Pages

21/02/2014

அஜித்=காமெடி


இங்கு நான் எழுத இருப்பவை எனக்கு அஜித் பற்றி எஸ்.எம்.எஸ்-ல் வந்த ஜோக்குகள் ஒரு சிலவை எனக்கே தோன்றியவை இதோ உங்களுக்காக எழுதுகிறேன் இதை நகைச்சுவையாக மட்டும் பார்க்கவும். தீவிர அஜித் ரசிகர்கள் இதை படிக்க வேண்டாம். பின் படித்துவிட்டு தலடா,வாலுடா, காலுடா... நு கத்த கூடாது.



அஜித்: நீ வன்னியனு நெனச்சா  நான் வன்னியன் தலித்துன்னு நெனச்சா  தலித்....( வீரம்)

கவுண்டமணி: அப்ப நாங்க ஆம்பளைன்னு நெனச்சா ஆம்பள பொம்பலனு நெனச்சா பொம்பள அலினு நெனச்சா அலியா???... வசனத்த பாரு வெள்ள தலையா.....
 

அஜித்:  money... money...money...(மங்காத்தா)

கவுண்டமணி: நாயே  எடுக்கறது பிச்ச இதுல இங்கலிசு வேறயா?.... பேசுவியா... பேசுவியா...



அஜித்: என்ன தாஆஆண்டி  போகணும்...(வீரம்)

கவுண்டமணி: நாயே  நீ என்ன சாக்கடையா உன்ன தாண்டி போறதுக்கு???





அஜித்: எவ்வளவு டெக்னாலாஜி முன்னேறனாலும் கடைசில கை நாட்டு தானா?(ஆரம்பம்)

கவுண்டமணி: பின்னா  2-வது பெயில் ஆன கை நாட்டு தான் வைக்க சொல்லுவாங்க... வச்சிட்டு போ நாய  வசனம் பேசாத....




விதார்த்: அண்ணன்( அஜித்) மொத தடவ கன்னடிய பார்த்து தலவாருதுடா...(வீரம்)

சந்தானம்: அதெல்லாம்  என்ன மூஞ்சினு அவன்  அத கண்ணாடில பாக்க போறான்...



அஜித்: சார் என்னோட வீரம் படத்த பத்தி சொல்லுங்க?

மோகன்லால்: உங்க படத்துக்கு  வந்தா ஒன்னு ரணமாகி போகணும் இல்ல பொணமாகி போகணும்...

அஜித்:  ???



மோகன்லால்: டேய்... டேய்... நீ நூறு படம் பாத்துருக்கலாம் ஆயிரம் படம் பாத்துருக்கலாம் ஆனா என்கிட்டே ஒரே படம் தான் இருக்கு... அஜித்தோட வீரம் பாருடா பாக்கலாம்....

ரவுடி: ???







அஜித்: வீரம் படத்துல என்னோட டேன்ஸ் நல்ல இருந்துச்சு இல்ல...

விஜய்: ???



கேள்வி: அஜித் நல்லா  நடிச்ச படம் எது?

சிட்டி ரோபோ: hypothetical question...












14/02/2014

இது கதிர்வேலன் காதல்- காதலர் தின சிறப்பு


காதலர் தினத்தன்று அணைத்து காதலர்களுக்கும் பரிசளிக்கும் விதமாக ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு படமாக வந்திருகிறது கதிர் வேலன் காதல்.


மதுரையில் காதல் என்றாலே எதிர்ப்பு தெரிவிக்கும் பெரிய மனிதன். அவர் பெண்ணே காதல் செய்து திருமணம் செய்துகொள்ள அவரே அவரை அந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்துகொள்கிறார். அவருடைய மகன் தான் உதயநிதி ஸ்டாலின். காதலே வேண்டாம் என்று ஆஞ்சநேயர் பக்தனாக வாழ்கிறார். ஒரு நாள் காதலித்து வீட்டைவிட்டு சென்ற தனது அக்கா மீண்டும் வீட்டிற்கு வர என்ன பிரச்சனை என்று தனது அக்காவின் கணவரை கேட்க மதுரையில் இருந்து கோயம்பத்தூர் செல்கிறார். அங்கு அவரது நண்பரான சந்தானத்தை காண்கிறார். தனது மாமா வீட்டில் தங்கி என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். அப்போது மாமாவின் எதிர் வீட்டில் இருக்கும் நயன்தாராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சந்தானத்தின் உதவியுடன் அவரை பின் தொடர்கிறார். நயன்தாரா தவறான ஒருவருடன் பழகுவது தெரிந்து அவருக்கு தெரியபடுதுகிறார் பின் நயனுக்கும் இவர் மீது காதல் வருகிறது. உதயநிதி மாமாவிற்கும் நயன்தார குடும்பத்திற்கும் ஏற்கனவே பகை இருக்கிறது. இந்த பகையை மீறி இவர்களின் காதல் ஜெயித்ததா காதலை எதிர்க்கும் இவரது தந்தை சமாதானம் ஆனாரா என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருகிறார்கள். 

இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் காதலை எதிர்க்கும் பெற்றோருக்கும் காதலருக்கும் காதலின் உண்மையை நகைச்சுவையாக விளக்கும் விதத்திலும் அதை காதலர் தினத்தன்று ரிலிஸ் செய்தவகையிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.



உதயநிதி ஸ்டாலின் தனது முந்தைய படத்தை விட சற்று சிறப்பாக செய்துள்ளார். தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து கதை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் இவரின் பலம். நடிக்க வராத சில காட்சிகளில் கண்ணாடி போட்டு சமாளித்துள்ளார் அதையும் இந்த படத்திலேயே  சந்தானம் சொல்லி கலாய்ப்பது ரீலில் காமெடி.

நயன்தாராவுக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளார். ஆனாலும் முகத்திலும் உடல் தோற்றத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. சில காட்சிகளில் பார்பதற்கு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார். அவரது சொந்த வாழ்கையில் சிலரை நம்பி ஏமாந்ததையே இயக்குனர் கதையாக வைத்துள்ளதால் நடிக்க ஒப்புகொண்டார் என்று நினைக்கிறேன்.

சந்தானம் வழக்கம் போல படத்தின் வெற்றிக்கு பெருமளவு துணையாக உள்ளார். ஹீரோ ஹீரோயின் ஒபெநிங்  கட்சியை விட இவரது ஒபெநிங் காட்சிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பும் கைதட்டலும் கிடைத்தது. கண்ணாடியை அடிக்கடி சரி செய்யும் அவரது மேனரிசம் நன்றாக உள்ளது.

உதயின் மாமாவாக நடித்த நபர் அவரது காதலி கல்யாணத்திற்கு முன் இருந்தது கல்யாணத்திற்கு பின் இருந்தது பற்றி கூறும்போதும் தனக்கும் எதிர் வீட்டிலிருக்கும் தனது சித்தப்பாவுக்கும் உள்ள பகையை கூறும் காட்சியிலும் ஈர்கிரார். மயில் சாமி சில காட்சிகள் வந்தாலும் நன்றாக சிரிப்பூட்டுகிறார். 

ஹாரிஸ் வழக்கம்போல தன் வேலையை செய்திருக்கிறார். பாடல்கள் சில நன்றாக  இருந்தாலும் படம் பார்பதற்கு இடையூறாக உள்ளது போல தோன்றியது. 

மொத்தத்தில் காதலர் தினத்தில் காதலர்களுக்கு பரசாக வந்துள்ள காதலர் தின சிறப்பு இந்த கதிர்வேலன் காதல்...

எனது மதிப்பெண்: 55/100

அண்ணா பல்கலை மாணவர்களால் கௌரவிக்கப்பட்ட இளையதளபதி விஜய்


சென்னை அண்ணா பல்கலைககழகத்தில்  நடந்த Techofes’2014 விழாவில், தலைவா படத்தில் சிறப்பாக நடித்த விஜய்க்கு சிறப்பு விருது கொடுத்து கெளரவிகப்பட்டது. இந்த விருதை பெறுவதற்காக  அண்ணா பல்கலைகழக வந்த விஜய்க்கு மிகச்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


231dbe659fad9400bd39c768a55cba33


பல்கலைக்கழக வளாகத்திற்குள் விஜய் வந்தவுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர். மிகப்பெரிய ரோஜா மாலையை மாணவர்கள் விஜய்க்கு வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் பேசிய விஜய், தலைவா படத்தினால் எனக்கு ஏற்பட்ட பயங்கர மனக்காயத்துக்கு இங்கே மருந்து கிடைத்ததாக கூறினார். ‘தலைவா’ படம் வசூலில் தோல்வி அடைந்தாலும், அந்த படத்திற்காக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் என்னை கெளரவித்தது எப்படி இருக்கிறது என்றால் கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும், மேன் ஆப் த மேட்ச் கிடைத்தது போல எண்ணுகிறேன் என்று கூறினார்.


thanks to http://www.tamizhtv.com

13/02/2014

காதல் தவறா?


அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்...



காதல் தமிழரின் பாரம்பரியமாக இருந்துவரும் ஒன்று இதனை  அகநானூறு பாடல்கள் மூலம் அறியலாம். அப்போது காதலிக்கும் ஆன் மகனை காவியதலைவனாகவும் பெண்ணை காவியதலைவியாகவும் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்று காதலிப்பவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது அவர்கள் வாழ்வதற்கே வழி இல்லை. சமீபத்தில் நடந்த இளவரசன் மரணம், வட   இந்தியாவில் காதல் செய்த ஒரு பெண்ணை அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் கற்பழிக்குமாறு தீர்ப்பு விதித்தது போன்றவை அதற்கு சான்று. ஒரு பெண்ணை 13 பேர் சேர்ந்து கற்பழிக்குமாறு தீர்ப்பு சொன்ன அவர்களெல்லாம் ஊர் தலைவர்கள் அல்ல மனிதர்கள் என்றே சொல்லமுடியாது. மிருகத்திற்கு கூட அறிவு என்று ஒன்று இருந்தால் இதை செய்யாது அவர்கள் எல்லாம் மிருகத்தை விட கேவலமானவர்கள். இவர்கள் செய்த இந்த கேவலமான செயலுக்கு மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும்  காலாசாரம் என்ற பெயராலும் நியாயம் சொல்லும் சிலைரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

காதல் நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என்று சில விஷமிகள் சொல்லித்திரிகிறார்கள். பழைய நூல்களிலேயே சிலாகித்து எழுதப்பாட்டிருக்கும் ஒன்று எப்படி திடிரென்று ஏற்புடையது அல்ல என்று மாறிவிடும். இவர்களுக்கு பிடித்திருக்கும் சாதி வெறியும் மத வெறியும் காதல் என்ற ஒன்றரை தவறாக சொல்கிறது. காதல் திருமணங்கள் இவர்களின் போலியான சாதி என்ற கட்டமைப்பை உடைக்க கூடும் அதனாலேயே இவர்கள் காதலை தவாரானது என்று பெற்றோர்களுக்கும் சமுதாயத்தினருக்கும் காட்ட நினைகிறார்கள். அதற்கு சான்றாக மேலும் அவர்கள் சொல்வது காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அப்படியானால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் விவாகரத்து அடைவது இல்லையா? அதற்க்கு யாரை காரணமாக சொல்வது. அடுத்ததாக சொல்வது காதல் என்றாலே பொய்யாக தான் இருக்கிறது எல்லாம் காமத்திற்காக காதலித்து அது முடிந்தவுடன் விட்டுசெல்கின்ரனர். இதில் அடிப்படை ஒன்றை கவனிக்க வேண்டும் ஒரு பெண்ணின் உடல் அழகை பார்த்து ஆசைப்பட்டு அவளை அடைவதற்காக அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றுமே காதல் ஆகாது அது காதல் என்ற பெயரை சொல்லி அவர்கள் செய்யும் நாடகம் அதற்க்கு காதல்பொறுப்பாக  முடியாது அதனால் காதல் தவறு என்று சொல்லமுடியாது. தவறான நோக்கில் ஒரு பெண்ணை மணந்து அவளை காசுக்காக விற்கின்றனர் சிலர் அவர்களின் அந்த கேவல செயலுக்கு திருமணம் என்ற பந்தத்தை  பயன்படுத்துகின்றனர். இதற்காக திருமணம் பொய் தவறானது என்று சொல்லிவிட முடியுமா?


