அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் ஜில்லா படத்தின் போஸ்டர் தினசரி பேப்பர்களில் வெளியாகியுள்ளது.
இளையதளபதியின் ரசிகர்கள் இந்த போஸ்டரை தளபதி தங்களுக்கு தந்த தீபாவளி பரிசாக நினைத்து கொண்டாடுகின்றனர்.
ஜில்லா படத்தின் கடைசி கட்ட படபிடிப்பு நடந்துவருகிறது. விஜய் இதில் போலிஸ் வேடத்தில் நடிக்கிறார். விஜயுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாது பலரின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இதில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.
ஜில்லா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் ஜில்லா என்பது படத்தின் சிறப்பு. அஜித்தின் ஆரம்பம் மற்றும் விஜயின் தலைவா 15 கோடியுடன் இரண்டாவது இடத்தில உள்ளது. கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதாலும் மோகன்லால் படத்தில் உள்ளதாலும் ஜில்லா கேரளாவில் மம்முட்டி படங்களை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இப்படி தினமும் ஜில்லவை பற்றி செய்திகள் வெளியாவதால் தளபதி ரசிகர்கள் ஜில்லாவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஜில்லா பொங்கலுக்கு வெளியிடப்படுகிறது. அஜித்தின் வீரமும் பொங்கலுக்கு வெளியிடப்படுகிறது. 7 வருடங்களுக்கு பிறகு விஜய் அஜித்தின் படங்கள் ஒன்றாக ரிலிஸ் ஆகிறது. கடைசியாக போக்கிரி மற்றும் ஆழ்வார் படங்கள் ஒன்றாக ரிலிஸ் ஆகின அதில் தளபதியின் போக்கிரி பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
jilla jilla jilla most power full movie for our thalapathi.
ReplyDelete