இந்த பதிவு குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் நண்பரின் வலைப்பதிவை பற்றியது. இங்கு நான் குறிப்பிடுபவை அனைத்தும் அந்த நபரை பற்றி தானே தவிர முஸ்லிம் மதத்தை பற்றியோ அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் நண்பர்களை பற்றியோ அல்ல.
நான் நேற்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது ஒரு பதிவு என் கண்ணில் பட்டது. நடிகர்களுக்கு அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது என்பதை பற்றிய பதிவு அது எனக்கும் கூட நடிகர்கள் அரசியலுக்கு வருவது பிடிக்காத ஒன்று ஏதோ இவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று நாம் பார்த்துவிட்டு இவர்களுக்கு ரசிகர்களாக இருப்பதற்காக நாட்டையே இவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவோம் என்று நினைகிறார்கள். எனவே எனக்கும் இது பிடிக்காத ஒரு விஷயம் என்பதால் சரி நாமும் படித்து பார்க்கலாமே என்று படித்தேன். பதிவு மிக நன்றாக இருந்தது. எந்த நடிகருக்கும் சார்பாக எழுதாமல் ரஜினி,கமல்,விஜய்,அஜித் என்று அனைவரையும் கண்டித்து எழுத்தியிருந்தார். எனக்கு அந்த பதிவு மிகவும் பிடித்து போய்விட்டது.
அடுத்தடுத்து அவரது பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். சில படங்களின் விமர்சனங்களை பார்த்தேன் மிகவும் கேவலமாக எழுதியிருந்தார். நடிகர் நடிகைகளை அவன் அவள் என்று தான் எழுதியிருந்தார் நாம் ரொம்ப "ரா"வான ஆள் போல என்று நினைத்துகொண்டேன் மேல படிக்க ஆரம்பித்ததில் எந்திரன் விமர்சனம் போடப்பட்டு இருந்தது. எந்திரன் தான் பலருக்கு பிடித்த படமாயிற்றே இவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். அதில் படத்தை பற்றி அவர் விமர்சித்ததை விட ரஜினி ஷங்கர் இருவரையும் தான் அதிகம் விமர்சித்தார்.அப்போதே எனக்கு லேசாக பொறி தட்ட ஆரம்பித்தது பின்பு ரஜினியை பிடிக்காது போல இருக்கிறது ஆனால் ஷங்கரை ஏன் இவர் திட்ட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
அடுத்து நண்பன் விமர்சனம் போடப்பட்டு இருந்தது. வலையுலகில் பலர் இந்த படத்தை நன்றாக உள்ளது என எழுதினார்களே இவர் என்ன சொல்லியிருக்கார் என்று பார்த்தேன் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது இந்த படத்தையும் மிக கேவலமாக விமர்சித்திருந்தார். படத்தில் அவர்கள் சொல்லவந்த கருத்தை பற்றியோ அல்லது நடிப்பை பற்றியோ ஏதும் சொல்லவில்லை. படத்தை நல்ல இல்லை என்று விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே விமர்சிக்கபட்டிருப்பது நன்றாக தெரிந்தது. எனக்கு புரியவில்லை என்ன இவர் நல்ல படங்களை கூட கேவலமாக எழுதுகிறாரே என்று நினைத்தேன்.