 காதலர் தினத்தன்று காதலர்களை கஷ்டபடுதுவதர்காகவே ஒரு கும்பல் மதத்தின் பெயரையும் கலாச்சாரத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இவர்களின் நோக்கம் தான் என்ன காதலர்களை பார்த்தல் தாலி காட்டுங்கள் என்று சொல்லி வற்புறுத்துகின்றனர். கட்டவில்லை என்றால் அவர்கள் உண்மையான காதல் இல்லையாம். காதலிக்கும் தம்பதிகள் கல்யாணம் எப்போது செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று பல கனவுகளோடு இருப்பார்கள். அதையெல்லாம் விடுத்தது இவர்கள் சொன்ன உடனே தாலி கட்டிக்கொள்ள முடியுமா என்ன? பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்ட இருவர் நிச்சயதார்த்தற்கு அடுத்து வெளியுள் செல்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்களிடம் இவர்கள் நீங்கள் இப்போதே கல்யாணம் செய்துகொள்ளுங்கள் அப்படி செய்தால்  தான் நீங்கள் பழகுவது உண்மை இல்லையென்றால் நீங்கள் போலியாக பழகுகிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னால் அவர்கள் தாலி கட்டுவார்களா கண்டிப்பாக கட்டமாட்டார்கள். அதற்காக நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் பழகுவது போலியாக தான் அவர்கள் திருமணம் செய்யமாட்டார்கள் என்று அர்த்தமா?

பணத்தை பார்த்து தான் காதலிக்கிறார்கள் அது எப்படி உண்மை காதல் ஆகும் என்று சிலர் சொல்கின்றனர். ஒரு பெற்றோர் தன் மகளுக்கு பெண் பார்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்கள் என்ன பணமே இல்லாத ஒரு ஏழை மாபிள்ளையை பார்த்தா திருமணம் செய்து வைகிறார்கள்? ஓரளவு பணம் உள்ளவனா தன மகளை வைத்து காப்பாத்துவான என்று பார்த்து தான் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெற்றர்கள் இதை செய்தால் அது பெண் மீதுள்ள அக்கறை அதையே காதலிக்கும் பெண் செய்தால் அது பொய்யான காதல் என்று அர்த்தமா?

ஒரு மணி நேரத்தில் பெண்ணையோ அல்லது ஆணையோ பார்த்து பிடிகிறதா என்று கேட்டு கல்யாணம் செய்துவைக்கும் இவர்களின் கல்யாண முறை சிறந்தது ஆனால் தன் மனதுக்கு பிடித்த ஒருவருடன் பழகி புரிந்தகொண்டு கல்யாணம் செய்ய நினைக்கும் காதல் தவறானதா? சிறிய வயதில் இருந்து பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்கள் கல்யாணம் மட்டும் தவறாகவா செய்து வைத்துவிட போகிறார்கள் என்று சொல்கிறார்கள். சிறுவயதில் இருந்து உடைகள் படிக்கும் ஸ்கூல் என்று பலவற்றை பெற்றோர் பிள்ளையாய் கேட்காமலேயே செய்யலாம் அது அவனுக்கு சிறந்ததாக இருக்கும் என நினைக்கலாம் ஆனால் அந்த பிள்ளை பள்ளி படிப்பை முடித்து கல்லூரி சேரும்போது கணிதமே சுத்தமாக வராத ஒருவனை நீ கணிதம் எடுத்து படி அப்போது தான் நீ நல்ல நிலைமைக்கு வருவாய் என்று அக்கறையாக சொன்னால் அந்த பிள்ளைகளால் என்ன செய்ய முடியும் பெற்றோருக்காக கணிதம் எடுத்துவிட்டு தோல்வி மேல் தோல்வியை சந்தித்து 3 வருடம் முடிக்கும் கல்லூரி படிப்பை 6 வருடம் படிதுகொண்டிருப்பர்கள். இதே போல தான் என்ன தான் பெற்றோர் நல்ல மணமகன் ம்,மணமகள் என்று பார்த்து கல்யாணம் செய்துவைத்தாலும் வாழப்போவது பிள்ளைகள் தான் அவர்களுக்கு தன் வருங்காலம் பற்றிய கனவு இருக்கும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் அவர்களின் வாழ்கை அமைய வேண்டும்.

என் மகள் ஒருவனை காதலிக்கிறாள் அவன் தவறானவன் அவள் காதலிக்கிறாள் என்பதற்காக அவளை அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக முடியாது தான் அதை உங்கள் பிள்ளைக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்தது அவர்களை கண்டித்து மனம் புண் படும்படி செய்து  உங்களின் நல்ல உள்ளம் அவர்களுக்கு தவறாக தெரிவது போல   நடந்துகொண்டால் தவறான காதலன் நல்லவனாக தெரிவான். அவனை நம்பி உங்கள் பெண்ணின் வாழ்கை சீரழியும் இதில் நீங்கள் பெரும்பங்கு வகிக்கிறீர்கள்.

