Pages

30/10/2013

கற்பு தேவையா நம் பெண்களுக்கு?

இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. பெண்கள் அமைப்பினரும் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆனால் எந்த பயனும் இல்லை தவறுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்க்கு காரணம் ஆண்கள் என்றுமே பெண்களை தனக்கு நிகராக நினைக்க மறுக்கின்றனர். சில ஆண்கள் பெண்களை தன்னைவிட குறைந்தவளாக மதிப்பிட்டு கேவலமாக நடத்துகின்றனர். சில ஆண்கள் பெண்களை தன்னை விட உயர்வாக நினைத்து அவர்களுக்காக அதையும் செய்ய தாயாராக இருகின்றனர். இதில் ஒரு  உண்மை என்னவென்றால் பெண்களை தன்னை விட தாழ்ந்தவர்களாக நினைத்தாலும் அல்லது உயர்ந்தவாளாக நினைத்தாலும் அது ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு ஆபத்தில் பொய் முடிகிறது.



பெண்களின் இந்த நிலைக்கு காரணம் நம் முன்னோர்கள் பாரம்பரியம் பண்பாடு என்கிற பெயரில் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் இப்படி இருந்தால் தான் அவள் பெண் என்று பெண்களை மிகைப்படுத்தி சித்தரித்தது தான். புராணங்களில் பெண்கள் மிக உயர்ந்த கடவுள் போன்றும் பெண் சரியில்லை என்றால் குடும்பமே அழிந்துவிடும். எனவே பெண் என்பவள் தன் சுய உணர்வுகளை விட தன் குடும்பம் குழந்தைகள் என தியாக உணர்வோடு வாழும் புனிதர்கள் போல காட்டப்பட்டு இருகின்றன. பெண்கள் என்றுமே தவறு செய்துவிட கூடாது என்று அவர்களுக்கு கற்பு என்ற ஒன்றை திணித்துள்ளனர். ஆனால் ஆண்களுக்கு அந்த கற்பு என்பது எதுவும் இல்லை தான் சுதந்திரமாக இருக்க விரும்பும் ஆண் அதற்காக பெண்களை சிறை வைக்கும் விதத்தில் கற்பு பெண்களுக்கு மட்டும் ஒரு தனி விதிமுறைகளை விதிதான். அவள் இப்படி தான் உடை அணிய வேண்டும் இப்படி தான் நடந்துகொள்ளவேண்டும் என்று இவன் தீர்மானித்து அடுத்து வரும் தனது தலைமுறைகளுக்கும் அதையே சொல்லிகொடுதான்.



நாகரீகம் அறியாத பெண்கள் அன்றைய காலகட்டங்களில் ஆண்கள் சொல்வதை அப்படியே ஏற்று நடந்தனர். எனவே ஆண்கள் பெண்களை மிக உயர்வான அடிமைகளாக மதித்தனர். சக்தியின் அடையாளமாக பார்வதி காணப்பட்டாலும் சிவனை சார்ந்து தான் பார்வதி இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள். பெண் தன சுய உணர்வுகள் துக்கங்கள் சந்தோஷங்கள் ஆசைகள் அனைத்தையும் தன்னுள் புதைத்து ஆணுக்காகவே வாழ்ந்து வந்தால் அவள் எந்த சூழ்நிலையிலும் அவள் இஷ்டப்படி நடந்துகொள்ளகூடது என்பதற்காக கற்பு என்று ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தினான்.



 நாகரீகம் அறிந்த படித்த இந்த காலத்து பெண்கள் விழிப்படைந்தனர். தான் ஒன்றும் புனிதமானவள் அல்ல ஆண்களை விட குறைந்தவர்களும் இல்லை உயர்ந்தவர்களும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம் ஆணைகளுக்கு எப்படி உணர்வுகள் ஆசைகள் உள்ளதோ அதே போல தனக்கும் உள்ளது அதை ஏன் நான் பிறருக்காக மற்ற வேண்டும் என்று நனைக்க தொடங்கினர். நான் இப்படி தான் உடையனிய வேண்டும் இப்படி தான் நடந்துகொள்ளவேண்டும் என தனக்கு உத்தரவு போட ஆண்கள் யார் என நினைக்கதொடங்கினர். தன விருப்பம் போல நடந்துகொண்டனர். இதிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பம் ஆனது தன் விருப்பத்துக்கு ஏற்றார் போல நடதுகொண்ட பெண்ணை உயர்வாக கடவுளை போல நினைத்த ஆண் தன் விருப்பத்தை மீறி நடந்த பெண்ணை பேயாக பார்க்க ஆரம்பித்தான். அவர்களுக்கு எதிராக படங்களை எடுத்து பெண் முன்னர்காலத்தில் இப்படி இருந்தால் இப்போது இப்படி ஆகிவிட்டால் என்று கருத்துகளை பரப்ப ஆரம்பித்தான். கடைசியில் அவளை வேட்டையாட ஆரம்பித்தான் அதற்கு காரணமாக அவள் உடை பழக்கவழக்கங்களை காரணமாக சொல்ல ஆரம்பித்தான்.

