று அதை வைத்த காட்சியை வைத்தே சொல்லலாம்.

      Delete
    11. நான் தயாரிப்பாளரை சொன்னது யு சர்டிபிகட் வாங்குவது பற்றி அண்ணன் ராஜா சொன்னதுக்கு தான். தயாரிப்பாளர் தான் யு சர்டிபிகட் கிடைத்தால் வரிவிலக்கு கிடைக்கும் என்று அதை வாங்க நினைகிறார்கள்.

      Delete
    12. இங்கே உங்களுக்கும் எனக்கும்தான் விவாதம். இதில் "பெரும்பாலான", "எல்லோரும் சொல்கிறார்கள்" என்று பேசாதீர்கள். அஜீத் படத்தை பிட்டு படம் என்று சொன்னீர்கள். நான் விஜய் படத்தை உதாரணம் காட்டினேன். உடனே அதற்கு இயக்குனர் காரணம் காட்டி மழுப்பினீர்கள். இப்போது அவர்கள் சொல்ல்வதில்லையா இவர்கள் சொல்வதில்லையா என்று பேசுகிறீர்கள். விஜய் படத்தில் ஆபாசக்காட்சிகள் அதிகம் என்பதை உங்களால் மறுக்கவே முடியாது. ஆகவேதான் இயக்குனர் பெயரை சொல்லி ஜல்லி அடிக்கிறீர்கள்.

      //அந்த முத்தமிடும் காட்சி காமெடிக்காக என்று அதை வைத்த காட்சியை வைத்தே சொல்லலாம்.

      உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா இல்லை நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. அந்த முத்தமிடும் காட்சியை ஆபாச காட்சி என்று சொல்லவில்லை. அதற்கு அப்புறம், நயன்தாரா விஜய்யை திட்டிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியே வருவாரே, அப்போது அவரது மார்பு குலுங்குவதை ஸ்லோ மோஷன் காட்சியாக காட்டுவார்கள். அதுவே ஆபாச திணிப்பு என்றேன். அதுவும் காமெடிக்கா?

      உங்களோடு உரையாடும்போது சிறுவர்களிடம் உரையாடுவது போலவே இருக்கிறது. பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். அடுத்தடுத்து ரூட் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். நமது முந்தைய கருத்துக்கும், தற்போதைய கருத்துக்கும் நாமே முரண்பட வேண்டும். இப்படித்தான் சிறுவர்கள் பேசுவார்கள். அப்படித்தான் இருக்கிறது. உங்களை இப்படி கூறுவதற்கு மன்னிக்கவும். இந்த மாதிரி பதிவு எழுதுவதற்கு முன், இதில் கூறியுள்ள அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு என்பதை உணருங்கள். "அவர்கள் அப்படி இல்லையா? இவர்கள் அப்படியில்லையா? பொதுவாக எல்லோரும் கூறுகிறார்கள்" என்று மழுப்புவது தவறு. நான் அஜீத் ரசிகன்தான். என்னால் முடிந்தவரை நாகரீகமாக பேசி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்களை சிறுவன் என்று கூறியதற்கு மன்னிக்கவும்.

      Delete
    13. நான் கண்டிப்பாக தவறாக நினைக்க போவது இல்லை. பதிவுலகை பொறுத்தவரை நான் சிறுவன் தான் அதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியஅவசியம் இல்லை. நான் விஜயின் எல்லா படத்துக்கும்இயக்குனர்கள் தான் பொறுப்பு என்று சொல்லவில்லை எஸ்.ஜே.சூர்யா மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன் அதற்கான காரனதியும் அந்த கமண்டிலெயெ சொல்லியிருக்கிறேன் அது உங்களுக்கு புரியவில்லையா? நான் மற்றவர்கள் என்று சொல்வது ஏன் என்றால் எந்த கருத்தையும் விவாதத்தில் ஈடு படும் ஒருவர் சொன்னால் எதிர் பக்கத்தில் உள்ளவர்எற்றுகொள்ள்மாட்டார் இருவரை விடவும் உயர்ந்தவர்கள் இதை பற்றி சொல்லியிருகிறார்கள் என்று எடுதுகட்டுடன் சொன்னால் தான் ஏற்றுகொள்வார்கள் அதனால் தான் நம் இருவரையும் விட பெரியவர்களான பத்திரிகைகளின் கருத்துகளை சொல்கிறேன். அது திசை திருப்புவது இல்லை என் விவாதத்துக்கு மேலும் வலு சேர்ப்பது.

      Delete
    14. பாலா இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்டால் தம்பி நயன்தாராவின் மார்பை காட்டியது விஜய்க்கே தெரியாமல் பிரபுதேவா படத்தில் சேர்த்த காட்சி இதை படம் வௌிவந்த பொழுது ஆனந்த விகடனே எழுதியிருக்குன்னு சொல்லுவாப்ல

      Delete
    15. கண்டிப்பாக இவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பொத்தாம் பொதுவாக சொல்வதை ஏற்று கொள்ள முடியாது என்றுதான் நான் சொன்னேன்.

      இதோ பாருங்கள் இங்கே நீங்கள் பொத்தாம் பொதுவாக ரஜினிக்கு நடிக்கவே வராது என்று சொல்லிவிட்டீர்கள். அதற்கு ஆதரவாக விதண்டாவாதத்துக்கு புது விளக்கம் வேறு. மகேந்திரன் என்ன முட்டாளா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. பத்திரிக்கைகளை நம்பும் உங்களுக்கு இயக்குனர் மகேந்திரன், பாலச்சந்தர் ஆகியோர் முட்டாளாகவே தெரிவார்கள்.

