Pages

05/11/2017

விழித்திரு விமர்சனம்

விழித்திரு... விமர்சனம்

டி.ஆர்  இந்த படத்துக்கு ஏற்கனவே பப்ளீசிட்டி செய்தும் எனக்கு இந்த படத்தின் மீது ஈர்ப்போ ட்ரைலர் பார்க்கணும் னு என்னமோ வரவில்லை. நண்பர்கள் மூலம் தான் இந்த படத்தின் கதை கரு தெரியவந்தது பிறகு ட்ரைலர் பார்த்தாச்சு இன்று படமும் பார்த்தாச்சு... நன்கு முனை கதையமைப்பு கொண்ட கதை...

இந்த படம் ஏன் அவசியம் பார்க்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று இளவரசன் விஷயத்தில் பா.மா.க செய்த பச்சையான சாதி அரசியலும் அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதையும் தைரியமாக பதிவு செய்தது. வெறும் கோபம் என்று சொல்லாமல் ஆதி தமிழர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு சாதி வெறியுடன் செய்த விஷயங்கள் படத்தில் வசனம் மூலம் இடம் பெறுகிறது. இன்னொரு காரணம் அதிகார வர்க்கம் தான் தேவைக்காக குற்றவாளிகளை தப்பிக்க விடுவதும் அப்பாவிகளை திட்டமிட்டு குற்றவாளியாக மாற்றுவதையும் காட்சிகள் மூலம் இடம் பெற்றுள்ளது. முத்துக்குமார் பாத்திரம் அவரின் திருநெல்வேலி பின்புலம் அவரது தங்கை  அந்த தோள்பை என்று அனைத்தும் நமக்கு ராம் குமாரை நினைவு படுத்திக்கிறது. இந்த இரண்டு நிஜ சம்பவங்களை வசனமாகவும் காட்சிகளாகவும் வைத்த அந்த தைரியத்திற்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

அந்த கிறிஸ்டினா விக்ரம் கதை தேவை இல்லாத ஆணி அதை புடுங்காமல் இருந்திருக்கலாம். ஏனனெனில் ஏற்கனவே தமிழ் சினிமா அடித்து துவைத்த கதை தான் அது. அந்த விக்ரம் கதாபாத்திரம் பயணிக்க ஆரம்பித்ததும் முடிவு என்னவாக இருக்கும் னு முன்கூட்டியே தெரிந்துவிடும் அளவுக்கு நமக்கு பழக்கப்பட்ட கதை அது. அதை தவிர்த்து வேறு புதிய கதை சேர்த்து இன்னும் சுவாரசியம் சேர்த்திருக்கலாம். அடுத்து இதில் உள்ள ஸ்பெஷல் எனக்கு மிகவும் பிடித்த பேபி சாரா இந்த படத்தில் நடித்துள்ளது. ஆனால் அதன் கதாபாத்திரம் அவ்வளவு நம்பும்படியாக இல்லை. நாயையை தேடி கண் தெரியாத அப்பாவும் சின்ன குழந்தையும் ராத்திரியில் வெளியில் சுற்றுவதும் அவரின் வீட்டார் இருவரையும் காணவில்லை என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது எப்படி. பேபி சாரா தன் கண் தெரியாத அப்பாவை நாடு இரவில் தனியாக விட்டுட்டு ஓடுவது ஏன் அவர் தனியாக பொய் ஒருவரிடம் மாட்டி தப்பித்து மீண்டும் தனியாக பொய் இன்னொருவரிடம் மாட்டிக்கொள்ளும்படி கதை வைத்தது தவிர்த்திருக்கலாம். விதார்த் தன்ஷிகா லவ் ஸ்டோரி அதே பழைய திருட திருடி கதை தான் கடைசியில் ஒருவர் திருந்திடுவார் னு எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

டி.ஆர் ஆடிய அந்த ஐட்டம் டான்ஸ் படத்துக்கு தேவையே இல்லை. படத்தின் பெரிய நெருடல் அது.

படத்தை பார்க்க ஆர்வமாக்குவது முத்துக்குமார் மற்றும் அவர் சேர்ந்து பேசும் சாதி அரசியலும் அதிகார வர்க்கம் அரசியல்வாதிகள் போலீஸ் போன்றோர் செய்யும் தவறுகளை தைரியமாக சொல்லிய விதம் தான்.

படத்தின் கடைசி காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. படம் முடிந்து வெளி வரும்போது ஒரு நல்ல தைரியமான இயக்குனரின் படைப்பை பார்த்துவிட்டோம் ஒன்று ஒரு மன நிம்மதியும் இவ்வளவு நடக்கிறது நம்மால் என்ன செய்ய முடிகிறது என்ற ஆற்றாமையும் கண்டிப்பாக ஏற்படும்...

நான் இன்று படம் பார்த்தபோது என்னோடு சேர்ந்து 20 பேர் தான் படத்தை பார்த்தனர். இது போன்ற நல்ல படைப்புகள் கண்டிப்பாக மக்க்களிடம் போய் சேர வேண்டும். நல்ல படம் வரும்போது அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும். பெரிதாக மார்கெட் செய்யப்படும் மொக்க படங்களை மட்டும் பார்த்துவிட்டு தமிழ் படம் நல்லாவே எடுக்கிறது இல்லை ன்னு பொலம்புறது தான் நம்ம மக்களின் வேலை. இனியாவது நல்ல படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆதரவு தருவோம்.

விழித்திரு தூங்கி கொண்டிருக்கும் நம்மை விழித்துக்கொள்ள செய்யும் ஒரு நல்ல முயற்சி கண்டிப்பாக தியேட்டர் சென்று பாருங்கள்.