Pages

17/01/2014

ஜில்லா வீரம் விமர்சனம்


பல வருடங்களுக்கு பிறகு விஜயும் அஜித்தும் இந்த பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதியுள்ளனர். விஜயின் ஜில்லாவும் அஜித்தின் வீரமும் 10 ஆம் தேதியன்று ஒன்றாக ரிலிஸ் ஆகியது. வழக்கமாக விஜய் அஜித் மொதும்பொதெல்லம் விஜய் வென்று விடுவார் போக்கிரி-ஆழ்வார், திருமலை-ஆஞ்சநேயா என விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது ஆனால் இந்ததடவை சற்று மாறியிருக்கிறது. வழக்கமாக விஜய் அஜித் மோதும்போது அஜித் படம் மொக்கையாக தோல்வி அடையும் இந்ததடவை விஜய் படம் மொக்கையாக தோல்வி அடையவில்லை ஆனால் அஜித்தின் வீரத்துடன் விஜய்யின் ஜில்லா சற்று பின் தங்கி இருக்கிறது. பொங்கல் ரேசில் விஜயை அஜித் சற்று முந்தியுள்ளார். என்னுடன் சேர்த்து விஜய் ரசிகர்கள் சிலருக்கு ஜில்லாவை விட வீரம் மிகவும் பிடித்துள்ளது.

இப்போது விமர்சங்களை ஒப்பீட்டளவில் பார்ப்போம்.

ஜில்லா 



மதுரையில் ஏற்கனவே தாதாவாக இருக்கும் ஒருவரை போட்டுத்தள்ளிவிட்டு மதுரையின் ஒரே தாதாவாக மாறுகிறார் மோகன்லால். அவர் மனைவியின்  காப்பாற்றிய விஜயை தத்துப்பிள்ளையாக ஏற்றுகொள்கிறார் மோகன்லால். மோகன்லால் மனைவியை காப்பாற்றும்போது தன் தந்தையை போலிஸ் ஒருவர் கொன்றதால் போலிசை வெறுக்கிறார் விஜய். மோகன்லாலுடன் சேர்ந்து அடிதடிகளை செய்கிறார். ஒருகட்டத்தில் போலிசால் மோகன்லாலுக்கு பிரச்சனை வர விஜயை போலிசாக மாற்றுகிறார். அதுவரை தன் அப்பா செய்பவை எல்லாம் நல்லது என்று நினைத்த விஜய் போலிசாக மாறியவுடன் ஒரு விபத்தின் பொது தன தந்தை செய்வது தவறு என உணர்ந்து அவரை திருத்த முயல்கிறார். நடுவில் டுவிஸ்ட் என்று ஒன்று வைத்திருகிறார்கள் அது ஒன்றும் அவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இல்லை. வேகமான திரைக்கதையுடன் முதல் பாதியும் சற்று மெதுவான திரைக்கதையுடன் இரண்டாம் பாதியுமாக ஒரு முறை பார்க்கும் அளவில் வந்திருகிறது ஜில்லா.

வீரம் 



தன் தம்பிகளுடன் கலகலப்பாக கல்யாணமே வேண்டாம் என்று வாழ்ந்து வரும் அஜித். தன் அண்ணனுக்கு எப்படியாவது கல்யாணம் செய்துவைகவேண்டும் என்று அவரது தம்பிகள் நினைத்து சந்தானத்தின் உதவியுடன் தமன்னாவை தங்கள் வீட்டின் பக்கத்தில் தங்கவைகிரார்கள்.
இதற்கு இடையில் லோக்கல் ரௌடி ஒருவனுடன் மோதுகிறார் அஜித். ஒருகட்டத்தில் அஜித்தும் தமன்னாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். தமன்னாவின் அப்பா அஜித்தை பார்க்கவேண்டும் என்று கூற அஜித் தமன்னா வீட்டில் தங்குகிறார் அப்போது தான் தெரிகிறது தமன்னாவின் குடும்பத்துக்கு ஒருவனால் ஆபத்து இருக்கிறதென்று. தமன்னாவின் குடும்பத்தை அஜித் காப்பாற்றுவது தான் வீரம் படத்தின் கதை. முதல் பாதி முழுக்க சந்தானத்தின் காமெடி இரண்டாவது பாதி வேகமான திரைகதை என்று நல்ல பொழுதுபோக்கு படமாக வந்திருகிறது வீரம்.