பெண் தன் கையை மீறி பொய் விட்டாளே என்று நினைத்துகொண்டிருந்த ஆண்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து பெண்களையே குற்றம் சுமத்தினர். தவறு செய்யும் ஆண்கள் எப்படி பெண்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்வதை விடுத்தது பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று கொடுக்க ஆரம்பித்தனர். இதை இந்தியாவின் ஒரு அமைச்சரே செய்தது இந்தியாவிற்கே கேவலமான ஒன்றாகும். ஆண்களின் இந்த மனபோக்கின் விளைவு இந்திய பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாடு என்று மேலை நாடுகளின் கருத்துகணிப்புகள் சொல்கின்றன. மற்ற நாடுகளின் முன் இந்திய தலைகுனிய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதற்க்கு முழுமுதற்காரணம் ஆண்களின் சுயநலம் பெண்ணையும் தன்னை போல பார்க்காமல் ஒரு பொருளை போல ஆர்க்கும் தன்மை. கற்பழிப்பின் பிறகு அந்த பெண் வாழவே கூடாது என்று பெண்களே நினைப்பதற்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் கற்பு என்கிற ஒரு மாயை. ஒரு கொலை செய்தவன் கூட தண்டனை அனுபவித்து வந்துவிட்டு நான் ஒரு கொலை செய்துள்ளேன் என்று பெருமையாக சொல்லிகொல்வான். ஆனால் ஆண்களின் இச்சைக்கு ஆளாகி கற்பழிக்கப்பட்ட ரூ தவறும் செய்யாத பெண்ணை பர்ர்ப்பவர்கள் அனைவரும் என்னவோ அவள் தான் தவறு செய்துவிட்டது போல அவளை கேவலமாக பேசுவார்கள். அதற்க்கு காரணம் அவள் அவளது கற்ப்பை இழந்துவிட்டால் என்பது தான். ஆண்களால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பு பெண்ணிடம் இருந்து போய்விட்டதாக நினைத்து அவளை எல்லாரும்  செய்கின்றனர். ஆனால் கற்பழித்த ஆண்களோ 7 வருடம் தண்டனை அனுபவித்து வெளியே வந்து வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கின்றனர்.

இது இந்தியாவில் பாரம்பரியமாக நடந்துவரும் ஒன்று தான். அதிஷ்டவசமாக தற்போது ஒரு கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை கொடுக்கப்படுள்ளது. இது ஆரோகியமான மாற்றம் தான் ஆனால் இதுவரை பெண்கள் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்லமல் தவித்து வரும்போதும் அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்யும்போதும் கைகட்டி வேடிக்கை பார்த்த ஆண்கள் கூட்டம் ஆண் தண்டனை அடைந்தவுடன் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். பெண்களும் மனிதர்கள்  தானே அவர்களுக்கு இல்லாத மனித உரிமை ஆண்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது.

இபோது பெண்கள் சில ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை பெரிய தவறாக பேசப்படுகிறது. பெண்கள் ஆண்களை காதலித்து ஏமாற்றி விட்டு செல்கின்றனர். என்று கூறப்படுகின்றது. பெண்கள் க்ளப்களில் மது அருந்துகின்றனர் புகைபிடிகின்றனர் என்று புலம்ப ஆரம்பித்து உள்ளனர் ஆண்கள். அதற்காக பாடல் எல்லாம் கூட பாடி அதை அதே மாதிரியான ஆணாதிக்க எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வெளியிட்டு சந்தோசப்படுகின்றனர். பெண்கள் இதெல்லாம் தற்போது செய்வது தவறு என்றால் பல காலங்களாக ஆண்கள் இதையெல்லாம் செய்து வருகிறார்களே அவர்களை என்ன செய்யலாம். பல காலங்களுக்கு முன்பிருந்தே ஆண்கள் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளனர் மது அருந்துகின்றனர் புகைபிடிகின்றனர் காதலித்து உறவு கொண்டு பின்பு ஏமாற்றி செல்கின்றனர். இதெற்கெல்லாம் பெண்கள் பாட்டு பாடி புலம்பவில்லையே.

பெண் உரிமை என்று இன்று குரல் கொடுக்கும் அனைவரும் ஒன்றை உணரவேண்டும். இப்போது நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் அப்போது பெண்கள் மீது திணிக்கபட்ட சில வழிமுறைகள் தான் காரணம்  பாரம்பரியம் என்று அவற்றை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காமல் பெண்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று நினைத்து அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கற்பு, உடை, பழக்க வழக்கம் என்று சில கட்டுகதைகளை அகற்றினாலே தவறுகள் குறைந்துவிடும். ஒரு பெண் ஆபாசமாக உடை அணிகிறாள் என்பது தவறுக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஆபாசம் என்பது அவள் அணியும் உடையில் இல்லை  தான் இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவரும் பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்க நேரிடும் அது போதோ அல்லது மற்ற நோய்களுக்கு சிகிச்சை அழிக்கும்போதோ இருக்கலாம் அனால் அப்போது மருத்துவருக்கு ஆபாசமாக தோன்றுவது இல்லை. ஆனால் அதே உடையில் பார்க்கும் மற்றவர்க்கு ஆபாசமாக தோன்றுகிறது என்றால் அது உடையில் இல்லை பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது.

பெண் என்பவள்  கடவுளும் இல்லை அடிமையும் இல்லை தன்னை போன்று அவளும் ஒரு உயிர் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

29/10/2013

விஜய் ரசிகர்களின் நல்ல மனம்


இன்று நான் கேள்விப்பட்ட செய்தி ஒரு விஜய் ரசிகனாக எனக்கு  மகிழ்ச்சியை தந்தது. அது என்னவென்றால் மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அஜித்தின் ஆரம்பம் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து பேனர் வைதுள்ளர்னர் என்பதாகும்.


எதிரியையும் வாழ்த்தும் மனப்பான்மை உள்ளவர்கள் நம் தமிழ் மக்கள் என்பது நம் தமிழ் வரலாறுகளை பார்த்தல் நமக்கு தெரியவரும். ஆனால் காலப்போக்கில் நண்பனாக இருந்தால் கூட பிறரை வாழ்த்த நம் மக்களுக்கு மனம் வரவில்லை. அதிலும் எதிரி என்றால் அவன் வாழவே கூடாது அழிந்து போக வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம். அந்தவகையில் விஜய் என்னவோ தேச துரோகம் செய்துவிட்டது போல எப்போதும் அவரை எதிரியாகவே பார்ப்பவர்கள் அஜித ரசிகர்கள்(அஜித் அல்ல) என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் படங்கள் வெளிவரும் முன்பே அதை எதிர்த்து வசங்களை எழுதி பேனர் வைத்து அதை தோல்வி பெற வைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அஜீத் ரசிகர்கள். சமீபத்தில் துப்பாக்கி படம் வெளிவந்து நன்றாக  ஓடிகொண்டிருக்கும் பொது அதை எதிர்த்து கருப்பு தீபாவளி என்று பேனர் வைத்தனர் அஜித் ரசிகர்கள்.

