அனைவருக்கும் வணக்கம் நான் பதிவு எழுதி பல ஆகிவிட்டது. வேலை காரணமாக இணையத்தின் பக்கமே வரமுடியவில்லை இப்பொழுது தான் நேரம் கிடைத்துள்ளது அதனால் தான் இந்த முடிவு. நீ பதிவு எழுதாததால் என்ன இப்போது மூழ்கிவிட்டது என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக புரிகிறது. நான் பதிவு எழுதாததால் என் வாசகர்கள்(???) ஆழ்ந்த சந்தோஷத்தில் மன்னிக்கவும் வருத்தத்தில் இருப்பதாக கேள்விபட்டேன் அதனால் இப்போதே அவர்களுக்கு இன்பம் அளிக்கவே இந்த பதிவு. மொக்கை போட்டது பொது எதையாவது ஆரம்பின்னுலாம் திட்ட கூடாது இதோ உங்களுக்காக இந்த படைப்பு(???)....
வழக்கம் போல இளைய தளபதி விஜய் பற்றி தான் இந்த பதிவு. பிடித்தவர்கள் மேலும் தொடரலாம் பிடிக்காதவர்கள் நிறுத்திகொள்ளுங்கள். பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள் தான் ஆர்வமாக படிப்பீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் ஏன் என்றால் நீங்கள் எதிர்த்து தானே விஜயை இந்த அளவுக்கு வளர வைத்துள்ளீர்கள். பிடிகாதவரையும் வளரச்செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அல்லவா நீங்கள் உங்களுக்காகவும் விஜய்யின் ரசிகர்களுக்காகவும் தான் இந்த பதிவு இனி பதிவுக்கு செல்லலாம்...
வேலைகள் காரணமாக பதிவு எழுதமுடியாவிட்டாலும் விஜய் பற்றிய செய்திகளை அவ்வப்போது தெரிந்து வந்துள்ளேன். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது பற்றி குமுதம் நடத்திய மெகா சர்வேயில் விஜய் வென்றதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைதேன். அதன் பிறகு அரசியலில் தோல்வியடைந்த தலைவர்கள் எந்த பட்டனை அழுத்தினாலும் அவர்களுக்கே ஒட்டு பதிவு ஆவது போல எந்திரத்தை அமைத்துவிட்டார்கள் அல்லது கள்ள ஒட்டு போட்டு வென்றுவிட்டார்கள் என்று தோல்விக்கு ஆறுதலாக எதாவது நொண்டி சாக்கை சொல்வது போல விஜய் ஜெயிக்கவில்லை தவறாக அறிவித்துவிட்டார்கள் என்று வயித்தெரிச்சலில் தோல்வி அடைந்தவர்கள் கிளப்பிவிட்டதை கேள்விப்பட்டு இன்னும் அதிகமாக சந்தோஷமடைந்தேன்.
ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜயை அறிவிப்பதற்கு வேலைகள் நடக்கிறது என்றும் அதற்கு விஜய் நடிகர்களை அழைகிறார் என்றும் செய்திகள் வளம் வந்தன. வழக்கம் போல விஜயை உயர்த்துவதாக எது நடந்தாலும் வாலண்டியராக ஆஜராகும் ஜெயலலிதாவும் விழா நடக்க கூடாது என்று தடை போட்டது. ஜெயா விஜய்க்கு எதிராக நடப்பதாக நினைத்து செய்யும் செயல்கள் எதோ ஒரு விதத்தில் விஜய்க்கு நன்றாக ஆதரவாக அமைந்துவிடும் அவற்றில் இதுவும் ஒன்று. விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பதே என் கருத்து. விஜயும் தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பது போல தான் விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் பேசினார். விஜயின் அன்றைய பேச்சு மிக தெளிவாக இருந்தது என்பது அனைவரும் அவரது பேச்சுக்கு கொடுத்த கைதட்டல்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். விஜய் இதுவரை இவ்வளவு தெளிவாக பேசியது இல்லை.
