நான் இப்போது விஜய் ரசிகனாக இருந்தாலும் எனக்கு முதலில் அறிமுகமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். நான் சிறு வயதாக இருக்கும்போது நான் அடிகடி வீட்டில் இல்லாமல் வெளியே சென்றுவிடுவேன். அதனால் என் அம்மா என்னை வீட்டில் இருக்க வைப்பதற்காக ரஜினி படம் ஓடுகிறது பார் என்று சொல்லி எதாவது படத்தை காட்டுவார்கள் நானும் பார்த்துகொண்டு இருப்பேன். என்னம்மா ரஜினி இன்னும் வரலன்னு கேட்டால் இப்போ வருவார் பாருடான்னு சொல்வாங்க நானும் இப்ப வருவார் அப்ப வருவார்னு பார்த்து பார்த்து முழு படத்தையும் பார்த்துவிடுவேன். என்னம்மா படமே முடிந்துவிட்டது இன்னும் வரலன்னு கேட்டால் நீ ரஜினி படம்னு சொன்னால் தான் வீட்டில் இருப்பாய் அதனால் சொல்லி பார்க்க வைத்தேனு சொல்வாங்க அப்போது எனக்கு அவர்கள் மீது கோபம் வரும் ஆனால் ஒன்றும் பண்ண முடியாது அம்மா அல்லவா அவர்கள்....
அப்படிப்பட்ட ரஜினியின் படங்களை பற்றிய என்னுடைய எண்ணங்களை பதிவு செய்ய நினைத்தான் விளைவு தான் இது. இனி பதிவுக்கு போகலாம்...
முதன் முதலில் நான் பார்த்த ரஜினி படம்: மனிதன்
முதன் முதலில் நான் தியேட்டரில் பார்த்த ரஜினி படம்: அருணாச்சலம்
எனக்கு பிடித்த ரஜினி படம்: பாட்ஷா
எனக்கு பிடிக்காத ரஜினி படம்: ஸ்ரீ ராகவேந்திரா
ரஜினிக்காக மட்டுமே பார்த்த படம்: தளபதி
ரஜினி இருந்தும் பார்க்க முடியாத படம்: பாபா
ரஜினி ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: குசேலன்
ரஜினி இந்த படத்தை ஏன் நிராகரித்தார் என்று நினைத்த படம்: முதல்வன்
நல்லவேளை இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: வரலாறு
ரஜினி இந்த படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த படம்: இந்தியன்
ரஜினியின் ஸ்டைலை அதிகம் ரசித்த படம்: படையப்பா
ரஜினி படத்தில் பிடித்த பாடல்: காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே
எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத முதல் ரஜினி படம்: கோச்சடையான்
அடுத்த பதிவில் விஜய் படங்களை பற்றி பார்க்கலாம்.
ohh varalaru unaku mokka padama'pa ne entha posta potalum athula ajitha pathi yethavdhu koluthi potutey erukaye unka apdi tha elutha varuma pa....pls suthi valaikama neradiya answer panu .... ungita aparam ajith perusa vijay perusanu enaku sanda poda mudiyathu...unakela raja tha correct ana avarkitayum ne ithu varaiku keta kelviku straight ah answer kuduthathey ila
ReplyDeleteஎன்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்து கொள்ளாமல் உளறுவது அஜித் ரசிகர்களின் வாடிக்கை அதை நீங்கள் இன்னொரு முறை நிருபித்துவிட்டீர்கள். வரலாறு நல்ல படம் இல்லை என்று நான் சொல்லவில்லை. அந்த படத்தில் ரஜினி அந்த பெண்மை கலந்த வேடம் போட்டு அந்த மாதிரி நடந்திருந்தால் அவருக்கு நன்றாக இருந்திருக்காது அதை அவரே புரிந்து வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அதை தான் நான் இங்கு சொல்லியிருக்கிறேன் வரலாறு நல்ல படமா நல்லா இல்லாத படமா என்ற விஷயத்தை பற்றி நான் இங்கு பேசவில்லை. என்னுடைய எத்தனை கமண்டுக்கு ராஜா எதுமே சொல்லாமல் விட்டிருக்கிறார் அதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாது ஏன் என்றால் அஜித் ரசிகர் அல்லவா நீங்கள்....