நான் கூட அதே போல ஆரம்பம் படத்துக்கு விஜய் ரசிகர்களும் செய்வார்கள் என்று நினைத்து இருந்தேன் ஆனால் அனைவரும் வியக்கும் வண்ணம் அஜித் படத்துக்கு ஆதரவாக பேனர் வைத்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தங்களையும் தங்கள் தலைவன் விஜயையும் எதிரியாக நினைக்கும் அவர்களின் தலைவன் படத்துக்கு வாழ்த்து பேனர் அடித்து நாங்கள் எதிரியையும் வாழ்த்தும் அன்பு தமிழ் உள்ளங்கள் என்று நிருபிதுவிட்டனர். எதிரியையும் வாழ்த்தும் அன்பு விஜய்  ரசிகர்களில் நானும் ஒருவர் என்று சொல்வதில் எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.



விஜயையும் விஜய் ரசிகர்களையும் தேவையே இல்லாமல் கிண்டல் செய்யும் அஜித ரசிகர்களே இப்பொழுதாவது திருந்துங்கள். 

விஜய்: உன்ன யாரோ பெத்திருக்க என்ன யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தன்பி டா...

அஜித்: நான் எல்லாருக்கும் ப்ரண்டு இப்போ மாறிபோச்சு ட்ரெண்டு இந்த பூமி நம்ம கிரவுண்டு வ அடிப்போம் நல்ல ரவுண்டு....

"தளபதி ரசிகர்கள் என்று சொல்வதில் நாங்கள் பெருமையடைகின்றோம்... "

 " தலையை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்..."

" தமிழனாக வாழவே நாங்கள் பிறந்திருகின்றோம்..."

"  வாழ்க தமிழ்... வளர்க தமிழ்நாடு...



 

26/10/2013

சரவணா ஸ்டோரும் ஒரு பெண்ணும்


 நண்பர் ஜோ பிரிட்டோ அவர்கள் சரவணா ஸ்டோர் போனபொழுது அங்கு ஒரு பெண்ணுடன் உரையாடியதை தனது முகபுத்தகத்தில்(facebook) வெளியிட்டிருந்தார். அதை அப்படியே உங்களுக்காக வெளியிடுகிறேன்.

  
 இரண்டு நாட்களுக்கு முன்பு
சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி.
அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். அந்த பெண்ணிடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்க்கு அந்த பெண் சொன்ன பதில்களும்.




கேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க?’’

பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’

கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’

பதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’

கேள்வி:‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’

பதில்:‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’ ‘‘சாப்பாடு?’’ ‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’ ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’ ‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’

கேள்வி:‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’

பதில்:‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’

கேள்வி: ‘‘உட்காரவே கூடாதா?’’


பதில்:  ‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’ - (யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.)

கேள்வி: ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’


பதில்: ‘‘5,500 ரூபாய்.’’

கேள்வி: ‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’

பதில்:‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’ ‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’ ‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’

கேள்வி: ‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’

பதில்:‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’

கேள்வி::‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’ 


பதில்:‘‘ஆமாம்.’’

கேள்வி: ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’ 


பதில்: ‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’

கேள்வி: ‘‘லீவு எல்லாம் உண்டா?’’

பதில்: ‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’


கேள்வி:  ‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’

பதில்: ‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’ 

கேள்வி: ‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’

பதில்: ‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’

கேள்வி: ‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’

பதில்: ‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’


கேள்வி: ‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’

பதில்: ‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’

கேள்வி: ‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’


பதில்: ‘‘தெரியலை..’’

கேள்வி: ‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’

பதில்:  ‘‘நெல் விவசாயம்..’’

கேள்வி: ‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’ ‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’

கேள்வி: ‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’

பதில்: ‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’


கேள்வி: ‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’ 

பதில்: ‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’ 



கிராமத்திலிருந்து வந்து இப்படி கஷ்டப்படும் நம் பெண்கள் குழைந்தைகளின் நிலை என்று மாறும்? சரவணா ஸ்டோர் மட்டும் இல்லை இன்னும் நிறைய கடைகளில் பெண்கள் குழந்தைகள் நிலை கவலை அடையும் விதமாக உள்ளது. பெண்களின் உயிருக்கும் கர்ப்புக்கும் பாதுகாப்பு இல்லாதவண்ணம் உள்ளது இந்த மாதிரியான விஷயங்களை நமது அரசாங்கமோ அல்லது போலிசோ பெரிதாக எடுத்துகொள்வது இல்லை அதானால் இவர்களின் அவல நிலை வெளியில் வராமலே மறைந்து விடுகிறது.

வலைப்பதிவில் மதவெறி


ந்த பதிவு குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் நண்பரின் வலைப்பதிவை பற்றியது. இங்கு நான் குறிப்பிடுபவை அனைத்தும் அந்த நபரை பற்றி தானே தவிர முஸ்லிம் மதத்தை பற்றியோ அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் நண்பர்களை பற்றியோ அல்ல.

நான் நேற்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது ஒரு பதிவு என் கண்ணில் பட்டது. நடிகர்களுக்கு அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது என்பதை பற்றிய பதிவு அது எனக்கும் கூட நடிகர்கள் அரசியலுக்கு வருவது பிடிக்காத ஒன்று ஏதோ இவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று நாம் பார்த்துவிட்டு இவர்களுக்கு   ரசிகர்களாக இருப்பதற்காக நாட்டையே இவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவோம் என்று நினைகிறார்கள். எனவே எனக்கும் இது பிடிக்காத ஒரு விஷயம் என்பதால் சரி நாமும் படித்து பார்க்கலாமே என்று படித்தேன். பதிவு மிக நன்றாக இருந்தது. எந்த நடிகருக்கும் சார்பாக எழுதாமல் ரஜினி,கமல்,விஜய்,அஜித் என்று அனைவரையும் கண்டித்து எழுத்தியிருந்தார். எனக்கு அந்த பதிவு மிகவும் பிடித்து போய்விட்டது.