உலகில் உள்ள அணைத்து நல்ல விஷயங்களிலும் சில தவறுகள் உள்ளன அதனால் அவை தவறானது என்று அர்த்தம் இல்லை. அதே போல தான் காதலும் சிலர் அதன் பெயரை சொல்லி செய்யும் தவறுக்கு காதல் பொறுப்பாகாது. மனிதன் என்றுமே தான் செய்யும் தவறுக்கு மற்றவற்றை குற்றம் சொல்லி பழக்கப்பட்டவன் அதே போல தான் சில நபர்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு காதலை பயன்படுத்தி காதல் மீது பழி சுமத்துகிறார்கள். ஒரு பெண்ணுடம் பலவந்தமாக உறவு கொள்வது கற்பழிப்பு அதே போல ஒரு பெண்ணை ஆசை காட்டி அனுபவித்து விட்டு செல்லும் செயல் காதல் இல்லை கற்பழிப்பு தான் அதற்கும் காதல் என்று அர்த்தம் கர்ப்பித்து ஆண்களின் இச்சையை நியாயபடுத்தி காதல் மீது பழி சுமத்தி பார்க்கிறது ஆணாதிக்க சாதிய மத வெறி பிடித்த சமூகம்.

பெற்றோர்களே  மாற்றார்கள் தங்கள் குடும்பத்தை என்ன நினைப்பார்கள் என்ற போலி கவுரவத்திற்காக உங்கள் பிள்ளைகளின் மனதை சாகடிக்காதீர்கள்.

 காதல் ஆக்கத்தின் அடையாளம் அன்பின் மறுவுருவம் பாசத்தின் பரிமாணம் இனிய வாழ்கையின் வாசல் அதனுள் சென்று அன்போடு வாழ்வோம்.  

 

10/02/2014

இளையதளபதிக்கு கிடைத்த பெருமை

இன்றைய இளைஞர்களுக்கு மிக பிடித்தமான ஒன்று பேஸ்புக் இணையதளம். உலக அளவில் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இத்தகைய பேஸ்புக்கில் நம் இளையதளபதி விஜய் அவர்களுக்கு சிறப்பான  அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 சினிமா பிரபலங்கள் எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தால் நன்றாகவா இருக்கும்..? கூடிய சீக்கிரமே ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வமான கணக்கை (official page) விஜய்யும் துவங்கி விடுவார் என்றுதான் தோன்றுகிறது.

ஆதாரம் இல்லாமல் சும்மா செய்திக்காக சொல்லவில்லை. இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக்கின் வருடாந்திர நிறைவு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொண்டிருக்கிறார் விஜய்.

எத்தனையோ முன்னணி சினிமா பிரபலங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்தாலும், தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக ஃபேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் பெருமை பேஸ்புக் வரை தெரிந்திருப்பது மகிழ்ச்சிதான். 


புகைப்படங்கள் உங்களுக்காக...







08/02/2014

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?



தமிழ் சினிமாவில் இன்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான். ரஜினி ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு மட்டும் உரிய பட்டம் இல்லை எனக்கு அடுத்து இன்னொருவர் வருவார் என்று சொன்னதிலிருந்து அடுத்த இடத்தில இருக்கும் நடிகர்களுக்கு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. எத்தனை நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று நினைத்தாலும் ரசிகர்கள் மனதில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நினைப்பது இரு நடிகர்களை தான். அந்த நடிகர்கள் யார் என்று நான் சொல்ல தேவையில்லை உங்களுக்கே தெரியும். விஜய் மற்றும் அஜித் தான் அந்த நடிகர்கள்.



அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்றால் முந்தய சூப்பர் ஸ்டாரிடம் இருக்கும் சில நற்பண்புகள் திறமைகள் இருக்க வேண்டும் மற்றும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன அவைகளும் இருக்க வேண்டும். அந்த நற்பண்புகள், திறமைகள் மற்றும் விதிமுறைகள் விஜய் மற்றும் அஜித்திடம் இருக்கிறதா என்று பாப்போம்.

