Pages

22/09/2013

விஜய்க்கு அவமரியாதை.... எங்கே செல்கிறது தமிழ் சினிமா?

தென்னிந்தியா சினிமா நூற்றாண்டு விழா நேரு அரங்கில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவின் முன்னனணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு நடந்த அவமானம் தமிழ் சினிமா எந்த நிலையில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.



தலைவா படத்தால் ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் நூற்றாண்டு விழாவிற்கு அழைக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்டது கடைசி நேரத்தில் விஜய் விழாவில் கலந்துகொண்டார். விழாவில் தமிழ் சினிமா பற்றி திரையிடப்பட்ட ட்ரைலரில் முன்னணி நடிகராகிய விஜய் பற்றிய காட்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன.

தமிழ் சினிமாவின் சாதனை படங்களில் விஜயின் துப்பாக்கி படம் மட்டுமே காட்டப்பட்டது மற்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டன. மற்ற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களுக்கு வி ஐ பி வரிசையில் முன் வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த முன்னணி நடிகர் விஜய்க்கு கடைசி வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து பேச தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாருக்கும் தைரியமில்லை அனைவரும் வாயை மூடிகொண்டிருக்கும் பொது இளம் நடிகர்கள் பலர் விஜயை முன் வரிசையில் வந்து அமருமாறு அழைத்தனர் ஆனால் விஜய் தான் இங்கயே அமர்ந்து கொள்வதாக சைகையின் மூலம் தெரிவித்தார். விக்ரம் மட்டும் இவை எதையும் பொருட்படுத்தாமல் விஜயின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார். விஜயும் விக்ரமும் நெடு நேரம் பேசிகொண்டிருன்தனர்.



விஜயை அவர்கள் ஒதுக்கிய போதும் இன்று 100வது விழா பற்றி வெளியான அணைத்து நாளிதழ்களிலும் விஜய் முன்னிலை பெற்று இருந்தார். ட்விட்டரில் விஜய் இன் 100 தமிழ்சினிமா என்பது உலக அளவில் ட்ரண்டில் இருந்தது. விஜயை திட்டமிட்டு அவமானப்படுத்த முயன்றவர்கள் இதை பார்த்து விஜயின் தகுதியை தெரிந்து கொள்ளட்டும்.

இதை நான் எழுதுவதற்கு காரணம் விஜய் அவமானப்படுத்தப்பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. முன்னால் ஆட்சியில் அஜித் தன்  மனதில் பட்டதை கூறியதற்காக அவரும் இதே நிலைக்கு தள்ளப்பட்டார். கோபால புறம் சென்று மன்னிப்பு கேட்டார் இருப்பினும் கோவை செம்மொழி மாநாட்டில் அவர்க்கும் ஷாலினிக்கும் கடைசி வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது  அப்போது விஜய் மாதிரியே அவரும் அமைதியாக அமர்ந்து சென்று விட்டார். கமலுக்கு விஸ்வரூபம் பிரச்சனையில் பல முன்னணி நடிகர்களும் இதே போன்று அமைதி காத்தனர் ஆனால் விஷால் மட்டுமே தைரியமாக நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு ராதாரவியும் சரத்குமாரும் தாங்கள் என்னவோ பிற நடிகர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்பது போல விஷாலிடம் பல கேள்விகளை கேட்டனர். ஆனால் பின்னர் ஏற்பட்ட தலைவா பிரச்சனையில் விஷால் கூறியது சரியானதே என்று தெளிவாக தெரிந்தது.

தமிழ் நாட்டில் இனிமேல் படம் எடுத்தால் முதலில் முதலமைச்சர் பின்பு அணைத்து மத தலைவர்கள் அப்படி அனைவருக்கும் போட்டு காண்பித்து அவர்கள் அனுமதி பெற்ற பின் தான் படம் வெளியிட வேண்டும் போல் இருக்கிறது அப்படி ஒரு நடிகன் தன் விருப்பம் போல வெளியிட்டால் விஜய்க்கு ஏற்ப்பட்ட நிலை தான் போல இந்த லட்சணத்தில் தமிழ் சினிமா சுதந்திரமாக செயல் படுகிறது என்று வாய்கூசாமல் பொய் வேறு சொலிக்கொண்டு திரிகிறார்கள். இது அஜித் விஜயோடு நின்று விட  போவது இல்லை மற்ற நடிகர்களுக்கும் தொடரும் அன்று அஜித்துக்கு இந்த நிலை ஏற்ப்பட்ட பொது அவர் ரசிகர்கள் மட்டுமே போராடினர் இன்று விஜய்க்கு ஏற்பட்ட பொது விஜயின் ரசிகர்கள் மட்டுமே போராடுகின்றனர்.

இந்த நிலை மற்ற நடிகர்களுக்கு வரும் போதும் இதே தான் நடக்க போகின்றது இதனால் தமிழ் சினிமாவின் நிலை என்ன ஆகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகிய கமல், விஜய் , அஜிதுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற இளம் நடிகர்களின் நிலை என்ன என்று தமிழ் சினிமாவை சேர்ந்த அனைவரும் யோசித்து பார்க்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தாள் அரசியல் வாதிகளுக்கு அடிமைகளாக தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்ப்படும்.

65 comments:

  1. இவரை உள்ள விட்டதே பெரிய விசயம் ... நான்கூட வாசலில் வாட்ச் மேனே தடுத்து வெளிய அனுப்பிடுவாருனு நினைத்தேன் .. இருந்தாலும் அம்மாவுக்கு பெரிய மனசு ..

    ReplyDelete
    Replies
    1. தமிழன் அவமானப்படுவதில் உனக்கு என்ன அவ்வளவு சந்தோசம் உன்னை போன்றோரால் தான் தமிழனை யார் வேண்டுமானாலும் சீண்டி பார்கிறான்

      Delete
    2. un kelattu thalai kalaingar kaalil vizhunthu mannippu kettum kooda avar mannikka villai itharku vijay evvalavo paravayillai

      Delete
    3. அண்ணே அனானி அண்ணே ... அஜித் தனக்கு நேர்ந்த கொடுமையை (மிரட்டி அழைத்தார்கள் ) நேர்பட பொது மேடையில் எடுத்து சொன்னாரே , உங்கள் தலைவழி உண்மையிலேயே நேர்மையான ஆளாக இருந்தால் அவரின் தலைவா படத்துக்கு யார் தடையாக இருந்தார்கள் என்பதை அந்த மேடையில் தைரியமாக சொல்லி இருக்கலாமே ...

      நீங்கள் சொல்வது போல அம்மா இதற்க்கு காரனாமக் இருந்திருந்தால் அவரையே அந்த மேடையில் பாராட்டி ஜால்ரா அடித்தது எவ்வளவு கேவலமான seyal ... படப்பெயர் மட்டும் தலைவா என்று வைத்து விட்டால் தலைவனாக ஆகிவிட முடியாது , அந்த குணம் எப்பொழுதும் வெளிப்பட வேண்டும் ..

      Delete
    4. @ sheenaa
      ஆமா இவரு பெரிய பெருந்தலைவர் காமராஜர் , இவரு அவமானபடுவதை பார்த்து ஒரு தமிழனா நாங்க கோபபடணும் ... அவனவன் ***கொழுப்புக்கு அவனவன் அடி வாங்குரான் இதில் நீங்க வருத்த படவோ நான் சந்தோசபடவோ ஒண்ணுமே இல்லையே பாஸ்?

      Delete
    5. வெளியில் வீராப்பாக பேசிவிட்டு பின்பு தனியாக சென்று கலைஞர் காலில் விழுந்ததை விட இது எவ்ளோ பரவாயில்லை

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. அனானி அண்ணே நீங்கள் சொல்வது போலவே வைத்து கொள்வோம் ... அவராவது வெளியிலாவது வீராப்பு பேசுனாறு , ஆனால் இவரால் அதைக்கூட செய்ய முடியவில்லையே , அதை விடுங்க காலில் விழுந்து விடலாம் என்று கொடநாடு போனால் வாட்ச் மேனே அடித்து தூரத்து விட்டான் ... என்னையா பண்ணினான் என் கட்சிக்காரன் அவனுக்கு காலில் விழக்கூட தகுதி இல்லையா? என்று வேண்டுமானால் நீங்கள் முதல்வரை பார்த்து கேழுங்கள் ,, நாங்களும் அதற்க்கு ஆதரவு தெரிவிக்கிறோம் ..

