Pages

05/11/2017

விழித்திரு விமர்சனம்

விழித்திரு... விமர்சனம்

டி.ஆர்  இந்த படத்துக்கு ஏற்கனவே பப்ளீசிட்டி செய்தும் எனக்கு இந்த படத்தின் மீது ஈர்ப்போ ட்ரைலர் பார்க்கணும் னு என்னமோ வரவில்லை. நண்பர்கள் மூலம் தான் இந்த படத்தின் கதை கரு தெரியவந்தது பிறகு ட்ரைலர் பார்த்தாச்சு இன்று படமும் பார்த்தாச்சு... நன்கு முனை கதையமைப்பு கொண்ட கதை...

இந்த படம் ஏன் அவசியம் பார்க்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று இளவரசன் விஷயத்தில் பா.மா.க செய்த பச்சையான சாதி அரசியலும் அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதையும் தைரியமாக பதிவு செய்தது. வெறும் கோபம் என்று சொல்லாமல் ஆதி தமிழர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு சாதி வெறியுடன் செய்த விஷயங்கள் படத்தில் வசனம் மூலம் இடம் பெறுகிறது. இன்னொரு காரணம் அதிகார வர்க்கம் தான் தேவைக்காக குற்றவாளிகளை தப்பிக்க விடுவதும் அப்பாவிகளை திட்டமிட்டு குற்றவாளியாக மாற்றுவதையும் காட்சிகள் மூலம் இடம் பெற்றுள்ளது. முத்துக்குமார் பாத்திரம் அவரின் திருநெல்வேலி பின்புலம் அவரது தங்கை  அந்த தோள்பை என்று அனைத்தும் நமக்கு ராம் குமாரை நினைவு படுத்திக்கிறது. இந்த இரண்டு நிஜ சம்பவங்களை வசனமாகவும் காட்சிகளாகவும் வைத்த அந்த தைரியத்திற்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

அந்த கிறிஸ்டினா விக்ரம் கதை தேவை இல்லாத ஆணி அதை புடுங்காமல் இருந்திருக்கலாம். ஏனனெனில் ஏற்கனவே தமிழ் சினிமா அடித்து துவைத்த கதை தான் அது. அந்த விக்ரம் கதாபாத்திரம் பயணிக்க ஆரம்பித்ததும் முடிவு என்னவாக இருக்கும் னு முன்கூட்டியே தெரிந்துவிடும் அளவுக்கு நமக்கு பழக்கப்பட்ட கதை அது. அதை தவிர்த்து வேறு புதிய கதை சேர்த்து இன்னும் சுவாரசியம் சேர்த்திருக்கலாம். அடுத்து இதில் உள்ள ஸ்பெஷல் எனக்கு மிகவும் பிடித்த பேபி சாரா இந்த படத்தில் நடித்துள்ளது. ஆனால் அதன் கதாபாத்திரம் அவ்வளவு நம்பும்படியாக இல்லை. நாயையை தேடி கண் தெரியாத அப்பாவும் சின்ன குழந்தையும் ராத்திரியில் வெளியில் சுற்றுவதும் அவரின் வீட்டார் இருவரையும் காணவில்லை என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது எப்படி. பேபி சாரா தன் கண் தெரியாத அப்பாவை நாடு இரவில் தனியாக விட்டுட்டு ஓடுவது ஏன் அவர் தனியாக பொய் ஒருவரிடம் மாட்டி தப்பித்து மீண்டும் தனியாக பொய் இன்னொருவரிடம் மாட்டிக்கொள்ளும்படி கதை வைத்தது தவிர்த்திருக்கலாம். விதார்த் தன்ஷிகா லவ் ஸ்டோரி அதே பழைய திருட திருடி கதை தான் கடைசியில் ஒருவர் திருந்திடுவார் னு எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

டி.ஆர் ஆடிய அந்த ஐட்டம் டான்ஸ் படத்துக்கு தேவையே இல்லை. படத்தின் பெரிய நெருடல் அது.

படத்தை பார்க்க ஆர்வமாக்குவது முத்துக்குமார் மற்றும் அவர் சேர்ந்து பேசும் சாதி அரசியலும் அதிகார வர்க்கம் அரசியல்வாதிகள் போலீஸ் போன்றோர் செய்யும் தவறுகளை தைரியமாக சொல்லிய விதம் தான்.

படத்தின் கடைசி காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. படம் முடிந்து வெளி வரும்போது ஒரு நல்ல தைரியமான இயக்குனரின் படைப்பை பார்த்துவிட்டோம் ஒன்று ஒரு மன நிம்மதியும் இவ்வளவு நடக்கிறது நம்மால் என்ன செய்ய முடிகிறது என்ற ஆற்றாமையும் கண்டிப்பாக ஏற்படும்...

