Pages

23/01/2013

கண்ணா லட்டுதின்ன ஆசையா வெற்றிக்கு யார் காரணம்?

சந்தானம், பவர் ஸ்டார், சேது, நடித்து பொங்கலுக்கு வந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. பொங்கலுக்கு வந்த சமர், அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களை காட்டிலும் யதார்த்தமாகவும், காமெடியான திரைகதையை கொண்டதாலும் படம் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பொங்கலில் வெளிவந்த படங்களில்  சிறந்த படமாகவும் 2013 ஆம் ஆண்டின் முதல் வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.இது பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா படத்தின் அப்பட்டமான காபி என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.


படம் வந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் படத்தின் வெற்றிக்கு பவர் ஸ்டார் தான் காரணம் என்று சிலரும், சந்தானத்தின் காமெடி தான் என்று சிலரும், இது பாக்கியராஜின்  சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ஏற்கனேவே ஹிட் ஆனா படத்தின் காபி என்பதால் தான் என்று சிலரும் கூறுகின்றனர்.







படத்தின் வெற்றிக்கு பவர் ஸ்டார் தான் காரணம் என்றால் அவர் ஏற்கனவே நடித்த லத்திகாவை யாரும் பார்க்கவில்லைய அது ஏன்? பவர் நடித்தால் ஹிட் ஆகிவிடும் என்றால் அவர் நடித்த லத்திகா ஏன் ஓடவில்லை?(லத்திகவை அவர் சொந்த செலவில் ஓட்டியது வேறு விஷயம் ) இல்லை அப்போது தான் அவர் அறிமுகம் ஆனார் அப்போது அவரை யாருக்கும் தெரியாது அந்த படம் நடித்த பின் தான் அவர் ஹிட் ஆனார் என்று சிலர் சொல்கின்றனர்.
 அப்படியானால் இப்போது அவர் ஹிட் ஆகிவிட்டார் எனவே இனிமேல் அவர் நடிக்கும் படங்கள் ஹிட் ஆனால் அதற்கு அவர் தான் காரணம் என்று சொல்ல முடியும்மா? அல்லது இனிமேல் அவர் நடிக்கும் எல்லாம் படங்களும் ஹிட் ஆகும் என்று சொல்ல முடியுமா?

இந்த படத்தில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தது அதனால் அவரை நடிக்க வைத்தார்கள் மக்களும் அதை ரசித்தார்கள் மற்றபடி கண்ணா லட்டு தின்ன ஆசையவின் வெற்றிக்கு பவர் ஸ்டார் தான் காரணம் என்றும் அவர் இல்லை என்றால் படம் ஹிட் ஆகியிருக்காது என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.






படத்தின் வெற்றிக்கு சந்தானம் தான் காரணம் என்றால் அவர் இதற்கு நுண் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் ஆகியிருக்க வேண்டுமே ஏன் ஹிட் ஆகவில்லை? பல படங்களில் சந்தானம் காமெடி நன்றாக இருந்தும் ஓடாமல் இருந்திருக்கின்றனவே அது எப்படி? இல்லை மற்ற படங்களில் சந்தானம் வெறும் காமடி கேரக்டருக்காக பயன்பட்டிருப்பார் ஆனால் இந்த படம் முழுவதும் நடித்துள்ளார் என்று கூறுகின்றனர். அப்படியானால் இதற்க்கு முன்பு சந்தானம் ஹீரோவாக நடித்த அறை எண 305 இல் கடவுள் ஏன் ஓடவில்லை? அதிலும் சந்தானம் முழுமையாக நடித்திருந்தார் தானே  பின்பு ஏன் ஹிட் ஆகவில்லை.





பாக்யராஜ் சிறந்த எழுத்தாளர் , அனைவரும் பார்க்கும் வண்ணம் திரைகதை எழுதுவதில் சிறந்தவர் என்பது அனைவராலும் ஏற்றுகொள்ள கூடிய உண்மை.
அவர் படத்தை ரீமேக் செய்ததால் தன ஹிட் ஆகிற்று என்று சொன்னால், அவர் இயக்கிய எல்லா படத்தையையும் ரீமேக் செய்தால் இதே போன்று ஹிட் ஆகும் என்று சொல்ல முடியுமா?

ஏற்கனவே ஹிட் ஆகிய பழைய படங்கள் ரீமேக் செய்தால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று கூற முடியாது. சட்டம் ஒரு இருட்டறை, மாப்பிள்ளை, முரட்டுக்காளை, மம்பட்டியான் போன்றவை ஏற்கனவே ஹிட் ஆனா படங்களில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை தான் அவைகள் தோல்வியை தழுவின. அவைகளில் ஒரிஜினல் படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்  தான் ஆனால் அவைகள் ஹிட் ஆகவில்லையே  ஏன்? ஒரு படம் ஹிட் ஆவதற்கு அதில் நடிக்கும் ஹீரோவோ காமெடி நடிகரோ அல்லது அது ஹிட் ஆனா படத்தின் ரீமேக் என்று காரணம் கூற முடியாது. 