நேசன்   

ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனரின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் நேசன் இந்த படத்தின் வெற்றிக்கு முழுக்க விஜயை மட்டுமே நம்பியிருக்கிறார் என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. மோகன்லால்,காஜல்,பூர்ணிமா,சூரி, தம்பிராமையா என நட்சத்திர பட்டாளத்தையே புக் செய்த இயக்குனர் விஜயை மட்டுமே படம் முழுக்க பயன்படுதிருகிரார். விஜயை வைத்தே காமெடி சீன் எடுப்பதற்கு சூரியை ஏன் புக் செய்யவேண்டும்?... நான்கு சீன்களிலும் பாடலுக்கும் மட்டும் வருவதற்கு ஹீரோயினுக்கு எதற்கு தேவையே இல்லாமல் சம்பளம் கொடுக்கவேண்டும்?... எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுக்க கத்திக்கொண்டு மட்டுமே இருப்பதற்கு மோகன்லால் எதற்கு?... இந்த படம் பாக்ஸ் ஆபிசில் தப்பித்து தயாரிப்பாளர் கையை கடிக்காமல் விட்டதற்கு முழு காரணம் விஜய் மட்டுமே. விஜய் இல்லையென்றால் முதல் வாரத்தில் இவ்வளவு வசூல்(44 கோடி) கண்டிப்பாக வந்திருக்காது.இயக்குனர் தனக்கு கொடுத்த வாய்ப்பை வீனடிதிருகிரார்.

சிவா

ஏற்கனவே சிறுத்தை என்ற சுமார் படத்தை கொடுத்த இயக்குனர் அஜித்தை வைத்து சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். முதல் பாதி முழுக்க சந்தானத்தின் காமெடியை காட்டி நடுநடுவே அஜித்தை காட்டியுள்ளார். இரண்டாம் பாதி முழுக்க அஜித்தை நன்றாக பயன்படுத்தி உள்ளார். முன் பாதி மெதுவாக சென்றாலும் காமெடியை வைத்து மேனஜ் செய்துள்ளார். இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் அதிரடி கலந்த இவரது திரைகதை பிரம்மிக்க வைக்கிறது. அஜித் படங்களில் வழக்கமாக இல்லாத காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளை சேர்த்து வெற்றிப்படமாக மாற்றியுள்ளார் சிவா.

விஜய்  




உன்ன மாதிரி ஊருக்கு ஒருவன் இருந்தால் தப்பே நடக்காது என்று சொல்லும் ஒருவரிடம் தப்பு நடக்க கூடாதுன்னு அடிகல தப்பு நடக்கணும் அத நாங்க மட்டும் தான் பண்ணும்னு அடிக்கிறேன்னு சொல்வதில் ஆரம்பித்து படம் முழுக்க தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கட்சிதமாக செய்துள்ளார். சண்டை காட்சிகளில் விஜய்யின் முகபாவனைகள் அபாரம். மோகன்லாலிடம் அடங்கிபோகும் இடங்களிலும் எதிரிகளை துவைத்து இடக்கும் இடங்களிலும் விஜய்யின் நடிப்பு நன்றாக உள்ளது. படத்திற்கு படம் இளமையான தோற்றமாக காட்சியளிப்பது இவரின் கூடுதல் பிளஸ். ஒரு காட்சியில் தோள்பட்டையை ஒரு பக்கமாக தூக்கிக்கொண்டு நடக்கும் காட்சி பார்பதற்கு கேவலமாக உள்ளது. இது போன்ற காட்சிகள் தேவையற்றது. மேலும் சில இடங்களில் மீண்டும் குரலை இழுத்து பேசும் பழைய ஸ்டைலை பின் பற்றியுள்ளார் தயவுசெய்து அதை விட்டுவிடுங்கள் சுத்தமாக நன்றாக இல்லை.