முதல் தகுதி:

தான் நடிக்கும் படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் மறந்தும் கூட நடிக்க முயற்சி செய்யகூடாது.

இந்த தகுதி விஜய் மற்றும் அஜித்திடம் நூறு சதவிதம் உள்ளது. 

விஜய் தன படங்களில் பறந்து காட்டுவார். அஜித் தன படங்களில் நடந்து காட்டுவார். ஆனால் நடிப்பு என்பது இருவருக்கும் ஒவ்வாமை தான்.

இரண்டாவது தகுதி:

தான் என்ன பேசினாலும் செய்தாலும் அது சரி தான் என்று பிறரிடம் சண்டையிடும்   பெருமளவு ரசிகர்களை கொண்டிருக்க வேண்டும்.


இந்த விஷயத்தில் விஜயும் அஜித்தும் ரஜினியை விட கொடுத்து வைத்தவர்கள். இவர்களுக்காக உழைபதற்கு என்று பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஒரு கூட்டமே இருக்கிறது. தமிழர் பண்பாடு என்ன என்பதை விஜய் அஜித் ரசிகர்கள் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் போடும் ஸ்டேட்டஸ் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மூன்றாவது தகுதி:   

அரசியலுக்கு வருகிறேன் என்றும் சொல்லகூடாது வர மாட்டேன் என்றும் சொல்ல கூடாது. கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் ஆனால் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் என்று ரசிகர்களை குழப்ப நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய்க்கு வெகு நாட்களாகவே உள்ளது. நான் அரசியலுக்கு வரவில்லை ஆனால் அரசியலில் ஆர்வம் உள்ளது என்று ரசிகர்களை உசுபேத்துவது விஜயின் வழக்கம். அஜித்தும் வீரம் படத்தில் ஆசையில் வரல ஆத்திரத்தில் வந்திருக்கேன் என்று தன் பங்குக்கு கொளுத்திபோட்டுவிட்டார். 

நான்காவது தகுதி:

தனக்கு விளம்பரம் பிடிக்காது எளிமையாக இருப்பது தான் பிடிக்கும் என்பது போல் இரண்டு நாள் கழுவாத முகத்தோடும் ஒரு வரம் துவைக்காத துணி ஒன்றையும் அணிந்து அணைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவேண்டும். ஆனால் இமைய மலை செல்லும்போது மட்டும் தன்னுடன் ஒரு புகைப்படகாரரை கூட்டிசென்று அங்கு தான் குகையில் இறங்குவது ஏறுவது என்று பல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட வேண்டும்.

இந்த தகுதி விஜய் அஜித் இருவருக்கும் கிடையாது. விஜய் தனக்கு விளம்பரம் வேண்டும் என்பது போலவே அனைத்தையும் செய்வார். அஜித் தனக்கு விளம்பரமே வேண்டாம் என்று எந்த நிகழ்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். ஆனால் அம்மா அழைக்கும் விழா மட்டும் அஜித்திற்கு விழாவாக தெரியாது போல தவறாமல் கலந்துகொள்வார்.

ஐந்தாவது தகுதி:

தனது படம் ரிலிஸ் ஆகும்போது மட்டும் அரசியலுக்கு வருவேன் என்று எதாவது பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்து படத்தை விளம்பர படுத்த வேண்டும். மற்ற நாட்களில் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கவேண்டும். கேட்டால் எளிமை என்று சொல்லிகொள்ளவேண்டும்.

இந்த விஷயத்தில் விஜய்யை விட அஜித் அதிக தகுதி உடையவர் மற்ற நாட்களில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது ஆனால் படம் ரிலிஸ் ஆகும் சமயம் வந்துவிட்டால் பைக்கை எடுத்துக்கொண்டு வெளிவந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுப்பது அல்லது மொட்டை அடித்துக்கொண்டு போஸ் கொடுப்பது போன்று சில பப்ளிசிட்டி ஸ்டன்ட் களை செய்வார்.

ஆறாவது தகுதி:

நிஜ வாழ்வில் தான் ரொம்ப நல்லவன் போல காட்டிகொள்ள வேண்டும் ஆனால் சினிமாவில் தவாறன பாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு குடி, சிகரட், போன்ற மிக நல்ல பழக்கங்களை கற்று தர வேண்டும்.

