Pages

30/03/2014

மாணவனின் உயிரை பலி வாங்கிய கல்வி



செல்வங்களில் அழிக்க முடியாத செல்வம் கல்விச்செல்வம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. என்று கல்வியின் முக்கியத்துவத்தை பலரும் பலவிதமாக சொல்லியிருகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியரை வைத்து போற்ற வேண்டும் என்று சொல்லியிருகிறார்கள். இத்தகைய சிறப்புகளை கொண்ட கல்வியும், அதனை கற்றுத்தரும் ஆசிரியர்களும் இன்று உதவுவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அல்ல அவர்களின் இறப்புக்கு தான். கடந்த சில வருடங்களில் கல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்களில் எனது நண்பனும் ஒருவன். அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ஆனால் அவன் நம்பிய சிவனோ முருகனோ அவனை காப்பாற்றவில்லை. அவன் நம்பிய கடவுளே அவனை கைவிட்டபோது நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று இயேசுவும் அல்லாவும் நினைத்துவிட்டார்கள் போல கடவுளர்களுக்குள் காப்பாற்றாமல் விடுவதில் போட்டி நடந்திருகிறது வென்றது யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சென்றது ஒரு உயிர்.

தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளுக்காக யார் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் சிலர். ஆம் அவன் கோழை தான் தான் செய்த தவறுக்காக பிறருக்கு தண்டனை கொடுக்கும் பிறர் உயிரை கொல்லும்  வீரர்களுக்கு மத்தியில் பிறர் செய்த தவறுக்காக தனக்கு தண்டனை கொடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட அவன் கோழை தான். பாவம் மற்றவருக்கு தீங்கு செய்ய தெரியாதவன் அவன் ஒருவேளை தனக்கு மன உளைச்சலை உண்டாக்கிய அந்த ஆசிரியரை அவன் கொலை செய்திருந்தால் அவனை வீரன் என்று சொல்லியிருப்பார்களோ??? அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை அப்போது அவனுக்கு கிடைத்திருக்கும் பெயர் கொலைகாரன் கற்று கொடுத்த ஆசிரியரை கொன்ற பாவி மகா கொடூரன் என்ற பெயர்கள் அவனுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவன் தன்னையே கொலை செய்து நல்லவன் ஆகிவிட்டான். கொலை செய்பவரை  விட அதற்க்கு காரணமாக இருப்பவருக்கு தான் தண்டனை அதிகம் என்று சொல்கிறது நம் நாட்டு சட்டம். எனது நண்பன் தன்னையே கொலை செய்துகொண்டதற்கு காரணமாக அமைந்த அந்த மதிற்பிற்குரிய ஆசிரியருக்கு தண்டனை தருமா இந்த சட்டம்.? நீதியும் சட்டமும் ஏழைகளுக்கு இல்லை என்பது போல மாணவர்களுக்கும் இல்லை என்றாகிவிட்டது.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்கிறார்கள் ஆனால் இளைஞர்களின் எதிர்காலம் இன்று ஆசிரியர்களின் கையில் இருக்கிறது. கையில் இருக்கிறது என்பதை விட அவர்களின் கால்களில் உதை  படும் பந்தாக இருக்கிறது அதை வைத்து அவர்கள் கால்பந்து விளையாடிகொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கோல் என்று நினைப்பது எதிர்காலத்தை வளமாக்குவது அல்ல மாறாக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது தான். தான் காலில் இருக்கும் பந்தை இத்தனை தடவை கோல் அடித்திருக்கிறேன் என்று ஒரு விளையாட்டு வீரன் பெருமை கொள்வது போல தன் காலில் இருக்கும் இத்தனை பேரின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளேன் என்று எண்ணி பெருமை கொள்கிறார்கள் ஆசிரியர்கள். அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை அப்பாவி மக்களிடம் காட்டி பெருமை கொள்வது போல ஆசிரியர்கள் தங்களின் அதிகாரத்தை மாணவர்களின் மீது காட்டி பெருமை கொள்கின்றனர்.