      Delete
    8. எங்கள் விஜய் சென்று ஜெயா காலில் விழும் அளவுக்கு ஜெயாவுக்கு தகுதி இல்லை என்று ஜெயா உணர்ந்திருப்பார் அதனால் திருப்பி அனுப்பி விட்டார் ஆனால் உங்கள் அஜித்துக்கு காலில் விழுவதற்கு தான் தகுதி உள்ளது என கலைஞர் நினைத்திருப்பார் போலும் அதனால் அஜித்தை அழைத்து தன் காலில் விழ செய்திருக்கிறார். பிறர் காலை தொட்டு சாதிக்கும் தல என்று சொல்லுங்கள் அதற்கு நாங்கள் சப்போர்ட் செய்கிறோம்

      Delete
    9. //எங்கள் விஜய் சென்று ஜெயா காலில் விழும் அளவுக்கு ஜெயாவுக்கு தகுதி இல்லை என்று ஜெயா உணர்ந்திருப்பார் அதனால் திருப்பி அனுப்பி விட்டார்//

      அனானி அண்ணே வெயிலில் ரொம்ப அலையாதன்னே ... மூளை சூடாகி பொங்கி வழியிது பாருங்க ... இப்படியெல்லாம் திங் பண்ற உங்க மூளை எல்லாம் எங்க தேடினாலும் கிடைக்காது , பிற்கால சந்ததிகள் ஆராய்ச்சி கூடத்தில வச்சி ஆராய்ச்சி பண்ணி கத்துகிறதுக்கு ஏகப்பட்ட மேட்டர் இருக்குன்னே உங்க மூலையில ...அதை பத்திரமா பாத்துகோன்னே... வெயிலுல ரொம்ப அலையாதன்னே ...

      Delete
    10. அய்யய்யோ ஏட்டையா என்ன கலாய்ச்சிட்டாரு அய்யயோ எனக்கு சிரிப்பே வரல

      Delete
  2. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் அவரும் ஒருவர் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் செய்த ஹீரோக்களில் 3 வது இடத்தில உள்ளவர் அவர். மற்ற மாநில நடிகர்களுக்கு முன் ஒரு தமிழரை அவமானப்படுத்துவது அதும் ஒரு அரசியல் வாதியின் தனிப்பட்ட விரோததிர்காக அவமானப்படுத்துவது தமிழ் சினிமாவிற்கே கேவலம் அதற்கு சப்போர்ட் செய்வது அதனினும் கேவலம்

    ReplyDelete
    Replies
    1. சினிமாவில் குரங்கு வித்தை காட்டி , அதன்மூலம் சேர்ந்த ஒரு koottahthai வைத்து கொண்டு அரசியலில் கால்வைத்து கோடி கோடியாக kollai adikka துடிக்கும் oruvanai ஆதரிப்பதை விட நான் செய்தது பெரிய கேவலம் illai nanbaa

      Delete
    2. விஜய் குரங்கு வித்தை காட்டி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் என்றால் எம்.ஜி.ஆர் என்ன வித்தையை காட்டி ஆட்சியை பிடித்தார். இப்போது ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் அம்மா என்ன வித்தை காட்டி ஆட்சியை பிடித்தார்.. அவர்களெல்லாம் என்ன செய்தார்களோ அதையே தான் விஜயும் இன்று செய்து கொண்டு இருக்கிறார் என்னவோ இதற்கு முன் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் எல்லாம் தியாகிகளாக இருந்து பின்பு ஆட்சிக்கு வந்த மாதிரியும் விஜய் மட்டும் தான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர நினைப்பது போலவும் பேசுகிறீர்கள்

      Delete
    3. உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றே புரியவில்லை , சரி உங்களுக்கு புரியும் வகையில் ஒரு உதாரணம் சொல்கிறேன் ... ஒரு பெண் தன் பதின்ம வயதில் (அதான் பதினாறு வயதினில்) ஒரு அழகான ஆணின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை நல்லவன் என்று நினைத்து அவனிடம் தன்னை இழக்கிறாள் என்று வைத்து கொள்வோம் ... ஆனால் பிறகுதான் தெரிகிறது அவன் அவளை ஏமாற்றி விட்டான் என்று , பிறகு வேறு வழியில்லாமல் வேறு நல்லவன் எவனும் கிடைக்காமல் ,இருப்பதே போதும் என்று அவனிடம் குப்பை கொட்டி கொண்டு இருக்கிறாள் , இந்நிலையில் இன்னொருவன் வருகிறான் முதலாமாவன் போல அவனுக்கு அழகும் கிடையாது அறிவும் கிடையாது (சுருக்கமாக சொல்ல போனால் எழுந்து நிக்கவே வக்கில்லாதவன் ), ஆனால் அவளை எப்படியாவது அடைய துடிக்கிறான் , அவளிடம் போய் அதான் ஏற்கனவே ஒருத்தன் உன்னை சீரழித்து விட்டானே , இப்பொழுது நான் உன்னை சீரழிக்க நினைப்பது மட்டும் என்ன குற்றமா என்று கேட்டால் உடனே அந்த பெண் ஒத்து கொள்வாளா? அப்படியே ஒத்து கொண்டால் அவளின் பெயர் விபச்சாரி(விபச்சாரிகூட எழுந்து நிர்க்க வக்கில்லாதவனை ஏற்று கொள்ள மாட்டாள் )... தமிழர்கள் அந்த விபச்சாரி போலத்தான் இருக்க வேண்டுமா நண்பரே ..

      (இங்கு அழகு , அறிவு , எழுந்து நிற்பது இது எல்லாம் ஒரு குறியீடாகத்தான் சொல்லபட்டிருக்கிறது , அதை நேரிடையாக அர்த்தம் எடுத்து கொண்டு விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்)

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. நீங்கள் சொல்லிய உதாரணம் இதற்கு பொருந்தாது ஒரு பெண்ணிற்கு ஒருவனை பார்த்தவுடன் ஆவான் அழகான இல்லை அழகு இல்லதவனா என்று தெரிந்து விடும் அவன் நிக்கேவே வக்கில்லாதவன் என்று அவனை பார்த்தவுடன் தெரிய வேண்டும் என்றால் அவன் ஊனமாக இருந்தால் மட்டுமே முடியும் அல்லது நீங்கள் வேறு அர்த்தத்தில் இதை சொல்லியிருந்தால் (உடலுறவு சம்பந்தமாக) அது எப்படி அந்த பெண்ணுக்கு தெரிய முடியும் அவன் அறிவு உள்ளவனா இல்லாதவனா என்பது கூட பழகினால் தான் தெரியும்.

