Pages

21/01/2013

நிறைவடைந்தது பள்ளி விழா

புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் 13-01-2013, ஞாயிறு அன்று மாணவர்கள் ஒன்று கூடி கொண்டாடும் get to gather நடைபெற இருப்பதாக முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 


அது சிறப்பாக 12 மணியளவில் மாணவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.புனித மிக்கேல் பள்ளியின் ஒரு அறையில் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

                                                         கேக் வெட்டும்பொழுது எடுக்கப்பட்ட போட்டோ

எதற்காக இங்கு அனைவரும் கூடியுள்ளோம் என்று ஒரு மாணவர்கள் கூற மற்ற மாணவர்கள் அதை கவனமுடன் கேட்டனர். வெறும் கெட் டு கெதர் மட்டும் இல்லாது அங்கு ஒரு அறிக்கையும் மாணவர்களால் தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்த விழாவை ஏற்ப்பாடு செய்த மாணவர்கள் ஒரு alumni association ஆரம்பிப்பதாகவும் விருப்பம் உள்ள மாணவர்கள் அதி கலந்துகொண்டு பிறர்க்கு உதவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் சிலர் அதில் சில சந்தேகங்களை கீட்டு தெளிவு பெற்றபின் அதில் தாங்களும் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். இத்தகைய அறிவிப்புகள் முடிந்தபின் ஜோன் என்ற மாணவன் நீயே நீயே என்ற பாடலை பாடினார். மாணவர்கள் அனைவரும் அவர் பாடுவதை அமைதியாக கேட்டு ரசித்ததும், பலர் தங்கள் செல் போனில் அதை பதிவு செய்ததும் இவ்விழாவின் சிறப்பு அம்சம் ஆகும்.அந்த பாடலை பாடிய ஜோன் என்ற மாணவர் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின் மாணவர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி அவற்றை முகத்தில் பூசியும் பகிர்ந்தும் கொண்டாடினர்.பின் மாணவர்களுக்கு அங்கு ஏற்பாடு செய்திருந்த டீ ,பப்ஸ்,மிக்ஸர் போன்றவைகள் சாப்பிடுவதற்கு வழங்கப்பட்டது.பின்னர் நண்பர்கள் குழுவாகவும் தனியாகவும் நின்று போடோக்களை எடுத்து கொண்டனர். வகுப்பு வரியாகவும், நண்பர்களும் வரிசையாக நின்று போட்டோ எடுத்து கொண்டனர்.





விழாவுக்கு வருகை தந்த மாணவர்கள் அனைவருக்கும் alumni association form கொடுத்து அதில் அவர்களின் முகவரி மற்றும் ஈமெயில் ஆகியவைகளை  எழுதி கொடுக்குமாறு கூறப்பட்டது.மாணவர்கள் அவற்றில் தங்கள் விவரங்களை எழுதி திருப்பல் கொடுத்தனர். 
விழா  2 மணியளவில் முடிவடைந்தது.

இந்த விழாவின் ஆரம்பம் முதல் கடைசிவரை உழைத்த அணைத்து மாணவர்களுக்கும், ஆர்வமுடன் பங்கேற்ற அணைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை  தெரிவித்துகொள்கிறோம்.



No comments:

Post a Comment

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்