அஜித்


 

இந்த மாதிரியான நடிப்பை அஜித் இவ்வளவு நாளாக எங்கு வைத்திருந்தார் என்று தெரியவில்லை. வழக்கமாக இவர் படம் முழுவது உம்மென்று எதோ தனிப்பட்ட மனிதரை போன்றும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் இவருக்கும் பெரிய ஒரு இடைவெளி இருப்பது போன்று தோன்றும். அதானால் தான் அஜித்திற்கு குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் இதில் எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இறங்கி அடித்திருக்கிறார். குழந்தையிடம் அஜித் பேசும் காட்சி மற்றும் தமன்னாவிடம் பேசும் காட்சிகள் அஜித் ரசிகர் அல்லாதோரையும் கவர்ந்த காட்சிகளாகும். கோட் சூட் போட்டு எப்போதுமே உம்மென்று நடிப்பதை விடுத்தது இம்மாதிரியான கலகலப்பான வேடங்களில் நடித்தால் இதுவரை இல்லாத சிறுவயது ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அஜித்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இம்மாதிரியான கலகலப்பான வேடங்களில் நடிப்பதை தொடருங்கள் அஜித். சால்ட் அண்ட் பேப்பர் லுக் இந்த படத்திற்கு தேவையே இல்லாதது. தமன்னாவுடன் ஆடும் பாடல் காட்சிகளில் தாத்தா பேத்தி மாதிரி இருக்கிறது. தயவுசெய்து இந்த கெட்டப்பை மாற்றுங்கள்.

வசூல்

ஜில்லா படத்தின் முதல் நாள் வசூல் 11.25 கோடி

வீரம் படத்தின் முதல் நாள் வசூல் 9.35 கோடி 

எனது மதிப்பெண்

 ஜில்லா :   50/100

 வீரம்      :   60/100

11 comments:

  1. என்ன சோனமுத்தா போச்சா?ஒரேடியா சரண்டர் ஆயிட்டேயே தம்பி .ஆனா கடைசியா சுட்டுறிக்கையே ஒரு வசூல் வடை அது ரொம்ப கருகி மபாயிருக்கு தம்பி

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நான் சிலரை போல சுமாரான படத்தை எனக்கு பிடித்த நடிகரின் படம் என்பதற்காக சூப்பர் என்று சொல்பவன் இல்லை. உண்மையிலேயே ஜில்லாவை விட வீரம் எனக்கு பிடித்திருந்தது அதை தான் எழுதியிருக்கிறேன்.

      அண்ணே ஜில்லா முதல் நாள் 11.25 கோடி வீரம் 9.35 கோடி. வார இறுதியில் ஜில்லா 44 கோடியும் வீரம் 40 கோடியும் வசூலித்துள்ளது. இது நானாக கணகெடுத்து எழுதியது இல்லை தல தளபதி படம் ரிலிஸ் என்றதும் இருவரின் வசூல் எவ்வளவு என்று ஆராய்வதற்காகவே உள்ள பலரும் சொல்லியது தான். பல இணையங்களும் சினிமா வசூல் விவரம் நன்கு அறிந்த ஸ்ரீதர்பிள்ளை போன்ற சிலரும் சொல்லியது தான் இது. பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களிலும் இந்தியாவில் ஜில்லா வீரம் முதல் வார இறுதி வசூலை வெலியிட்டிருகிரார்கல் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அவ்வளவு ஏன் அஜித் சார்பு தளமான tamiloneindia வும் இதை உறுதி செய்துள்ளது. இருந்தும் இல்லை நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன் என்று நீங்கள் சொன்னால் உண்மையான வசூல் வெளியிடும் தளம் எது என்றும் ஜில்லா வீரம் இரண்டில் முதல் நாள் வசூல் எவ்வளவு என்று நீங்கள் சொல்லுங்கள் நான் தெரிந்துகொள்கிறேன்.