அடுத்தடுத்து அவரது பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். சில படங்களின் விமர்சனங்களை பார்த்தேன் மிகவும் கேவலமாக எழுதியிருந்தார். நடிகர் நடிகைகளை அவன் அவள் என்று தான் எழுதியிருந்தார் நாம் ரொம்ப "ரா"வான ஆள் போல என்று நினைத்துகொண்டேன் மேல படிக்க ஆரம்பித்ததில் எந்திரன் விமர்சனம் போடப்பட்டு இருந்தது. எந்திரன் தான் பலருக்கு பிடித்த படமாயிற்றே இவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். அதில் படத்தை பற்றி அவர் விமர்சித்ததை விட ரஜினி ஷங்கர் இருவரையும் தான் அதிகம் விமர்சித்தார்.அப்போதே எனக்கு லேசாக பொறி தட்ட ஆரம்பித்தது பின்பு ரஜினியை பிடிக்காது போல இருக்கிறது ஆனால் ஷங்கரை ஏன் இவர் திட்ட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.

 அடுத்து நண்பன் விமர்சனம் போடப்பட்டு இருந்தது. வலையுலகில் பலர் இந்த படத்தை நன்றாக உள்ளது என எழுதினார்களே இவர் என்ன சொல்லியிருக்கார் என்று பார்த்தேன் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது இந்த படத்தையும் மிக கேவலமாக விமர்சித்திருந்தார். படத்தில் அவர்கள் சொல்லவந்த கருத்தை பற்றியோ அல்லது நடிப்பை பற்றியோ ஏதும் சொல்லவில்லை. படத்தை நல்ல இல்லை என்று விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே விமர்சிக்கபட்டிருப்பது நன்றாக தெரிந்தது. எனக்கு புரியவில்லை என்ன இவர் நல்ல படங்களை கூட கேவலமாக எழுதுகிறாரே என்று நினைத்தேன்.

 சரி அடுத்து ஏதாவது படத்தின் பதிவை பார்க்கலாம் என்று பார்த்தேன் 
பில்லா 2 இருந்தது இந்த படம் பலருக்கும் பிடிக்காமல் போனது எல்லாரும் இதை கேவலமாக எழுதின்னர்கள் சரி இவர் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்தல் ஐவரும் அதையே தான் செய்திருக்கிறார். ஆனால் சற்று வித்தியாசமாக அஜித்தை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருந்தார். அஜித்திற்கு கோட் சூட் கூலிங் கிளாஸ் எவ்வளவு பொருந்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இவர் அஜித் கோட் சூட் போட்டு நடந்து வருவதை கிண்டல் செய்திருந்தார். என்னடா இவர் பில்லா 2 படம் கதை சரியில்லை திரைகதை சரியில்லை இயக்கம் சரியில்லை என்று எழுதுவார் என்று நினைத்தால் இப்படி அஜித்தை பற்றி கேவலமாக எழுதுகிறாரே என்று யோசித்த படியே அடுத்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அடுத்து அதில் அஜித் இலங்கை அகதியாக வருவதையும் அதைவைத்து விடுதலை புலிகளையும் திட்டினார். அடுத்து இந்த படத்துக்கு பொய் எக்கச்சக்க பில்டப் கொடுத்து தல முண்டம் என்று ஏதேதோ எழுதியிருந்தார் அவர் அஜித்தை பற்றி எழுதியதை படித்து விஜய் ரசிகனான எனக்கே கோபம் வந்து விட்டது. இந்த அளவிற்கு திட்டும் அளவுக்கு அஜித் என்ன தவறு செய்துவிட்டார் என்று கேட்க தோன்றியது. அடுத்து சில படங்களின் விமர்சனங்களை பார்த்தேன் பாவம் அதற்கும் இதே நிலைமைதான் என்னடா இவர் எல்லா படத்தையும் நல்ல இல்லை என்று சொல்லுகிறார் என்று நினைத்தேன். இவருக்கு சினிமா பிடிக்காது போலும் அதனால் தான் எல்லாரையும் திட்டுகிறார் என்று நானாக நினைத்து கொண்டு எதுவும் புரியாமல் மற்ற பொதுவான பதிவுகளை பார்க்கலாம் என்று மற்ற தலைப்பில் படிக்க ஆரம்பித்தேன்.



விடுதலை புலிகள் இலங்கை தமிழர்களை பற்றிய பதிவு ஒன்று இருந்தது சினிமா  இது போன்ற பொது விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பரே என்று ஆர்வமாக பார்க்க அதிலும் எனக்கு ஏமாற்றம் தான் இலங்கை தமிழர்களை கொலைகாரர்கள் என்றும் அவர்கள் இனம் அழிக்கபடுவது தவறு என்றும் எழுதியிருந்தார். அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழுணர்வு பற்றி பேசுபவர்களையும் கேவலமாக விமர்சித்திருந்தார். இங்குள்ள தமிழர்களையும் தமிழ் தமிழ் என்று மொழி வெறி உள்ளவர்கள் என்று கேவலபடுதியிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை தாய்மொழியின் மீது பற்று வைப்பது நல்லது தானே அதிலும் உலகிலேயே சிறப்பு வாய்ந்த பழமையான செம்மொழி மீது பற்று வைத்திருப்பது நல்லது தானே தமிழ் இருந்துகொண்டு தமிழ் பேசும்   இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று குழம்பினேன். பிறகு தான் தெரிந்தது அவர் தமிழ் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் என்று.

 



ராஜீவ் காந்தியை விடுதலைபுலிகள் கொன்றதற்காக லட்சகணக்கான தமிழர்களை கொன்றது சரி என்று ஒரு பதிவில் போட்டிருந்தார். அங்கு வந்த ஒருவர் அவரிடம் ராஜீவ் காந்தி என்ற ஒரு உயிரை கொன்றதற்காக எத்தனை தமிழர்கள் சாகடிக்கபடுகிரார்கள் அதை நாங்கள் கேட்டல் தவறா என்று கேட்டார் அதற்கு அவர் சொன்னார் பாருங்கள் ஒரு பதிலை நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். குஜராத்தில் அத்தனை முஸ்லிம் கொல்லப்பட்ட பொது  எதுவும் கேட்கவில்லை இப்போது மட்டும் அந்த கொலைகார் புலிகளுக்காக வாதாடுகிரார்களா? என்று ஒரு கேள்வியை கேட்டார். அப்போது தான் தெரிந்தது அந்த நண்பர் ஒரு முஸ்லிம் என்று. அதாவது அவர் கருத்துப்படி முஸ்லிம் மக்களை கொன்றுவிட்டார்கள் எனவே இதற்க்கு பிறகு யாரை கொன்றாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க கூடாது. அவர் காரணமே இல்லாமல் பில்லா 2 வில் அஜித்தை கேவலமாக பேசியதற்கு காரணம் அஜித் அதில் இலங்கை தமிழ் அகதியாக நடித்து தான் காரணம் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது. 