      இப்போது விஜய்க்கு வரவும் விஜய் அரசியலுக்கு வந்தால் நாட்டிற்கு நல்லது செய்யவே மாட்டார் என்று உங்களால் எப்படி இப்போதே சொல்லமுடியும் ஒரு வேலை அவர் அரசியலுக்கு வந்து இப்போது இருக்கிற மாபெரும் கட்சிகள் இரண்டையும் தோற்கடித்து ஜெயித்துவிட்டார் என்று வைத்து கொள்வோம் அதாவது அவர் அரசியலுக்கு வந்து போராடி இரண்டு கட்சிகளையும் தோற்கடித்து முதல் முறையாக முதலமைச்சர் ஆகியிருக்கிறார் அப்படி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டிய சூழலில் அவர் உள்ளார் ஏன் என்றால் மக்கள் இப்போது இருக்கிற இரு பெரும் கட்சிகளை தோற்கடித்து இன்னொருவரை தேர்வு செய்வது ரொம்ப கடினம் அப்படி மக்கள் இரு கட்சிகளையும் தோற்கடித்து ஒரு வாய்ப்பை விஜய்க்கு வழங்கியிருக்கிறார்கள் என்றால் அந்த ஒரு வாய்ப்பை எப்படி வீணடிக்க அவருக்கு தோன்றும் முதல் முறை என்பதால் கண்டிப்பாக அவருக்கே செய்ய மனமில்லாமல் இருந்தாலும் கண்டிப்பாக செய்ய வேண்டிய சூழ்நிலையில் அவர் உள்ளார் என்பதை கண்டிப்பாக அவர் உணர்ந்திருப்பார் அல்லவா மக்கள் கொடுத்த அந்த அறிய வாய்ப்பை கண்டிப்பாக பயன்படுத்திகொள்ளும் விதத்தில் ஏதாவது அவரால் முடிந்த நல்லதை செய்வார் நான் இதை விஜய்காக மட்டும் சொல்லவில்லை மக்கள் ஒருவேளை இந்த வாய்ப்பை புதிதாக வந்த யாருக்கு தந்தாலும் அவர்களும் செய்வார்கள் இது தான் என் கருத்து.
      இந்த விஷயத்தில் தவறு நம் மக்கள் மேல் தான் உள்ளது தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பில் உள்ள முதல்வரை நம் மக்கள் திரை அரங்கில் தானே தேடிக்கொண்டு இருகிறார்கள் படித்த இளைஞர்கள் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலுக்கு போட்டியிடுகிர்ரர்கள் ஒரு சினிமா நடிகன் கட்சி ஆரம்பித்து அவரும் போட்டியிடுகிறார் என்று வைத்துகொள்வோம் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் படித்த இளைங்கர்களுக்கா இல்லை பிடித்த நடிகனுக்கா என்று பார்த்தால் கண்டிப்பாக நடிகனுக்கு தான் நம் தமிழ்நாட்டில் முதல்வர் என்றால் அவர் சினிமாவில் இருந்து வரவேண்டும் அல்லது ஏதாவது பெரிய சாதி கட்சி தலைவராக இருந்தால் வேண்டும் அப்படி தானே சூழ்நிலை உள்ளது இதற்கு விஜய் அல்லது அரசியலுக்கு வர நிலைக்கும் மற்ற நடிகர்கள் எப்படி பொறுப்பு ஆகா முடியும் தவறை நம் மீது வைத்துகொண்டு மற்றவர்கள் எப்படி குறை கூற முடியும்.

      நான் இன்னொன்றையும் சொல்லிகொள்கிறேன் நான் விஜய் ரசிகன் அவரை படத்தில் ரசிப்பவன் அதற்காக அவர் எது செய்தாலும் ரசிக்கும் முட்டாள் ரசிகன் இல்லை. அவர் அரசியலுக்கு வர நினைப்பது எனக்கு முற்றிலும் பிடிக்காத ஒன்று ஆனால் நானே அதை ஆதரித்து எழுதுவதற்கு காரணம் இபோது இருக்கிற நடிகர்களில் யார் நல்லவர்களாக இருக்கிறார்கள் எந்த அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருக்கிறார்கள் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே ஆனால் விஜய் மட்டும்தான் என்னவோ கெட்டவராக இருப்பது போன்றும் மற்றவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பது போன்றும் மற்றவர்கல் விஜயை பற்றி விமர்சனம் செய்யும் பொது தான் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அடுத்ததாக அவர்கள் சொல்லும் குற்றசாட்டு அவருக்கு நடிக்க தெரியவில்லை ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்பது தான். நன்றாக நடிக்கும் விக்ரம் போன்றவர்கலால் பிடிக்க முடியாத இடத்தை விஜய் பிடித்திருக்கிறார் திறமை முழுவதும் உள்ளவன் ஒரு துறையில் முன்னணியில் இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ஓரளவு திறமை உள்ள ஒருவன் முன்னணியில் இருப்பது தான் மிக பெரிய விஷயம் அந்த வகையில் பார்த்தல் விஜயை பற்றி வரும் அதனை விமர்சனங்களையும் தாண்டி அவர் முன்னணியில் தானே உள்ளார் விஜய் எதிர்ப்பாளர்கள் என்று சொல்லுவோர்களால் விஜயை இன்று வரை என்ன செய்ய முடிந்தது ரஜினி கமல் விஜய் என்று வசூலில் 3 வது இடத்தில் உள்ளார் விஜய். அவரை பற்றி சொல்லும் தனிப்பட்ட குற்றசாட்டுகள் யாவும் அவரின் தந்தையை சார்ந்ததே தவிர வேறு ஏதும் விஜய் பற்றி சொல்ல முடியாதே விஜய் ஜெயலலிதாவை பார்த்து பயந்து பதுங்குகிறார் என்று சொல்கிறார்கள் இந்த சூழ்நிலையில் ஒரு வேலை தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி இருந்திருந்தால் என்ன பண்ணியிருப்பார் ஜெயலலிதாவை எதிர்த்து வீர வசனம் பேசியிருப்பார இருக்கவே முடியாது அவரும் அமைதியாக தான் இருந்திருப்பார்.

      Delete
    6. //இந்த விஷயத்தில் தவறு நம் மக்கள் மேல் தான் உள்ளது தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பில் உள்ள முதல்வரை நம் மக்கள் திரை அரங்கில் தானே தேடிக்கொண்டு இருகிறார்கள் படித்த இளைஞர்கள் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலுக்கு போட்டியிடுகிர்ரர்கள் ஒரு சினிமா நடிகன் கட்சி ஆரம்பித்து அவரும் போட்டியிடுகிறார் என்று வைத்துகொள்வோம் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் படித்த இளைங்கர்களுக்கா இல்லை பிடித்த நடிகனுக்கா என்று பார்த்தால் கண்டிப்பாக நடிகனுக்கு தான் நம் தமிழ்நாட்டில் முதல்வர் என்றால் அவர் சினிமாவில் இருந்து வரவேண்டும் அல்லது ஏதாவது பெரிய சாதி கட்சி தலைவராக இருந்தால் வேண்டும் அப்படி தானே சூழ்நிலை உள்ளது இதற்கு விஜய் அல்லது அரசியலுக்கு வர நிலைக்கும் மற்ற நடிகர்கள் எப்படி பொறுப்பு ஆகா முடியும் தவறை நம் மீது வைத்துகொண்டு மற்றவர்கள் எப்படி குறை கூற முடியும்.

      தம்பி (கண்டிப்பாக நீ என்னை விட வயது குறைந்தவனாகவே இருப்பாய் என்று திடமாக நம்புகிறேன் )... எல்லாரையும் உன்னைப்போல நினைக்க வேண்டாம் ... பக்குவம் என்பது வயதுக்கு வயது மாறுபடும் ... நீயும் விரைவில் பக்குவப்பட வாழ்த்துகிறேன் ...

      Delete
    7. //நீங்கள் சொல்லிய உதாரணம் இதற்கு பொருந்தாது ஒரு பெண்ணிற்கு ஒருவனை பார்த்தவுடன் ஆவான் அழகான இல்லை அழகு இல்லதவனா என்று தெரிந்து விடும் அவன் நிக்கேவே வக்கில்லாதவன் என்று அவனை பார்த்தவுடன் தெரிய வேண்டும் என்றால் அவன் ஊனமாக இருந்தால் மட்டுமே முடியும் அல்லது நீங்கள் வேறு அர்த்தத்தில் இதை சொல்லியிருந்தால் (உடலுறவு சம்பந்தமாக) அது எப்படி அந்த பெண்ணுக்கு தெரிய முடியும் அவன் அறிவு உள்ளவனா இல்லாதவனா என்பது கூட பழகினால் தான் தெரியும்.

      தம்பி பெண்களை அவ்வளவு எளிதாக எடைபோட்டு விடாதே , ஒருத்தன் ஒரு விசயத்தில் கேட்டிகாரந்தானா என்பதை அதை செய்து பார்த்துதான் அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று இல்லை , அவனை பார்த்தாலோ , அவனின் நடவடிக்கைகளை கவனித்தாலோ எளிதில் அவர்களால் புரிந்து கொள்ள முடியும் ...

      MGRஇன் நடவடிக்கைகள் அவரை மக்களுக்கு ஒரு தலைவனாக காட்டியது , ஆனால் உங்கள் விஜய்?