      Delete
    2. இந்த பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் எங்க இருக்கு தம்பி உசிலம்பட்டி ஆன்டிபட்டி பக்கமா தம்பி அந்த வட்டாரத்துக்கு விட்டம் ஆரமெல்லாம் இருக்கா?

      Delete
    3. தம்பி அந்த சிவாவோட பதிவுல நான் குறி வச்சது உன்னை போன்ற விஜய் ரசிகர்களை இல்லை நீ ஏன் குறுக்க வந்நது விழுற?

      Delete
    4. "இந்த பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் எங்க இருக்கு தம்பி உசிலம்பட்டி ஆன்டிபட்டி பக்கமா தம்பி அந்த வட்டாரத்துக்கு விட்டம் ஆரமெல்லாம் இருக்கா?"

      ப்ப்ப்பாஆஆ செம காமெடி அண்ணே சத்தியமா என்னால சிரிக்காம இருக்க முடியலனே....

      Delete
    5. அண்ணே மசாலா படங்கள் கிளாசிக் படங்கள் இரண்டும் பிடிக்கும் சிலருக்கு மசாலா படங்கள் மட்டும் தான் பிடிக்கும் கிளாசிக் படங்கள் பிடிக்காது சிலருக்கு கிளாசிக் படங்கள் மட்டும் தான் பிடிக்கும் மசாலா படங்கள் பிடிக்காது. வீரம் படத்தை நன்றாக இல்லை என்று சொல்பவர்கள் மசாலா படங்கள் பிடிக்காதவர்களாக இருக்கலாம் அதில் தவறொன்றும் இல்லையே உங்களுக்கு மசாலா படங்கள் பிடிக்கும் என்பதற்காக அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியுமா?...
      அவர்கள் நன்றாக இல்லை என்பதால் வீரம் தோல்வி அடைய போவது இல்லை தமிழ் நாட்டில் சிலருக்கு மட்டும் தான் மசாலா படங்கள் பிடிக்காது பலருக்கு பிடிக்கும்... பிடிக்காத சிலரை தவறு என்று சொல்வது என்ன நியாயம்?

      Delete
  2. தம்பி நீ சொன்ன பயபுள்ளைங்க எல்லாம் ஊர்ஊரா போயி தியேட்டர் வாசல்ல நின்னு கணக்கு போட்டு சொல்றானுகளா.... இது சாத்தியமா தம்பி ... காச உதறி விட்டா ஆயிரம் காககா தம்பி ... இதையெல்லாம் யோசிக்காமல் நம்பும் உன்னை போன்ற ஆட்கள் இருக்கும் வரை இந்த காக்கைகளின் காட்டில் அடைமழைதான்

    ReplyDelete
    Replies
    1. அண்ணே இதன் மூலம் தாங்கள் சொல்லவருவது என்ன இதுவரை வெளியான படங்களுக்கு வெளியிட்ட வசூல் கணக்கெல்லாம் ஊர் ஊராக போய் சேகரித்த தகவல் தானா?

      ஸ்ரீதர் பிள்ளை பிரபல விமர்சகர் மற்றும் படங்களின் வசூல் கணக்கை வெலிடுபவர். மற்ற இணையதளங்களும் அப்படிதான். தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் ஸ்ரீதர்பிள்ளை மற்றும் இந்தயதலங்கலில் விஜய் தரப்பு சென்று வீரம் படத்தை விட ஜில்லாவுக்கு அதிக வசூல் என்று வெளியிடுங்கள் என்று சொன்னார் ஆதனால் தான் என்கிறீர்களா?

