Pages

21/03/2014

அஜித் படங்களும் நானும்


நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித் என்ற பெயர் தான் என் காதுகளில் முதலில் ஒலித்த பெயர் அதற்கு பின்னர் தான் விஜய் என்ற பெயர் ஒலித்தது. அதற்கு காரணம் உண்டு எனது மாமா தீவிர அஜித் ரசிகர் அதனால் அவரது வீட்டில் அடிகடி அஜித் பாடல்கள் கேட்கும். அமர்க்களம் பாடல்களை நான் சிறு வயதில் பல தடவை கேட்டிருக்கிறேன். அதிலும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் இப்போதும் எனக்கு பிடித்த ஒன்று அந்த பாடலில் எஸ்.பி.பி குரலை விடவும் இன்னொரு ஸ்பெஷல் எனக்கு என்னவென்றால் அந்த பாடல் படமாக்கப்பட்டது எங்கள் ஊர் செஞ்சியில் உள்ள ராஜா கோட்டையில் தான். அது செஞ்சிகோட்டை  என்றும் அழைக்கப்படும்.

 இப்படியாக அஜித்தின் புது படம் எது வந்தாலும் நான் பார்க்கும் வாய்ப்பு என் மாமா மூலம் ஏற்ப்படும். அது ஏனோ எனக்கு அஜித்தின் படங்கள் பெரும்பாலும் பிடிக்காமல் போயவிட்டன அதற்கு காரணம் நான் முதலில் பார்த்த அஜித் படங்கள் ஜனா, ஜி, ராஜா, ஆஞ்சநேயா போன்ற மொக்கை படங்களை தான். பிறகு தான் காதல் கோட்டை வாலி போன்ற படங்களை பார்க்க முடிந்தது ஆனால் என்னுடைய முதல் அஜித் பட அனுபவங்கள் அவற்றை அஜித் பக்கம் சாயாமல் வைத்திருந்தது. நான் விஜய் ரசிகனாக மாறியதற்கு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களை முதலில் பார்த்ததனால் கூட இருக்கலாம்.

நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித்தின் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.





நான் பார்த்த முதல் அஜித் படம்: அமர்க்களம்

எனக்கு பிடித்த அஜித் படம்: பில்லா

எனக்கு பிடிக்காத அஜித் படம்: ரெட்

முதன் முதலில் தியேட்டரில் பார்த்த அஜித் படம்: பில்லா

கடைசியாக பார்த்த அஜித் படம்: வீரம்

இந்த படம் ஏன் ஓடவில்லை என்று நினைத்த அஜித் படம்: கிரீடம்

இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த அஜித்  படம்: ஆரம்பம்

அஜித் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: ஏகன்

அஜித்  ஏன் இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: கஜினி

அஜித்தின் ஸ்டைலை ரசித்த படம்: பில்லா

அஜித் படத்தில் பிடித்த பாடல்: ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்.

6 comments:

  1. //அது செஞ்சி
    கொட்டை என்றும் அழைக்கப்படும்.//

    enna "கொட்டை" yaa?

    "இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த அஜித் படம்: ஆரம்பம்"

    this is too much....

    "அஜித் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: ஏகன்"

    this to too too much...

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் எழுத்து பிழையாகிவிட்டது இப்போது மாற்றிவிட்டேன்.

      Delete
    2. தம்பி விஜய் ரசிகனான உனக்கு ஏகனில் அஜித் ஏன் நடித்தார் என்று வருத்தம் என்னை போன்ற வெஜினா ரசிகர்களுக்கு விஜய் ஏன் தபாங் ரீமேக்கில் நடிக்கவில்லை என்று வருத்தம் அப்படி ஒரு படம் வந்திருந்தால் அது சுறா வில்லு தலைவா ஜில்லா இதெல்லாம் எங்களுக்கு கொடுத்த டைம்பாஹைஸ விட பல மடங்கு சிறந்த டைம்பாஸாகஇருந்திருக்கும் மிஸ் ஆயிடுச்சி

      Delete
    3. தபாங் இந்தியில் மிக பெரிய வெற்றி பெற்றதற்கும் தமிழில் படு தோல்வி அடைந்ததற்கும் சரியான காரணங்களை சற்று ஆழமாக சிந்தித்து பார்த்துவிட்டு பின்னர் பேசவும்.

      Delete
  2. தம்பி கில்லி துப்பாக்கி எல்லாம் ஹிட் ஆகும் போது ஆரம்பம் ஹிட் ஆகாதா

    ReplyDelete
    Replies
    1. கில்லி, துப்பாக்கியை ஆரம்பம் படத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் உங்களின் ரசனையை என்ன என்று சொல்வது?... ஓஓ பில்லா 2 வையே தமிழின் சிறந்த ஆக்ஷன் படம் என்று சொன்னவர் தானே நீங்கள் மறந்துவிட்டேன்... உங்களுக்கு இரண்டு படங்களும் ஒன்று தான் அண்ணே...

      Delete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்