விஜயின் நடிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவா படம் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தவித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
நான் இங்கு சொல்ல வருவது அந்த பிரச்சனையை பற்றியோ அல்லது அது இப்போது எந்த நிலையில் உள்ளது என்றோ அல்ல. அதை சினிமா உலகமும் ஒரு சில நடிகரின் ரசிகர்களும் சில வலைபதிவர்களும் எப்படி அணுகியுள்ளனர் என்பதை பற்றிய கருத்து தன நான் இங்கு கூற இருக்கிறேன்.
முதலில் சினிமா உலகத்தை பார்த்தோமானால் அன்று விஸ்வரூபம் பிரச்சனைக்கு ஆதரவாக இருந்தது அனால் இன்று தலைவா பிரச்சனையில் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. விஷால் கமல் பிரச்சனையின் போதே நடிகர் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தினர் அது உண்மைதான் என்று தலைவா பிரச்னை உறுதி செய்துள்ளது.
இளைய தலைமுறை நடிகர்களான தனுஷ், சிம்பு மற்றும் பரத் தங்கள் சக நடிகரின் படம் குறித்து தங்கள் கருத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள் ஆனால் பொறுப்புள்ள நடிகர் சங்கம் இந்த பிரச்சனையை பற்றி பேசவே பயப்படுகிறார்கள் இது தமிழ் சினிமாவிற்கு ஒரு பின்னடைவு என்றே தோன்றுகிறது.
அடுத்ததாக வலைபதிவர்களில் விஜயை பிடிக்காத சிலர் படம் வெளிவரும் முன்னரே தங்கள் எதிர்மறையான விமர்சனங்களை தருகின்றனர். படம் வெளிவந்த பின்னர் எந்த விமர்சனமாக இருந்தாலும் உண்மை எது என்று மக்களுக்கு தெரிய வரும். ஆனால் வருவதற்கு முன்பே வெளியிடுவதால் மக்களுக்கு அவர்கள் வெளியிடுவது தான் உண்மை என்ற சூழல் உருவாகும். இது ஒரு நடிகரின் படம் மட்டும் அல்ல தயாரிப்பாளர், விநியோகிஸ் தர்களின் பொருளாதார பிரச்சனைகளும் இதில் அடங்கியுள்ளது எனவே வலைபதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். படம் வெளிவந்த பின்னர் தங்களின் எத்தகைய விமர்சனங்களையும் வெளியிடலாம்.
அடுத்ததாக அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் செய்யும் வேலைகள் மிகவும் கேவலமாக உள்ளது. ஒரு நடிகனின் மேல் உள்ள பற்றால் மனிதன் மனிதாபிமானத்தை இழந்ததை இவர்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். கோவையில் படம் ரிலீஸ் ஆகாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கவலைகிடமாக உள்ள விஜய் ரசிகரை பற்றி முகபுத்தகத்தில் வெளியிட்டு வருத்தம் தெரிவிக்கும் போது அங்கு வந்து காமெடி செய்யும் அஜித் ரசிகர்களை என்னவென்று சொல்வது அஜித் மீதுள்ள பற்றில் இவர்கள் மனித உயிரை மதிக்க தவறிவிட்டனர். அன்று கமல் இன்று விஜய் நாளை அவரவர்க்கு பிடித்த நடிகர்களின் படங்கள் இது போன்று செய்யப்படலாம் பின்னர் ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவே இதனால் அவதியுறும் நிலை ஏற்படலாம் அப்போது வருந்தி பயனில்லை இப்போதே ஒரு முடிவு வேண்டும் இல்லையென்றால் நாளை தமிழ்நாட்டில் ஒவ்வொரு படமும் எல்லா மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சாதி தலைவர்களின் ஒப்புதலுக்கு பிறகுதான் ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைமை வரக்கூடும் இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது அல்ல.
இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி மற்ற நடிகர்களின் படங்களுக்கு வராத பிரச்னை ஒரு சில நடிகர்களின் படத்துக்கு மட்டும் வருவது அந்த நடிகரின் தனிப்பட்ட ஆசை தான் காரணம் அதற்கு எப்படி மற்றவரை தவறு சொள்ளமிடியும் என்பது தான்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒரு சினிமா படம் ரிலீஸ் ஆவதினால் ஒரு மாற்றம் வரும் என்றால் தமிழ்நாடு அவ்வளவு இழிவான நிலையிலா உள்ளது? ஒரு சினிமா நடிகரையும் படத்தையும் பார்த்து பயப்படுவது ஏன்?
உங்கள் ஆட்சி நன்றாக இருந்து நீங்கள் நன்றாக செயல்பட்டால் மக்கள் யார் கூறுவதையும் நம்பமாட்டார்களே!!! நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள் என்றால் ஏன் ஒரு நடிகரையும் அவரின் படத்தையும் பார்த்து பயப்பட வேண்டும்!!!
அடுத்ததாக இந்த பிரச்சனையின் ஆரம்ப காரணம் விஜயின் அப்பாவாகிய எஸ்.ஏ .சி தான். நீங்களோ அல்லது விஜயோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது எந்த தவறும் இல்லை. ஆனால் அதை ஏன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறீர்கள்? எந்த ஒரு விடயத்திலும் வெளிப்படையாக இருப்பவரை மக்கள் என்றும் ஆதரிப்பார்கள் அதற்கு சிறந்த எடுத்துகாட்டு அஜித். நீங்கள் எதிர்த்தாலும் அல்லது ஆதரித்தாலும் அதை வெளிப்படையாக செய்தால் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்.
கடைசியாக தளபதி விஜய் அண்ணாக்கு ஒரு சின்ன அட்வைஸ் உங்களுக்கு அரசியல் ஒதுவரதுங்கான அதனால தயவுசெஞ்சு அந்த ஆசைய அடியோட மறந்துடுங்கனா .......
உங்களையே நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு நல்ல வழி காட்டுங்கனா.....
தமிழனின் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ண முடியல அவமானம்
ReplyDeleteஎனக்கு என்ன புரியலன்ன இந்த விஜய் ரசிகர்கள் என்னமோ அரிச்சந்திரன் சொந்தக்காரன் மாதிரியே பேசுறதுதான். எல்லாத்துக்கும் மூல காரணம் விஜய் தந்தையும் அவர் ரசிகர்களும்தான்
ReplyDeleteவிஜய் அரசியலுக்கு வருவது அவரது ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை தான்(என்னையும் சேர்த்து) ஆனால் இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசியலில் மட்டும் அல்ல எந்த துறையிலும் செல்ல உரிமை உள்ளது நண்பரே ....
Deleteநல்ல கதையம்சம் உள்ள படம் யார் நடித்தாலும் ஓடும், அதைவிட்டு இரண்டு மூன்று படங்களை அப்பட்டமாக காப்பியடித்து வியாபாரம் செய்தால் அவருடைய ரசிகர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம், சராசரி ரசிகன் (எந்த நடிகனையும் சாராத) ரசிப்பது கேள்விக்குறியே. சிந்தியுங்கள்.
ReplyDeleteநான் இங்கு கூறியிருப்பது படம் நன்றாக உள்ளது அதை பிறர் நன்றாக இல்லை என்று சொல்கிறார்கள் என்று அல்ல நன்றாக படித்து பாருங்கள் ஒரு தமிழ் நடிகனின் படம் வெளிவராமல் தவித்து கொண்டிருக்கும் உதவி செய்யாவிட்டாலும் பரவ இல்லை ஆனால் இப்படி உபதரம் செய்யாமல் இருக்கலாமே... நான் விஜய் என்று மட்டும் சொல்லவில்லை மற்ற நடிகரின் படம் இப்படி வெளி வராமல் இருந்தாலும் அந்த நடிகனுக்கு சப்போர்ட் பண்ணி தான் எழுதுவேன் அது யாராக இருந்தாலும் சரி....