எனவே நான் முதலிலே சொல்லியது போல இந்த பதிவு விஜய் ரசிகர்களுக்கு தான். விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற வேண்டும் என்று பல விஜய் ரசிகர்களும் நினைகிறார்கள். அதில் என்ன தவறு தனக்கு பிடித்த நடிகன் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு தானே என நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை தான் அனால் அந்த முதல் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுவதில் தான் இருக்கிறது என்று நினைப்பது தான் தவறு. ரசிகர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் பட்டம் என்பது வேறு அடையாளம் என்பது வேறு. பட்டம் என்பது ஒரு மனிதனை சிறப்பிப்பது அடையாளம் என்பது ஒரு மனிதனால் தன் சிறப்பாக உருவாக்கபடுவது. சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு அளிக்கப்பட்ட பட்டம் இல்லை அது ரஜினியால் உருவாக்கப்பட்ட சிறப்பு அடையாளம் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சூப்பர் ஸ்டார் பட்டதினால் ரஜினிக்கு பெறுமை இல்லை ரஜினியால் தான் அந்த பட்டத்துக்கு பெருமை அதனால் தான் இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுகொண்டவர் யாராக இருந்தாலும் அவர் ரஜினியின் சிறப்புகள் அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள் இல்லை.
இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் என மக்களால் எதிர்பார்க்கப்படும் இருவர் விஜயும் அஜித்தும் தான். ஆனால் நான் இங்கு விஜயை பற்றி மட்டும் தான் எழுதபோகிறேன் ஏன் என்றால் நான் அஜித்தை பற்றி உண்மையை எழுதினாலும் நான் விஜய் ரசிகன் என்ற ஒரே காரணத்திற்காக என்னிடம் சண்டை போட ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. எனவே நான் இங்கு எழுதபோவது விஜய் பற்றி மட்டும் தான். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த போது அவருடைய பட்டம் அவ்வளவு மதிப்பு மிக்கதாக இல்லை. ஏன் என்றால் அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் இருந்தனர் அதை போல ரஜினி தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் அவ்வளவு தான் ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் என்றாலே இந்தியாவில் ரஜினி மட்டும் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் உயர்ந்துள்ளார். அதனால் தான் இன்று பலர் ரஜினியின் அடையாளத்தை பெற விரும்புகின்றனர். ரஜினியின் அடையலாம் என்பது அவரது சூப்பர் ஸ்டார் பட்டமோ அல்லது அவரது நடிப்பு ஸ்டைலோ இல்லை அவரின் திரையுலக சாதனை தான். சினிமாவை தவிர்த்து ரஜினி தனி மனித வாழ்கை பற்றி நிறைய பேசுக்கள் இருந்தாலும் சினிமாவில் அவர் ஒரு ஜாம்பவான் என்பது அனைவரும் ஒத்துகொள்ளும் உண்மை. ரஜினிக்கு முன்னால் சினிமாவில் ஒரு ஜாம்பவான் இருந்தார் அவர் எம்.ஜி.ஆர். ரஜினி எம்.ஜி.ஆர் போல நடிக்க வேண்டும் என்றோ அவரின் மக்கள் திலகம் என்ற பட்டதை அடைய வேண்டும் என்றோ நினைக்கவில்லை. தனக்கென ஒரு அடையாளத்தை எற்ப்படுதினார். தனக்கென ஒரு பாதை வகுத்தார் வெற்றியும் பெற்றார் சிகரத்தை அடைந்தார். எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியை ரஜினியும் பெற்றார் ஆனால் எம்.ஜி.ஆர் சென்ற அதே பாதையில் சென்று அல்ல வேறு பாதையில் சென்று பெற்றார். ஆனால் இன்று ரஜினி அடைந்த உயரத்தை அடைய விரும்பும் நடிகர்களும் சரி அந்த நடிகர்களின் ரசிகர்களும் சரி ரஜினி சென்ற அதே பாதையில் சென்றால் தான் அந்த வெற்றியை பெற முடியும் என்று நினைகிறார்கள் அது தவறு என்பதை நடிகர்களும் சரி அவர்களின் ரசிகர்களும் சரி புரிந்து கொள்ளவேண்டும். மற்ற நடிகர்களை பற்றி எனக்கு கவலை இல்லை நான் குறிப்பாக சொல்வது விஜய்க்கும் அவரின் ரசிகர்களுக்கும் தான்.
அன்று ரஜினி தனக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் பட்டதை பல சாதனைகள் மூலம் தனக்கான சிறப்பு அடையாளமாக மாற்றினார். அதனால் தான் இன்று பலரும் அவரை போன்று வரவேண்டும் என்று நினைக்கவைக்கும் அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார் . அதே போல நேற்று ரசிகர்கள் உங்களுக்கு கொடுத்த இளைய தளபதி என்ற பட்டதை உங்களுக்காக தனி சிறப்பு அடையாளமாக மாற்றுங்கள் அடுத்த இளைய தளபதி யார் என்று மக்கள் நினைக்க வைக்கும் அளவிற்கு திரையுலகில் உங்கள் சாதனை அமைய வேண்டும். ரஜினி அடைந்த அந்த சிகரத்தை நீங்கள் அடைவதற்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவை இல்லை ரஜினியை போன்றே நடிக்க தேவை இல்லை அவரின் பாதையிலேயே நீங்கள் செல்ல தேவை இல்லை உங்களுக்கென ஒரு தனி பாதை அமைத்து முன்னேறுங்கள் நிச்சயம் சிகரத்தை அடைவீர்கள் இதை விஜய் மற்றும் அவரின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
I wish to give Super Blogger award. wonderful article, excellent!!
