Pages

30/08/2013

தலைவா படத்துக்கு பின்?


விஜய் அழகிய தமிழ் மகனில் ஆரம்பித்து சுறா வரை பல மொக்கையான படங்களை கொடுத்து விஜய் எதிர்ப்பாளர்களுக்கு சந்தோஷத்தை அளித்து வந்தார். அவர்களும் விஜயை கண்ட மேனிக்கு கிண்டல் செய்து பதிவுகள் வெளியிட்டனர். காவலன் என்ற ஒரு படம் வரும்போது விஜய் அவ்வளவு தான் அவரது மார்கெட்  போய்விட்டது போன்ற ஒரு சூழ்நிலையை தோற்றுவித்தார்கள் அதற்க்கு ஏற்றாற்போல் காவலனுக்கு பல பிரச்னை வந்து பின்னர் படம் வெளியானது இதுவரை விஜய் எதிர்ப்பாளர்களுக்கு சந்தோஷத்தை அளித்து வந்த விஜய் காவலனில் மாறதொடங்கினார்.

அப்போது விஜயை அவர்களால் கிண்டல் செய்ய முடியவில்லை அதுவரை விஜயை மட்டுமே கிண்டல் செய்தவர்கள் அப்பொழுது தான் அவர் படத்தை பற்றி விமர்சனம் வெளியிட்டனர் அதும் நன்றாக இல்லை படத்தில் விஜய் நடிக்க முயன்றுள்ளார் ஆனால் படம் சுமாராக உள்ளது திரைகதை சரியாக இல்லை என்றனர் அதுவரை விஜய் ஓவராக அவர் படங்களில் வசனம், ஸ்டைல், சண்டைகாட்சி போன்றவற்றை குறையாக கூறியவர்கள் அதை மாற்றியபின் அதையே ஒரு குறையாக சொல்ல தொடங்கினர் அதாவது விஜய் அடங்கிவிட்டார், அவரது படத்தில் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார் போன்ற விமர்சனங்களை வெளியிட்டனர். அதுவரை அதிரடியாக நடிக்கிறார் என்று குறை சொல்லிய கூட்டம் அமைதியாக நடித்த பின் அமைதியாக நடிக்கிறார் அடங்கிவிட்டார் போன்ற விமர்சனங்களை வெளியிட்டனர். பிரச்னை என்ன என்றால் விஜய் எப்படி நடிக்கிறார் என்று அவர்களுக்கு கவலை இல்லை எப்படி நடித்தாளும் அவரை கலைக்க வேண்டும் அது தான் அவர்களின் எண்ணமாக இருந்ததது.



 காவலனுக்கு பின்னர் மீண்டும் விஜய் ஆகஷனில் களம் இறங்கினார். ஜெயம் ராஜாவின் டைரக்ஷனில் வேலாயுதம் நடித்தார் தீபாவளிக்கு படம் வெளிவந்தது. பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ஏழாம் அறிவுடன் மோதியது வேலாயுதம். குறைவான தியேட்டரில் ரிலிஸ் ஆனாலும் முதல் வாரத்தில் ஏழாம் அறிவை விட அதிக வசூல் செய்து தனது மாஸ் என்னவென்று ரசிகர்களுக்கு காட்டினார். விமர்சனங்கள் இரு படத்துக்கும் கலந்து வந்த போதும் தோல்வி இல்லை என்று சொல்லிகொள்ளும் படி வசூல் இரண்டு படங்களுக்கும் வந்தது.





ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் நண்பன் இதைப்பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை. அணைத்து ஊடகங்களின் பாராட்டையும் பெற்றது. விஜயின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. விஜயை நடிப்பில் அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றது படம் அதையும் அஜித் ரசிகர்கள் படத்தை பாராட்டுவதை போல விஜயை கிண்டல் செய்தனர். அதாவது விஜய் நன்றாக நடித்த ஒரே படம் நண்பன் தானாம்!!




ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த மாபெரும் வெற்றி படம் துப்பாக்கி. 2012-ல் அணைத்து பெரிய ஹீரோக்களின் படமும் தோல்வி அடைந்த போது(பில்லா 2, மாற்றான், தாண்டவம்) விஜயின் துப்பாக்கி மட்டுமே அந்த வருடத்தின் பெரிய ஹிட் படமாக அமைந்தது. அது மட்டும் அல்லது 100 கோடி வசூல் செய்து ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜயை 100 கோடிக்கு மேல் வசூல் செய்த ஹீரோக்களின் பட்டியலில் சேர்த்தது. இன்று வரை தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலை தாண்டிய ஹீரோக்கள் ரஜினி, கமல், விஜய் மட்டுமே.