Deleteஅர்சியலுக்கு வரவேண்டும் என்றால் தைரியம் வேண்டும் சினிமாவில் பன்ச் பேசிவிட்டு நேரில் பம்முவது....ஹா....ஹா...
ReplyDelete"கோவையில் படம் ரிலீஸ் ஆகாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கவலைகிடமாக உள்ள விஜய் ரசிகரை "
ReplyDeleteதற்கொலை முயற்சி செய்த முட்டாளை வீரத்திருமகன், வீர தளபதி என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்வது சரியா ?
ஒரு படம் வரவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட கேவலமான ஒருவனை பற்றி நான் பேச கூட விரும்பவில்லை..
Deleteகமலுக்கு பிரச்சினை வந்த போது இந்த கேவலம் கெட்ட விஜய் எங்கே இருந்தான். வாயை பொத்திகிட்டுதானே இருந்தான்.
ReplyDeleteஇப்போ இவனுக்கு பிரச்சினை என்றால் எவன் வருவான் ? நாய் கூட பக்கத்தில் வராது
mumpu
விஜய் பெயரளவிலாவது கமல் படம் வரும் வரை தன் தலைவா படம் ஷூட்டிங் நடக்காது என்று ஒரு அறிக்கை விட்டார் ஆனால் கமல் அதை கூட செய்யவில்லையே... பிறர் தமக்கு உதவினால் தான் நாம் அவருக்கு உதவ வேண்டும் என்று உலக நாயகன் நினைக்க மாட்டார் என்று நினைத்தேன் அது பொய்யாகிவிட்டது
Deleteஇதே பிரச்னை கர்நாடகாவில் இருந்து வந்த ஒருத்தருக்கு வந்திருந்தாள் உடனே சினிமாவின் சுதந்திரம் பறிக்கடுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும் ஆனால் விஜய் என்றால் வேறு
ReplyDeleteநண்பரே நீங்கள் தலைவா பட பிரச்சனையையும் விஸ்வரூபம் பட பிரச்சனையையும் இணைத்து பேசுவதே தவறு. விஸ்வரூபம் பட பிரச்சனைக்கு யார் காரணம் என்று கமலே வெளிப்படையாக சொன்னார். ஆகவே அவருக்கு பலரும் ஆதரவு கொடுத்தார்கள். இங்கே தலைவா படத்துக்கு யார் பிரச்சனை என்று விஜய் வாயையே திறக்கவில்லை. சமீபத்தில் சன் டீவியில் பேசும்போது கூட, அதை பற்றி அவர் சொல்லவில்லை. அப்படி இருக்க அவருக்கு யாரால் ஆதரவு கொடுக்க முடியும்? எந்த அடிப்படையில் ஆதரவு கொடுக்க முடியும்?
ReplyDeleteவிஸ்வரூபம் பிரச்சனைக்கும் தலைவா பிரச்சனைக்கும் காரணம் ஒரே ஆள் தான்
Deleteஆனால் கமல் பிரச்சனையில் முஸ்லிம் பகடை காயாக பயன் படுத்தப்பட்டார்கள் அதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது. எனவே தான் கமல் அரசியல் விளையாட்டில் எனது முஸ்லிம் சகோதரரர்கள் பகடை காயாக பயன்படுதபடுகிரார்கள் என்று மறை முகமாக சொன்னார் விஜய் அப்படி சொல்வதற்கு கூட காரணம் ஏதும் இல்லை தலைவா படம் தனிப்பட்ட அரசியல் காரனத்தால் மட்டுமே தடை செய்யப்பட்டது
நண்பரே ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். விஜய் அவர்களுக்கும், உங்களுக்கும் ஏன் எனக்கு கூட, தலைவா படம் ஏன் வெளியாகவில்லை என்ற காரணம் தெரியும். பிரச்சனை இப்போது அது இல்லை. ஒரு விஷயத்தில் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து (இந்த விஷயத்தில் விஜய்) ஒரு பேட்டி அல்லது கருத்து வெளிவரவேண்டும். அப்படி வந்தால் மட்டுமே மற்றவர்கள் உதவிக்கு வருவார்கள். நான் பேட்டி என்று மட்டுமே சொன்னேன். உதவி கேட்கவேண்டும் என்று சொல்லவில்லை.
