Pages

26/10/2013

சரவணா ஸ்டோரும் ஒரு பெண்ணும்


 நண்பர் ஜோ பிரிட்டோ அவர்கள் சரவணா ஸ்டோர் போனபொழுது அங்கு ஒரு பெண்ணுடன் உரையாடியதை தனது முகபுத்தகத்தில்(facebook) வெளியிட்டிருந்தார். அதை அப்படியே உங்களுக்காக வெளியிடுகிறேன்.

  
 இரண்டு நாட்களுக்கு முன்பு
சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி.
அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். அந்த பெண்ணிடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்க்கு அந்த பெண் சொன்ன பதில்களும்.




கேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க?’’

பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’

கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’

பதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’

கேள்வி:‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’

பதில்:‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’ ‘‘சாப்பாடு?’’ ‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’ ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’ ‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’

கேள்வி:‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’

பதில்:‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’

கேள்வி: ‘‘உட்காரவே கூடாதா?’’


பதில்:  ‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’ - (யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.)

கேள்வி: ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’


பதில்: ‘‘5,500 ரூபாய்.’’

கேள்வி: ‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’

பதில்:‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’ ‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’ ‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’

கேள்வி: ‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’

பதில்:‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’

கேள்வி::‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’ 


பதில்:‘‘ஆமாம்.’’

கேள்வி: ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’ 


பதில்: ‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’

கேள்வி: ‘‘லீவு எல்லாம் உண்டா?’’

பதில்: ‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’


கேள்வி:  ‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’

பதில்: ‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’ 

கேள்வி: ‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’

பதில்: ‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’

கேள்வி: ‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’

பதில்: ‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’


கேள்வி: ‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’

பதில்: ‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’

கேள்வி: ‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’


பதில்: ‘‘தெரியலை..’’

கேள்வி: ‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’

பதில்:  ‘‘நெல் விவசாயம்..’’

கேள்வி: ‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’ ‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’

கேள்வி: ‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’

பதில்: ‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’


கேள்வி: ‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’ 

பதில்: ‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’ 



கிராமத்திலிருந்து வந்து இப்படி கஷ்டப்படும் நம் பெண்கள் குழைந்தைகளின் நிலை என்று மாறும்? சரவணா ஸ்டோர் மட்டும் இல்லை இன்னும் நிறைய கடைகளில் பெண்கள் குழந்தைகள் நிலை கவலை அடையும் விதமாக உள்ளது. பெண்களின் உயிருக்கும் கர்ப்புக்கும் பாதுகாப்பு இல்லாதவண்ணம் உள்ளது இந்த மாதிரியான விஷயங்களை நமது அரசாங்கமோ அல்லது போலிசோ பெரிதாக எடுத்துகொள்வது இல்லை அதானால் இவர்களின் அவல நிலை வெளியில் வராமலே மறைந்து விடுகிறது.

10 comments:

  1. pity there are High Court and Judges are coming for shopping there: No "HAIR AANDI" taking any action! korrr.korrrr
    karaikal athipar

    ReplyDelete
  2. ஊழியர்கள் யாராவது முன்வந்து புகார் கொடுத்தால் மட்டுமே போலீசோ மற்றவர்களோ நடவடிக்கை எடுக்கமுடியும் என்பது உங்களுக்குத் தெரியாதா? இன்னொரு விஷயம், இதை விட்டு வேறு வேலைக்குச் சென்றால் இதைவிட வசதிக்குறைவான வேலை தான் கிடைக்கும் என்பதே நிதரிசனமான உண்மை. உலகம் எங்கிலும் இது தான் நிலைமை. ஊழியர்கள் இணைந்து போராடினால் மட்டுமே வெளியார் ஆதரவு கொடுக்க முன்வருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் வெளியே வந்து போராடாத நிலையில் உள்ளனர். ஒருவேளை அவர்கள் வெளியில் வந்து போராடினால் தான் அந்த உண்மை வெளியே வரும் என்றால் நீங்கள் சொல்வதை எற்றுகொல்ள்ளலாம். ஆனால் அவர்கள் போராடாமலே இந்த உண்மை அனைவருக்கும் தெரியும் எனவே அவர்கள் வந்து போராடினால் தான் என்பது சாத்தியம் இல்லை. அவர்கள் உயிருக்கே கூட ஆபத்து இருக்கிறது வெளியே வந்து போராடினால் அதை தெரிந்துகொள்ளுங்கள்.

      Delete
  3. bijorne densingh27 October 2013 at 10:31

    பெண்கள் படும் உண்மை நிலைகள சூப்பரா எடுத்து சொல்லி இருக்கிரீங்க.

    ReplyDelete
  4. இது சரவணா ஸ்டோர்ஸ் மட்டுமில்லை தமிழகத்தின் பல அங்காடிகளின் நிலை இது தான். மனித தன்மையற்ற உழைப்பு உறிஞ்சல்.. இதுக் குறித்தான படங்கள், செய்திகள் பல வந்தும் பொது சமூகமும், தொண்டு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பொத்திக் கொண்டு தான் உள்ளன. உழைப்பாளர்களுக்கு சம்பளம், தங்குமிடம், உணவு போக, மருத்துவக் காப்பீடு, விடுப்பு, போனஸ், சம்பள உயர்வு வழங்கப்படுவதோடு, தொழிற்சங்கங்களுக்கு கீழ் இவர்களைக் கொண்டு வர வேண்டும். குறைந்தது 10 - 15 சம்பளமாவது கொடுக்கப்படல் வேண்டும். இவற்றைப் பெற்று தர நாம் என்ன செய்யப் போகின்றோம். தன்னார்வ மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் இடலாம், தொழிற்சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களோடு இணைந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையம், வட்டாராட்சியில் புகாரளிக்கவும், போராட்டம் நடத்தவும் முயல் வேண்டும். ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் முன்வந்து பங்களிப்புச் செய்தல் வேண்டும். ஆனால் இவற்றைச் செய்ய எத்தனை பேருக்கு விருப்பம் உண்டு, எனக்கென்ன மயிராப்போச்சு என போவோரே மிக அதிகம். :(

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மிகவும் சரி நண்பரே... பிறருக்காக போராட பலருக்கு மனம் வருவது இல்லை... ஆனால் ஒரு நடிகருக்ககவோ அல்லது ஒரு மதத்துக்காகவோ போராடவும் உயிரையே விடவும் நம் நாட்டில் பலர் உள்ளனர்.

      Delete
  5. பெரும் சோகத்தை வரவழைக்கிறது....கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்கின்றன என்றே தெரியவில்லை...
    R Chandrasekaran

    ReplyDelete
  6. அவையெல்லாம் பெயருக்கு மட்டுமே...

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்