ReplyDeleteஅவார்ட் மட்டும் குடுத்து அசிங்கபடுத்தாமல் இதை எப்படியாவது தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க செய்யாமல் நாம் விடகூடாது நாளைய சூப்பர் நாளைக்கழித்த மக்கள் திலகம்தலைமையில் பேரணி நடத்தி அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல வேண்டும்
Deleteஷப்பாபாபாபா மிடில
ReplyDeleteதம்பி காலையில உன் பதிவை படிக்கும் போது அண்ணன் கொஞ்சம் பிஸி அதான் கமெண்ட் கம்மியா போட்டேன் இப்ப அண்ணன் ப்ரிதான் சரி தம்பி இவ்வளவு நாள் எங்க போயிருந்த இப்படியெல்லாம் கேப் விடாத ரொம்ப போரடிக்குதுள்ள
ReplyDelete//:
குமுதம் ஓட்டுபதிவில்
எப்பயா நடந்துச்சி அந்த ஓட்டுபதிவு எங்க ஊர்ல எந்த பூத்லயும் அப்படி எதுவும் நடக்கலையே சரி கருமம் நாமதான் அசந்து தூங்கிட்டோம் போலன்னு எவன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி விசாரிச்சாலும் மேட்டரை கேட்டவுடனே கெக்கே பிக்கே கெக்கே பிக்கேன்னு சிரிச்சி உங்க வெஜினாவ அசிங்க அசிங்கமா ஓட்டுறாங்கெ தம்பி சின்ன பயஞலுக வெஜினா மேல பொறாம பிடிச்ச பயலுக தமிழ் சினிமாவை ஒட்டு மொத்தமா குத்தகைக்கு எடுத்து கன்ட்ரோல் பண்ணிகிட்டு அதை வாழ வைத்தூ கொண்டிருக்கும் குமுதமே சொல்லிட்டான் வெஜினாதான் அடுத்த மக்கள் திலகம்னு வயித்தெரிச்சல் பிடிச்ச பயலுக நம்ப மாட்டேன்றானுக நீ ஒன்னும் கவலபடாத தம்பி அடுத்து நம்ம வெஜினா நியூயார்க் டைம்ல பிச்ச எடுத்து செவ்வாய் கிரகத்துல வாக்குபதிவு நடத்தி உன்மையான யுனிவர்சல் ஹூரோ அவர்தான்னு உலகுக்கு உணர்த்துவாரு அப்ப இவனுங்க என்னா பண்றானுக பாத்திடுவோம்
//வாலன்டியராக உள்ளே நுழையும் ஜெயலலிதா
ReplyDeleteவிடுங்க தம்பி ஜெயலலிதாவெல்லாம் லோக்கல் பீசு நான் சொன்ன நியூயார்க் டைம்ஸ் மேட்டர் மட்டும் நடக்கட்டும் ஒபாமாவே வாலன்டியரா உள்ள நுழஞ்சி வெஜினா மேல பொருளாதார தடை விதிப்பாரு தம்பி
//அடுத்த இளைய தளபதி
ReplyDeleteஆமா அப்படியே அடுத்த இளைய திலகம் அடுத்த புரட்சி திலகம் அடுத்த நவரச நாயகன் இப்படி ஒவ்வொருத்தனும் கிளம்புனா நாடு தாங்காது தம்பி எல்லாரும் உங்க வெஜினா மாதிரி அடுத்தவன் பட்டத்துக்கு நாய் மாதிரி நாக்கை தொங்க போட மாட்டானுக தம்பி இன்டிவாஜிலுவுட்டி இல்லாத தத்திகள்தான் அப்படி அலையும்
//இவ்வளவு தௌிவாக பேசியதில்லை
ReplyDeleteஇவ்வளவு நாளா அந்த டுபாக்கூருக்கு நடிக்கதான் தெரியாதுன்னு நெனச்சேன் நீ சொன்னதுக்கப்புறம்தான் தெரியுது பயபுள்ளைக்கு பேசவும் தெரியாதுன்னு அண்ணனுக்கு தெரிஞ்ச வேலைகள் பஞ்ச் டயலாக் பேசி காத பஞ்சர் ஆக்குறதும் ஹூரோயினை நல்லா சரி விடு அசிங்கமா பேச அண்ணனுக்கு பிடிக்கலை
//நான் அஜித்தை பற்றி உண்மையை எழுதினாலும் நான் விஜய் ரசிகன் என்ற ஒரே காரணத்திற்காக என்னிடம் சண்டை போட ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது//
ReplyDeleteஅதேதான். நான் விஜய்யை பற்றி உண்மை எழுதினாலும் நான் அஜீத் ரசிகன் என்ற ஒரே காரணத்திற்காக பலர் என்னிடம் சண்டை போடுகிறார்கள் நண்பா. மற்றபடி இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பலவற்றை படிக்கும்போது எனக்கே சிரிப்பாக வந்தது.