ReplyDeleteவிஸ்வரூபம் படத்தில் வெளிப்படையாகவே கமல் பேட்டி கொடுத்தார். அதனால் பலர் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். இங்கே அப்படி நடக்கவில்லை. கடைசி வரை படம் ஏன் வெளியாகவில்லை என்று விஜய் கூறவே இல்லை. அப்பப்போ அம்மாவின் ஆட்சி சிறந்த ஆட்சி. கண்டிப்பாக படம் விரைவில் வெளிவரும் என்று மட்டுமே கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் யார் உதவ முன் வருவார்கள்? ஒரு வேலை என் படத்தை ஜெ அரசு முடக்குகிறது, ஆகவே தியேட்டரில் வெளியிட தயங்குகிறார்கள் ஆனால் நான் ஜெ அவர்களை தாக்கி இந்த படத்தில் பேசவில்லை என்று ஏதாவது கூறி அதற்காக யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. சும்மா உதவில்லை, உதவவில்லை என்று புலம்புவது சரியல்ல.
விஜய்யும் நீங்கள் சொன்ன கமல் மாதிரி தனது காவலன் படத்திற்கு பிரச்சனை வந்த பொது அதை தைரியமாக சொல்லியவர் தான் ஆனால் அது கலைஞர் ஆட்சியில் இந்த ஆட்சியில் நிலைமை அப்படி இல்லை கலைஞர் ஒரு பிரச்னையை எதிர் கொள்ளும் விதம் வேறு ஜெயலலிதா ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் விதம் வேறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஜெயலிதா எதையுமே ஆரோக்கியமான முறையில் எதிகொல்பவர் அல்ல விஸ்வரூப பிரச்னையில் கலைஞர் வெளியிட்ட அறிக்கைக்கு ஜெயலலிதா செய்த காரியம் அதற்க்கு சான்று
Deleteநண்பரே எனக்கு பொறுமையாக பதில் அளிப்பதற்கு நன்றி. நான் இங்கே கருணாநிதி மற்றும் ஜெ பற்றி மாற்று கருத்து தெரிவிக்கவில்லை. நடிகர் சங்கம் ஏன் விஜய்க்கு உதவவில்லை என்பதற்கே காரணம் சொன்னேன். திரைப்பட சங்கங்கள் அனைத்துமே அரசியல் சார்புடையவையே. ஆளும்கட்சியை சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்பில் இருப்பார்கள். ஏன் திரு எஸ்ஏசி அவர்களே அரசியல் செல்வாக்கால் அதிகாரத்தை கைப்பற்றி போடாத ஆட்டம் இல்லை. இதே ஆட்கள் வேறு ஒரு கட்சி ஆளும்போது எல்லாவற்றையும் மூடிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். (ராம.நாராயணன் இப்போது எங்கே?) அப்படி இருக்க தாமாக முன்வந்து நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வீண் ஆசை. அதையே குறிப்பிட்டேன்.
Delete(ஒரு வேண்டுகோள் WORD VERIFICATION OPTION-ஐ எடுத்து விடுங்கள். அது தேவை அற்றது)
விஜய் இப்போது இவ்வளவோ பிரச்சனைகளை சந்திப்பதற்கு காரணம் எஸ்.ஏ.சி தான் ஆனால் என்ன செய்வது விஜய் இப்போது முன்னணி நடிகராக இருப்பதற்கு காரணமும் எஸ்.ஏ.சி தான் நடிகர் சங்கம் அப்படி இருக்க கூடாது மாற வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா ADIKKAMAL நடிகர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்பது தான் என் ஆசை அது விஜய்க்கு மட்டும் அல்ல வேறு எந்த நடிகராக இருந்தாலும் சரி அவர்களுக்கு உதவ நடிகர் சங்கம் முன் வர வேண்டும்.
