Pages

14/02/2014

இது கதிர்வேலன் காதல்- காதலர் தின சிறப்பு


காதலர் தினத்தன்று அணைத்து காதலர்களுக்கும் பரிசளிக்கும் விதமாக ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு படமாக வந்திருகிறது கதிர் வேலன் காதல்.


மதுரையில் காதல் என்றாலே எதிர்ப்பு தெரிவிக்கும் பெரிய மனிதன். அவர் பெண்ணே காதல் செய்து திருமணம் செய்துகொள்ள அவரே அவரை அந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்துகொள்கிறார். அவருடைய மகன் தான் உதயநிதி ஸ்டாலின். காதலே வேண்டாம் என்று ஆஞ்சநேயர் பக்தனாக வாழ்கிறார். ஒரு நாள் காதலித்து வீட்டைவிட்டு சென்ற தனது அக்கா மீண்டும் வீட்டிற்கு வர என்ன பிரச்சனை என்று தனது அக்காவின் கணவரை கேட்க மதுரையில் இருந்து கோயம்பத்தூர் செல்கிறார். அங்கு அவரது நண்பரான சந்தானத்தை காண்கிறார். தனது மாமா வீட்டில் தங்கி என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். அப்போது மாமாவின் எதிர் வீட்டில் இருக்கும் நயன்தாராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சந்தானத்தின் உதவியுடன் அவரை பின் தொடர்கிறார். நயன்தாரா தவறான ஒருவருடன் பழகுவது தெரிந்து அவருக்கு தெரியபடுதுகிறார் பின் நயனுக்கும் இவர் மீது காதல் வருகிறது. உதயநிதி மாமாவிற்கும் நயன்தார குடும்பத்திற்கும் ஏற்கனவே பகை இருக்கிறது. இந்த பகையை மீறி இவர்களின் காதல் ஜெயித்ததா காதலை எதிர்க்கும் இவரது தந்தை சமாதானம் ஆனாரா என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருகிறார்கள். 

இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் காதலை எதிர்க்கும் பெற்றோருக்கும் காதலருக்கும் காதலின் உண்மையை நகைச்சுவையாக விளக்கும் விதத்திலும் அதை காதலர் தினத்தன்று ரிலிஸ் செய்தவகையிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.



உதயநிதி ஸ்டாலின் தனது முந்தைய படத்தை விட சற்று சிறப்பாக செய்துள்ளார். தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து கதை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் இவரின் பலம். நடிக்க வராத சில காட்சிகளில் கண்ணாடி போட்டு சமாளித்துள்ளார் அதையும் இந்த படத்திலேயே  சந்தானம் சொல்லி கலாய்ப்பது ரீலில் காமெடி.

நயன்தாராவுக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளார். ஆனாலும் முகத்திலும் உடல் தோற்றத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. சில காட்சிகளில் பார்பதற்கு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார். அவரது சொந்த வாழ்கையில் சிலரை நம்பி ஏமாந்ததையே இயக்குனர் கதையாக வைத்துள்ளதால் நடிக்க ஒப்புகொண்டார் என்று நினைக்கிறேன்.

சந்தானம் வழக்கம் போல படத்தின் வெற்றிக்கு பெருமளவு துணையாக உள்ளார். ஹீரோ ஹீரோயின் ஒபெநிங்  கட்சியை விட இவரது ஒபெநிங் காட்சிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பும் கைதட்டலும் கிடைத்தது. கண்ணாடியை அடிக்கடி சரி செய்யும் அவரது மேனரிசம் நன்றாக உள்ளது.

உதயின் மாமாவாக நடித்த நபர் அவரது காதலி கல்யாணத்திற்கு முன் இருந்தது கல்யாணத்திற்கு பின் இருந்தது பற்றி கூறும்போதும் தனக்கும் எதிர் வீட்டிலிருக்கும் தனது சித்தப்பாவுக்கும் உள்ள பகையை கூறும் காட்சியிலும் ஈர்கிரார். மயில் சாமி சில காட்சிகள் வந்தாலும் நன்றாக சிரிப்பூட்டுகிறார். 

ஹாரிஸ் வழக்கம்போல தன் வேலையை செய்திருக்கிறார். பாடல்கள் சில நன்றாக  இருந்தாலும் படம் பார்பதற்கு இடையூறாக உள்ளது போல தோன்றியது. 

மொத்தத்தில் காதலர் தினத்தில் காதலர்களுக்கு பரசாக வந்துள்ள காதலர் தின சிறப்பு இந்த கதிர்வேலன் காதல்...

எனது மதிப்பெண்: 55/100

No comments:

Post a Comment

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்