இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. பெண்கள் அமைப்பினரும் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆனால் எந்த பயனும் இல்லை தவறுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்க்கு காரணம் ஆண்கள் என்றுமே பெண்களை தனக்கு நிகராக நினைக்க மறுக்கின்றனர். சில ஆண்கள் பெண்களை தன்னைவிட குறைந்தவளாக மதிப்பிட்டு கேவலமாக நடத்துகின்றனர். சில ஆண்கள் பெண்களை தன்னை விட உயர்வாக நினைத்து அவர்களுக்காக அதையும் செய்ய தாயாராக இருகின்றனர். இதில் ஒரு உண்மை என்னவென்றால் பெண்களை தன்னை விட தாழ்ந்தவர்களாக நினைத்தாலும் அல்லது உயர்ந்தவாளாக நினைத்தாலும் அது ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு ஆபத்தில் பொய் முடிகிறது.
நாகரீகம் அறிந்த படித்த இந்த காலத்து பெண்கள் விழிப்படைந்தனர். தான் ஒன்றும் புனிதமானவள் அல்ல ஆண்களை விட குறைந்தவர்களும் இல்லை உயர்ந்தவர்களும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம் ஆணைகளுக்கு எப்படி உணர்வுகள் ஆசைகள் உள்ளதோ அதே போல தனக்கும் உள்ளது அதை ஏன் நான் பிறருக்காக மற்ற வேண்டும் என்று நனைக்க தொடங்கினர். நான் இப்படி தான் உடையனிய வேண்டும் இப்படி தான் நடந்துகொள்ளவேண்டும் என தனக்கு உத்தரவு போட ஆண்கள் யார் என நினைக்கதொடங்கினர். தன விருப்பம் போல நடந்துகொண்டனர். இதிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பம் ஆனது தன் விருப்பத்துக்கு ஏற்றார் போல நடதுகொண்ட பெண்ணை உயர்வாக கடவுளை போல நினைத்த ஆண் தன் விருப்பத்தை மீறி நடந்த பெண்ணை பேயாக பார்க்க ஆரம்பித்தான். அவர்களுக்கு எதிராக படங்களை எடுத்து பெண் முன்னர்காலத்தில் இப்படி இருந்தால் இப்போது இப்படி ஆகிவிட்டால் என்று கருத்துகளை பரப்ப ஆரம்பித்தான். கடைசியில் அவளை வேட்டையாட ஆரம்பித்தான் அதற்கு காரணமாக அவள் உடை பழக்கவழக்கங்களை காரணமாக சொல்ல ஆரம்பித்தான்.
பெண் தன் கையை மீறி பொய் விட்டாளே என்று நினைத்துகொண்டிருந்த ஆண்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து பெண்களையே குற்றம் சுமத்தினர். தவறு செய்யும் ஆண்கள் எப்படி பெண்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்வதை விடுத்தது பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று கொடுக்க ஆரம்பித்தனர். இதை இந்தியாவின் ஒரு அமைச்சரே செய்தது இந்தியாவிற்கே கேவலமான ஒன்றாகும். ஆண்களின் இந்த மனபோக்கின் விளைவு இந்திய பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாடு என்று மேலை நாடுகளின் கருத்துகணிப்புகள் சொல்கின்றன. மற்ற நாடுகளின் முன் இந்திய தலைகுனிய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதற்க்கு முழுமுதற்காரணம் ஆண்களின் சுயநலம் பெண்ணையும் தன்னை போல பார்க்காமல் ஒரு பொருளை போல ஆர்க்கும் தன்மை. கற்பழிப்பின் பிறகு அந்த பெண் வாழவே கூடாது என்று பெண்களே நினைப்பதற்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் கற்பு என்கிற ஒரு மாயை. ஒரு கொலை செய்தவன் கூட தண்டனை அனுபவித்து வந்துவிட்டு நான் ஒரு கொலை செய்துள்ளேன் என்று பெருமையாக சொல்லிகொல்வான். ஆனால் ஆண்களின் இச்சைக்கு ஆளாகி கற்பழிக்கப்பட்ட ரூ தவறும் செய்யாத பெண்ணை பர்ர்ப்பவர்கள் அனைவரும் என்னவோ அவள் தான் தவறு செய்துவிட்டது போல அவளை கேவலமாக பேசுவார்கள். அதற்க்கு காரணம் அவள் அவளது கற்ப்பை இழந்துவிட்டால் என்பது தான். ஆண்களால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பு பெண்ணிடம் இருந்து போய்விட்டதாக நினைத்து அவளை எல்லாரும் செய்கின்றனர். ஆனால் கற்பழித்த ஆண்களோ 7 வருடம் தண்டனை அனுபவித்து வெளியே வந்து வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கின்றனர்.
