Pages

20/06/2015

ரஜினி என்னும் மகா அரசியல்வாதி


அனைவருக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு  பதிவு போடும் எண்ணம் வந்தது என்ன போடலாம் என்று யோசித்த பொது ரஜினி ரசிகன் ஒருவன் ரஜினிக்கு எழுதிய ஒரு கடிதம் என் கண்ணில் பட்டது சரி அதையே பதிவாக போடுகிறேன். படித்துவிட்டு சிந்தியுங்கள். 
2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்.

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை
நான் நிச்சியமாக எழுதவில்லை.
உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.
உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.
நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.
ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். "சூப்பர் ஸ்டார்" என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை.
என்னுடைய கேள்வி இதுதான்....நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?
நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, 'பகுத்தறிவாளர்கள்' என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா?
ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே ...சாட்சாத் நீங்கள்தான்.
"அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா" என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான்.
நீங்களே கதை,வசனம் எழுதிய "பாபா" படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை
சொன்னது நீங்கள்தான்.
கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார்.
நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார்.
ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன?
"நான் ஆன்மிகவாதி", "தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்", "இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்" என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த 'இமயமலை' அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.
"இமயமலை"யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்?
இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம்.
ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன?
நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன்.
நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை...கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய்.
1991 - இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் "ஆசிரமம்" என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன்.
அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று.
சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள்.இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்...உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று.
TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.
"அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்" என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி.
சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை "ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்" என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா?
தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் "பிம்பங்கள்" எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார்.
முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன?
சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.
அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன்.
நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா?
சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே..
அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை?
"என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". - படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா?
சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்?
எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா?
"பாட்ஷா" படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள்.
உங்கள் பதில் "ஆம்" என்றால்,
அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள்.
ஆனால், எனது இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.
எதோ "எந்திரன்" விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் "ராணா" படத்தில், டைட்டில் பாடலில் தமிழ் மக்களுக்கு நீங்கள் என்னவேண்டுமானாலும் தருவீர்கள் போன்ற வரிகள் இருக்கும்.
இனி,இதுபோன்ற ,வழக்கமாக உங்கள் படங்களின் "டைட்டில்" பாடல்களில் வரும் 'வாழ வச்சது தமிழ்ப்பால்', 'அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' போன்ற அர்த்தமற்ற, அனாவசிய வார்த்தைகளை தவிருங்கள். வசனங்களிலும் அவ்வாறே.
மேடைகளில், வார்த்தைக்கு வார்த்தை "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே" என்று முழங்குவதை நிறுத்துங்கள். வேண்டுமானால்,
"என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களே" என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த 'பிசினஸ்''க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார்.
வழக்கம்போல,"எந்திரன்" சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறோம்.
பின் குறிப்பு : Chennai , Karnataka , Dubai, Coimbatore , Singapore , Australia யில் உள்ள ரஜினி சொத்துகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10,000 கோடி
இப்படிக்கு,
தமிழ்நாட்டு பொதுமக்
கள் சார்பாக,
உங்கள் ரசிகர்களில் ஒருவன். 

9 comments:

  1. வெளிக்கு சாமியார். வாழ்வின் பின் பாதியில் இருந்தும் மக்களுக்கு செய்ய மனமில்லையே. ஏழைகளுக்கு குறைந்த கட்டண /இலவச கல்லூரி,மருத்துவமனை தரலாம். தமிழக பள்ளிகளில் கழிப்பறை வசதி தரலாம். பகுத்தறிவை வளர்க பேசலாம். மரம் நடும் இயக்கம் காணலாம். சாதி ஒழிய பேசலாம். அதை விடுத்தது பஜனை படி அடிமையாக இருப்பதை ஊக்குவிற்பார்.
    பல்லாயிரம் கோடி பொருள் சேர்த்தும் என்ன பயன். செல்வத்தின் பயன் ஈதல் எப்படி தெரியும்? பார்பான் பிடி இப்படி தான் இருக்கும்.