ஒரு பரிட்சையில் தோல்வி என்பதற்காக தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைகிறார்கள் சிலர். மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளை காண்கிறான் ஆனால் கல்வியில் தோல்வி என்பதனால் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அளவுக்கு உள்ளது இன்று மாணவர்களின் மனநிலை என்பது இன்று தற்கொலை செய்துகொள்பவர்களில் அதிகபடியானவர்கள் மாணவர்கள் என்ற புள்ளிவிவரத்தை பார்க்கும் போது தெரிகிறது. ஏன் அவர்கள் அப்படி நினைகிறார்கள் அவர்களை அப்படி நினைக்க வைத்தது யார் என்று பார்த்தல் இந்த சமுதாயம் தான். இந்த சமுதாயம் தான் படிக்கவில்லை என்றால் வாழ்கையில் முன்னேற முடியாது உயிர் வாழ்வதற்கே படிப்பு அவசியம் என்ற என்னத்தை பெற்றோருக்கும் மாணவருக்கும் விதைத்துள்ளது. சமுதாயமும் பெற்றோரும் ஆசிரியரும் விதைத்த வினையை இன்று மாணவர்கள் அறுத்துக்கொண்டு இருகிறார்கள். ஆம் அவர்களின் எதிர்காலம் தூக்கு கயிறுகளில் அறுபட்டு கொண்டிருகிறது. படிக்காத மேதைகளான காமராஜர்களை அதிகம் பார்த்த இந்த இந்தியாவில் இத்தகைய நிலை இருப்பது அவமானத்திற்குரியது. நன்றாக வாழ்வதற்கு அனைவருக்கும் தேவை தன்னம்பிக்கையும் விடா  முயற்சியும் ஆனால் இன்றைய கல்வி சமூகம் அதை பிஞ்சிலேயே சிதைத்து கொண்டிருகிறது.

எட்டு கல்வி கறிக்குதவாது என்பது பொன்மொழி எட்டுகல்வி சாவுக்கு உதவும் அன்று ஒரு புது மொழியை எழுதுங்கள். ஆம் புதிதாக சிந்திப்பவர்களுக்கும் ஆக்கபூர்வமான எண்ணம் உள்ளவர்ககுக்கு இல்லை இன்றைய கல்வி மனப்பாடம் செய்யும் திறமை படைத்தவருக்கு மட்டுமே இன்றைய கல்வி. சிறு வயதிலேயே பள்ளிகூடங்களில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை முடக்குகிறார்கள். நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்யவேண்டும் என்று கட்டளைக்கு அடிபணியும் அடிமை போலவும் கமெண்டுகளுக்கு கீழ்படிந்து வேலை செய்யும் ரோபா போலவும் இருக்க சொல்கிறார்கள். இன்று பள்ளிகூடங்கள் கல்லறைகலாகவும் சிறை சாலையாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு மாணவனின் தற்கொலையின் போதும் இந்த குற்ற சாட்டு எழுகிறது ஆனால் பெற்றவருக்கு உறைப்பதில்லை  மீண்டும் அந்த சிறை சாலையை தேடி தான் போகிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே நகல் (copy) எடுத்து தேர்வி விடைத்தாளில் ஒட்ட(paste)  வேண்டும். அத்தகைய சிறந்த ஜெராக்ஸ் இயந்திர வேலைய செய்பவன் தான் சிறந்த பிள்ளையாக பெற்றோராலும் சிறந்த மாணவனாக ஆசிரியராலும் பார்க்கபடுகிறான். அவர்களை பொறுத்தவரையில் மாணவன் திருக்குறளை படிக்க வேண்டும் என்று தன நினைகிறார்களே தவிர புதிய திருக்குறளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

இன்றைய கல்வி முறையும் வாழ்கையின் வெற்றிக்கு தேவை என்ன என்பதையும் இந்த சமுதாயம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சரியான முறையில் தெளிவான சிந்தனையுடன் அணுகும் அவரை இப்படியான தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்துகொண்டே தான் இருக்கும். அதுவரை பாதிக்கப்படபோவது எனது நண்பனை போன்ற அப்பாவி மாணவர்கள்  தான்.