      Delete
    8. // இபோது இருக்கிற நடிகர்களில் யார் நல்லவர்களாக இருக்கிறார்கள் எந்த அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருக்கிறார்கள் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே ஆனால் விஜய் மட்டும்தான் என்னவோ கெட்டவராக இருப்பது போன்றும் மற்றவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பது போன்றும் மற்றவர்கல் விஜயை பற்றி விமர்சனம் செய்யும் பொது தான் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

      ஐ சைக்கிள் கேப்புல எல்லாரையும் விஜய் மாதிரி அயோக்கியர்கள் என்று சொல்ல பாக்குறீயே தம்பி ... சரி தம்பி எல்லா பயலும் அயோக்கிய பயலாவே இருக்கட்டும் ஆனால் வேறு யாருக்கும் தன்னுடைய ரசிகர்களை பகடைகாயாக்கி அரசியலில் இரங்கி நாட்டை சூறையாடும் பேராசை இல்லையே ... வெறி பிடித்த நாயத்தான் பாஸ் கல்லால அடிக்கணும் ,

      Delete
    9. \\சரி தம்பி எல்லா பயலும் அயோக்கிய பயலாவே இருக்கட்டும் ஆனால் வேறு யாருக்கும் தன்னுடைய ரசிகர்களை பகடைகாயாக்கி அரசியலில் இரங்கி நாட்டை சூறையாடும் பேராசை இல்லையே\\

      அப்படியா நம் தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் இருக்கிறார் அவர் ஒரு தேர்தலில் கலைஞருக்கு ஒட்டு போடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு சொல்லி தன் ரசிகர்களை பகடை காயாக பயன்படுத்தினார் அது பொது பிரச்சனைகளுக்காக அல்ல ஜெயலிதா மீது இருந்த தனது தனிப்பட்ட சொந்த பிரச்சனைக்காக, அப்பறம் ராமதாஸ் மீது உள்ள தனிப்பட்ட பிரச்சனைக்காக ராமதாசுக்கு எதிராக ஓட்டு போடுங்கள் என்று சொன்னார் அப்பறம் ஒவ்வொரு படம் ரிலிஸ் ஆகும் போதும் தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருவது போல் ஒரு சூழ்நிலையை உருவாக்குவது இதெல்லாம் நம் சூப்பர் ஸ்டார் தம் ரசிகர்களை சொந்த பிரச்சனைக்காக பயன்படுத்திய நிகழ்வுகள்... இப்போது என்ன சொல்கிறீர்கள் ரஜினியும் கல்லால் அடித்து விரட்டலாமா?

      Delete
    10. நீங்கள் சொல்வது போல் பெண்கள் அவ்வளவு புத்திசாலிகள் என்றால் பிறகு ஏன் தமிழ்நாட்டில் எத்தனையோ குடும்பங்களில் குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள் தன் கணவருக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளது என்பது பலருக்கு கல்யாணத்துக்கு பின்னர் தான் தெரிகிறது அதனால் சிலர் விவாகரத்து பெற்று பிரிந்து செல்கின்றனர் சிலர் தத்து எடுத்து வளர்கின்றனர்.

      எம்ஜிஆர் ஒன்றும் உத்தமர் இல்லை அவருடன் நடித்த நடிகைகளிடம் கேட்டால் அது தெரியும் எம்ஜிஆர் இருந்த காலம் வேறு அப்போது ஒரு நடிகர் படங்களில் எப்படி நடிக்கிறாரோ நிஜ்ஜத்திலும் அப்படி தான் என்று மக்கள் நம்பினார்கள் அப்போது ஹீரோக்களின் லட்சனகளை வெளிகொனர்வதர்க்கு மீடியா அவ்வளவோ இல்லை ஆனால் எம்ஜிஆர் அரசியலில் வந்த பிறகு அவர் தன்னை நல்லவராக மாற்றிகொண்டார் மக்களுக்கு பல நல்லவற்றை செய்தார் எம்ஜிஆர் எப்படிப்பட்டவராக தனிப்பட்ட முறையில் வாழ்ந்தார் என்பதற்கு ஜெயலலிதா எப்படி அரசியலுக்கு வந்தார் என்பது தான் சிறந்த பதில் ஆனால் இன்று மக்கள் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லை என்பதை புரிந்து வைத்துள்ளார்கள் மீடியாவும் இன்று நடிகர்களின் வாழ்க்கையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

      Delete
    11. \\\தம்பி (கண்டிப்பாக நீ என்னை விட வயது குறைந்தவனாகவே இருப்பாய் என்று திடமாக நம்புகிறேன் )... எல்லாரையும் உன்னைப்போல நினைக்க வேண்டாம் ... பக்குவம் என்பது வயதுக்கு வயது மாறுபடும் ... நீயும் விரைவில் பக்குவப்பட வாழ்த்துகிறேன்\\\

      கண்டிப்பாக நன் உங்களை விட வயதில் சிறியவன் தான் அண்ணா பக்குவம் என்பது எது தவறு என்று தெரிந்தும் பொருத்துகொள்வதா அல்லது கெட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கு காசும் சரக்கும் தருகிறான் என்று ஓட்டு போடுவதா இல்லை இலவசம் நிறைய தருகிறார் என்று ஒட்டு போடுவதா? தாய்லாந்தில் ஒரு சாதாரண பெண் தன்னை கற்பழித்த ஆட்சியாளரை போராடி அவர் ஆட்சியை கலைத்தார் ஆனால் இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கிறது இதில் வெக்கமே இல்லாமல் இந்திய மிக பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிகொள்கிறோம் இரு கட்சிகளுமே தவறானவை என்று தெரிந்தும் மீண்டும் அவற்றையே தேர்ந்து எடுப்பது தான் பக்குவமா தமிழ்நாட்டில் உள்ளது போல் வேவலமான மக்கள் எங்குமே இருக்க மாட்டார்கள். வீதிகளில் இறங்கி அரசை எதிர்த்து போராட கூட வேண்டாம் நமக்கென்று உள்ள ஓட்டுரிமையை கூட சரியாக பயன்படுத்தாமல் இருப்பது தான் பக்குவமா???

      Delete
    12. இதில் நீங்கள் விஜய் இப்போது இருக்கும் நிலையையே கூறுகிறீர்கள் விஜய் ஒரு வேலை ஆட்சிக்கு வந்தால் சில நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தேன் அதற்க்கு தாங்கள் பதில் அளிக்கவே இல்லையே

      Delete
    13. Thambi thamizhil our pazhamozhi undu Moss pidikkira naayi moonja paaththale theriyumam... ithuthaan unnoda munthina commentkku pthil

      Delete
    14. தமிழில் இன்னொரு பழமொழி உண்டு தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்று எல்லாரும் அம்மாவை போலவே இப்போது இருக்கிறார்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்று பழ மொழி இருக்கிறது எனக்கு தெரிந்து பல வாத்தியாரின் பிள்ளைகள் நன்றாக தான் படிக்கிறார்கள் குறை குடம் கூத்தாடும் நிறை குடம் தழும்பாது என்று இருக்கிறது காலி குடம் கூட தழும்பாது தான் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லியிருகிறார்கள் ஆனால் இப்போது பெண்கள் ஆண்களை விட பல விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இப்போது தன் சொந்த மகளையே தன் இச்சைக்காக பயன் படுத்திகொள்ளும் கேவலமான அப்பாக்கள் எத்தனையோ பேர் உள்ளனர் புதிய தலைமுறையில் தமிழ்நாட்டில் இந்த கேவலமான செயல் பல இடங்களில் நடகிரதாக படித்தேன் ஆகவே பழைய பழமொழிகள் அன்றைய காலகட்டத்துக்கு வேண்டுமானால் செட் ஆகலாம் அனால் இப்போது அப்படி இல்லை எனவே பழைய கதைகளை விட்டுவிட்டு பிரக்டிகலாக நடக்றத பேசுங்க

      Delete
    15. சரி தம்பி உன்னுடைய வழியிலேயே நானும் ப்ராக்டிகலா பேசுறேன் .. இப்ப நீ நன்கு படித்தவந்தானே தம்பி .. உங்க ஊரில் எல்லாரும் நாடு ரோட்டில் மலம் கழிக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் , நீ என்ன செய்வாய் , எல்லாரும் நடுரோட்டில் மலம் கழிக்கும்போது நான் கழித்தால் தப்பா என்று விதண்டாவாதம் பேசுவாயா? அப்படி பேசினால் நீ படித்த படிப்பிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமே தம்பி ... விஜய் அவர்களை பற்றிய உன்னுடைய வாதம் இப்படிதான் இருக்கிறது

      Delete
    16. அண்ணே நான் கண்டிப்பாக எல்லாரும் செகிறார்கள் நான் செய்தால் மட்டும் தப்ப என்று கேட்க மாட்டேன் அதே போல் விஜய் அரசியலுக்கு வந்தால் இப்போது இருக்கும் அரசியல் வாதிகள் செய்வதையே தான் செய்வார் என்று நீங்கள் எப்படி ஜோசியம் சொல்கிறீர்கள்?