    ReplyDelete
  2. ஆன்ந்தனிராஜு!
    ஏன்ப்பா உன்னோட அடுத்த முதல்வர் புளி விசயையும் அவர் அப்பாவும் பத்தி அரவர்கள் சாதனைகளை, இல்லைனா அவரு அடிக்கடி லண்டன்ல போயி ஓய்வெடுத்து வருவதை எழுதலாம் இல்லை? ஏன் இப்படி ரஜினியையே கட்டி ஒப்பாரி வைக்கிற?

    ReplyDelete
    Replies
    1. அப்போது கூட ரஜினி நல்லவர் நீங்கள் சொல்வது மாதிரி இல்லை என்று உங்களால் சொல்ல முடியவில்லை. ஏன் ரஜினி பக்கம் இருக்கும் தப்புகளை மட்டும் சொல்லுகிறீர்கள் என்று தன கேட்கிறீர்கள். இவ்வளவு வயதும் அனுபவமும் உள்ள ரஜினியே இப்படி இருக்கும் பொது விஜய் எம்மாத்திரம் சொல்லுங்கள்? எல்லாருக்கும் முன்னோடியாக இருக்க வேண்டிய ரஜினி இப்படி இருக்கிறார் என்பது தான் கவலை. தவிர ரஜினியை பற்றி பேசும்போது அதில் விஜயை எப்படி ரஜினியோடு நீங்கள் ஒப்பிடுகிறீர்கள் விஜய் அவ்வளவு வளர்ந்துவிட்டாரா என்ன? அடுத்த முதல்வர் விஜய் என்று நீங்கள் உண்மையிலேயே நல்ல காமெடி தான்.

      Delete
  3. அது ஏன் அனானி நாய்களை வச்சுப் பொழைப்பை ஓட்டுற? உனக்கு ஒண்ணு தெரியுமா? அனானியா வர்ரது யாரா வேணா இருக்கலாம், நீயே வரலாம், இல்லைனா அடுத்த முதவர் கனவில் வாழும் புளி விஜய்யும், அவன் அப்பருமாக் கூட இருக்கலாம்!

    ReplyDelete
  4. Varun throws up again.

    ReplyDelete
  5. Nice article. It so unfortunate this guy makes so much money and wont wanna give a little bit back to the society. His spiritual part wont make no sense with so much black money 10K crore. !!.

    ReplyDelete
  6. ***Anonymous25 June 2015 at 09:58

    Varun throws up again.***

    Anonymous mother fuckers always have a BIG MOUTH and TINY LITTLE PECKER!!

    What say you, anonymous mother? You agree with me or not? LOL

    I hear that you are fucking around in the name of kovai-fucking-anban? Is that right, anonymous mother fucker?

    ReplyDelete
  7. இந்த மாதிரி அவ்வப்போது சில வயித்தெரிச்சல் பார்ட்டிகள் கடிதம் எழுதுவதுண்டு. முதலில் நான் உங்கள் ரசிகன் என்று ஆரம்பித்து, அப்படியே தன் சுய நிறத்தை வெளிப்படுத்துவார்கள். அவரே கடிதத்தில் சொல்லி இருக்கிறார். ரஜினி உழைத்து சம்பாதித்தது என்று. பிறகு என்ன?

    ReplyDelete
  8. தான் சம்பாதித்ததை சமூகத்துக்காக செலவிடுவதும், செய்யாததும் அவரவர் விருப்பம். அதே போல செய்ததை தம்பட்டம் அடிப்பதும் தேவையற்றது. இந்த கடிதத்தை எழுதிய ஏழை ரசிகரும், பதிவிட்ட ஏழை பதிவரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்கிறார்களா என்ன?

    யாரோ வாரி இறைத்த சேற்றை அப்படியே வழித்தெடுத்து மறு பதிவிட்ட உங்களின் உள் நோக்கம் ஊரே அறிந்த்ததுதான். அப்படியே ரஜினி கருப்பு பணம் வைத்திருக்கும் ஆதாரங்களையும் வெளியிட்டால் நல்லது

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்