இது இந்தியாவில் பாரம்பரியமாக நடந்துவரும் ஒன்று தான். அதிஷ்டவசமாக தற்போது ஒரு கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை கொடுக்கப்படுள்ளது. இது ஆரோகியமான மாற்றம் தான் ஆனால் இதுவரை பெண்கள் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்லமல் தவித்து வரும்போதும் அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்யும்போதும் கைகட்டி வேடிக்கை பார்த்த ஆண்கள் கூட்டம் ஆண் தண்டனை அடைந்தவுடன் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். பெண்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு இல்லாத மனித உரிமை ஆண்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது.
இபோது பெண்கள் சில ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை பெரிய தவறாக பேசப்படுகிறது. பெண்கள் ஆண்களை காதலித்து ஏமாற்றி விட்டு செல்கின்றனர். என்று கூறப்படுகின்றது. பெண்கள் க்ளப்களில் மது அருந்துகின்றனர் புகைபிடிகின்றனர் என்று புலம்ப ஆரம்பித்து உள்ளனர் ஆண்கள். அதற்காக பாடல் எல்லாம் கூட பாடி அதை அதே மாதிரியான ஆணாதிக்க எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வெளியிட்டு சந்தோசப்படுகின்றனர். பெண்கள் இதெல்லாம் தற்போது செய்வது தவறு என்றால் பல காலங்களாக ஆண்கள் இதையெல்லாம் செய்து வருகிறார்களே அவர்களை என்ன செய்யலாம். பல காலங்களுக்கு முன்பிருந்தே ஆண்கள் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளனர் மது அருந்துகின்றனர் புகைபிடிகின்றனர் காதலித்து உறவு கொண்டு பின்பு ஏமாற்றி செல்கின்றனர். இதெற்கெல்லாம் பெண்கள் பாட்டு பாடி புலம்பவில்லையே.
பெண் உரிமை என்று இன்று குரல் கொடுக்கும் அனைவரும் ஒன்றை உணரவேண்டும். இப்போது நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் அப்போது பெண்கள் மீது திணிக்கபட்ட சில வழிமுறைகள் தான் காரணம் பாரம்பரியம் என்று அவற்றை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காமல் பெண்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று நினைத்து அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கற்பு, உடை, பழக்க வழக்கம் என்று சில கட்டுகதைகளை அகற்றினாலே தவறுகள் குறைந்துவிடும். ஒரு பெண் ஆபாசமாக உடை அணிகிறாள் என்பது தவறுக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஆபாசம் என்பது அவள் அணியும் உடையில் இல்லை தான் இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவரும் பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்க நேரிடும் அது போதோ அல்லது மற்ற நோய்களுக்கு சிகிச்சை அழிக்கும்போதோ இருக்கலாம் அனால் அப்போது மருத்துவருக்கு ஆபாசமாக தோன்றுவது இல்லை. ஆனால் அதே உடையில் பார்க்கும் மற்றவர்க்கு ஆபாசமாக தோன்றுகிறது என்றால் அது உடையில் இல்லை பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது.