விஜயின் சிறப்பு தன்மையே ஒரு பெரிய வெற்றி படத்தில் நடித்தால் அடுத்து ஒரு தோல்வி படத்தில் நடிப்பது தான். அதே சிறப்பை இன்றும் செய்தார் விஜய். ஏற்கனவே விக்ரம் என்ற ஒரு நல்ல நடிகனை வைத்து தாண்டவம் என்ற மொக்க படத்தை கொடுத்த விஜயின் கதையில் நடித்தார். கதை அவரின் அப்பா சந்திரசேகரால் தேர்வு செயப்பட்டது. படத்திற்கு தலைவா என பெயர் வைத்துவிட்டு தமிழ் சினிமாவில் ஏற்கனவே வந்த பல நல்ல படங்களின் காட்சிகளை அப்படியே எடுத்தார் A.L.விஜய். படமும் எல்லா விமர்சர்களிடமும் எதிர்மறை விமர்சனம் பெற்றது. அதிலும் சிலர் படத்தை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் விஜயை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தனர். அதாவது தலைவ படத்துக்கு வந்த பிரச்சனையை வைத்து அவரை விமர்சித்தனர். அதாவது விஜய் கொழயாம் மேலிடத்தை எதிர்த்து அவரால் பேச முடியவில்லையாம் இவர்கள் எல்லாம் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக போராடுபவர்கள் ஆனால் விஜய் அப்படி இல்லையாம்.




காவலனில் இருந்து விஜயை கிண்டல் பண்ண முடியாமல் உள்ளம் குமுறிய இவர்களுக்கு தலைவா படத்தின் தோல்வி மீண்டும் அவரை கிண்டல் செய்வதற்கு காமடியாக அமைந்தது.

அஜித் ரசிகர் ஒருவர் பதிவு ஒன்றை வெளிடுகிறார் அஜித்துக்கு போட்டி விஜயா இல்லை சூர்யாவா என்று ஏன் என்றால் அஜித் தொடர்ந்து அசல் பில்லா 2 ஏகன் போன்ற  ஹிட் படத்தை கொடுத்து கொண்டு இருக்கிறார் ஆனால் விஜய் அப்படி இல்லையாம். இதை இவர்கள் துப்பாக்கி படம் வரும் போது இதை சொல்லி இருந்தால் இவர்களின் டப்பா டான்ஸ் ஆடியிருக்கும் ஆனால் தலைவா சரியாக போகாத நேரம்  இது தான் சமயம் என்று இந்த ஒரு மகத்தான கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்ன என்றால் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்களாம் அனால் விஜய்க்கு குடும்ப ரசிகர்களும் குழந்தை ரசிகர்களும் தான் அதிகம் இருக்கிறார்களாம் அவருக்கென்று ரசிகர்கள் அதிகமாக இல்லையாம் அதாவது தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை என்ன என்று உளவுத்துறையை வைத்து என்னிபார்த்து அவர்கள் இந்த புள்ளி விவரத்தை சொல்லிர்யிருக்கிர்ரர்கள் போலும் அஜித் ரசிகர்கள் அவரின் மொக்க படத்தை மட்டும் தான் பார்பார்கள் என்று நினைத்து இருந்தேன் ஆனால்  அவர்கள் அவ்வப்போது விஜயகாந்த படமும் பார்ப்பார்கள் என்று அவர்கள் சொல்லிய புள்ளிவிவரத்தை பார்த்த பின்பு தான் தெரிந்தது.