சரி அடுத்து ஏதாவது படத்தின் பதிவை பார்க்கலாம் என்று பார்த்தேன்
பில்லா 2 இருந்தது இந்த படம் பலருக்கும் பிடிக்காமல் போனது எல்லாரும் இதை கேவலமாக எழுதின்னர்கள் சரி இவர் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்தல் ஐவரும் அதையே தான் செய்திருக்கிறார். ஆனால் சற்று வித்தியாசமாக அஜித்தை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருந்தார். அஜித்திற்கு கோட் சூட் கூலிங் கிளாஸ் எவ்வளவு பொருந்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இவர் அஜித் கோட் சூட் போட்டு நடந்து வருவதை கிண்டல் செய்திருந்தார். என்னடா இவர் பில்லா 2 படம் கதை சரியில்லை திரைகதை சரியில்லை இயக்கம் சரியில்லை என்று எழுதுவார் என்று நினைத்தால் இப்படி அஜித்தை பற்றி கேவலமாக எழுதுகிறாரே என்று யோசித்த படியே அடுத்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அடுத்து அதில் அஜித் இலங்கை அகதியாக வருவதையும் அதைவைத்து விடுதலை புலிகளையும் திட்டினார். அடுத்து இந்த படத்துக்கு பொய் எக்கச்சக்க பில்டப் கொடுத்து தல முண்டம் என்று ஏதேதோ எழுதியிருந்தார் அவர் அஜித்தை பற்றி எழுதியதை படித்து விஜய் ரசிகனான எனக்கே கோபம் வந்து விட்டது. இந்த அளவிற்கு திட்டும் அளவுக்கு அஜித் என்ன தவறு செய்துவிட்டார் என்று கேட்க தோன்றியது. அடுத்து சில படங்களின் விமர்சனங்களை பார்த்தேன் பாவம் அதற்கும் இதே நிலைமைதான் என்னடா இவர் எல்லா படத்தையும் நல்ல இல்லை என்று சொல்லுகிறார் என்று நினைத்தேன். இவருக்கு சினிமா பிடிக்காது போலும் அதனால் தான் எல்லாரையும் திட்டுகிறார் என்று நானாக நினைத்து கொண்டு எதுவும் புரியாமல் மற்ற பொதுவான பதிவுகளை பார்க்கலாம் என்று மற்ற தலைப்பில் படிக்க ஆரம்பித்தேன்.
விடுதலை புலிகள் இலங்கை தமிழர்களை பற்றிய பதிவு ஒன்று இருந்தது சினிமா இது போன்ற பொது விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பரே என்று ஆர்வமாக பார்க்க அதிலும் எனக்கு ஏமாற்றம் தான் இலங்கை தமிழர்களை கொலைகாரர்கள் என்றும் அவர்கள் இனம் அழிக்கபடுவது தவறு என்றும் எழுதியிருந்தார். அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழுணர்வு பற்றி பேசுபவர்களையும் கேவலமாக விமர்சித்திருந்தார். இங்குள்ள தமிழர்களையும் தமிழ் தமிழ் என்று மொழி வெறி உள்ளவர்கள் என்று கேவலபடுதியிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை தாய்மொழியின் மீது பற்று வைப்பது நல்லது தானே அதிலும் உலகிலேயே சிறப்பு வாய்ந்த பழமையான செம்மொழி மீது பற்று வைத்திருப்பது நல்லது தானே தமிழ் இருந்துகொண்டு தமிழ் பேசும் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று குழம்பினேன். பிறகு தான் தெரிந்தது அவர் தமிழ் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் என்று.
ராஜீவ் காந்தியை விடுதலைபுலிகள் கொன்றதற்காக லட்சகணக்கான தமிழர்களை கொன்றது சரி என்று ஒரு பதிவில் போட்டிருந்தார். அங்கு வந்த ஒருவர் அவரிடம் ராஜீவ் காந்தி என்ற ஒரு உயிரை கொன்றதற்காக எத்தனை தமிழர்கள் சாகடிக்கபடுகிரார்கள் அதை நாங்கள் கேட்டல் தவறா என்று கேட்டார் அதற்கு அவர் சொன்னார் பாருங்கள் ஒரு பதிலை நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். குஜராத்தில் அத்தனை முஸ்லிம் கொல்லப்பட்ட பொது எதுவும் கேட்கவில்லை இப்போது மட்டும் அந்த கொலைகார் புலிகளுக்காக வாதாடுகிரார்களா? என்று ஒரு கேள்வியை கேட்டார். அப்போது தான் தெரிந்தது அந்த நண்பர் ஒரு முஸ்லிம் என்று. அதாவது அவர் கருத்துப்படி முஸ்லிம் மக்களை கொன்றுவிட்டார்கள் எனவே இதற்க்கு பிறகு யாரை கொன்றாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க கூடாது. அவர் காரணமே இல்லாமல் பில்லா 2 வில் அஜித்தை கேவலமாக பேசியதற்கு காரணம் அஜித் அதில் இலங்கை தமிழ் அகதியாக நடித்து தான் காரணம் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.
