Pages

18/10/2013

தமிழ் சினிமாவின் மாற்றம் ஆரோக்கியமானதா?


நூறு ஆண்டுகள் கடந்து வெற்றிநடை போட்டுகொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. அவற்றில் சில ஆரோக்கியமானதாகவும் உள்ளது சில அருவருப்பாகவும் உள்ளது. ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது ஆனால் நான் கூறுவது தற்போதைய மாற்றத்தை பற்றி தான். பெரிய ஹீரோ படங்கள் மட்டுமே வெளிவந்து வெற்றி பெற்ற காலங்கள் பொய் இப்போது புது முகங்களின் படங்களும் நல்ல கதை உள்ள திரைப்படங்களையும் மக்கள் ரசிக்க ஆரம்பித்துள்ளார்கள் இது வரவேற்கத்தக்கது தான் இருந்தாலும் இதை நம் இளம் ஹீரோக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். மாஸ் ஹீரோக்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் என்ன தவறு செய்தார்களோ அதையே சிறிய பட்ஜெட் படங்களும் இன்று செய்கின்றனர்.


முன்னர் ரஜினி தன் படங்களில் சிகரட் பிடிப்பதை போன்று நிறைய காட்சிகளை வைத்தார் அதையும் ஸ்டைலாக பிடித்தார் அதை பார்த்த அவரின் ரசிகர்கள் அதை அப்படியே பின் பற்றினர். சிகரட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட  ரஜினியை போன்று சிகரட் பிடிப்பதை பெருமையாக நினைத்து கற்றுக்கொண்டனர். பாபா வரை ரஜினி அதை விடவில்லை ராமதாஸ் பாபா படத்திற்காக அதை எதிர்த்த பின் தான் அவருக்கு அது தவறு என்று தெரிந்தது பின் அந்த பழக்கத்தை நிறுத்தி கொண்டார்.ரஜினிக்கு அடுத்து வந்த விஜய் அஜித்தும் இதே தவறை செய்கின்றனர்.
அஜித் நடித்த மங்காத்தா படம் முழுக்க அஜித் சிகரட் பிடிப்பதை போன்ற கட்சிகள் மது அருந்தும் காட்சிகள் நிறைந்திருந்தன. அதுமட்டும் இல்லாமல் கெட்ட வார்த்தைகள் பலவற்றை அஜித் சரளமாக பேசினார். படமும் வெற்றி அடைத்தது அதை பார்த்த அவரது ரசிகர்களும் சிகரட் பிடிக்கும் போது மது அருந்தும்போதும் தன்னை மங்கத்தாவில் வரும் அஜித்தாக நினைத்து நன்றாக குடிக்கிறார்கள். தன் சொந்த வாழ்வில் தனி மனித ஒழுக்கத்திலும், நேர்மையிலும் சிறந்து விளங்கும் அஜித் படங்களில் இப்படி நடிப்பது தவறானதாகும். படித்த ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் அஜித் என்ற மனிதன் நல்லவர் அவர் படங்களில் அப்படி நடிக்கின்றார் என்று ஆனால் பாமர ரசிகன் அப்படி இல்லை திரையில் தன தலைவன் என்ன செய்கிறானோ அது தவறு என்றாலும் செய்யும் ரசிகர்கள் அதிகம். சன் டிவி யில் தனுஷிடம் பேசிய ரசிகர் ஒருவர் நான் உங்களின் தீவிர ரசிகன் புதுப்பேட்டையில் படத்தில் நீங்கள் வருகிற மாதிரி பெரிய ரௌடி ஆகவேண்டும் என்பது தான் எனது ஆசை என்று சொன்னார் அதை கேட்டபோது தனுஷ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஆனால் நான் மிகவும் வருத்தப்பட்டேன் சினிமாவில் இருக்கும் ஒரு நிழலுக்காக ஒரு மனிதன் தன நிஜ வாழ்கையை பாழக்கிகொல்கிரனே என்று எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அடுத்து விஜய் தனது துப்பாக்கி படத்தில் சிகரட் பிடிப்பதை போன்று புகைப்படம் வெளியானது அதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தபின் அதை எடுத்துவிட்டனர். தனது போக்கிரி படத்திலும் வன்முறையை மிக சாதரணமாக செய்து காட்டினார்.