      Delete
    17. தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என்று நீ சொல்வது யதார்த்தம் ஆனால் அவர் காசு பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வருகிரார என்று நான் சொல்வது ஜோசியமா? best comedy of the decade தம்பி விஜய் உண்மையிலே மக்களுக்கு நல்லது பண்ண அரசியலுக்கு வருவதாக இருந்தால் மக்கள் அவர் கூப்பிடாமலே அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் ... ஆனால் இன்னமும் அரும்பு மீசை கூட முளைக்காத அவரின் ரசிக கண்மணிகள் மட்டுமே அவரை ஆதரித்து கொண்டிருகிறீர்கள் ...

      Delete
    18. அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என்பதற்கு சாதகமான ஒரு சூழ்நிலையை சொல்லி தான் நான் அதை சொன்னேன் நானாக கணித்து ஜோசியம் சொல்லவில்லை. அரும்பு மீசை கூட முளைக்கவில்லைய மீசை முளைக்காத எத்தனை விஜய் ரசிகர்களை நீங்கள் பார்த்துவிடீர்கள் என் புகைப்படத்தை பார்த்து தவறாக முடிவு செய்யவேண்டாம் நான் ஷேவ் செய்து எடுத்த போட்டோ அது அதை பார்த்து எனக்கு மீசை முளைக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். தவிர எனக்கு மீசை இருப்பது பிடிக்காது அதனால் அடிக்கடி ட்ரிம் செய்துவிடுவேன்

      Delete
  3. ஒரு நடிகனின் படம் ரிலீஸ் ஆனால் ஆட்சிக்கு ஆபத்து என்று நினைத்து படத்தை தடை செய்த போதே நம் முதல்வரின் லட்சணம் என்ன என்று புரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசிக்கிறீங்க அண்ணே , அப்படியே அடுத்த தடவை எங்கையாவது கமெண்ட் போதும் போது அம்மா முதல்வர் ஆனதே விஜய் போட்ட பிச்சை , தரியம் இருந்தால் நீ ரெட்டை இலை சின்னத்தை தூக்கி விட்டு வேறு சின்னத்தில் எங்கள் தளபதியுடன் தேர்தலில் மோதி ஜெயித்து பார் என்று சவால் விட மறந்து விடாதீர்கள்

      (ஏதோ என்னாலமுடிஞ்சது )

      Delete
    2. அனானி சொல்வது தவறு என்றால் தலைவா படத்தை தடை செய்வதற்கு என்ன காரணம் உள்ளது நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம் விஸ்வரூபத்தை தடை செவதர்காகவாது ஜெயலலிதாவுக்கு முஸ்லிம் மக்கள் பகடை காயாக கிடைத்தார்கள் தலைவாவுக்கு அப்படி கூட காரணம் ஏதும் இல்லை பின்பு படத்தை தலைவா என்று பெயர் வைத்த ஒரே காரணத்துக்காக ஏன் தடை செய்ய வேண்டும் நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்

      Delete
    3. விஸ்வரூபம் படத்தின் பிரச்சனையோடு இதை சம்பந்தபடுத்துவது முழு முட்டாள்தனம் .. விஸ்வரூபம் தமிழக அரசால் நேரடியாக தடை செய்யபட்ட படம் .. ஆனால் இந்த படத்துக்கு தமிழக முதல்வர்தான் தடை போட்டார் என்பதற்க்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அரசு இந்த படத்து தடை விதிக்கிறேன் என்று சொல்லியதா இல்லை , பாதிக்கபட்ட உங்கள் விஜய்தான் அரசுதான் இந்த படத்தை தடை செய்தது என்று குற்றம் சாட்டினாரா? இரண்டுமே இல்லை பிறகு எப்படி முதல்வர்தான் இந்த படத்தை தடை செய்தார் என்று சொல்லமுடியும் ?

      Delete
    4. காமெடிலாம் பண்ணாதிங்க பாஸ் தலைவா படத்தை யாருமே தடை செய்யாமல் தியேட்டர் காரர்களெல்லாம் என்ன வேண்டும் என்றேவா திரையிடாமல் இருந்தார்கள் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம் எதிர்த்தார்கள் அதை பயன் படுத்தி நேரடியாக தடை செய்தது அரசு ஆனால் தலைவா படம் அப்படி இல்லை யாரும் எதிர்கவில்லை எனவே மறைமுகமாக தடை செய்தார்கள். நீங்கள் என்ன சொள்ளவருகிரார்ர்கள் ஜெயலலிதாவுக்கும் தலைவா படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்களா தாங்கள் கடந்த சில மாதமாக வெளி நாட்டிற்கு ஏதாவது சென்று விட்டீர்களா என்ன விஜயின் பிறந்த நாள் விழா காரணமே இல்லாமல் தடை செய்யப்பட்டது தலைவா படம் தடை செய்யப்பட்டது பின்னர் ஜெயலலிதா 10 கோடி கொடுத்து நடதுகிரார்ர் என்பதற்காக சினிமா நூற்றாண்டு விழாவில் விஜயை அவமானப்படுத்தியது இதெற்கெல்லாம் யார் காரணம் என்று பலரும் கூறி வந்துகொண்டு இருகிறார்கள் அவை எதுமே தங்கள் பார்த்தது இல்லையா அது கூட வேண்டாம் குறைந்த பட்ச நட்டு நடப்புகள் சினிமா அரசியல் அறிந்தவர்க்கு கூட இது தெரியும் இதற்கு சாட்சி வேண்டுமா நீங்கள் உண்மையிலேயே தெரியாமல் பேசுகிறீர்களா அல்லது விஜயை எதிர்த்து கமண்ட் பண்ணியே ஆகா வேண்டும் என்று விதண்டாவாதமாக பேசுகிறீர்களா என்று எனக்கு புரியவில்லை

      Delete
    5. தம்பி திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்க வைக்கிறாய் ... அம்மா நேரடியாக தடை செய்யவில்லை , ஒரு வேலை அம்மா மறைமுகமாக தடை செய்திருக்கிறார் என்று வைத்து கொள்வோம் , அதை பாதிக்கப்பட்ட உங்கள் விஜய் தைரியமாக சொல்லியிருக்கலாமே ... உன்னை போன்ற புத்திசாலிகள் அதை அவர் சொல்லாமலே புரிந்துகொள்வீர்கள் , ஆனால் மக்கள் நீ சொல்வதை போல முட்டாலாகவா இருக்கிறார்கள் ... அவர்களுக்கு புரிய வேண்டுமானால் விஜய் அதை வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டுமே ...

      நீ சொன்ன சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த MGR கேப்டன் எல்லாம் அவர்களுக்கு இடைஞ்சல் வரும்பொழுது அதை தைரியமாக வெளிப்படையாக சந்தித்தவர்கள் தானே , அந்த தைரியம் கூட இல்லாத விஜய் அவர்களை நீங்கள் வேண்டுமானால் "வேறு வழியில்லாமல்" தலைவனாக ஒத்து கொள்ளலாம் மக்கள் எப்படி தலைவனாக ஒத்து கொள்வார்கள் ,

      Delete
    6. //பின்னர் ஜெயலலிதா 10 கோடி கொடுத்து நடதுகிரார்ர் என்பதற்காக சினிமா நூற்றாண்டு விழாவில் விஜயை அவமானப்படுத்தியது இதெற்கெல்லாம் யார் காரணம் என்று பலரும் கூறி வந்துகொண்டு இருகிறார்கள்

      தம்பி தெரியாமத்தான் கேக்குறேன் , அவமானபடுத்திட்டாங்க , அவமானபடுத்திட்டாங்கன்னு சொல்லிகிட்டே இருக்கீங்களே அப்படி என்ன அவமானம் நடந்தது அவருக்கு ... தமிழ் சினிமாவை நட்டுகுத்தளாக தூக்கி நிறுத்திய அவருக்கு ஏதாவது சாதனையாளர் விருது குடுத்திருக்கனும்னு நினைக்கிறீங்களா? நூற்றாண்டு சினிமா விழாவில் இவரை கவுரவித்து இருக்கவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா?