நான் இன்று படம் பார்த்தபோது என்னோடு சேர்ந்து 20 பேர் தான் படத்தை பார்த்தனர். இது போன்ற நல்ல படைப்புகள் கண்டிப்பாக மக்க்களிடம் போய் சேர வேண்டும். நல்ல படம் வரும்போது அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும். பெரிதாக மார்கெட் செய்யப்படும் மொக்க படங்களை மட்டும் பார்த்துவிட்டு தமிழ் படம் நல்லாவே எடுக்கிறது இல்லை ன்னு பொலம்புறது தான் நம்ம மக்களின் வேலை. இனியாவது நல்ல படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆதரவு தருவோம்.

விழித்திரு தூங்கி கொண்டிருக்கும் நம்மை விழித்துக்கொள்ள செய்யும் ஒரு நல்ல முயற்சி கண்டிப்பாக தியேட்டர் சென்று பாருங்கள்.


20/06/2015

ரஜினி என்னும் மகா அரசியல்வாதி


அனைவருக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு  பதிவு போடும் எண்ணம் வந்தது என்ன போடலாம் என்று யோசித்த பொது ரஜினி ரசிகன் ஒருவன் ரஜினிக்கு எழுதிய ஒரு கடிதம் என் கண்ணில் பட்டது சரி அதையே பதிவாக போடுகிறேன். படித்துவிட்டு சிந்தியுங்கள். 
2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்.

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை
நான் நிச்சியமாக எழுதவில்லை.
உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.
உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.
நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.
ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். "சூப்பர் ஸ்டார்" என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை.
என்னுடைய கேள்வி இதுதான்....நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?
நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, 'பகுத்தறிவாளர்கள்' என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா?
ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே ...சாட்சாத் நீங்கள்தான்.
"அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா" என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான்.
நீங்களே கதை,வசனம் எழுதிய "பாபா" படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை
சொன்னது நீங்கள்தான்.
கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார்.
நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார்.
ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன?
"நான் ஆன்மிகவாதி", "தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்", "இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்" என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த 'இமயமலை' அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.
"இமயமலை"யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்?
இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம்.
ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன?
நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன்.
நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை...கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய்.
1991 - இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் "ஆசிரமம்" என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன்.
அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று.
சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள்.இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்...உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று.
TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.
"அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்" என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி.
சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை "ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்" என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா?
தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் "பிம்பங்கள்" எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார்.
முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன?
சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.
அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன்.
நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா?
சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே..
அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை?
"என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". - படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா?
சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்?
எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா?
"பாட்ஷா" படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள்.
உங்கள் பதில் "ஆம்" என்றால்,
அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள்.
ஆனால், எனது இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.
எதோ "எந்திரன்" விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் "ராணா" படத்தில், டைட்டில் பாடலில் தமிழ் மக்களுக்கு நீங்கள் என்னவேண்டுமானாலும் தருவீர்கள் போன்ற வரிகள் இருக்கும்.
இனி,இதுபோன்ற ,வழக்கமாக உங்கள் படங்களின் "டைட்டில்" பாடல்களில் வரும் 'வாழ வச்சது தமிழ்ப்பால்', 'அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' போன்ற அர்த்தமற்ற, அனாவசிய வார்த்தைகளை தவிருங்கள். வசனங்களிலும் அவ்வாறே.
மேடைகளில், வார்த்தைக்கு வார்த்தை "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே" என்று முழங்குவதை நிறுத்துங்கள். வேண்டுமானால்,
"என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களே" என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த 'பிசினஸ்''க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார்.
வழக்கம்போல,"எந்திரன்" சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறோம்.
பின் குறிப்பு : Chennai , Karnataka , Dubai, Coimbatore , Singapore , Australia யில் உள்ள ரஜினி சொத்துகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10,000 கோடி
இப்படிக்கு,
தமிழ்நாட்டு பொதுமக்
கள் சார்பாக,
உங்கள் ரசிகர்களில் ஒருவன். 