Deleteok first questionku answer othukara....rajaku neenga straightana answer pani paathathilanu tha na soli eruka...you know what i mean...example vijay sura mokka padama ilayanu keta ungaloda answer enava eruku....billa 2 atha vida mokkanu soluveenga intha mari answer tha ungita varuthey thavara aama sura mokka thanu direct answer varaveymatanguthey
Deleteதம்பி ரஜினிக்கு நளினமாக நடிக்க தெரியாதுன்னு உனக்கு யார் சொன்னது வரலாறு எல்லாம் வருவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னரே பில்லா படத்தில் ஏறக்குறைய அதே போல நளினமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நீ சிறுவன் என்பதால் அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கு தெரிந்து ஒரு நடிகர் நடித்து வரலாறு சகிக்க முடியாத அளவுக்கு கேவலமாக இருந்திருக்கும் என்றால் அது வெஜினாதான் அந்த கிராப் வைத்த தலையோடு வெஜினாவை ஒரு நிமிஷம் யோசிச்சு பாரேன் நீயே கெக்கே பிக்கேன்னு சிரிப்ப
Deleteதம்பி உன்னோட எந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை கொஞ்சம் சொல்லு
Deleteகையை பிடிச்சு இழுத்தியா டைப்பிள் நீ திரும்ப திரும்ப ஒரே கேள்வியை ரிப்பீட் செய்தால் ஒவ்வொரு முறையும் விளக்கமாக பதில் சொல்ல நான் வெட்டி பய இல்லை தம்பி
\\ok first questionku answer othukara\\
Deleteஅதிசயம் ஒரு அஜித் ரசிகர் முதல் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதெல்லாம் கின்னஸ் ல எழுதுங்க...
பில்லா 2 தமிழின் சிறந்த படம் என்று ராஜா காமெடி செய்ததை போன்று நான் எங்கயாவது சுறா நல்ல படம் என்று சொல்லியிருகேனா என்று சொல்லுங்கள்.
ரஜினி பில்லா நடிக்கும்போது அவரிடம் இருந்த வயது வேகம் வேறு வரலாறு வேண்டாம் என்று அவர் மறுத்த பொது அவரின் வயதும் வேகமும் வேறு இப்போது தனக்கு இது செட் ஆகாது என்று தான் அவரே அதை மறுத்தார். அப்பறம் பழைய பில்லா படத்தில் அவரது பெண்மை கலந்த நடிப்பு அவ்வளவு செம்மையானதாக இருந்துவிட வில்லை. உதாரணத்திற்கு அஜித் தன் வரலாறு படத்தில் தன் கண்ணிலேயே தன் வேடத்தை மற்றவர்களுக்கு புரியவைக்கும் அளவுக்கு அவரது கண்ணசைவுகள் நளினம் ஆகியவை அமைந்திருக்கும் ஆனால் ரஜினியால் இந்த வயதில் அது முடியாது. அவரது ரசிகர்களும் அதை எற்றுகொண்டிருக்க மாட்டார்கள்.
Deleteஒரு படத்தின் வசுலை சொல்வது எப்படி சாத்தியம் என்று கேட்டீர்கள் அதற்கு நான் பதில் சொல்லியிருந்தேன். அதற்கு நீங்கள் எந்த கமெண்டும் போடவில்லை. நான் உங்களின் எதோ கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்று சொன்னீர்கள் என்ன கேள்வி என்று கேட்டேன் அதற்கும் பதில் இல்லை. இன்னும் சில இருக்கிறது.
Delete//அதிசயம் ஒரு அஜித் ரசிகர் முதல் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதெல்லாம் கின்னஸ் ல எழுதுங்க...//
Deletevijay rasigargal enaikumey intha recorda break panamateenga.....athu therinja vishayam thana
விஜய் ரசிகர்கள் உண்மையை ஒப்புகொள்வது ஒரு சாதனையாக கருதப்படாது. அது சாதரணமாக நடக்கும் ஒன்று தான்.
Deleteஎன்னது வரலாறு வாய்ப்பை ரஜினி நிராகரித்தாரா? இது குறித்து எந்த செய்தியுமே இல்லையே? உங்களுக்கு எப்படி தெரியும்?
ReplyDeleteenakum doubt erunthuchu... yethuvum theriyama sola venanu tha vituta boss..ithunala tha sona ajitha insult panrakuney ela aritclesum elutharaapdi iavru....
Deleteவரலாறு விமர்சனத்தில் சிலர் இது முதலில் ரஜினிக்காக எழுதப்பட்டது பின் அஜித் நடித்தார் என்று குறிப்பிட்டிருந்தனர். வரலாறு படம் ரிலிஸ் ஆகும்போது சில அஜித் ரசிகர்கள் இது ரஜினிக்காக ரவிகுமார் உருவாக்கிய கதை அது தனக்கு செட் ஆகாது அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என ரஜினி கூறினார் அதனால் இதில் அஜித் நடித்தார் என்று என்னிடம் சொன்னார்கள்.
Deleteunga frnds sonatha vachu itha solareengala ila yethavadhu paper or sitela review padichutu solreengala apdi,second'nu ungalala proof kuduka mudiyuma na unmaya therinjuka tha kekara...nanum ajith rasigan tha aana neenga sona mari na yethuvum padikala engita yarum apdi sonathila ipa ungala thavara............
Deletehttp://1padam.adadaa.com/2006/10/27/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-godfather/
Deleteமேலே உள்ள லிங்கில் படித்தேன். எனது அஜித் ரசிக நண்பர்களும் சொன்னார்கள்..