தமிழர்களை பற்றி கேவலமாக   ஒரு நடிகை பேஸ்புக்கில் ஒரு ஒரு கருத்தை வெளியிட்டார். அதற்க்கு அணைத்து தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் அதற்க்கு இவர் ரஜினி கமல் ஐஸ்வர்யா என சம்பந்தம் இல்லாமல் எதைஎல்லமோ எழுதி உங்களுக்கு வெட்கமாயில்லை என்று கேட்கிறார். அதாவது கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினியை நாம் ஏற்று கொண்டோம் எனவே அந்த கர்நாடக பெண் சொன்னதையும் ஏற்றுகொள்ள வேண்டுமாம். வந்த அனைவரையும் வாழவைக்கும் தமிழ் நாடு ஆனால் அதே தமிழன் மற்ற மாநிலங்களுக்கு போனால் அவனுக்கு குறைந்த மதிப்பு தான். ஆனால் தமிழ் நாட்டில் மற்ற மாநில மக்களை நன்றாக வளர்துவிடுகிரார்கள் அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் சினிமாவில் நடிக்க வந்துவிட்டு தமிழனை திட்டினால் எப்படி ஏற்றுகொள்ள முடியும்? ஆனால் அந்த அறிவாளிக்கு முஸ்லிம் மட்டும் தான் நல்லவர்களாக இருகிறார்கள் மற்ற தமிழர்கள் எல்லாம் கெட்டவர்கள் கேவலமானவர்கள் முஸ்லிம்களை பற்றி மற்றவர்  சொல்லிவிட்டால் உடனே இவர்கள் போராடலாம் தமிழனை திட்டினால் தமிழன் கேட்க கொடாது என்பது அவரின் கருத்து. 

அடுத்து சின்மயி இலங்கை ராணுவம் தமிழர்களை கொள்வதை சரி என்று சொன்னதற்கு அப்படியே ஐவரும் ஜால்ரா அடித்தார். அதற்கும் விளக்கம் தந்தார் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முஸ்லிம்களை கொன்றது என்று இதற்கும் அதையே கூறினார். ராமர் பிறந்தார் என்பதற்காக அப்போது அந்த
  மசூதியை இடித்தது கண்டிப்பாக தவறு தான் முஸ்லிம் என்ற  காரணத்துக்காக அவர்களை கொன்றதும் இன்று வரை முஸ்லிம்களை தீவிரவாதியாக பார்ப்பதும் தவறு தான் என்பது ஏற்றுகொள்ள கூடிய உண்மை தான். அதே போல் முஸ்லிம்களை இப்படி தவறாக மற்றவர்கள் நினைப்பதற்கு அப்பாவிகளை கொள்ளும் தீவிரவாதிகள் முஸ்லிம் மதத்தை ஆயுதமாக பயன்படுத்துவது தான் காரணம் என்பதும் அதே உண்மை  தான். 
 அதற்காக பலர் கொள்ளப்படும் போதும் கஷ்டப்படும்போதும் அதற்க்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் முஸ்லிம்களை கொன்றுவிட்டார்கள் இனி யார் செத்தால் என்ன அன்று அவர் நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்.

நான் இங்கு முஸ்லிம் மதத்தை தவறாக கூறவில்லை ஆனால் அந்த மதத்தை பயன் படுத்தி மக்கள்  விளைக்கும் சிலரின் வக்கிர  கண்டிக்கிறேன். குரானிலோ திருவிவிலியத்திலோ  அல்லது பகவத் கீதையிலோ பிற மனிதர்களை சாகடிக்க  வேண்டும் என்றோ அல்லது அவர்கள் மனம்  நோகும்படி கேவலமாக பேசவேண்டும் என்றோ  குறிப்பிடபட்டுள்ளதா நண்பர்களே? 

மதம் ஜாதி அனைத்துமே மனிதனால் எழுதப்பட்டவை தானே பகவத்கீதையை கிரிஷ்ணபரமத்மாவா எழுதினர், திருவிவிலியத்தை இயேசு கிறிஸ்துவா எழுதினார் அல்லது குரான் தான் நபிகள் அவர்களால் எழுதப்பட்டதா? அனைத்துமே மனிதன் எழுதியவை தானே மனிதன் எழுதிய அதிலும் கூட நல்ல கருத்துகள் தானே சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையே காரணமாக வைத்து சண்டையிட்டு கொள்வது என்ன நியாயம். வானம் என்ன கிறிஸ்துவர் முஸ்லிம் ஹிந்து என்று பார்த்து தான் மழை தருகிறதா? மரங்கள் மதத்தை பார்த்து தான் சுவாசிக்க காற்று தருகிறதா? இல்லை சூரியன் தான் மதத்தை பார்த்து ஒளி தருகிறதா? உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணி விலங்குகளுக்கு தெரியுமா நீங்கள் என்ன மதம் என்று அவைகள் எல்லாம் மதம் பார்த்து தான் உங்கள் வீட்டில் வளர்கின்றனவா? கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் அறிவு குறைந்த   இவைகள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்பொழுது அதே கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆறறிவு உள்ள மனிதன் பொதுவாக செயல் படமால் இப்படி மதத்தின் பெயரால் சண்டையிடுவது நியாயமா? தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் குழந்தைக்கு தெரியுமா நாம் இந்த மதத்தில் பிறக்கிறோம் என்று அது பிறந்து பிறகு தானே நீங்கள் அதற்கு ஒரு பெயரை வைத்து மதம் என்னும் நஞ்சை ஊட்டுகிறீர்கள். இதுவரை நடந்தது என்னவேண்டுமானாலும் இருக்கலாம் அதை சொல்லி வரபோகும் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம் நபர்களே இந்த உலகில் வாழும் கொஞ்ச நாளில் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று உறுதி எடுப்போம்.