      ரூட்டை மாற்றுவது என்ன என்றால், விஜய் படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் என்ற கருத்துக்கு பதில் சொல்லபோய் எங்கே வந்து நிற்கிறீர்கள் என்று பாருங்கள். இதையே சொன்னேன். இன்னும் நீங்கள் வில்லு படத்தில் உள்ள ஆபாசக்காட்சியை ஒத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறீர்கள்.

      Delete
    16. ராஜா அண்ணே ஒரு நடிகர் நடிக்கும்போது அவர்கள் எந்த கோணத்தில் பதிவு செய்கிறார்கள் என்று நடிக்கும் போது அவர்களுக்கு தெரியாது அது கேமராமேன் மற்றும் இயக்குனருக்கு தான் தெரியும். அனால் படத்தின் வேலைகள் முடிந்து preview பார்க்கும்போது விஜய் கண்டிப்பாக பார்த்திருப்பார் அபோது அதை மாற்ற சொல்லியிருக்க வேண்டும் அது தவறு தான்.

      Delete
    17. ///இன்னும் நீங்கள் வில்லு படத்தில் உள்ள ஆபாசக்காட்சியை ஒத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறீர்கள்///

      மங்காத்தாவில் அஜித் செய்த தவற்றை அஜித் ரசிகர்களாகிய நீங்கள் ஒற்றுகொல்லாமல் சமாளிப்பது போலவா?

      Delete
  15. //விஜய் ரசிகர்கள் ரஜினியை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும். ரஜினி என்ன விஜயின் போட்டி நடிகரா அவர் உயர்ந்துவிட்டார் என்று விஜய் ரசிகர்கள் பொறமை படுவதற்கு?

    நண்பரே உங்களை என்ன சொல்வது. கடந்த கால வரலாறு தெரியாது போலிருக்கிறது. சொல்கிறேன் கேளுங்கள். விஜய் அறிமுகமான காலத்தில் ரஜினியின் சிஷ்யன், விஜயகாந்தின் தம்பி என்றே சொல்லிக்கொள்வார். ஒரு கட்டத்தில் விஜயகாந்தை முந்திவிட்டதாக நினைத்துக்கொண்டு, விஜயகாந்தை கழற்றி விட்டார். பிறகு அடுத்த ரஜினி என்பது மாதிரியான வசனங்கள் காட்சிகள் வருமாறு அமைத்துக்கொண்டார். அஜீத் சூப்பர்ஸ்டாராக ஆசைப்பட்டால் என்ன தவறு என்பதை ஊடகங்கள் ஊதி பெரிதாக்க, ரஜினி ரசிகர்கள் அஜித்தை வெறுத்தார்கள். இதில் குளிர்காய்ந்த விஜய் ரஜினி ரசிகர்களை கவர்ந்து விட்டோம் என்று கணக்கு போட்டார். பாபா படம் சுமாராக சென்றவுடன், ரஜினி அவ்வளவுதான் என்று SAC சொல்ல, அடுத்த ரஜினி தான்தான் என்ற மமதையில் ரஜினியின் சந்திரமுகிக்கு போட்டியாக சச்சினை களமிறக்கினார். போதாக்குறைக்கு ரஜினிக்கு சவால் விடும் வகையில் அப்பா மகன் இருவரும் பேட்டி கொடுக்க, என்ன நடந்தது என்பது வரலாறு. அன்றில் இருந்து ரஜினி ரசிகர்கள் விஜய்யை வெறுக்க தொடங்கினர். அன்றில் இருந்து ரஜினியின் இடத்தை பிடிக்க முடியவில்லை என்று விஜய்க்கு ஆதங்கம் உண்டு.

    பிறகு ரூட்டை மாற்றுகிறேன் பேர்வழி என்று எம்‌ஜி‌ஆர் ரசிகனாக தன்னை காட்டி கொள்ள தொடங்கி அதிலும் தோல்வி. ரஜினி, எம்‌ஜி‌ஆர் இந்த நடிகர்களுக்கு நிகர் அவர்களே என்ற கசப்பான உண்மை விஜய்க்கு என்றுமே தீராத ஆற்றாமையை உருவாக்கிவிட்டது. அதற்கு அடுத்த தலைமுறை விஜய் ரசிகர்களுக்கும் உண்டு. இதுதான் உண்மை. இதுதான் பல சமீபத்திய விஜய் ரசிகர்கள் எழுத்திலும் கருத்திலும் வெளிப்படுகிறது. இதை காலப்போக்கில் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். (ரஜினியை ரசிக்க தொடங்கிய காலத்தில் எம்‌ஜி‌ஆர்ஐ பார்த்து நாங்களும் பொறாமைப்பட்டோம்)

    ReplyDelete
    Replies
    1. விஜய் ரஜினியை பார்த்து பொறாமை பட்டாரா ரஜினியை முந்த வேண்டும் என்று நினைத்தாரா என்பது எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை நான் விஜயை ரசிக்க ஆரம்பித்ததே ரஜினியின் மூலமாக தான். இந்த பதிவு எழுதியவன் நான் நான் ஏன் ரஜினியை பார்த்து பொறமை பட வேண்டும் அதற்கான பதிலை தான் சொல்லியிருக்கிறேன்.

      Delete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. your comment shows that ajith fans capacity... f...ing ba....rd..

      Delete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்