Deleteஉங்கள் வேண்டுகோளுக்கு நன்றி கண்டிப்பாக WORD VERIFICATION OPTION-ஐ எடுத்து விடுகிறேன்.
விஜய் என்பவர் தொடர்ந்து ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார். அவர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார், யார் காலை எப்போது வாருவார் என்று யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நபருக்கு உதவி செய்யப்போய், கடைசியில் வீண் வம்பில் மாட்டிக்கொள்ள யாராவது விரும்புவார்களா? திரைத்துறை என்று அமைப்பு ரீதியாக ஒரு செயலை செய்வதற்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. இது தலைவா பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர்க்காரர்களின் தனிப்பட்ட பிரச்சனை. இதில் வேறு யாரும் தலையிட முடியாது. அப்படி நடிகர் சங்கம் தலையிட வேண்டுமானால், திருவாளர் விஜய் அவர்கள் புகார் செய்ய வேண்டும். செய்தாரா? சரி சக நடிகன் என்ற முறையில் உதவிக்கு வரவேண்டும் என்றால் ,..... இதற்கான பதிலை போன கருத்துறையில் படித்து கொள்ளுங்கள். அது சரி ரஜினியின் பாபா பட பெட்டியை தூக்கி கொண்டு ஓடினார்களே, அப்போது விஜய் வாயில் என்ன கொலுக்கட்டையா வைத்திருந்தார்? குசேலன் படத்துக்கு பிரச்சனை செய்தார்களே அப்போது கோமாவில் இருந்தாரா? ஒவ்வொரு தயாரிப்பாளரையும் நெருக்கடியில் தள்ளி, எல்லா பாடங்களையும், சன் பிக்சர்ஸ், ரெட் ஜயண்ட், கிளவுட் நயன் ஆகிய நிறுவனங்கள் ஸ்வாகா செய்தனவே அப்போது என்ன இன்ப சுற்றுலா சென்றுவிட்டாரா?
ReplyDeleteநான் இந்த பிரச்சனையில் ரஜினி விஜய்க்கு உதவியிருக்க வேண்டும் என்று எங்கயும் குறிப்பிடவில்லையே நீங்கள் ரஜினி ரசிகர் என்பதால் ரஜினியை எதற்கு தேவையில்லாமல் இங்கு இழுக்க வேண்டும். அடுத்ததாக இதில் நான் நடிகர் சங்கம் உதவவில்லை என்று கூறியிருக்கிறேன் பிற நடிகர்கள் உதவ வேண்டும் என்று நான் கூறவில்லையே
Deleteநான் ரஜினியை மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை. குறிப்பிட்ட சில பிரச்சனைகள் என்று ரஜினி படங்களை உதாரணமாக சொன்னேன். அவ்வளவே. இந்த காலகட்டத்தில் விஜய் அவர்கள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே போல எஸ்ஏசி அவர்களும் எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் இந்த காலகட்டத்தில் ரஜினி என்பவர் வீழ்ந்துவிட மாட்டாரா என்று மேற்கூறியவர் உள்பட பலபேர் ஆவலாக இருந்தார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Deleteரஜினி என்பவர் எப்போதுமே வீழ்ந்து விட மாட்டார் அவருடன் போட்டி போடுவது வீண் அவர் இந்திய சினிமாவிலேயே மிக உயர்ந்துவிட்டார் இதனை விஜய் சச்சின் படத்தின் போதே உணர்ந்துவிட்டார். அஜித்தும் அதனை உணர்ந்துவிட்டார்.
Delete