 

23/10/2013

அஜித் ரசிகர்களே என்ன தான் வேண்டும் உங்களுக்கு?


இந்த பதிவு பொதுவான விஷயங்களை பற்றியோ அல்லது எல்லாரும் படிக்க கூடிய பொதுவான பதிவு அல்ல ஒரு விஜய் ரசிகனாக விஜயை எதிர்க்கும் அஜித் ரசிகர்களுக்காக நான் எழுதும் பதிவு.

இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் சமீபத்தில் விஜய் பற்றி வந்த இரண்டு செய்திகளும் அவற்றை படித்த அஜித் ரசிகர்கள் நடந்துகொண்ட விதமும் தான். என்ன அந்த இரண்டு செய்திகள்? எப்படியும் பலரும்  படித்திருப்பீர்கள் படிக்காதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

1. விஜய் இனிமேல் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

2. தனக்கு இப்போது அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க உழைத்து கொண்டிருக்கிறேன் என்றும்  சொன்னார்.


மேல உள்ள இரண்டு செய்திகளும் பொதுவாக பார்க்கும் பொது அதில் தவறு என்று சொல்வதற்கு என்றும் இல்லை. அதிலும் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுப்பேன் என்று சொன்னதை திரையரங்கு உரிமையாளர் சங்கம்
நல்ல முயற்சி என்று சொல்லி பாராட்டியுள்ளது. ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் அது எப்படி தவறு என்று தோன்றுகிறது  என்று எனக்கு தெரியவில்லை. நான் எல்லா அஜித ரசிகர்களையும் சொல்லவில்லை அஜித் படம் வந்தால் உற்சாகமாக பார்த்து நன்றாக இல்லை என்றாலும் படம் தாறுமாறாக உள்ளது என்றும் மற்ற நடிகர்களின் படம் வந்தால் பிடித்தால் நன்றாக உள்ளது பிடிக்கவில்லை என்றால் நன்றாக இல்லை என்று சொல்லும் அஜித் ரசிகர்களை நான் இங்கு சொல்லவில்லை.

விஜய் படம் வந்தாலோ அல்லது விஜய் பற்றி எதாவது செய்தி வெளியானலோ அது நல்லதோ கேட்டதோ விஜயை கிண்டல் செய்வதாலேயே தன்னை  அறிவாளியாக நினைத்துகொள்ளும் சிலருக்கு தான் இந்த பதிவு.

விஜய் அஜித் படங்களில் அஜித்தை விட விஜய் சற்று அதிகமாக ஹிட் கொடுத்துள்ளார் என்று யாராவது சொன்னால் போதும் உடனே இவர்களுக்கு மூக்கு வியர்த்துவிடும், சாப்பாடு இறங்காது தூக்கம் கூட வரத்து போலும் அங்கு வந்து அணைத்து படங்களும் ரீமேக் சொந்தமாக விஜயால் ஹிட் கொடுக்க முடியாது என்று சொல்லி ஆறுதல் அடைவார்கள். ரீமேக் படங்களில் நடித்தாலே படம் ஹிட் என்று மக்கள் நினைப்பது போலும் நல்ல இல்லை என்றாலும் ரீமேக் படங்களை மக்கள் ஹிட் ஆக்கிவிடுவார்கள் என்றும் ரீமேக் படங்களில் நடிப்பது என்னவோ பெரிய பாவச்செயல் போலவும் பேசுவார்கள். ரீமேக் படம் நடித்து ஹிட் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை என்றால் தமிழ் நாட்டில் நிறைய ரீமேக் படம் வந்திருக்கிறது அவை அனைத்தும் ஹிட் ஆகியிருக்க வேண்டுமே? ஆனால் ரஜினி விஜய் நடித்த ரீமேக் படங்கள் மட்டுமே அதிகமாக ஹிட் ஆகியிருக்கின்றன. ரீமேக் படமே என்றாலும் அதையும் மக்கள் விரும்பும் வன்னம் எடுத்தால் தான் ஹிட் ஆகும். அஜித் கூட பில்லா,ஏகன், கிரீடம் போன்ற ரீமேக் படங்களில் நடித்தார். அவை அனைத்தும் ஹிட் ஆகிவிட்டனவா என்ன?... ஆங்கிலத்தில் வெளியான ஹிட் படமாகிய ஸ்கார் பேஸ் படைத்தை அப்படியே ஸ்டில் முதற்கொண்டு காப்பி அடித்து எடுத்தார்கள் அதுவும் ஹிட் ஆகவில்லை. இந்நிலையில் ரீமேக் படங்களில் நடிப்பது என்னவோ அவ்வளவு எளிமையான செயல் போன்று இதுவரை வந்தார்கள் அவர்கள் வாயை அடைக்கும் விதமாக தான் விஜய் இனிமேல் ரீமேக்  படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னார்.


சரி இதோடு விட்டு விடுவார்கள் என்று நினைத்தால் விஜய்க்கு அதிகமாக ஹிட் கொடுத்ததே ரீமேக் படம் தான் இனிமேல் அவர் படம் ஓடாது என்று கிண்டல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். ரீமேக் படங்களில் நடித்தாலும்  குற்றம் நடிக்க மாட்டேன் என்று சொன்னாலும் குற்றமா என்ன தான் வேண்டும் அஜித் ரசிகர்களே???....

விஜய் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வந்தபோது இவர்கள் விஜய்க்கு அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது?, இவரால் தமிழ் மக்களுக்கு என்ன நல்லது செய்யமுடியும்? என்றெல்லாம் கேட்டார்கள். இப்போது என்னவோ தகுதியானவர்கள் மட்டும் தான் அரசியலில் இருப்பது போலவும், விஜய் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு எதுமே செய்யமாட்டார் என்று இவர்களுக்கு அசரிரி வந்து சொன்னது போலவும் பேசுவார்கள். இப்பொது விஜய் தனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று சொன்னதும் அதை வைத்து கிண்டல் செய்கிறார்கள். அரசியலுக்கு வருவதாக இருந்த்காலும் தவறு அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தவறா என்ன தான் வேண்டும் அஜித் ரசிகர்களே???...