தமிழர்களை பற்றி கேவலமாக ஒரு நடிகை பேஸ்புக்கில் ஒரு ஒரு கருத்தை வெளியிட்டார். அதற்க்கு அணைத்து தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் அதற்க்கு இவர் ரஜினி கமல் ஐஸ்வர்யா என சம்பந்தம் இல்லாமல் எதைஎல்லமோ எழுதி உங்களுக்கு வெட்கமாயில்லை என்று கேட்கிறார். அதாவது கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினியை நாம் ஏற்று கொண்டோம் எனவே அந்த கர்நாடக பெண் சொன்னதையும் ஏற்றுகொள்ள வேண்டுமாம். வந்த அனைவரையும் வாழவைக்கும் தமிழ் நாடு ஆனால் அதே தமிழன் மற்ற மாநிலங்களுக்கு போனால் அவனுக்கு குறைந்த மதிப்பு தான். ஆனால் தமிழ் நாட்டில் மற்ற மாநில மக்களை நன்றாக வளர்துவிடுகிரார்கள் அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் சினிமாவில் நடிக்க வந்துவிட்டு தமிழனை திட்டினால் எப்படி ஏற்றுகொள்ள முடியும்? ஆனால் அந்த அறிவாளிக்கு முஸ்லிம் மட்டும் தான் நல்லவர்களாக இருகிறார்கள் மற்ற தமிழர்கள் எல்லாம் கெட்டவர்கள் கேவலமானவர்கள் முஸ்லிம்களை பற்றி மற்றவர் சொல்லிவிட்டால் உடனே இவர்கள் போராடலாம் தமிழனை திட்டினால் தமிழன் கேட்க கொடாது என்பது அவரின் கருத்து.
அடுத்து சின்மயி இலங்கை ராணுவம் தமிழர்களை கொள்வதை சரி என்று சொன்னதற்கு அப்படியே ஐவரும் ஜால்ரா அடித்தார். அதற்கும் விளக்கம் தந்தார் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முஸ்லிம்களை கொன்றது என்று இதற்கும் அதையே கூறினார். ராமர் பிறந்தார் என்பதற்காக அப்போது அந்த
மசூதியை இடித்தது கண்டிப்பாக தவறு தான் முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவர்களை கொன்றதும் இன்று வரை முஸ்லிம்களை தீவிரவாதியாக பார்ப்பதும் தவறு தான் என்பது ஏற்றுகொள்ள கூடிய உண்மை தான். அதே போல் முஸ்லிம்களை இப்படி தவறாக மற்றவர்கள் நினைப்பதற்கு அப்பாவிகளை கொள்ளும் தீவிரவாதிகள் முஸ்லிம் மதத்தை ஆயுதமாக பயன்படுத்துவது தான் காரணம் என்பதும் அதே உண்மை தான்.
அதற்காக பலர் கொள்ளப்படும் போதும் கஷ்டப்படும்போதும் அதற்க்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் முஸ்லிம்களை கொன்றுவிட்டார்கள் இனி யார் செத்தால் என்ன அன்று அவர் நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்.
நான் இங்கு முஸ்லிம் மதத்தை தவறாக கூறவில்லை ஆனால் அந்த மதத்தை பயன் படுத்தி மக்கள் விளைக்கும் சிலரின் வக்கிர கண்டிக்கிறேன். குரானிலோ திருவிவிலியத்திலோ அல்லது பகவத் கீதையிலோ பிற மனிதர்களை சாகடிக்க வேண்டும் என்றோ அல்லது அவர்கள் மனம் நோகும்படி கேவலமாக பேசவேண்டும் என்றோ குறிப்பிடபட்டுள்ளதா நண்பர்களே?