அடுத்ததாக அவர்கள் சொல்லும் காரணம் விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை தான் அதிகமாக கிண்டல் செய்கிறர்கலாம் அதனால் சூர்யா விஜயை தாண்டி சென்று விட்டாராம் பாவம் அவரே இரண்டு தோல்வி படங்களுக்கு பிறகு இப்போது தான் ஒரு ஹிட் படத்தில் நடித்திருக்கிறார் அது இவர்களுக்கு பொறுக்கவில்லை போலும். அஜித் நடித்த கடைசி ஹிட் படமாகிய மங்காத்தா வசூலை சிங்கம் 2 தாண்டிவிட்டது ஆனால் விஜயின் துப்பாக்கி வசூலுக்கு கிட்டே கூட வரவில்லை அனால் அஜித் ரசிகர்களின் கருத்து சூர்யா விஜயை தாண்டிவிட்ட்ர் ஆனால் அஜித்தை தாண்ட முடியாதம் அது உண்மை தான் ஏற்கனவே தாண்டிய ஒரு இலக்கை மீண்டும் எதற்கு சூர்யா தாண்ட வேண்டும் இப்போது அவர் தாண்ட வேண்டிய இலக்கு விஜயின் துப்பாக்கி வசூல்தான் அதை தாண்டுவார என்று பின்னாளில் தான் பார்க்க வேண்டும்.

அடுத்ததாக அவர்கள் சொல்லும் காரணம்  விஜயின் துப்பாக்கி மட்டும் தான் ஹிட் படமாம் மற்ற படங்கள் எல்லாம் ஹிட் கிடையாது. அதாவது நண்பன், வேலாயுதம் படங்களை அஜித்தின் மகத்தான படங்களான அசல் ஏகன் போன்ற படங்களுடன் ஒப்பிடுகிறார்கள். நண்பன், வேலாயுதம் படத்தின் வசூல் விமர்சனங்கள் என்ன என்றும் அசல் ஏகன் பில்லா 2 படத்தின் விமர்சனம், வசூல் என்ன என்று உங்களுக்கே தெரியும் அதை உங்கள் கையிலேயே விட்டு விடுகிறேன். 

இவர்கள் கண்களுக்கு தெரியாத சில உண்மைகள் இருக்கின்றன அதை இவர்கள் மறந்தது ஏன் என்று தெரியவில்லை. விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, பெங்களூர், ஆந்திர போன்ற இடங்களிலும் ரசிகர்கள் இருக்கிறர்கள் சூர்யாவுக்கு ஆந்திர வில் அதுக அளவில் ரசிகர்கள் இருக்கிறர்கள் ரஜினிக்கு அடுத்து விஜய் சூர்யாவின் படங்களுக்கு தான் வெளி மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. இதை அவர்கள் மறந்தார்கள அல்லது மறைதார்களா என்று எனக்கு தெரியவில்லை. 

விஜயின் தலைவா படமானது 15 கோடிக்கு சாட்டிலைட் உரிமம் சன் டிவியால் வாங்கப்பட்டு இருக்கிறது அடுத்து ஜில்லா 18 கோடிக்கு விலை பேசியிருக்கிறார்கள் ஆனால் இதெல்லாம் அவர்கள் கண்களுக்கு தெரியாது அவர்களுக்கு இப்போது தெரிவது எல்லாம் விஜய் ஒரு பிளாப் படத்தில் நடித்து விட்டார் அவ்வளவு தான். 

அனால் அஜித் கடைசியாக பில்லா 2 என்னும் மொக்கை படத்தில் நடித்ததை அவர்கள் கண்டுலோல்லவே மாட்டார்கள் ஏன் என்றால் அவர்கள் தான் அஜித் ரசிகர்கள் ஆயிற்றே அவர்களுக்கு எப்படி உண்மை நிலவரம் புரியும்.

அடுத்து அவர் ஒரு மென்மையான கருத்தை வெளியிட்டு இருந்தார் அதாவது அஜித் ரசிகர்கள்    ரசிகர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் அஜித்தின் படம் தோல்வி என்றால் அதை எற்றுகொல்வார்கலாம் ஆனால் விஜய் ரசிகர்கள் ரொம்ப கெட்டவர்கள் விஜய் படம் தோல்வி என்றால் அதை ஏற்றுகொள்ள மாட்டார்களாம் இது அவரின் கருத்து. பில்லா 2 வெளியான சமயம் அது நன்றாக இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாத அஜித் ரசிகர் ஒருவர் விஜய் ரசிகர்களை கிண்டல் செய்து ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவு எப்படி இருந்தது என்றால் பில்லா 2 நன்றாக உள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் தான் நன்றாக இல்லை என்று பொய் சொல்வது போன்று  இருந்தது சிறிது நாட்களுக்கு கழித்து தான் அனைவருக்கும் தெரிந்தது யார் சொன்னது உண்மை யார் சொல்வது பொய் என்று. 