// ரஜினி எம்.ஜி.ஆர் போல நடிக்க வேண்டும் என்றோ அவரின் மக்கள் திலகம் என்ற பட்டதை அடைய வேண்டும் என்றோ நினைக்கவில்லை//
ஆனால் விஜய்ண்ணா இதையேதான் ஆரம்பத்தில் இருந்தே செய்து வருகிறார். முதலில் விஜயகாந்த் ஸ்டைல். அப்புறம் ரஜினி ஸ்டைல். பிறகு எம்ஜிஆர் ஸ்டைல். இதனால்தான் பலரது கிண்டலுக்கு ஆளாகிறார்.
//உங்களுக்கென ஒரு தனி பாதை அமைத்து முன்னேறுங்கள் நிச்சயம் சிகரத்தை அடைவீர்கள்//
இதையேதான் நாங்களும் சொல்கிறோம்.....
எம்ஜியாருக்கு மக்கள் திலகம், ரஜினிக்கு சூப்பர்ஸ்டார், கமலுக்கு உலக நாயகன், அஜித்துக்கு தல ஆகிய பட்டங்கள் திட்டமிட்டு சூட்டப்பட்டவை அல்ல. ஆனால் விஜய்ண்ணாவுக்கோ அவரது இளைய தளபதி பட்டமே திட்டமிட்டு சூட்டப்பட்டது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், இளைய தளபதி என்பதே 'அடுத்த சூப்பர் ஸ்டார்' என்ற உள் அர்த்ததோடு வைக்கப்பட்டதே. அப்போது தளபதி படத்தில் ரஜினி நடித்திருந்ததால் அதை கருத்தில் வைத்துக்கொண்டு இவருக்கு இளைய தளபதி பட்டத்தை வைத்தார்கள். வைத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் விஜய்யின் அப்பாவேதான். எப்படி ரஜினியை திட்டிக்கொண்டே, டிஆர் தன் மகனுக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் வைத்தாரோ அதே போல.
ஆகவே ஆதிகாலம் தொட்டே விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும், சூப்பர் ஸ்டார் பட்டம் மீது ஒரு நப்பாசை உண்டு. தன் மகனை அதே வழியில் கொண்டு சொல்லவேண்டும் என்ற திட்டத்தால்தான், தன் மகன் எத்தனை காதல் படங்களில் நடித்தாலும், மாஸ் ஹீரோ ஆக வேண்டுமானால் ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்று அவ்வப்போது அவரே முன்வந்து மொக்கை ஆக்ஷன் படங்களை எடுத்து பல்பு வாங்குவார் (உதா: மாண்புமிகு மாணவன், நெஞ்சினிலே)
நீங்கள் சொல்லும் அட்வைஸ் மற்ற நடிகர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். விஜய்ண்ணாவுக்கு பொருந்தவே பொருந்தாது. ஏனென்றால் அவர் உருவாக்கப்பட்ட விதமே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கித்தான். தனித்தன்மை வேண்டுமென்றால் முதலில் அவர் இளைய தளபதி பட்டத்தையே துறக்க வேண்டி வரும். ஒரு காலத்தில் (குஷி) இந்த முயற்சியும் எடுக்கப்பட்டது. விஜய்ண்ணாவே இந்த பட்டம் மொக்கையாக இருக்கிறது மாஸாக இல்லை என்று ஃபீல் பண்ணினாராம். ஆனால் மாற்ற முடியாமல் போயி விட்டது.
முடிந்தால் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் வேண்டாம், இளைய தளபதி பட்டத்தை தளபதி, இந்திய தளபதி என்று மாற்ற முயற்சி செய்யட்டும் பார்க்கலாம்.