படம் ஹிட் ஆவதும் தோல்வி அடைவதும் இயக்குனர் கையில் தான் உள்ளது. நல்ல சோர்வடைய வைக்காத வேகமான திரைக்கதையை இயக்குனர் கொடுத்தாலே அந்த படம் கண்டிப்பாக ஹிட் ஆகிவிடும். கதை என்று ஒன்று இல்லாமல் வேகமான திரைக்கதையை கொண்ட பல படங்கள் ஹிட் ஆகியுள்ளன. எனவே ஒரு படத்தை வெற்றிபடமாக்க மக்களின் ரசனைக்கேற்ப வேகமான திரைகதை அமைத்தாலே போதுமானது. ஒரு படத்தின் வெற்றிக்கு திரைக்கதையை தவிர வேறு ஒன்றும் காரணம் ஆகாது 


21/01/2013

நிறைவடைந்தது பள்ளி விழா

புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் 13-01-2013, ஞாயிறு அன்று மாணவர்கள் ஒன்று கூடி கொண்டாடும் get to gather நடைபெற இருப்பதாக முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 


அது சிறப்பாக 12 மணியளவில் மாணவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.புனித மிக்கேல் பள்ளியின் ஒரு அறையில் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

                                                         கேக் வெட்டும்பொழுது எடுக்கப்பட்ட போட்டோ

எதற்காக இங்கு அனைவரும் கூடியுள்ளோம் என்று ஒரு மாணவர்கள் கூற மற்ற மாணவர்கள் அதை கவனமுடன் கேட்டனர். வெறும் கெட் டு கெதர் மட்டும் இல்லாது அங்கு ஒரு அறிக்கையும் மாணவர்களால் தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்த விழாவை ஏற்ப்பாடு செய்த மாணவர்கள் ஒரு alumni association ஆரம்பிப்பதாகவும் விருப்பம் உள்ள மாணவர்கள் அதி கலந்துகொண்டு பிறர்க்கு உதவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் சிலர் அதில் சில சந்தேகங்களை கீட்டு தெளிவு பெற்றபின் அதில் தாங்களும் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். இத்தகைய அறிவிப்புகள் முடிந்தபின் ஜோன் என்ற மாணவன் நீயே நீயே என்ற பாடலை பாடினார். மாணவர்கள் அனைவரும் அவர் பாடுவதை அமைதியாக கேட்டு ரசித்ததும், பலர் தங்கள் செல் போனில் அதை பதிவு செய்ததும் இவ்விழாவின் சிறப்பு அம்சம் ஆகும்.அந்த பாடலை பாடிய ஜோன் என்ற மாணவர் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின் மாணவர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி அவற்றை முகத்தில் பூசியும் பகிர்ந்தும் கொண்டாடினர்.பின் மாணவர்களுக்கு அங்கு ஏற்பாடு செய்திருந்த டீ ,பப்ஸ்,மிக்ஸர் போன்றவைகள் சாப்பிடுவதற்கு வழங்கப்பட்டது.பின்னர் நண்பர்கள் குழுவாகவும் தனியாகவும் நின்று போடோக்களை எடுத்து கொண்டனர். வகுப்பு வரியாகவும், நண்பர்களும் வரிசையாக நின்று போட்டோ எடுத்து கொண்டனர்.





விழாவுக்கு வருகை தந்த மாணவர்கள் அனைவருக்கும் alumni association form கொடுத்து அதில் அவர்களின் முகவரி மற்றும் ஈமெயில் ஆகியவைகளை  எழுதி கொடுக்குமாறு கூறப்பட்டது.மாணவர்கள் அவற்றில் தங்கள் விவரங்களை எழுதி திருப்பல் கொடுத்தனர். 
விழா  2 மணியளவில் முடிவடைந்தது.

இந்த விழாவின் ஆரம்பம் முதல் கடைசிவரை உழைத்த அணைத்து மாணவர்களுக்கும், ஆர்வமுடன் பங்கேற்ற அணைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை  தெரிவித்துகொள்கிறோம்.



04/01/2013

Get to gather-பள்ளி விழா(செஞ்சி)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வருமா வராத என்று அனைவரும் எதிர்பார்த்த புத்தாண்டு அனைவரும் மகிழும் வண்ணம் வந்துவிட்டது. இந்த இனிய புது வருடத்தில் நாம் ஒரு மகிழ்ச்சியான முக்கியதொரு விழாவை கொண்டாட இருக்கின்றோம். 



நாம் அனைவருமே பள்ளி பருவத்தை மறந்திருக்க மாட்டோம். பள்ளியின் மகிழ்ச்சியான நினைவுகள் அனைவர் மனதிலும் நிறைந்திருக்கின்றன. பள்ளி நண்பர்கள் நினைவுகள் நம் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும். அப்படி பள்ளி நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தனது பள்ளி நினைவுகளையும், அழகிய தருணங்களையும் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதே get to gather என்னும் விழா ஆகும்.
அப்படி ஒரு விழா செஞ்சியில் உள்ள புனித மிக்கேல் மேல் நிலைப்பள்ளியில் வரும் ஜனவரி 13 அன்று நடைபெற உள்ளது.
2010 ஆம் ஆண்டு 12 வது முடித்து சென்றஅனைத்து மாணவர்களுக்கும் இவ்விழா நடத்தப்படுகிறது. 2010 பேஜ் மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாணவர்கள் வரும்பொழுது  50 ருபாய்  எடுத்து வரவும். 

இடம்; புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி (செஞ்சி)
நாள்; 13-01-2013 
நேரம்; 10am 

மேலே கூறியவற்றில் ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் பின்னுட்டத்தில் (comment ) பதிவு செய்யவும். 
                                              (அல்லது )
கீழ்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

ராமச்சந்திரன்:                    
9655023012
அந்தோனி சகாயராஜ்;
8608470776

அனைவருக்கும் செஞ்சி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள். செஞ்சி