      Delete
    7. நான் விஜய்க்கு சாதனையாளர் விருது வழங்க வேண்டும் என்று கூறவில்லை ஆனால் விஜய்க்கு உரிய மரியாதை கொடுத்திருக்க வேண்டும் அவரை விட இளம் வயது ஹீரோக்களுக்கு எல்லாம் முன் வரிசையில் இடம் ஒதுக்கி விட்டு இவருக்கு கடைசி வரிசையில் இடம் ஒதுக்கியது என்ன நியாயம்? வீடியோ கிளிப்பிங்கில் மற்ற மொழி நடிகர்களின் புகைப்படம் கூட கட்டப்பட்டது ஆனால் விஜயின் புகைப்படம் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. படங்களின் வீடியோவில் துப்பாக்கி மட்டுமே கட்டப்பட்டது கில்லி கூட காட்டப்படவில்லை. எனக்கு ஒன்று நன்றாக புரிந்துவிட்டது உங்களுக்கு விஜயை பிடிக்கவில்லை அதனால் நான் சொல்வது எதையும் நீங்கள் எற்றுகொள்ளப்போவது இல்லை என்பது அணைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்து அனைவருக்கும் தெரிந்த ஒன்றை நீங்கள் தெரியாததது போல் விஜய்க்கு என்ன அவமானம் நடந்துவிட்டது என்று கேட்கும் போதே தெரிகிறது. எனவே நாம் இந்த விவாதத்தை விட்டு விடலாம் வாதம் முடிவுக்கு வந்து விடும் ஆனால் விதண்டாவாதம் என்றைக்குமே முடிவுக்கு வராது.

      Delete
    8. \\உன்னை போன்ற புத்திசாலிகள் அதை அவர் சொல்லாமலே புரிந்துகொள்வீர்கள் , ஆனால் மக்கள் நீ சொல்வதை போல முட்டாலாகவா இருக்கிறார்கள் ... அவர்களுக்கு புரிய வேண்டுமானால் விஜய் அதை வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டுமே\\

      அண்ணே மக்கள் ஒன்றும் புரியாத முட்டாள்கள் இல்லை மக்களுக்கு படத்தின் தடைக்கு யார் காரணம் என்று நராகவே தெரியும் உங்களை போன்ற விஜயை விடிகாதவர்கள் தான் அது தெரிந்தும் தெரியாதது போல் இருகிறீர்கள். சரி நான் உங்களிடம் ஏற்கனவே கேட்டது தான் உங்கள் கருத்து பாடி ஜெ படத்தை தடை செய்யவில்லை எனில் வேறு யார் இந்த படத்தை தடை செய்தார்கள் தியேட்டர் அதிபர்கள் யாருக்கு பயந்து படத்தை திரையிட மறுத்து விஜயிடம் இந்த படத்திற்கு மேலிடத்தின் பகை உள்ளது முதலில் அதை சரி செய்து வாருங்கள் படத்தை பின்பு ரிலிஸ் செய்கிறோம் என்று கூறினார்கள் என்று நீங்கள் சொல்லுங்கள். விஜய்யும் நீங்கள் சொன்ன கேப்டன் எம்ஜிஆர் மாதிரி தனது காவலன் படத்திற்கு பிரச்சனை வந்த பொது அதை தைரியமாக சொல்லியவர் தான் ஆனால் அது கலைஞர் ஆட்சியில் இந்த ஆட்சியில் நிலைமை அப்படி இல்லை கலைஞர் ஒரு பிரச்னையை எதிர் கொள்ளும் விதம் வேறு ஜெயலலிதா ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் விதம் வேறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

      Delete
    9. Kavalanukku Jenna piratchanai vanthathu? Athai konjam vilakka mudiyuma than I..

      Delete
    10. Entha paththirikkaiyil Vijay avarkalai kadasi bench il UK Kara vaiththu avamaanapaduththi vittarkal endru ezhuthiyirukirasrkal than I.. konjam enakku kaatta mudiyuma

      Delete
    11. Thambi new solvathai pola makkalukku intha at hi mukkiyamaana samooka piratchanaiyil unmai therinthirunthathu endure vaiththu kolvom. Avarkalidam irunthu viswaroopathukku kidaiththa aatharavu yen kidaikkavillai..

      Delete
    12. Thambi nee solvathai pola intha at hi mukkiyamana samooka piratchanaiyil unmaiyaana kaaram therinthirunthum visaikku yen yaarum aatharavu kodukkavillai

      Delete
    13. ஆனந்த விகடனில் வந்திருக்கிறது குமுதம் ரிப்போர்ட்டரில் வந்திருக்கிறது நீங்கள் விஜய் என்று கூகிளில் தேடினால் இண்டலியில் பலர் இதை வெளியிட்டிருக்கிறார்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

      Delete
    14. vijaykku avarathu rasikargal palarum aatharavu thanthanar munnani nadikargal thavira sila ilam nadikargal payappadaamal aatharavu thanthanar yen rajini kooda rakasiyamaaga call mattum panni aaruthal sonnathaaga news vanthathu... ithu mukkiyamaana samooka pirachanai illai thaan aanal nam makkal itthuvarai entha mukkiyamaana samooka pirachanaikku vanthu thaoriyamaaga poraadiyirukirrargal....

      Delete
    15. காவலனில் என்ன பிரச்சனை அதற்க்கு விஜய் என்ன செய்தார் என்பது தங்களுக்கு தெரியாத பிறகு ஏன் விஜயை பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி அவர் இப்படி தான் அவரால் இதை தான் செய்ய முடியும் அவரால் இது முடியாது என்று கூறுகிறீர்கள்.

      Delete
    16. தம்பி காவலனில் என்ன பிரட்ச்சனை என்று நான் கேட்டது , அதற்க்கு நீ எப்படி பதில் சொல்கிறாய் என்று தெரிந்து கொள்ளத்தான் , அந்த நேரத்தில் அவர் யாருடைய காலை **கினார் , இன்று யார் காலை **கி கொண்டு இருக்கிறார் என்று உன் வாயாலே சொல்ல வைக்கத்தான் தம்பி

      Delete
    17. //yen rajini kooda rakasiyamaaga call mattum panni aaruthal sonnathaaga news vanthathu...

      ஏன் தம்பி இப்பதான் ரஜினி என்ன யோக்கியனான்னு கேள்வி கேட்ட இப்ப என்னடானா ரஜினியே ஆதரவு தந்தார்னு பெருமையா பேசுற? சரி ரஜினி ரகசியமா பேசுனது எப்படி உங்களுக்கும் ஊடகத்துக்கும் தெரிந்தது ... ரஜினி பிரஸ் மீட் வச்சி இதை சொன்னாரா?


      நான் கேட்டது கமலுக்கு கிடைத்த ஆதரவில் நூற்றில் ஒரு பங்கு கூட உங்கள் விசை அவர்களுக்கு கிடைக்கவில்லையே காரணம் என்ன என்றுதான்? அதற்க்கு பதில் எங்கே நண்பா.?

      Delete
    18. //ஆனந்த விகடனில் வந்திருக்கிறது குமுதம் ரிப்போர்ட்டரில் வந்திருக்கிறது

      தம்பி நான்கூட ஹிந்து,தினமலர் தின மணி அவ்வளவு ஏன் தினத்தந்தி போன்ற பத்திரிகைகளில் ஏதோ பெட்டி செய்தியாக வந்திருக்குமோ , நாம்தான் கவனிக்கவில்லை போல என்று நினைத்தேன் .. நயன்தாரா தும்மினால் கூட அதை ஒரு கவர் ஸ்டோரியாக போட்டு காசு பார்க்கும் விபசார பத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை நண்பா

