Pages

13/02/2014

காதல் தவறா?


அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்...



காதல் தமிழரின் பாரம்பரியமாக இருந்துவரும் ஒன்று இதனை  அகநானூறு பாடல்கள் மூலம் அறியலாம். அப்போது காதலிக்கும் ஆன் மகனை காவியதலைவனாகவும் பெண்ணை காவியதலைவியாகவும் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்று காதலிப்பவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது அவர்கள் வாழ்வதற்கே வழி இல்லை. சமீபத்தில் நடந்த இளவரசன் மரணம், வட   இந்தியாவில் காதல் செய்த ஒரு பெண்ணை அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் கற்பழிக்குமாறு தீர்ப்பு விதித்தது போன்றவை அதற்கு சான்று. ஒரு பெண்ணை 13 பேர் சேர்ந்து கற்பழிக்குமாறு தீர்ப்பு சொன்ன அவர்களெல்லாம் ஊர் தலைவர்கள் அல்ல மனிதர்கள் என்றே சொல்லமுடியாது. மிருகத்திற்கு கூட அறிவு என்று ஒன்று இருந்தால் இதை செய்யாது அவர்கள் எல்லாம் மிருகத்தை விட கேவலமானவர்கள். இவர்கள் செய்த இந்த கேவலமான செயலுக்கு மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும்  காலாசாரம் என்ற பெயராலும் நியாயம் சொல்லும் சிலைரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

காதல் நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என்று சில விஷமிகள் சொல்லித்திரிகிறார்கள். பழைய நூல்களிலேயே சிலாகித்து எழுதப்பாட்டிருக்கும் ஒன்று எப்படி திடிரென்று ஏற்புடையது அல்ல என்று மாறிவிடும். இவர்களுக்கு பிடித்திருக்கும் சாதி வெறியும் மத வெறியும் காதல் என்ற ஒன்றரை தவறாக சொல்கிறது. காதல் திருமணங்கள் இவர்களின் போலியான சாதி என்ற கட்டமைப்பை உடைக்க கூடும் அதனாலேயே இவர்கள் காதலை தவாரானது என்று பெற்றோர்களுக்கும் சமுதாயத்தினருக்கும் காட்ட நினைகிறார்கள். அதற்கு சான்றாக மேலும் அவர்கள் சொல்வது காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அப்படியானால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் விவாகரத்து அடைவது இல்லையா? அதற்க்கு யாரை காரணமாக சொல்வது. அடுத்ததாக சொல்வது காதல் என்றாலே பொய்யாக தான் இருக்கிறது எல்லாம் காமத்திற்காக காதலித்து அது முடிந்தவுடன் விட்டுசெல்கின்ரனர். இதில் அடிப்படை ஒன்றை கவனிக்க வேண்டும் ஒரு பெண்ணின் உடல் அழகை பார்த்து ஆசைப்பட்டு அவளை அடைவதற்காக அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றுமே காதல் ஆகாது அது காதல் என்ற பெயரை சொல்லி அவர்கள் செய்யும் நாடகம் அதற்க்கு காதல்பொறுப்பாக  முடியாது அதனால் காதல் தவறு என்று சொல்லமுடியாது. தவறான நோக்கில் ஒரு பெண்ணை மணந்து அவளை காசுக்காக விற்கின்றனர் சிலர் அவர்களின் அந்த கேவல செயலுக்கு திருமணம் என்ற பந்தத்தை  பயன்படுத்துகின்றனர். இதற்காக திருமணம் பொய் தவறானது என்று சொல்லிவிட முடியுமா?


 காதலர் தினத்தன்று காதலர்களை கஷ்டபடுதுவதர்காகவே ஒரு கும்பல் மதத்தின் பெயரையும் கலாச்சாரத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இவர்களின் நோக்கம் தான் என்ன காதலர்களை பார்த்தல் தாலி காட்டுங்கள் என்று சொல்லி வற்புறுத்துகின்றனர். கட்டவில்லை என்றால் அவர்கள் உண்மையான காதல் இல்லையாம். காதலிக்கும் தம்பதிகள் கல்யாணம் எப்போது செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று பல கனவுகளோடு இருப்பார்கள். அதையெல்லாம் விடுத்தது இவர்கள் சொன்ன உடனே தாலி கட்டிக்கொள்ள முடியுமா என்ன? பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்ட இருவர் நிச்சயதார்த்தற்கு அடுத்து வெளியுள் செல்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்களிடம் இவர்கள் நீங்கள் இப்போதே கல்யாணம் செய்துகொள்ளுங்கள் அப்படி செய்தால்  தான் நீங்கள் பழகுவது உண்மை இல்லையென்றால் நீங்கள் போலியாக பழகுகிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னால் அவர்கள் தாலி கட்டுவார்களா கண்டிப்பாக கட்டமாட்டார்கள். அதற்காக நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் பழகுவது போலியாக தான் அவர்கள் திருமணம் செய்யமாட்டார்கள் என்று அர்த்தமா?

பணத்தை பார்த்து தான் காதலிக்கிறார்கள் அது எப்படி உண்மை காதல் ஆகும் என்று சிலர் சொல்கின்றனர். ஒரு பெற்றோர் தன் மகளுக்கு பெண் பார்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்கள் என்ன பணமே இல்லாத ஒரு ஏழை மாபிள்ளையை பார்த்தா திருமணம் செய்து வைகிறார்கள்? ஓரளவு பணம் உள்ளவனா தன மகளை வைத்து காப்பாத்துவான என்று பார்த்து தான் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெற்றர்கள் இதை செய்தால் அது பெண் மீதுள்ள அக்கறை அதையே காதலிக்கும் பெண் செய்தால் அது பொய்யான காதல் என்று அர்த்தமா?