அடுத்ததாக இன்னொரு அஜித் ரசிகர் பில்லா 2 படத்தை ஆங்கல தரம் என்று எல்லாம் எழுதினர். பின்னர் உண்மை நிலவரம் தெரிந்த பின்னர் அவரே தான் எழுதிய ஒரு சிறு கதையில் பில்லா 2 படத்தை போட்டு இந்த தடவையும் சொதபிட்டாயே தல என்று உண்மையை ஒத்துகொண்டார்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அவர் தனது பதிவில் ஒன்றை சொல்லி இருந்தார் தலைக்கு நண்பனாக இருக்க தகுதி வேண்டாமாம் ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேண்டுமாம்.அந்த தகுதி விஜய்க்கு இல்லையாம் இது பில்லா 2 வில் அஜித் படத்துக்காக பேசிய வசனம் அதை உண்மை என்று நினைத்து அவர் உளறியதை நினைத்து அழுவாத சிரிப்பத என்று எனக்கே தெரியவில்லை .

அவர் இந்த கருத்தை கூறும் போது எனக்கு உடனே நினைவுக்கு வந்தது பில்லா 2 படம் ரிலிஸ் ஆகும்போது நடந்த காமெடி தான். சகுனிக்கு பயந்து பில்லா 2 வை தள்ளி போட்டார்கள் காரணம் கேட்டல் படத்துக்கு A சான்றிதழ் கொடுத்தார்களாம் அதை மாற்ற வேண்டுமாம் ஆனால் படம் அதே A சான்றிதழோடு தான் வெளிவந்தது. 

சூர்யாவின் தம்பி கார்த்திக்கின் சகுனி படத்தை பார்த்து பயந்து படத்தை ரிலிஸ் செய்யாத  அஜித்துக்கு சூர்யாவின் எதிர்பார்ப்பு மிக்க படமாக இருந்த ஏழாம் அறிவுடன் தைரியமாக வேலாயுதத்தை ரிலிஸ் செய்த விஜய் எதிரியாக இருக்க தகுதி இல்லையாம் இதை நினைக்கும் போது விவேக் ஒரு படத்தில் "டேய் உங்களுக்கு போகியே இலையேடா நீங்கலம் அவசரப்பட்டு பொங்கல் பத்தி கொண்டாடுரிங்கலேடா" என்று கூறுவார் அது நியாபகம் வந்தது மொத்தத்தில் அந்த அஜித் ரசிகருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஏன் என்றால் என்னை நன்றாக சிரிக்க வைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க அவர் உதவுகிறார்.

நன்றி அஜித் ரசிகர்களே.....

09/08/2013

தலைவா படம் vs தறுதலைகள்


விஜயின் நடிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவா படம் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தவித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

நான் இங்கு சொல்ல வருவது அந்த பிரச்சனையை பற்றியோ அல்லது அது இப்போது எந்த நிலையில் உள்ளது என்றோ அல்ல. அதை சினிமா உலகமும் ஒரு சில நடிகரின் ரசிகர்களும் சில வலைபதிவர்களும் எப்படி அணுகியுள்ளனர் என்பதை பற்றிய கருத்து தன நான் இங்கு கூற இருக்கிறேன்.

முதலில் சினிமா உலகத்தை பார்த்தோமானால்  அன்று விஸ்வரூபம் பிரச்சனைக்கு ஆதரவாக இருந்தது அனால் இன்று தலைவா பிரச்சனையில் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. விஷால் கமல் பிரச்சனையின் போதே நடிகர் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தினர் அது  உண்மைதான்  என்று தலைவா பிரச்னை உறுதி செய்துள்ளது.





இளைய  தலைமுறை நடிகர்களான தனுஷ், சிம்பு மற்றும் பரத் தங்கள் சக நடிகரின் படம் குறித்து தங்கள் கருத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள் ஆனால் பொறுப்புள்ள நடிகர் சங்கம் இந்த பிரச்சனையை பற்றி பேசவே பயப்படுகிறார்கள் இது தமிழ் சினிமாவிற்கு ஒரு பின்னடைவு என்றே தோன்றுகிறது.