பெண் என்பவள் கடவுளும் இல்லை அடிமையும் இல்லை தன்னை போன்று அவளும் ஒரு உயிர் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
பெண்களின் இந்த நிலைக்கு காரணம் நம் முன்னோர்கள் பாரம்பரியம் பண்பாடு என்கிற பெயரில் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் இப்படி இருந்தால் தான் அவள் பெண் என்று பெண்களை மிகைப்படுத்தி சித்தரித்தது தான். புராணங்களில் பெண்கள் மிக உயர்ந்த கடவுள் போன்றும் பெண் சரியில்லை என்றால் குடும்பமே அழிந்துவிடும். எனவே பெண் என்பவள் தன் சுய உணர்வுகளை விட தன் குடும்பம் குழந்தைகள் என தியாக உணர்வோடு வாழும் புனிதர்கள் போல காட்டப்பட்டு இருகின்றன. பெண்கள் என்றுமே தவறு செய்துவிட கூடாது என்று அவர்களுக்கு கற்பு என்ற ஒன்றை திணித்துள்ளனர். ஆனால் ஆண்களுக்கு அந்த கற்பு என்பது எதுவும் இல்லை தான் சுதந்திரமாக இருக்க விரும்பும் ஆண் அதற்காக பெண்களை சிறை வைக்கும் விதத்தில் கற்பு பெண்களுக்கு மட்டும் ஒரு தனி விதிமுறைகளை விதிதான். அவள் இப்படி தான் உடை அணிய வேண்டும் இப்படி தான் நடந்துகொள்ளவேண்டும் என்று இவன் தீர்மானித்து அடுத்து வரும் தனது தலைமுறைகளுக்கும் அதையே சொல்லிகொடுதான்.
நாகரீகம் அறியாத பெண்கள் அன்றைய காலகட்டங்களில் ஆண்கள் சொல்வதை அப்படியே ஏற்று நடந்தனர். எனவே ஆண்கள் பெண்களை மிக உயர்வான அடிமைகளாக மதித்தனர். சக்தியின் அடையாளமாக பார்வதி காணப்பட்டாலும் சிவனை சார்ந்து தான் பார்வதி இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள். பெண் தன சுய உணர்வுகள் துக்கங்கள் சந்தோஷங்கள் ஆசைகள் அனைத்தையும் தன்னுள் புதைத்து ஆணுக்காகவே வாழ்ந்து வந்தால் அவள் எந்த சூழ்நிலையிலும் அவள் இஷ்டப்படி நடந்துகொள்ளகூடது என்பதற்காக கற்பு என்று ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தினான்.
பெண் தன் கையை மீறி பொய் விட்டாளே என்று நினைத்துகொண்டிருந்த ஆண்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து பெண்களையே குற்றம் சுமத்தினர். தவறு செய்யும் ஆண்கள் எப்படி பெண்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்வதை விடுத்தது பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று கொடுக்க ஆரம்பித்தனர். இதை இந்தியாவின் ஒரு அமைச்சரே செய்தது இந்தியாவிற்கே கேவலமான ஒன்றாகும். ஆண்களின் இந்த மனபோக்கின் விளைவு இந்திய பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாடு என்று மேலை நாடுகளின் கருத்துகணிப்புகள் சொல்கின்றன. மற்ற நாடுகளின் முன் இந்திய தலைகுனிய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதற்க்கு முழுமுதற்காரணம் ஆண்களின் சுயநலம் பெண்ணையும் தன்னை போல பார்க்காமல் ஒரு பொருளை போல ஆர்க்கும் தன்மை. கற்பழிப்பின் பிறகு அந்த பெண் வாழவே கூடாது என்று பெண்களே நினைப்பதற்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் கற்பு என்கிற ஒரு மாயை. ஒரு கொலை செய்தவன் கூட தண்டனை அனுபவித்து வந்துவிட்டு நான் ஒரு கொலை செய்துள்ளேன் என்று பெருமையாக சொல்லிகொல்வான். ஆனால் ஆண்களின் இச்சைக்கு ஆளாகி கற்பழிக்கப்பட்ட ரூ தவறும் செய்யாத பெண்ணை பர்ர்ப்பவர்கள் அனைவரும் என்னவோ அவள் தான் தவறு செய்துவிட்டது போல அவளை கேவலமாக பேசுவார்கள். அதற்க்கு காரணம் அவள் அவளது கற்ப்பை இழந்துவிட்டால் என்பது தான். ஆண்களால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பு பெண்ணிடம் இருந்து போய்விட்டதாக நினைத்து அவளை எல்லாரும் செய்கின்றனர். ஆனால் கற்பழித்த ஆண்களோ 7 வருடம் தண்டனை அனுபவித்து வெளியே வந்து வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கின்றனர்.