விஜய் வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க விரும்புகிறேன் என்று சொன்னார் அதற்க்கு அழிந்து வரும் திரையரங்குகளை காப்பாற்ற ஒவ்வொரு பெரிய நடிகரும் மூன்று படங்களாவது நடிக்க வேண்டும் நல்ல முடிவு என்று
திரையரங்கு உரிமையாளர்கள் பாராட்டினார்கள். சும்மா விடுவார்களா அது எப்படி விஜயை பாராட்டலாம் இந்த உலகிலேயே அவர் மட்டும் தானே கேட்டவர் அவரை பாராட்டுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும் இவர்களால். அங்கேயும் வந்து விஜய் எதனை படம் படித்தாலும் பிளாப் தான் ஆகும் இதுக்கு எதுக்கு பாராட்டு என்று குலைத்து விட்டு போகிறார்கள். அதாவது விஜய் நடித்தால் படம் ஹிட் ஆகும் அதிக வசூல் வரும் என்று நினைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் எல்லாம் முட்டாள்கள் அவர்கள் எல்லாம் எதுவும் தெரியாமல் விஜயை வைத்து படம் எடுக்கிறார்கள் இவர்கள் மட்டும் தான் அறிவாளிகள் இவர்களுக்கு தான் யார் நடித்தால் படம் ஹிட் ஆகும் யார் நடித்தால் தோல்வி பெரும் என்று நன்றாக தெரியும் என்பது போல பேசுவார்கள் நீங்கள் எதிர்த்து நியாயமான கேள்விகளை கேட்டுபாருங்கள் உடனே நீ  விஜய் ரசிகன் அறிவில் குறைந்தவன் நீங்கள் எல்லாம் இப்படி தான் முட்டாள் தனாமாக இருப்பீர்கள் என்று அவர்கள் உங்களுக்கு சான்றிதழ் தருவார்கள். விஜய் நடித்த படம் நன்றாக இருந்தால் பாருங்கள் இல்லை எனக்கு விஜயை பிடிக்காது என்றால் விட்டுவிடுங்கள் உங்களை விஜய் கையை பிடித்து இழுத்து வந்து படம் பாக்க சொல்கிறாரா நீங்களாகவே படம் பார்க்க போகும் முன்பே படம் நன்றாக இருக்காது இருக்க கூடாது என்று நினைத்து போனால் படம் நன்றாக இருந்தாலும் உங்களுக்கு அப்படி எதிர்மறையாக தான் தோன்றும். பிடிக்காதவர்கள் படம் பார்க்காமல் இருக்க வேண்டும் குறை கூற வேண்டும் என்றே பார்த்துவிட்டு பின்பு குறை கூறுகிறீர்கள் என்ன தான் வேண்டும் அஜித் ரசிகர்களே???...






இதை படிப்பவர்கள் மற்றவர்கள் விஜய் படங்களை பற்றி பேசவே கூடாத விஜய் ஒரு நடிகர் தானே அவரை பற்றி விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை உள்ளது என்று கேட்கலாம்.
நான் விஜய் படங்களை பற்றி எதுமே சொல்ல கூடாது என்று சொல்லவில்லை. சுறா படத்தை நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஏன் என்றால் காசு கொடுத்து பார்த்து தலை வலி வந்தால் கோபம் வரும்தான் எனக்கும் வந்தது ஆனால் துப்பாக்கி படத்துக்கு வந்து இந்த மாதிரி படத்தை என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது அவ்வளவு மோசமாக உள்ளது என்று சொன்னால் அவர்களை என்ன செய்யலாம் அவர்களே பில்லா 2 மாதிரியான படங்களை உலகத்தரம் என்று புகழ்ந்தால் நமக்கு எவ்வளவு கோபம் வரும். அப்படி தான் சில அஜித் ரசிகர்கள்           பில்லா 2,ஏகன்,அசல்,ஆழ்வார்,ஜனா, போன்ற அஜித் படங்களை படங்களை துப்பாக்கி, நண்பன், வேலாயுதம், காவலன் போன்ற விஜய் படங்களை விட நன்றாக இருக்கிறது என்று கோபம் வர மாதிரி காமெடி பண்ணும்போது சிரிப்பு வர மறுக்கிறது.

18/10/2013

தமிழ் சினிமாவின் மாற்றம் ஆரோக்கியமானதா?


நூறு ஆண்டுகள் கடந்து வெற்றிநடை போட்டுகொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. அவற்றில் சில ஆரோக்கியமானதாகவும் உள்ளது சில அருவருப்பாகவும் உள்ளது. ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது ஆனால் நான் கூறுவது தற்போதைய மாற்றத்தை பற்றி தான். பெரிய ஹீரோ படங்கள் மட்டுமே வெளிவந்து வெற்றி பெற்ற காலங்கள் பொய் இப்போது புது முகங்களின் படங்களும் நல்ல கதை உள்ள திரைப்படங்களையும் மக்கள் ரசிக்க ஆரம்பித்துள்ளார்கள் இது வரவேற்கத்தக்கது தான் இருந்தாலும் இதை நம் இளம் ஹீரோக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். மாஸ் ஹீரோக்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் என்ன தவறு செய்தார்களோ அதையே சிறிய பட்ஜெட் படங்களும் இன்று செய்கின்றனர்.


முன்னர் ரஜினி தன் படங்களில் சிகரட் பிடிப்பதை போன்று நிறைய காட்சிகளை வைத்தார் அதையும் ஸ்டைலாக பிடித்தார் அதை பார்த்த அவரின் ரசிகர்கள் அதை அப்படியே பின் பற்றினர். சிகரட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட  ரஜினியை போன்று சிகரட் பிடிப்பதை பெருமையாக நினைத்து கற்றுக்கொண்டனர். பாபா வரை ரஜினி அதை விடவில்லை ராமதாஸ் பாபா படத்திற்காக அதை எதிர்த்த பின் தான் அவருக்கு அது தவறு என்று தெரிந்தது பின் அந்த பழக்கத்தை நிறுத்தி கொண்டார்.