 இவர்கள் எல்லாம் ரசிகர்கள் தன பக்கம் இருக்க வேண்டும் என்று செய்த அதே வேலையை இன்று மற்று சினிமா என்கிற பெயரிலும் காமெடி என்ற பெயரிலும் இளம் தலைமுறை நடிகர்கள் செய்கின்றனர்.


சமீபத்தில் வெளியான வருத்தபடாத வாலிபர் சங்கம், சூதுகவ்வும்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஓகே ஓகே, கேடிபில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களை பார்த்தல் அதில் பொதுவான சில விஷயங்களை காணலாம் இதில் அனைத்திலுமே ஹீரோ எந்த வேலைக்கும் செல்லமாட்டார், அப்பா அம்மா சொல்வதை கேட்க மாட்டார், பெண் பின்னாடி சுத்துவதையே முழுநேர வேலையாக கொண்டிருப்பார், கலையில் எழுந்தவுடனே குடிக்கும் மகா உன்னதமான பழக்கத்தை கொண்டிருப்பார். இதை பார்க்கும் பாமர ரசிகனுக்கு இதை எல்லாம் செய்பவன் தான் ஹீரோ என்ற எண்ணம் தொடங்குகிறது அது மட்டும் இல்லாமல் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள்
பெண்களை கேலி செய்து ஒரு பாட்டு என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ஓபன் செய்தவுடன் அழகான கிராமம் என்ற வசனம் பொய் இப்போதெல்லாம் ஓபன் செய்தவுடன் டாஸ்மாக் பார் என்று மாறிவிட்டது இது ஆரோக்கியமான மாற்றமாக தெரியவில்லை. இப்போது வெளியாகும் படங்களில் உண்மையான நட்பு என்றால் அது சரக்கு வங்கி கொடுப்பது ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பது என்பது போல் காட்டப்படுகிறது. குட்க விழிப்பு விளம்பரத்தை என்னவோ வியாபார ரீதியாக செய்யும் ஒரு விளம்பரத்தை கேலி செய்வதை போல சந்தானம் செய்வதற்கு காரணம் இந்த மன நிலை தான். குட்கா விழிப்புணர்வு விளம்பரத்தை கேலி செய்ததற்காக சந்தானத்தை எதிர்த்தவர்கள் டாஸ்மாக், சிகரட்களுக்கு விளம்பர தூதுவர் போல படம் நடிக்கும் நடிகர்ககளையும் அந்த மாதிரி படம் எடுக்கும் இயக்குனர்களையும் எதிர்க்காதது ஏன்?... மாற்று சினிமா என்றால் வெட்டுகுத்து, கொலை, சரக்கு, கற்பழிப்பு, இவற்றை காட்டி படம் எடுப்பது நகைச்சுவை சினிமா என்றால் பெண்களை கேலி செய்வது, இரட்டை அர்த்த வசனங்களை பேசுவது என்ற சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் இத்தகைய மாற்றம் ஆபத்தானதாகும். இதனால் பார்க்கும் ரசிகர்களின் மனம் தவறானவற்றை மட்டுமே நினைக்கும் ஏற்கனவே பல தவறுகள் நடக்கும் நம் தமிழ் நாட்டில் இந்தகைய படங்களின் தாக்கம் மேலும் பாதிப்பை ஏற்ப்படுத்தும். நல்ல கதை யார் மனதையும் புண்படுத்தாத காமெடி அனைவரும் குடும்பத்துடன் உட்காந்து முகம் சுளிக்க வைக்காமல் பார்க்கும் வகையான படங்கள் தமிழில் வர வேண்டும் அப்பொழுது தான் தமிழ் சினிமா உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்.


5 comments:

 1. மிக நல்ல கருத்து. எனக்கும் இதே எண்ணங்கள் உண்டு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி நண்பரே

   Delete
 2. நன்றாக எழுதுகிறீர்கள்.அடிக்கடிஎழுதுங்கள்.என் பதிவுகள் படித்திருக்கிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. தங்களை போன்ற நல்ல உள்ளங்கள் ஆதரவு தந்தால் கண்டிப்பாக எழுதுவேன். படிதததில்லை இனிமேல் கண்டிப்பாக படிக்கிறேன் நண்பா

   Delete
 3. i agree with u, now days tamilcinema become wineshop

  ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்