ஒரு மணி நேரத்தில் பெண்ணையோ அல்லது ஆணையோ பார்த்து பிடிகிறதா என்று கேட்டு கல்யாணம் செய்துவைக்கும் இவர்களின் கல்யாண முறை சிறந்தது ஆனால் தன் மனதுக்கு பிடித்த ஒருவருடன் பழகி புரிந்தகொண்டு கல்யாணம் செய்ய நினைக்கும் காதல் தவறானதா? சிறிய வயதில் இருந்து பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்கள் கல்யாணம் மட்டும் தவறாகவா செய்து வைத்துவிட போகிறார்கள் என்று சொல்கிறார்கள். சிறுவயதில் இருந்து உடைகள் படிக்கும் ஸ்கூல் என்று பலவற்றை பெற்றோர் பிள்ளையாய் கேட்காமலேயே செய்யலாம் அது அவனுக்கு சிறந்ததாக இருக்கும் என நினைக்கலாம் ஆனால் அந்த பிள்ளை பள்ளி படிப்பை முடித்து கல்லூரி சேரும்போது கணிதமே சுத்தமாக வராத ஒருவனை நீ கணிதம் எடுத்து படி அப்போது தான் நீ நல்ல நிலைமைக்கு வருவாய் என்று அக்கறையாக சொன்னால் அந்த பிள்ளைகளால் என்ன செய்ய முடியும் பெற்றோருக்காக கணிதம் எடுத்துவிட்டு தோல்வி மேல் தோல்வியை சந்தித்து 3 வருடம் முடிக்கும் கல்லூரி படிப்பை 6 வருடம் படிதுகொண்டிருப்பர்கள். இதே போல தான் என்ன தான் பெற்றோர் நல்ல மணமகன் ம்,மணமகள் என்று பார்த்து கல்யாணம் செய்துவைத்தாலும் வாழப்போவது பிள்ளைகள் தான் அவர்களுக்கு தன் வருங்காலம் பற்றிய கனவு இருக்கும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் அவர்களின் வாழ்கை அமைய வேண்டும்.

என் மகள் ஒருவனை காதலிக்கிறாள் அவன் தவறானவன் அவள் காதலிக்கிறாள் என்பதற்காக அவளை அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக முடியாது தான் அதை உங்கள் பிள்ளைக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்தது அவர்களை கண்டித்து மனம் புண் படும்படி செய்து  உங்களின் நல்ல உள்ளம் அவர்களுக்கு தவறாக தெரிவது போல   நடந்துகொண்டால் தவறான காதலன் நல்லவனாக தெரிவான். அவனை நம்பி உங்கள் பெண்ணின் வாழ்கை சீரழியும் இதில் நீங்கள் பெரும்பங்கு வகிக்கிறீர்கள்.

உலகில் உள்ள அணைத்து நல்ல விஷயங்களிலும் சில தவறுகள் உள்ளன அதனால் அவை தவறானது என்று அர்த்தம் இல்லை. அதே போல தான் காதலும் சிலர் அதன் பெயரை சொல்லி செய்யும் தவறுக்கு காதல் பொறுப்பாகாது. மனிதன் என்றுமே தான் செய்யும் தவறுக்கு மற்றவற்றை குற்றம் சொல்லி பழக்கப்பட்டவன் அதே போல தான் சில நபர்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு காதலை பயன்படுத்தி காதல் மீது பழி சுமத்துகிறார்கள். ஒரு பெண்ணுடம் பலவந்தமாக உறவு கொள்வது கற்பழிப்பு அதே போல ஒரு பெண்ணை ஆசை காட்டி அனுபவித்து விட்டு செல்லும் செயல் காதல் இல்லை கற்பழிப்பு தான் அதற்கும் காதல் என்று அர்த்தம் கர்ப்பித்து ஆண்களின் இச்சையை நியாயபடுத்தி காதல் மீது பழி சுமத்தி பார்க்கிறது ஆணாதிக்க சாதிய மத வெறி பிடித்த சமூகம்.

பெற்றோர்களே  மாற்றார்கள் தங்கள் குடும்பத்தை என்ன நினைப்பார்கள் என்ற போலி கவுரவத்திற்காக உங்கள் பிள்ளைகளின் மனதை சாகடிக்காதீர்கள்.

 காதல் ஆக்கத்தின் அடையாளம் அன்பின் மறுவுருவம் பாசத்தின் பரிமாணம் இனிய வாழ்கையின் வாசல் அதனுள் சென்று அன்போடு வாழ்வோம்.  

 

3 comments:

  1. Nice.. very clear.. thanks for sharing

    ReplyDelete
  2. தம்பி நீச்சல் நல்லது என்பதால் நீச்சலே தெரியாமல் கிணத்துல குதிச்சிடலாமா காதலும் அது போலதான் காதலும நல்லதுதான் ஆனால் உண்மையான காதல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் இருப்பவர்களுக்கு மட்டும் அந்த பக்குவம் இல்லாமல் காதலிப்பது நீச்சல் தெரியாமல் ககிணற்றில் விழுவதற்கு சமம்

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்