ரஜினிக்கு அடுத்து வந்த விஜய் அஜித்தும் இதே தவறை செய்கின்றனர்.
அஜித் நடித்த மங்காத்தா படம் முழுக்க அஜித் சிகரட் பிடிப்பதை போன்ற கட்சிகள் மது அருந்தும் காட்சிகள் நிறைந்திருந்தன. அதுமட்டும் இல்லாமல் கெட்ட வார்த்தைகள் பலவற்றை அஜித் சரளமாக பேசினார். படமும் வெற்றி அடைத்தது அதை பார்த்த அவரது ரசிகர்களும் சிகரட் பிடிக்கும் போது மது அருந்தும்போதும் தன்னை மங்கத்தாவில் வரும் அஜித்தாக நினைத்து நன்றாக குடிக்கிறார்கள். தன் சொந்த வாழ்வில் தனி மனித ஒழுக்கத்திலும், நேர்மையிலும் சிறந்து விளங்கும் அஜித் படங்களில் இப்படி நடிப்பது தவறானதாகும். படித்த ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் அஜித் என்ற மனிதன் நல்லவர் அவர் படங்களில் அப்படி நடிக்கின்றார் என்று ஆனால் பாமர ரசிகன் அப்படி இல்லை திரையில் தன தலைவன் என்ன செய்கிறானோ அது தவறு என்றாலும் செய்யும் ரசிகர்கள் அதிகம்.



 சன் டிவி யில் தனுஷிடம் பேசிய ரசிகர் ஒருவர் நான் உங்களின் தீவிர ரசிகன் புதுப்பேட்டையில் படத்தில் நீங்கள் வருகிற மாதிரி பெரிய ரௌடி ஆகவேண்டும் என்பது தான் எனது ஆசை என்று சொன்னார் அதை கேட்டபோது தனுஷ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஆனால் நான் மிகவும் வருத்தப்பட்டேன் சினிமாவில் இருக்கும் ஒரு நிழலுக்காக ஒரு மனிதன் தன நிஜ வாழ்கையை பாழக்கிகொல்கிரனே என்று எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 



அடுத்து விஜய் தனது துப்பாக்கி படத்தில் சிகரட் பிடிப்பதை போன்று புகைப்படம் வெளியானது அதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தபின் அதை எடுத்துவிட்டனர். தனது போக்கிரி படத்திலும் வன்முறையை மிக சாதரணமாக செய்து காட்டினார்.


 இவர்கள் எல்லாம் ரசிகர்கள் தன பக்கம் இருக்க வேண்டும் என்று செய்த அதே வேலையை இன்று மற்று சினிமா என்கிற பெயரிலும் காமெடி என்ற பெயரிலும் இளம் தலைமுறை நடிகர்கள் செய்கின்றனர்.


சமீபத்தில் வெளியான வருத்தபடாத வாலிபர் சங்கம், சூதுகவ்வும்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஓகே ஓகே, கேடிபில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களை பார்த்தல் அதில் பொதுவான சில விஷயங்களை காணலாம் இதில் அனைத்திலுமே ஹீரோ எந்த வேலைக்கும் செல்லமாட்டார், அப்பா அம்மா சொல்வதை கேட்க மாட்டார், பெண் பின்னாடி சுத்துவதையே முழுநேர வேலையாக கொண்டிருப்பார், கலையில் எழுந்தவுடனே குடிக்கும் மகா உன்னதமான பழக்கத்தை கொண்டிருப்பார். இதை பார்க்கும் பாமர ரசிகனுக்கு இதை எல்லாம் செய்பவன் தான் ஹீரோ என்ற எண்ணம் தொடங்குகிறது அது மட்டும் இல்லாமல் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள்
பெண்களை கேலி செய்து ஒரு பாட்டு என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ஓபன் செய்தவுடன் அழகான கிராமம் என்ற வசனம் பொய் இப்போதெல்லாம் ஓபன் செய்தவுடன் டாஸ்மாக் பார் என்று மாறிவிட்டது இது ஆரோக்கியமான மாற்றமாக தெரியவில்லை. இப்போது வெளியாகும் படங்களில் உண்மையான நட்பு என்றால் அது சரக்கு வங்கி கொடுப்பது ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பது என்பது போல் காட்டப்படுகிறது. குட்க விழிப்பு விளம்பரத்தை என்னவோ வியாபார ரீதியாக செய்யும் ஒரு விளம்பரத்தை கேலி செய்வதை போல சந்தானம் செய்வதற்கு காரணம் இந்த மன நிலை தான். குட்கா விழிப்புணர்வு விளம்பரத்தை கேலி செய்ததற்காக சந்தானத்தை எதிர்த்தவர்கள் டாஸ்மாக், சிகரட்களுக்கு விளம்பர தூதுவர் போல படம் நடிக்கும் நடிகர்ககளையும் அந்த மாதிரி படம் எடுக்கும் இயக்குனர்களையும் எதிர்க்காதது ஏன்?... மாற்று சினிமா என்றால் வெட்டுகுத்து, கொலை, சரக்கு, கற்பழிப்பு, இவற்றை காட்டி படம் எடுப்பது நகைச்சுவை சினிமா என்றால் பெண்களை கேலி செய்வது, இரட்டை அர்த்த வசனங்களை பேசுவது என்ற சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் இத்தகைய மாற்றம் ஆபத்தானதாகும். இதனால் பார்க்கும் ரசிகர்களின் மனம் தவறானவற்றை மட்டுமே நினைக்கும் ஏற்கனவே பல தவறுகள் நடக்கும் நம் தமிழ் நாட்டில் இந்தகைய படங்களின் தாக்கம் மேலும் பாதிப்பை ஏற்ப்படுத்தும். நல்ல கதை யார் மனதையும் புண்படுத்தாத காமெடி அனைவரும் குடும்பத்துடன் உட்காந்து முகம் சுளிக்க வைக்காமல் பார்க்கும் வகையான படங்கள் தமிழில் வர வேண்டும் அப்பொழுது தான் தமிழ் சினிமா உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்.