      Delete
    19. நான் ரஜினி யோக்கியனா என்று கேட்டது அவருடைய பொது வாழ்க்கையில் தான் சினிமா என்று வரும்போது அவர் ஜாம்பவான் தான் அவரே பயப்படும் போது மற்றவர்கள் மட்டும் எப்படி உதவ முன் வருவார்கள்? நீங்கள் கேட்கலாம் அப்பறம் எப்படி கமலுக்கு மட்டும் சிலர் முன் வந்தனர் என்று இதிலும் ஒரு அரசியல் இருக்கிறது ஒரு சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம் அதில் கமலை எதிர்த்தார்கள் அதாவது அவர்களின் மூலம் ஜெயலலிதா கமல் மீது உள்ள தனது பகைமையை வெளிப்படுத்தினார் எனவே சிறுபான்மை இனத்தை எதிர்க்கும் பலரும் தைரியமாக ஆதரவு தந்தார்கள் நேர்மையாக ஆதரவு தந்தவர்கள் கூட பிரச்சனையை தீர வேண்டும் முஸ்லிம் நண்பர்கள் கமலை புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர்களை வைத்து தான் கமலுக்கு சப்போர்ட் செய்தார்கள் அனால் தலைவாக்கு அப்படி கூட யாரும் எதிக்கவில்லை பின் எதைவைத்து சப்போர்ட் செய்ய முடியும் ஜெயலலிதா தலைவா படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் தனிப்பட்ட பகைமைய வைத்து ஒரு படத்தை நிறுத்த கூடாது என்று சொல்ல யாருக்கு தைரியம் இருக்கிறது அப்படி இருந்திருந்தால் சொல்லியிருப்பார்கள். அப்பறம் கமலுக்கு கிடைத்த ஆதரவில் ஒரு சதவீதம் கூட ஆதரவு கிடைக்கவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள் விஜய் ரசிகர்கள் செய்த போராட்டங்கள் எதையுமே அப்போது நீங்கள் படிக்கவில்லையே அல்லது ஒரு ரசிகன் விஜய்க்காக உயிரை தியாகம் செய்தானே அது உங்களுக்கு தெரியாதா நான் அவன் செய்ததது சரி என்று சொல்லவரவில்லை அவன் செய்தது கண்டிப்பாக தவறு தான் ஆனால் ஒருவன் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு சப்போர்ட் செய்த ஒரு விஷயத்துக்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை என்று நீங்கள் சொல்லியதற்காக தான் நான் இதை சொல்கிறேன்.

      Delete
    20. நீங்கள் சொல்லுகின்ற தினமலர் ஹிந்து கூட (தினமணி தவிர) அதே வேலையை தான் செய்கிறார்கள் அதற்காக அவர்கள் வெளியிடும் அனைத்து செய்திகளும் பொய் என்று ஆகிவிடுமா என்ன பத்திரிக்கைகளை குறை சொல்வதை விடுங்கள் அவை இப்படி மாறி போனதுக்கு காரணமான மக்களை குறை சொல்லுங்கள் நான் ஏற்றுகொள்கிறேன் விஜய் கேவலமான மசாலபடங்களில் நடிப்பதை குறை சொல்வதை விடுத்து அவர் அப்படி நடிப்பதற்கு காரணமான ரஜினியையும் நல்ல தரமான கமல் படங்கள்( குறிப்பாக அன்பே சிவம்) மற்றும் சில படங்களை வெற்றி படமாக்காமல் கேவலாமான மசாலாப்படங்களை ஹிட் படங்களாக மாற்றிய மக்களை குறி சொல்லுங்கள் நான் ஏற்று கொள்கிறேன்.

      Delete
    21. சரி நீங்கள் கடைசியாக என்ன சொல்கிறீர்கள் நம் முதல்வர் அம்மா அவர்கள் சினிமா 100 விழாவை எந்த குறையும் இல்லாமல் எல்லாருக்கும் தகுந்த மதிப்பளித்து எந்த வித விருப்பு வெறுப்பில்லாமல் நன்றாக தான் நடத்தினார் ஆனால் எனக்கு மட்டும் தான் அது தவறாக படுகின்றது என்று சொல்கிறீகளா இல்லை இதைப்பற்றி எழுதும் மற்ற பத்திரிகைகளுக்கு தான் தவறக தெரிகிறது அம்மா அவர்கள் நிகழ்ச்சியை யார் மனமும் புண் படமால் தான் நடத்தினார் என்று சொல்கிறீர்களா?

      Delete
    22. \\\ரஜினி ரகசியமா பேசுனது எப்படி உங்களுக்கும் ஊடகத்துக்கும் தெரிந்தது ... ரஜினி பிரஸ் மீட் வச்சி இதை சொன்னாரா?|||

      ஊடகங்கள் நடிகர்களின் உண்மை செய்திகளை வெளியிடுகிர்ரர்கள் அதெல்லாம் என்ன அவர்கள் பிரஸ் மீட் வைத்தா சொன்னார்கள் பின் எப்படி ஊடகங்கள் சரியாக வெளியிடுகின்றனர் அதே போல் தான் இதுவும்

      Delete
    23. தம்பி விஜய் அவர்களுக்கு அவரின் ரசிகர்களை தவிர பொதுமக்கள் எவருமே ஆதரவு தரவில்லையே அது ஏன்? சமூக ஊடகங்களில் கூட உன்னை போன்ற விசை ரசிகர்கள் மட்டும்தானே விஜயை அசிங்கபடுத்திடாங்க என்று கூவி கொண்டிருகிறீர்கள் .. வேறு யாரும் சீந்தவில்லையே..

      அப்பரம் தம்பி தலைவான்னு ஒரு மொக்கை படம் வெளியிடப்படவில்லை என்பதால் ஒரு ஆட்சியே கேவலாமாக இருக்கிறது என்று முடிவுக்கு வர உங்களை போன்ற விசை ரசிகர்கலால்தான் முடியும் ... நீ அடிக்கிற மாதிரி அடி நான் வலிக்கிறமாதிரி அழுவுறேன் , கிடைக்கிற பிச்சையை நாம ரெண்டு பெரும் பங்கு போட்டு கொள்ளலாம் என்ற கேவலமான விளம்பர ஆசை , கடைசியில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதை போல ஆனதால் பம்மிக்கொண்டு அடிவாங்க வேண்டியதாகி விட்டது .. விசை அவர்களே உங்களை போன்ற சில ரசிகர்கள் கிளப்பி விடும் கதையை படித்தால் நமக்கு வாய்த்த அடிமைகள் பொய்யை கூட சரியாக சொல்லதெரியாத மன்குணிகள் , ஆனால் எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்குவார்கள் என்று பெருமைப்பட்டு கொள்வார் ..

      Delete
    24. //ஊடகங்கள் நடிகர்களின் உண்மை செய்திகளை வெளியிடுகிர்ரர்கள் அதெல்லாம் என்ன அவர்கள் பிரஸ் மீட் வைத்தா சொன்னார்கள் பின் எப்படி ஊடகங்கள் சரியாக வெளியிடுகின்றனர் அதே போல் தான் இதுவும்

      தம்பி இன்னமும் நீ அதுமாதிரிதான் இது இது மாதிரித்தான் அதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கியே தவிர எதற்கும் சரியான விளக்கம் சொல்ல மாட்டேங்கிறியே

      Delete
    25. //சரி நீங்கள் கடைசியாக என்ன சொல்கிறீர்கள் நம் முதல்வர் அம்மா அவர்கள் சினிமா 100 விழாவை எந்த குறையும் இல்லாமல் எல்லாருக்கும் தகுந்த மதிப்பளித்து எந்த வித விருப்பு வெறுப்பில்லாமல் நன்றாக தான் நடத்தினார் ஆனால் எனக்கு மட்டும் தான் அது தவறாக படுகின்றது என்று சொல்கிறீகளா இல்லை இதைப்பற்றி எழுதும் மற்ற பத்திரிகைகளுக்கு தான் தவறக தெரிகிறது அம்மா அவர்கள் நிகழ்ச்சியை யார் மனமும் புண் படமால் தான் நடத்தினார் என்று சொல்கிறீர்களா?

      தம்பி மனசு புன்பட்டவுடனே மொத்த தமிழகமும் பொங்கி எல்ழுவதர்க்கு அவர்கள் யாரும் காமராஜரோ , காந்தியடிகளோ , அன்னை தெரசாவோ கிடையாது .. யாருமே அதை கண்டுகொள்ளாத பொழுது சில சில்லறை நடிகர்களின் ரசிகர்கள் ஏதோ அவரை காந்தி ரேஞ்சிக்கு நினைத்து பீல் பண்ணி அவரை அசிங்கபடுதிட்டாணுக , அவமானபடுத்திட்டனுகொன்னு பொங்குறதுதான் சகிக்க முடியவில்லை

      Delete
    26. //விஜய் கேவலமான மசாலபடங்களில் நடிப்பதை குறை சொல்வதை விடுத்து அவர் அப்படி நடிப்பதற்கு காரணமான ரஜினியையும் நல்ல தரமான கமல் படங்கள்( குறிப்பாக அன்பே சிவம்) மற்றும் சில படங்களை வெற்றி படமாக்காமல் கேவலாமான மசாலாப்படங்களை ஹிட் படங்களாக மாற்றிய மக்களை குறி சொல்லுங்கள் நான் ஏற்று கொள்கிறேன்.