மதம் ஜாதி அனைத்துமே மனிதனால் எழுதப்பட்டவை தானே பகவத்கீதையை கிரிஷ்ணபரமத்மாவா எழுதினர், திருவிவிலியத்தை இயேசு கிறிஸ்துவா எழுதினார் அல்லது குரான் தான் நபிகள் அவர்களால் எழுதப்பட்டதா? அனைத்துமே மனிதன் எழுதியவை தானே மனிதன் எழுதிய அதிலும் கூட நல்ல கருத்துகள் தானே சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையே காரணமாக வைத்து சண்டையிட்டு கொள்வது என்ன நியாயம். வானம் என்ன கிறிஸ்துவர் முஸ்லிம் ஹிந்து என்று பார்த்து தான் மழை தருகிறதா? மரங்கள் மதத்தை பார்த்து தான் சுவாசிக்க காற்று தருகிறதா? இல்லை சூரியன் தான் மதத்தை பார்த்து ஒளி தருகிறதா? உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணி விலங்குகளுக்கு தெரியுமா நீங்கள் என்ன மதம் என்று அவைகள் எல்லாம் மதம் பார்த்து தான் உங்கள் வீட்டில் வளர்கின்றனவா? கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் அறிவு குறைந்த இவைகள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்பொழுது அதே கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆறறிவு உள்ள மனிதன் பொதுவாக செயல் படமால் இப்படி மதத்தின் பெயரால் சண்டையிடுவது நியாயமா? தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் குழந்தைக்கு தெரியுமா நாம் இந்த மதத்தில் பிறக்கிறோம் என்று அது பிறந்து பிறகு தானே நீங்கள் அதற்கு ஒரு பெயரை வைத்து மதம் என்னும் நஞ்சை ஊட்டுகிறீர்கள். இதுவரை நடந்தது என்னவேண்டுமானாலும் இருக்கலாம் அதை சொல்லி வரபோகும் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம் நபர்களே இந்த உலகில் வாழும் கொஞ்ச நாளில் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று உறுதி எடுப்போம்.
நல்லெண்ணத்துடன் மிக நாகரிகமாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி.
வருகைக்கு நன்றி நண்பரே...
Deleteநல்லெண்ணத்துடன் மிக நாகரிகமாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி.
I dont know whom you are talking about.
ReplyDeleteBut I have noticed all Muslims look at the world with religious glass.
If you can wear the same glass, all what they have written will look normal to you.
Wanna wear the glass? :-)
i dont want that glass... thank u for ur comment Mr.Manimaran..
Deleteசொல்ல வந்ததை ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க. பதிவுலகத்துல இது மாதிரி பல "மெண்டல்" இருக்க தான் செய்யுறாங்க, அதுல நீங்க யாரை பத்தி சொல்லி இருக்கீங்கன்னு தான் தெரியல. இவ்வளவு சொன்ன நீங்க அந்த ஆளோட பேரை சொல்லி இருக்கலாமா, நீங்க சொன்ன பதிவுகளை படிச்சு நானும் சிரிச்சு இருப்பேன்.
ReplyDeleteநன்றி திரு. ராஜ் அவர்களே...
Deleteஇதை படித்துவிட்டு மற்றவர்கள் அவரை கிண்டல் செய்யவேண்டும் என்பது எனது நக்கம் இல்லை. இந்த பதிவை படித்தாவது மற்றவர்கள் மத உணர்வை தவிர்த்து பதிவுலகில் நன்றாக எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கம் அதனால தான் அவர் பெயரை சொல்லவில்லை.
very good and intrest pathivu
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே...
DeleteYou came to know about these kind of arguments and theories now only. Actually these kind of thoughts are being taught to small children by some particular people. I was talking to a thasildhar belongs to vellore district. He told us so many stories about hindu religion which are so worst. But as Hindu, educated and having basic knowledge about current affairs, we know all he told was totally lie. He told many incidents happened in Tamilnadu itself even in my city. But i know he is wrong and purposely he tries to misguide. Some particular people sharpening common men minds harmful to do something as they likes... That person talked about cows. He criticized cows much. I understood as hindus prays cows. So he talks like that. Being a thasildhar his mind is like that... How about uneducated will be sharpened? Think about it..
Deletehere i'm not supporting any particular relegien people... all are like that... my request is pls change our self...
Delete//பதிவுலகில் நன்றாக எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கம் //
ReplyDeleteappreciate this very much.
மிகவும் நன்றி தருமி அவர்களே...
Delete