      அப்படியானால் பொது தளம் என்று ஒன்று கூடவா இல்லை அவையாவது வீரம் ஜிலாவை விட அதிக வசூல் என்று வெளியிட வேண்டுமே அப்படி ஏதும் இல்லையே. சரி அதை விடுங்கள் அஜித் சார்பு தளங்கள் நிறைய இருக்கின்றனவே அவை கூட வெளியிட வில்லையே நான் முன்னரே சொன்னது போல tamiloneindia இணைய தளம் முழுக்க அஜித் சார்பு தளம் தான் நீங்கள் அவர்கள் வெளியிடும் பதிவுகளை பார்த்தல் நன்றாக புரியும் அல்லது உங்கள் நண்பர்கள் யாரவது அதற்கு வாசகர்களாக இருந்தால் கேளுங்கள் அப்போது தெரியும். அவர்களே இதை உறுதி செய்திருகிறார்கள். இதையாவது நம்புவீர்களா அல்லது அதையும் விஜய் தரப்பு காசு கொடுத்து மாற்றிவிட்டது என்று சொல்லுவீர்களா அப்படி அணைத்து தளங்களையும் விஜயால் விலைக்கு வாங்க முடியும் என்றால் எல்லா தளத்திலேயும் ஜில்லா வீரத்தை விட நன்றாக ஓடுகிறது என்று பொய்யாக எழுத வைத்து இருக்கலாமே.

      இதை எல்லாம் விடுங்கள் நாங்கள் பல ஆதரங்களுடன் சொன்னாலும் நீங்கள் நம்பபோவது இல்லை நீங்கள் சொல்லுங்கள் பொதுவான தளம் எது உண்மையான வசூல் விவரம் வெலிய்டும் தளம் எது என்று அதை பார்த்து நாங்கள் தெரிந்து கொள்கிறோம். சிபி, பிஹைன்வூட், ஐஎம்டிபி, என்று எதை சொன்னாலும் என்னவோ அந்த தளங்கள் எல்லாம் விஜய்க்கு மட்டுமே சப்போர்ட் செய்வது போலவும் அஜித்துக்கு பரம எதிரி போலவும் எல்லாம் இடங்களிலும் கம்மென்ட் செய்து வருகிறீர்கள் நீங்கள் சொல்லுங்கள் எந்த பிரபல பொது தளம் உணமையான வசூல் கணக்கை வெளியிடுகிறது அல்லது எதை சொன்னால் நீங்கள் இந்த தளம் உண்மை என்று நம்புவீர்கள் சொல்லுங்கள் அண்ணே....

      Delete
  3. தம்பி நான் சொல்றது உனக்கு உண்மையிலேய புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறையா ஒரு படத்தோட வசூலை கணக்கிடுவது சாத்தியமானதுதானா?

    ReplyDelete
    Replies
    1. அண்ணே உங்களுக்கு தான் புரியவில்லை ஒரு படத்தின் வசூலை ஒரு சாதாரண ரசிகனால் கண்டிப்பாக கணக்கிட முடியாது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்கள் போன்றவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் அப்படி தெரிந்த வினியோகிஸ்தர் மூலமாக தெரிந்துகொண்டு தான் சில இணையதளங்கள் மற்றும் ஸ்ரீதர்பிள்ளை போன்றவர்கள் வெளியிடுகிறார்கள். ஒரு படத்தின் வசூலை கணக்கிடுவது சாத்தியம் இல்லை என்றால் இதுவரை ரிலிஸ் ஆனா படங்களின் வசூல் கணக்குகள் யாருக்கும் தெரியாமலா இருக்கும் தயாரிப்பாளர் மற்றும் வினியோகிஸ்தர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் அப்படி ஒரு படத்தின் வசூல் கணக்கு தெரியாமல் அந்த படத்தை ஹிட் என்றோ ப்ளாப் என்றோ சொல்லவே முடியாது. இதுவரை ரிலிஸ் ஆனா படங்களின் வெற்றி தோல்வி எல்லாம் அவற்றின் வசூல் கணக்கையும் வைத்து தான் சொல்லப்பட்டது. மற்ற படத்திற்கெல்லாம் அது சாத்தியம் என்றால் ஜில்லா வீரம் படத்திற்கு மற்றும் எப்படி அண்ணே சாத்தியம் இல்லாமல் போகும்???

      Delete
  4. All the best.... Read your articles. You got good decency.

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்