      அடேங்கப்பா , அவரு பெரிய மர்லின் பிராண்டோ , மக்கள் மசாலா படமா கேக்குற ஒரே காரணத்துக்காக மட்டுமே மொக்கை படமா நடிச்சி தள்ளிகிட்டு இருக்காரு இல்லைனா அப்படியே வருசத்துக்கு நாப்பது ஆஸ்காரை அள்ளிகிட்டு வந்திடுவாரு .. தம்பி நீ போட்ட இந்த கமெண்டை ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சி நீயே படிச்சி பாரு விழுந்து விழுந்து சிரிப்ப..

      Delete
    27. // ஒருவன் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு சப்போர்ட் செய்த ஒரு விஷயத்துக்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை என்று நீங்கள் சொல்லியதற்காக தான் நான் இதை சொல்கிறேன்.

      தம்பி ஒரு உயிர் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் ஒரு உயிர் போயும் கூட அந்த விஷயம் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன்?

      Delete
    28. தலைவா மொக்கை படம் என்பது ஜெயலலிதாவுக்கு வெளிவரும் முன்னரே தெரிந்து தான் படத்தை தடை செய்தாரா என்ன? விஸ்வரூபம் என்ற நல்ல படம் கூட தடை செய்யப்பட்டதே நல்ல படமா மொக்க படமா என்பது ரசிகர்களின் விருப்பம் நன்றாக இருந்தால் பார்ப்பார்கள் இல்லையென்றால் கேலி செய்வார்கள் அது ரசிகர்களின் வேலை நல்ல படத்தை மட்டும் தான் தடை செய்யகூடாது மொக்க படத்தை காரணமே இல்லாமல் தடை செய்யலாம் என்றால் தமிழ்நாட்டில் பாதி படத்தை தடை செய்யலாம். சரி அம்மாவின் ஆட்சி மிக சிறப்பாக உள்ளது என்றே வைத்து கொள்ளுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே நான் இந்த பதிவில் கூறியிருப்பது சினிமாவை பற்றி தான் உங்கள் பெண் தெய்வம் மக்களுக்காகவே அல்லும் பகலும் உழைத்து நல்லாட்சி புரிவதாக நீங்கள் கூறும் உங்கள் ஜெயலலிதா அம்மாவின் ஆட்சியை பற்றி நான் ஏதும் சொல்லவில்லையே. தலைவா தான் மொக்க படம் விஜய் ஒரு மொக்க நடிகர் என்றால் அவர் என்ன படம் எடுத்தால் இவருக்கு என்ன அவர் அவர் பிறந்தநாள் விழாவை எப்படி கொண்டாடினால் இவருக்கு என்ன ஏன் அதில் இவர் மூக்கை நுழைத்து தடை செய்ய வேண்டும். விஜய் பிறந்த நாள் விழாவை ஜெயலலிதா தான் தடை செய்தார் என்று விஜய் கூறினார என்று இதற்கும் அப்பாவி போல கேள்வி கேட்காதிர்கள் அதை பற்றி நன்றாக படித்து பாருங்கள் அது தடை செய்ததற்கு காரணமாக சொல்லப்பட்டவைகளை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.

      Delete
    29. இது போல அது போல என்று குத்து மதிப்பாக சொல்லவில்லை நடிகரின் பல அந்தரங்கள் அவர்கள் வெளியிடாமலே வந்துள்ளது அதெல்லாம் அவர்களா வெளியிட்டார்கள் ஊடகம் தனது நண்பர் வட்டம் மூலமாக தெரிந்து தான் செய்தியாக வெளியிட்டார்கள். ரஜினி போனில் பெசின்னர் என்று குரிப்பிடப்பட்ட்டது ஒருவேளை அவரின் போன் ரெகார்ட் செய்யபட்டிருகலம் மீடியா வெளியிடும் ஒவ்வொரு செய்திக்கும் நீங்கள் ஆதாரம் கேட்டு உங்களுக்கு எப்படி தெரியும் அவர் வந்து சொன்னர என்று கேட்டு தான் நீங்கள் நம்புவீர்கள் என்றால் எந்த செய்தியையும் நீங்கள் நம்ப முடியாது

      Delete
    30. ஒருவருக்கு உரிய மதிப்பை தராமல் இருக்கும் போது அவர்க்கு பிடித்தவர்கள் அல்லது அவரை பிடித்தவர்கள் வருத்தப்படுவது நியாயமானது தான் அதற்கு அவர் காமராஜராக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அப்படி நீங்கள் காமராஜர், அம்பேத்கார், அண்ணா, காந்தி போன்றோருக்காக மட்டுமே வருத்தபடுவீர்கள் என்றால் இப்போது இருக்கும் எவரும் அப்படி இல்லை எவருக்காக எவரும் வருத்தப்பட முடியாது நல்லவரோ கேட்டவரோ அவரவர்க்கு உரிய மதிப்பை தர வேண்டும். அதை நாம் போயும் போயும் ஜெயலலிதாவிடம் எதிர்ப்பார்ப்பது தவறு தான்

      Delete
    31. ஒரு உயிர் போவது எவ்வளவு பெரிய விஷயம் என்று ஜெயலைதாவுக்கு தெரியவில்லையே அதனால் தான்

      Delete
    32. ஆஸ்கார் விருதைப்பற்றி கவலைபடுவதற்கு நாம் ஒன்றும் அமெரிக்கர்கள் அல்ல அவர்கள் நாட்டின் படங்களுக்கு அவர்கள் தரும் விருதைப்பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும் நான் ஒன்றும் விஜய் நல்ல படங்கள் நடித்தால் தேசிய விருது வாங்குவார் என்று சொல்லவில்லை நண்பன், காவலன், துப்பாக்கி போன்ற நல்ல படங்களில் நடிப்பார் என்று சொன்னேன். சிவாஜி கணேசன் என்ன தேசிய விருதா வாங்கினார் அவர் படங்களை பார்த்து மக்களே அவர் சிறந்த நடிகர் என்று போற்றினார்கள். அதே போல விஜயும் சிவாஜி அளவு இல்லை என்றாலும் தனது பழைய படங்களில் ரோமன்ஸ், கமெடி, டான்ஸ், செண்டிமெண்ட் என நடித்துள்ளார் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து உள்ளார் ஆனால் விஜய் இப்படி மாறியதற்கு காரணம் சிவாகாசி போன்ற மொக்க படங்களை ஹிட் படமாகியதும், வசீகரா , சச்சின், ஷாஜகான் போன்ற படங்களை தோல்வி படம் ஆக்கியது தான்.

      Delete
  4. விஜய் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் இணையற்ற நடிகர்றன சிவாஜியின் புகைப்படம் எந்த விளம்பரங்களிலும் காணப்படவில்லை. பாலுமகேந்திரா, ரஹ்மான் போன்ற கலைகர்கள் அழைக்கபடவே இல்லை இதை தமிழ் சினிமா விழா என்று சொல்வதை விட ஜெயலலிதா விழா என்றே கூறலாம்.

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது சரி தான் இந்த விழா சினிமாவுக்கு நடத்தப்பட்ட்டது போல இல்லை ஜெயலலிதா அவர்களின் சொந்த விருப்பத்திற்கு தான் நடத்தப்பட்டிருக்கிறது விஜய் உட்பட பலர் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர் இது அனைவரும் அறிந்தது தான் பலர் இதைபற்றி தான் இப்போது எழுதி வருகின்றனர் இந்த உண்மையை நாம் சொன்னால் சிலர்களுக்கு பிடிக்கவில்லை நூற்றாண்டு விழாவில் அப்படி எதுமே நடக்காத மாதிரி பேசுகிறார்கள் இது வேண்டுமென்றே விஜய்க்கு எதிராக பேச வேண்டும் என்று அவர்கள் நினைப்பதாலா இல்லை அம்மாவுக்கு இதை சொல்வதற்கு கூட சொல்வதற்கு பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்