28/07/2014

சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் இளைய தளபதியே போதும்


அனைவருக்கும் வணக்கம் நான் பதிவு எழுதி பல  ஆகிவிட்டது. வேலை காரணமாக இணையத்தின் பக்கமே வரமுடியவில்லை இப்பொழுது தான் நேரம் கிடைத்துள்ளது அதனால் தான் இந்த  முடிவு. நீ பதிவு எழுதாததால் என்ன இப்போது மூழ்கிவிட்டது என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக புரிகிறது. நான் பதிவு எழுதாததால் என் வாசகர்கள்(???) ஆழ்ந்த சந்தோஷத்தில் மன்னிக்கவும் வருத்தத்தில் இருப்பதாக கேள்விபட்டேன் அதனால் இப்போதே அவர்களுக்கு இன்பம் அளிக்கவே இந்த பதிவு. மொக்கை போட்டது பொது எதையாவது ஆரம்பின்னுலாம் திட்ட கூடாது இதோ உங்களுக்காக இந்த படைப்பு(???)....



வழக்கம் போல இளைய தளபதி விஜய் பற்றி தான் இந்த பதிவு. பிடித்தவர்கள் மேலும் தொடரலாம் பிடிக்காதவர்கள் நிறுத்திகொள்ளுங்கள். பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள் தான் ஆர்வமாக படிப்பீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் ஏன் என்றால் நீங்கள் எதிர்த்து தானே விஜயை இந்த அளவுக்கு வளர வைத்துள்ளீர்கள். பிடிகாதவரையும் வளரச்செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அல்லவா நீங்கள் உங்களுக்காகவும் விஜய்யின் ரசிகர்களுக்காகவும் தான் இந்த பதிவு இனி பதிவுக்கு செல்லலாம்...

வேலைகள் காரணமாக பதிவு எழுதமுடியாவிட்டாலும் விஜய் பற்றிய செய்திகளை அவ்வப்போது தெரிந்து வந்துள்ளேன். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது பற்றி குமுதம் நடத்திய மெகா சர்வேயில் விஜய் வென்றதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைதேன். அதன் பிறகு அரசியலில் தோல்வியடைந்த தலைவர்கள் எந்த பட்டனை அழுத்தினாலும் அவர்களுக்கே ஒட்டு பதிவு ஆவது போல எந்திரத்தை அமைத்துவிட்டார்கள் அல்லது கள்ள ஒட்டு போட்டு வென்றுவிட்டார்கள் என்று தோல்விக்கு ஆறுதலாக எதாவது நொண்டி சாக்கை சொல்வது போல விஜய் ஜெயிக்கவில்லை தவறாக அறிவித்துவிட்டார்கள் என்று வயித்தெரிச்சலில் தோல்வி அடைந்தவர்கள் கிளப்பிவிட்டதை கேள்விப்பட்டு இன்னும் அதிகமாக சந்தோஷமடைந்தேன்.
ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜயை அறிவிப்பதற்கு வேலைகள் நடக்கிறது என்றும் அதற்கு விஜய் நடிகர்களை அழைகிறார் என்றும் செய்திகள் வளம் வந்தன. வழக்கம் போல விஜயை உயர்த்துவதாக எது நடந்தாலும் வாலண்டியராக ஆஜராகும் ஜெயலலிதாவும் விழா நடக்க கூடாது என்று தடை போட்டது. ஜெயா விஜய்க்கு எதிராக நடப்பதாக நினைத்து செய்யும் செயல்கள் எதோ ஒரு விதத்தில் விஜய்க்கு நன்றாக ஆதரவாக அமைந்துவிடும் அவற்றில் இதுவும்  ஒன்று. விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பதே என் கருத்து. விஜயும் தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பது போல தான் விஜய் விருதுகள் வழங்கும் விழாவில்   பேசினார். விஜயின் அன்றைய பேச்சு மிக தெளிவாக இருந்தது என்பது அனைவரும் அவரது பேச்சுக்கு கொடுத்த கைதட்டல்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். விஜய் இதுவரை இவ்வளவு தெளிவாக  பேசியது இல்லை.

எனவே நான் முதலிலே சொல்லியது போல இந்த பதிவு விஜய் ரசிகர்களுக்கு தான். விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற வேண்டும் என்று பல விஜய் ரசிகர்களும் நினைகிறார்கள். அதில் என்ன தவறு தனக்கு பிடித்த நடிகன் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு தானே என நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை தான்  அனால் அந்த முதல் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுவதில் தான் இருக்கிறது  என்று நினைப்பது தான் தவறு. ரசிகர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் பட்டம் என்பது வேறு அடையாளம் என்பது வேறு. பட்டம் என்பது ஒரு மனிதனை சிறப்பிப்பது அடையாளம் என்பது ஒரு மனிதனால் தன் சிறப்பாக உருவாக்கபடுவது. சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு அளிக்கப்பட்ட பட்டம் இல்லை அது ரஜினியால் உருவாக்கப்பட்ட சிறப்பு அடையாளம் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சூப்பர் ஸ்டார் பட்டதினால் ரஜினிக்கு பெறுமை இல்லை ரஜினியால் தான் அந்த பட்டத்துக்கு பெருமை அதனால் தான் இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுகொண்டவர் யாராக இருந்தாலும் அவர் ரஜினியின் சிறப்புகள் அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள் இல்லை.



இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் என மக்களால் எதிர்பார்க்கப்படும் இருவர் விஜயும் அஜித்தும் தான். ஆனால் நான் இங்கு விஜயை பற்றி மட்டும் தான் எழுதபோகிறேன் ஏன் என்றால் நான் அஜித்தை பற்றி உண்மையை எழுதினாலும் நான் விஜய் ரசிகன் என்ற ஒரே காரணத்திற்காக என்னிடம் சண்டை போட ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. எனவே நான் இங்கு எழுதபோவது விஜய் பற்றி மட்டும் தான். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த போது அவருடைய பட்டம் அவ்வளவு மதிப்பு மிக்கதாக இல்லை. ஏன் என்றால் அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் இருந்தனர் அதை போல ரஜினி தமிழகத்தின்   சூப்பர் ஸ்டார் அவ்வளவு தான் ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் என்றாலே இந்தியாவில் ரஜினி மட்டும் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் உயர்ந்துள்ளார். அதனால் தான் இன்று பலர் ரஜினியின் அடையாளத்தை பெற விரும்புகின்றனர். ரஜினியின் அடையலாம் என்பது அவரது சூப்பர் ஸ்டார் பட்டமோ அல்லது அவரது நடிப்பு ஸ்டைலோ இல்லை அவரின் திரையுலக சாதனை தான். சினிமாவை தவிர்த்து ரஜினி தனி மனித வாழ்கை பற்றி நிறைய பேசுக்கள் இருந்தாலும் சினிமாவில் அவர் ஒரு ஜாம்பவான் என்பது அனைவரும் ஒத்துகொள்ளும் உண்மை. ரஜினிக்கு முன்னால் சினிமாவில் ஒரு ஜாம்பவான் இருந்தார் அவர் எம்.ஜி.ஆர். ரஜினி எம்.ஜி.ஆர் போல நடிக்க வேண்டும் என்றோ அவரின் மக்கள் திலகம் என்ற பட்டதை அடைய வேண்டும் என்றோ நினைக்கவில்லை. தனக்கென ஒரு அடையாளத்தை எற்ப்படுதினார். தனக்கென ஒரு பாதை வகுத்தார் வெற்றியும் பெற்றார் சிகரத்தை அடைந்தார். எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியை ரஜினியும் பெற்றார் ஆனால் எம்.ஜி.ஆர் சென்ற அதே பாதையில் சென்று அல்ல வேறு பாதையில் சென்று பெற்றார். ஆனால் இன்று ரஜினி அடைந்த உயரத்தை அடைய விரும்பும் நடிகர்களும் சரி அந்த நடிகர்களின் ரசிகர்களும் சரி ரஜினி சென்ற அதே பாதையில் சென்றால் தான் அந்த வெற்றியை பெற முடியும் என்று நினைகிறார்கள் அது தவறு என்பதை நடிகர்களும் சரி அவர்களின் ரசிகர்களும் சரி புரிந்து கொள்ளவேண்டும். மற்ற நடிகர்களை பற்றி எனக்கு கவலை இல்லை நான் குறிப்பாக சொல்வது விஜய்க்கும் அவரின் ரசிகர்களுக்கும் தான்.

அன்று ரஜினி தனக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்   பட்டதை பல சாதனைகள் மூலம் தனக்கான சிறப்பு அடையாளமாக மாற்றினார். அதனால் தான் இன்று பலரும் அவரை போன்று வரவேண்டும் என்று நினைக்கவைக்கும் அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார் . அதே போல நேற்று ரசிகர்கள் உங்களுக்கு கொடுத்த இளைய தளபதி என்ற பட்டதை உங்களுக்காக தனி சிறப்பு அடையாளமாக மாற்றுங்கள் அடுத்த இளைய தளபதி யார் என்று மக்கள் நினைக்க வைக்கும் அளவிற்கு திரையுலகில் உங்கள் சாதனை அமைய வேண்டும். ரஜினி அடைந்த அந்த சிகரத்தை நீங்கள் அடைவதற்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவை இல்லை  ரஜினியை போன்றே நடிக்க தேவை இல்லை அவரின் பாதையிலேயே நீங்கள் செல்ல தேவை இல்லை உங்களுக்கென ஒரு தனி பாதை அமைத்து முன்னேறுங்கள் நிச்சயம் சிகரத்தை அடைவீர்கள் இதை விஜய் மற்றும் அவரின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.