இந்த தகுதி அஜித்திற்கு மட்டும் தான் உள்ளது என்பதை தனது மங்காத்த மூலம் உலகறிய எடுத்து சொல்லிவிட்டார் வெங்கட் பிரபு.

ஏழாவது தகுதி:

தனக்கு இணையாக உள்ள போட்டி நடிகர் தனக்கு நெருக்கமான நண்பர் என்பது போல காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் அவருக்கு சிறந்த விருது அல்லது அவரை பெருமை படுத்தும் விதமாக எதாவது நடந்தால் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய் அஜித்திற்கு சுத்தமாக கிடையாது. இருவரும் மோதிகொள்ளும்போது வசனங்கள் மூலம் நேரடியாக எதிரி என்று காட்டிகொண்டார்கள் இணைந்த போது இருவரும் பரஸ்பர அன்பு காட்டிவருகிறார்கள்.

எட்டாவது தகுதி:

தான் நடிக்கும் படங்களில் லாஜிக் என்று ஒன்றை எதிர்பார்கவே கூடாது என்ற அளவுக்கு ரசிகர்கள் முதல் படம் பார்க்கவரும் அனைவரையும் பழக்கபடுத்தி வைத்திருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய்க்கு அதிகமாகவே உள்ளது தனது பெரும்பாலன படங்களில் இதை அவர் மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறார். அஜித் எப்போதாவது இந்த வேலையை தனது ஒரு சில படங்களில் செய்வார்.

ஒன்பதாவது தகுதி:

சினிமாவில் நன்றாக நடிப்பதற்கு விருது என்று ஒன்று உள்ளது ஆனால் அப்படி ஒன்று உள்ளதா என்று கேட்கும் அளவிற்கு நல்ல மட்டமான மசாலா படங்களை தரவேண்டும். விருது எல்லாம் எவனுக்கு வேண்டும் எனக்கு என் பாதாம் ஹிட் ஆகி காசு வந்தால் போதும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் நான் நல்ல கமெர்சியல் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்று மறைமுகமாக சொல்லவேண்டும்.

இந்த விஷயத்தில் விஜய் இதை வெளிப்படையாக சொல்லிவிட்டு மசாலா படங்களை தருவார் ஆனால் அஜித் தனது பேட்டிகளில் நான் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு அதே மசாலா படங்களை தான் தருவார். ஆனால் இருவரின் ரசிகர்களும் அந்த மொக்கையை சூப்பர்  என்று சொல்லும் அளவிற்கு ஹிட் படமாக மாற்றுவார்கள்.

பத்தாவது தகுதி:

ஒவ்வொரு பட வெற்றியின் போதும் இந்த வெற்றிக்கு என் ரசிகர்கள் தான் காரணம் அவர்கள் தான் என் உயிர் ரசிகர்களுக்காக நான் எதையும் செய்வேன் என்று சொல்லி ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு கடைசிவரை ஒன்றுமே செய்யகூடாது.

இந்த தகுதி விஜய் அஜித் இருவருக்கும் கிடையாது. விஜய் ரசிகர்களை கவரும் வண்ணம் எனக்கு எல்லாமே ரசிகர்கள் தான் என்று சொன்னாலும் அதனை நிருபிக்கும் வண்ணமாக அவ்வப்போது ரசிகர்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அஜித் அப்படியே மாறுபட்டவர் என் படம் பிடித்தால் பாருங்கள் மற்றபடி எனக்காக நீங்கள் உங்கள் வாழ்கலையை வீணாக்கி என் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள் என்று சொல்லிபார்த்தார் கடைசியில் ரசிகர்கள் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் ரசிகர் மன்றத்தை கலைத்தேவிட்டார்.

எப்படி பார்த்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி விஜய் அஜித் இருவருக்கும் சொல்லும் அளவில் இல்லை. இவர்களுக்கு மட்டும் இல்லை மற்ற நடிகர்களுக்கும் கூட மேற்கூறிய நல்ல??? தகுதிகள் இருபதாக தெரியவில்லை எனவே இந்த அணைத்து சிறப்பு??? தகுதிகளையும் கொண்டிருக்கும் ஒரே நபர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பதை மிக பணிவுடன் தெரிவித்துகொள்வதில் மகிழிச்சியடைகிறேன்.