9 comments:

  1. First you should come out of the circle as you are a "FAN" to a specific actor and need to realize your INDIVIDUALITY...

    until then you guys will not have self confident and the courage to take care of your life....

    ReplyDelete
    Replies
    1. Really feel sorry for your friend.

      But you guys have to think and act.. So please THINK

      Delete
    2. ஒரு நடிகனை ரசிக்கும் ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது என்று சொல்வது முட்டாள் தனம்.



      விஜயின் அழகிய தமிழ் மகன் படத்தில் ஒபெநிங் பாடல் முன்னால் முன்னால் வாடா அந்த படலை கேட்டு தான் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை வந்தது என்று ஒரு ஊனமுற்றவர் விஜய் டிவியில் சொன்னது உங்களுக்கு தெரியாதா?

      விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லை அஜித், ரஜினி, கமல் போன்ற பல நடிகர்களின் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் நல்ல குணங்களை தாங்களும் பின் பற்றுகின்றனர். சிலர் தனக்கு பிடித்த நடிகர் படங்கள் தனி மற்றும் தனது சொந்த வாழ்கை தனி என்று பிரித்து வாழ்வதும் உண்டு சிலர் நடிகர்களை அப்படியே பின் பற்றி அழிவதனால் அனைவரும் அப்படி என்று சில் முடியாது மேலும் இறந்த எனது நண்பன் எப்படி பட்டவன் என்பதை நான் ராஜா அண்ணனுக்கு அளித்திருக்கும் பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன். அவனுடைய குணத்திற்கும் நீங்கள் சொல்லும் காரணத்திற்கும் எந்த

      சம்பந்தமும் இல்லை. அவன் நல்லவன்.

      Delete
    3. //விஜயின் அழகிய தமிழ் மகன் படத்தில் ஒபெநிங் பாடல் முன்னால் முன்னால் வாடா அந்த படலை கேட்டு தான் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை வந்தது என்று ஒரு ஊனமுற்றவர் விஜய் டிவியில் சொன்னது உங்களுக்கு தெரியாதா?//

      Joke of the CENTURY......

      poi padikura velaya paaru po...

      Delete
    4. இது உண்மையாக அந்த ஊனமுற்றவர் தன வாயால் சொன்ன ஒன்று உங்களுக்கு சந்தேகம் இருந்தால் விஜய் டிவியில் நடந்த விஜய் பிறந்த நாள் விழாவை காணவும். நீங்கள் ஜோக் என்று மனதை ஆற்றி கொள்வதால் அது உண்மை இல்லை என்று ஆகிவிடாது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் தன்னம்பிக்கைக்கு ஒரு உந்து சக்தி தேவை அந்த சக்தி அவரவர் மனதை பொருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்களை போன்று தங்களையே அறிவாளிகளாக நினைத்துகொள்ளும் அறிவு ஜீவிகளுக்கு புரியபோவது இல்லை.