அடுத்ததாக வலைபதிவர்களில் விஜயை பிடிக்காத சிலர் படம் வெளிவரும் முன்னரே தங்கள் எதிர்மறையான விமர்சனங்களை தருகின்றனர். படம் வெளிவந்த பின்னர் எந்த விமர்சனமாக இருந்தாலும் உண்மை எது என்று மக்களுக்கு தெரிய வரும். ஆனால் வருவதற்கு முன்பே வெளியிடுவதால் மக்களுக்கு அவர்கள் வெளியிடுவது தான் உண்மை என்ற சூழல் உருவாகும். இது  ஒரு நடிகரின் படம் மட்டும் அல்ல தயாரிப்பாளர், விநியோகிஸ் தர்களின் பொருளாதார பிரச்சனைகளும் இதில் அடங்கியுள்ளது  எனவே வலைபதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். படம் வெளிவந்த பின்னர் தங்களின் எத்தகைய விமர்சனங்களையும் வெளியிடலாம்.


அடுத்ததாக அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் செய்யும் வேலைகள் மிகவும் கேவலமாக உள்ளது. ஒரு நடிகனின் மேல் உள்ள பற்றால் மனிதன் மனிதாபிமானத்தை இழந்ததை இவர்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். கோவையில் படம் ரிலீஸ் ஆகாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கவலைகிடமாக உள்ள விஜய் ரசிகரை பற்றி முகபுத்தகத்தில் வெளியிட்டு வருத்தம் தெரிவிக்கும் போது அங்கு வந்து காமெடி செய்யும் அஜித் ரசிகர்களை என்னவென்று சொல்வது அஜித் மீதுள்ள பற்றில் இவர்கள் மனித உயிரை மதிக்க தவறிவிட்டனர். அன்று கமல் இன்று விஜய் நாளை அவரவர்க்கு பிடித்த நடிகர்களின் படங்கள் இது போன்று செய்யப்படலாம் பின்னர் ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவே இதனால் அவதியுறும் நிலை ஏற்படலாம் அப்போது வருந்தி பயனில்லை இப்போதே ஒரு முடிவு வேண்டும் இல்லையென்றால் நாளை தமிழ்நாட்டில் ஒவ்வொரு படமும் எல்லா மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சாதி தலைவர்களின் ஒப்புதலுக்கு பிறகுதான் ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைமை வரக்கூடும் இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது அல்ல.

இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி மற்ற நடிகர்களின் படங்களுக்கு வராத பிரச்னை ஒரு சில நடிகர்களின் படத்துக்கு மட்டும் வருவது அந்த நடிகரின் தனிப்பட்ட ஆசை தான் காரணம் அதற்கு எப்படி மற்றவரை தவறு சொள்ளமிடியும் என்பது தான்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒரு சினிமா படம் ரிலீஸ் ஆவதினால் ஒரு மாற்றம் வரும் என்றால் தமிழ்நாடு அவ்வளவு இழிவான நிலையிலா உள்ளது? ஒரு சினிமா நடிகரையும் படத்தையும் பார்த்து பயப்படுவது ஏன்?
உங்கள் ஆட்சி நன்றாக இருந்து நீங்கள் நன்றாக செயல்பட்டால் மக்கள் யார் கூறுவதையும் நம்பமாட்டார்களே!!! நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள் என்றால் ஏன் ஒரு நடிகரையும் அவரின் படத்தையும் பார்த்து பயப்பட வேண்டும்!!!

அடுத்ததாக இந்த பிரச்சனையின் ஆரம்ப காரணம் விஜயின் அப்பாவாகிய எஸ்.ஏ .சி தான். நீங்களோ அல்லது விஜயோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது எந்த தவறும் இல்லை. ஆனால் அதை ஏன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறீர்கள்? எந்த ஒரு விடயத்திலும் வெளிப்படையாக இருப்பவரை மக்கள் என்றும் ஆதரிப்பார்கள் அதற்கு சிறந்த எடுத்துகாட்டு அஜித். நீங்கள் எதிர்த்தாலும் அல்லது ஆதரித்தாலும் அதை வெளிப்படையாக செய்தால் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்.

கடைசியாக தளபதி விஜய் அண்ணாக்கு ஒரு சின்ன அட்வைஸ் உங்களுக்கு அரசியல் ஒதுவரதுங்கான அதனால தயவுசெஞ்சு அந்த ஆசைய அடியோட மறந்துடுங்கனா .......


உங்களையே நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு நல்ல வழி காட்டுங்கனா.....