இது இந்தியாவில் பாரம்பரியமாக நடந்துவரும் ஒன்று தான். அதிஷ்டவசமாக தற்போது ஒரு கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை கொடுக்கப்படுள்ளது. இது ஆரோகியமான மாற்றம் தான் ஆனால் இதுவரை பெண்கள் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்லமல் தவித்து வரும்போதும் அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்யும்போதும் கைகட்டி வேடிக்கை பார்த்த ஆண்கள் கூட்டம் ஆண் தண்டனை அடைந்தவுடன் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். பெண்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு இல்லாத மனித உரிமை ஆண்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது.
இபோது பெண்கள் சில ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை பெரிய தவறாக பேசப்படுகிறது. பெண்கள் ஆண்களை காதலித்து ஏமாற்றி விட்டு செல்கின்றனர். என்று கூறப்படுகின்றது. பெண்கள் க்ளப்களில் மது அருந்துகின்றனர் புகைபிடிகின்றனர் என்று புலம்ப ஆரம்பித்து உள்ளனர் ஆண்கள். அதற்காக பாடல் எல்லாம் கூட பாடி அதை அதே மாதிரியான ஆணாதிக்க எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வெளியிட்டு சந்தோசப்படுகின்றனர். பெண்கள் இதெல்லாம் தற்போது செய்வது தவறு என்றால் பல காலங்களாக ஆண்கள் இதையெல்லாம் செய்து வருகிறார்களே அவர்களை என்ன செய்யலாம். பல காலங்களுக்கு முன்பிருந்தே ஆண்கள் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளனர் மது அருந்துகின்றனர் புகைபிடிகின்றனர் காதலித்து உறவு கொண்டு பின்பு ஏமாற்றி செல்கின்றனர். இதெற்கெல்லாம் பெண்கள் பாட்டு பாடி புலம்பவில்லையே.
பெண் உரிமை என்று இன்று குரல் கொடுக்கும் அனைவரும் ஒன்றை உணரவேண்டும். இப்போது நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் அப்போது பெண்கள் மீது திணிக்கபட்ட சில வழிமுறைகள் தான் காரணம் பாரம்பரியம் என்று அவற்றை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காமல் பெண்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று நினைத்து அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கற்பு, உடை, பழக்க வழக்கம் என்று சில கட்டுகதைகளை அகற்றினாலே தவறுகள் குறைந்துவிடும். ஒரு பெண் ஆபாசமாக உடை அணிகிறாள் என்பது தவறுக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஆபாசம் என்பது அவள் அணியும் உடையில் இல்லை தான் இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவரும் பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்க நேரிடும் அது போதோ அல்லது மற்ற நோய்களுக்கு சிகிச்சை அழிக்கும்போதோ இருக்கலாம் அனால் அப்போது மருத்துவருக்கு ஆபாசமாக தோன்றுவது இல்லை. ஆனால் அதே உடையில் பார்க்கும் மற்றவர்க்கு ஆபாசமாக தோன்றுகிறது என்றால் அது உடையில் இல்லை பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது.
பெண் என்பவள் கடவுளும் இல்லை அடிமையும் இல்லை தன்னை போன்று அவளும் ஒரு உயிர் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
சரியாத்தான் சொன்னீர்கள் தம்பி. சிந்திக்க வேண்டிய விஷயம்தான், காலம் காலமாக ஆணாதிக்க நிலையிலேயே இருந்ததால் அறிவு ஏற்றுக் கொள்வதை மனம் எளிதில் ஏற்றுக் கொள்ளது.மாற்றங்கள் மெதுவாக வே நடைபெறும்.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்
மாற்றம் மெதுவாகவோ அல்லது வேகமாகவோ நடந்தே ஆகா வேண்டும்... இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்...
Delete