      Delete
  2. தம்பி முதலில் உன்னுடைய நண்பனுக்கும் அவருடைய பெற்றோருக்கும் என் இரங்கல்கள்
    நீ சொல்வது போல இன்றைய கல்வி முறையில் மாற்ற வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு அதேபோல இன்றைய இளைஞர்களிடமும் மாற்றி கொள்ள வேண்டிய ஆட்டிடியூட் நிறைய உண்டு அவர்களிடம் இருக்கும் தவறுகளுக்கு காரணம அவர்கள் இல்லை இதற்கு முந்தைய தலைமுறையான அவர்களின் படித்த பெற்றோர்கள்தான் கல்வியில் தன்னுடன் படித்த சக மாணவர்கள் சாதித்ததை தங்களால் சாதிக்க முடியாமல் போன விஷயங்களை தன் மகன் சாதிசக்க வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்புகள் இதற்கு மிக முக்கியமான காரணம் மாணவர்கள் பெரும்பாலும் செய்கின்ற தவறு திரைப்படங்களை பார்த்து சீரழிவது நாங்கள் கல்லுூரியில் படித்த காலத்தில் விஜயும் அஜித்தும் பிரசாந்தும் வீட்டிலும் காதலுக்கும் பெண்ணிடமும் நல்ல பெயர் எடுத்துதான் தங்கள் காதலில் வெற்றி பெறுவார்கள் ஆனால் இன்று தனுஷும் சிம்புவூம் என்ன செய்கிறார்கள் என்று நான் சொல்ல தேவையில்லை இன்று தனுஷி்ன் படங்களை பார்த்து தன்னை ஒரு தனுஷாகவே நினைத்து கொண்டு பெண்களின் பின்னால் சுற்றி கொண்டு சீரியஸாக காமெடி பண்ணிகொண்டு அலையும் பலரை நான் அறிவேன் ஆனால் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் அவர்களள் தங்களி்ன் உண்மையான நிலையை உணரும் போதுதான் சிக்கல் ஆரம்பமாகிறது

    இன்றைய இளைஞர்களிடம் அவசரபுத்தி இருக்கும் அளவுக்கு தன்னம்பிக்கை இல்லை

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இன்றைய இளைஞர்களை பற்றி சொல்வது மிக சரி தான் அண்ணே... இன்று தனுஷ் சிம்பு மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்ற அடுத்த தலை முறை நடிகர்களும் தங்கள் படங்களில் இளைஞர்களுக்கு தவறான வழிமுறையையே கட்டுகின்றனர். ஆனால் எனது நண்பன் அப்படி பட்டவன் இல்லை அவனுக்கு காதல் பெண்கள் பின்னாடி சுற்றுதல் சிகரெட், மது போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்(காதல் கெட்ட பழக்கம் இல்லை என்றாலும் சிலர் கெடுவதற்கு காரணமாக அமைகிறது) மேலும் சினிமா மீதும் அதிக ஆர்வம் இல்லாதவன் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். அவனுக்கு இது நடந்தது மிக துயரமானது. அதை நாங்களே ஏற்று கொள்ளமுடியவில்லை என்னும்போது அவனுடைய பெற்றோர் எப்படி ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கும் போது தான் மிகவும் கஷடமாக உள்ளது. கல்வித்துறையில் மற்றபட வேண்டியவை நிறைய உண்டு அதை மாற்றும் வரை இப்படியான சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது. இன்றைய இளைஞர்களின் இத்தகைய நிலைக்கு சினிமா பெரும் பங்கு வகிக்கிறது.

      Delete
  3. தங்கள் நண்பருக்கு என் அனுதாபங்கள்.

    சினிமாவை மட்டுமே வாழ்வின் வழி காட்டி என்று நினைக்கும் இளைஞர்கள் இருக்கும் வரை, எந்த கஷ்டமும் படாமல் எடுத்த எடுப்பில் ஒயிட் காலர் வேலையில் அமர வேண்டும் என்று என்னும் மாணவர்கள் இருக்கும் வரையில், தன் மகனின் படிப்பை காட்டி உறவினர் முன்னால் பந்தா காட்ட நினைக்கும் பெற்றோர் இருக்கும் வரை, வேலையை காப்பாற்றிக்கொள்வதற்கா 100% ரிசல்ட் காட்ட வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருக்கும் வரை, ரிசல்டை காரணமாக வைத்து கல்வி வியாபாரத்தை பெருக்க என்னும் கல்வி 'வள்ளல்கள்' இருக்கும் வரை இந்த அவலம் தீராது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. இந்த அவலங்களினால் பாதிக்கபடுவது அப்பாவி ஏழை மாணவர்கள் தான்.

      Delete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்