Pages

23/01/2013

கண்ணா லட்டுதின்ன ஆசையா வெற்றிக்கு யார் காரணம்?

சந்தானம், பவர் ஸ்டார், சேது, நடித்து பொங்கலுக்கு வந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. பொங்கலுக்கு வந்த சமர், அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களை காட்டிலும் யதார்த்தமாகவும், காமெடியான திரைகதையை கொண்டதாலும் படம் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பொங்கலில் வெளிவந்த படங்களில்  சிறந்த படமாகவும் 2013 ஆம் ஆண்டின் முதல் வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.இது பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா படத்தின் அப்பட்டமான காபி என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.


படம் வந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் படத்தின் வெற்றிக்கு பவர் ஸ்டார் தான் காரணம் என்று சிலரும், சந்தானத்தின் காமெடி தான் என்று சிலரும், இது பாக்கியராஜின்  சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ஏற்கனேவே ஹிட் ஆனா படத்தின் காபி என்பதால் தான் என்று சிலரும் கூறுகின்றனர்.







படத்தின் வெற்றிக்கு பவர் ஸ்டார் தான் காரணம் என்றால் அவர் ஏற்கனவே நடித்த லத்திகாவை யாரும் பார்க்கவில்லைய அது ஏன்? பவர் நடித்தால் ஹிட் ஆகிவிடும் என்றால் அவர் நடித்த லத்திகா ஏன் ஓடவில்லை?(லத்திகவை அவர் சொந்த செலவில் ஓட்டியது வேறு விஷயம் ) இல்லை அப்போது தான் அவர் அறிமுகம் ஆனார் அப்போது அவரை யாருக்கும் தெரியாது அந்த படம் நடித்த பின் தான் அவர் ஹிட் ஆனார் என்று சிலர் சொல்கின்றனர்.
 அப்படியானால் இப்போது அவர் ஹிட் ஆகிவிட்டார் எனவே இனிமேல் அவர் நடிக்கும் படங்கள் ஹிட் ஆனால் அதற்கு அவர் தான் காரணம் என்று சொல்ல முடியும்மா? அல்லது இனிமேல் அவர் நடிக்கும் எல்லாம் படங்களும் ஹிட் ஆகும் என்று சொல்ல முடியுமா?

இந்த படத்தில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தது அதனால் அவரை நடிக்க வைத்தார்கள் மக்களும் அதை ரசித்தார்கள் மற்றபடி கண்ணா லட்டு தின்ன ஆசையவின் வெற்றிக்கு பவர் ஸ்டார் தான் காரணம் என்றும் அவர் இல்லை என்றால் படம் ஹிட் ஆகியிருக்காது என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.






படத்தின் வெற்றிக்கு சந்தானம் தான் காரணம் என்றால் அவர் இதற்கு நுண் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் ஆகியிருக்க வேண்டுமே ஏன் ஹிட் ஆகவில்லை? பல படங்களில் சந்தானம் காமெடி நன்றாக இருந்தும் ஓடாமல் இருந்திருக்கின்றனவே அது எப்படி? இல்லை மற்ற படங்களில் சந்தானம் வெறும் காமடி கேரக்டருக்காக பயன்பட்டிருப்பார் ஆனால் இந்த படம் முழுவதும் நடித்துள்ளார் என்று கூறுகின்றனர். அப்படியானால் இதற்க்கு முன்பு சந்தானம் ஹீரோவாக நடித்த அறை எண 305 இல் கடவுள் ஏன் ஓடவில்லை? அதிலும் சந்தானம் முழுமையாக நடித்திருந்தார் தானே  பின்பு ஏன் ஹிட் ஆகவில்லை.





பாக்யராஜ் சிறந்த எழுத்தாளர் , அனைவரும் பார்க்கும் வண்ணம் திரைகதை எழுதுவதில் சிறந்தவர் என்பது அனைவராலும் ஏற்றுகொள்ள கூடிய உண்மை.
அவர் படத்தை ரீமேக் செய்ததால் தன ஹிட் ஆகிற்று என்று சொன்னால், அவர் இயக்கிய எல்லா படத்தையையும் ரீமேக் செய்தால் இதே போன்று ஹிட் ஆகும் என்று சொல்ல முடியுமா?

ஏற்கனவே ஹிட் ஆகிய பழைய படங்கள் ரீமேக் செய்தால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று கூற முடியாது. சட்டம் ஒரு இருட்டறை, மாப்பிள்ளை, முரட்டுக்காளை, மம்பட்டியான் போன்றவை ஏற்கனவே ஹிட் ஆனா படங்களில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை தான் அவைகள் தோல்வியை தழுவின. அவைகளில் ஒரிஜினல் படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்  தான் ஆனால் அவைகள் ஹிட் ஆகவில்லையே  ஏன்? ஒரு படம் ஹிட் ஆவதற்கு அதில் நடிக்கும் ஹீரோவோ காமெடி நடிகரோ அல்லது அது ஹிட் ஆனா படத்தின் ரீமேக் என்று காரணம் கூற முடியாது. 

படம் ஹிட் ஆவதும் தோல்வி அடைவதும் இயக்குனர் கையில் தான் உள்ளது. நல்ல சோர்வடைய வைக்காத வேகமான திரைக்கதையை இயக்குனர் கொடுத்தாலே அந்த படம் கண்டிப்பாக ஹிட் ஆகிவிடும். கதை என்று ஒன்று இல்லாமல் வேகமான திரைக்கதையை கொண்ட பல படங்கள் ஹிட் ஆகியுள்ளன. எனவே ஒரு படத்தை வெற்றிபடமாக்க மக்களின் ரசனைக்கேற்ப வேகமான திரைகதை அமைத்தாலே போதுமானது. ஒரு படத்தின் வெற்றிக்கு திரைக்கதையை தவிர வேறு ஒன்றும் காரணம் ஆகாது 


3 comments:

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்