சமீபத்தில் விஜய் டிவிட்டரில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்துகொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஒரு அஜித் ரசிகர் விஜயிடம் அவதூறாக பேசியிருக்கிறார். அதை கண்ட அவரது ரசிகர்கள் ஆத்திரத்துக்கு உள்ளாயினர். உடனடியாக மக்கள் இயக்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நபரின் வீடு முற்றுகையிடப்பட்டது அவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார் அவரது பெற்றோர்கள் தங்கள் மகனை விட்டுவிடும்படி கெஞ்சினர். பின் தகவல் அறிந்த விஜய் அந்த நபரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று சொல்லியபின்னர் அந்த நபர் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து விஜய் அந்த நபரை மன்னித்தாலும் விஜய் ரசிகர்கள் மன்னிப்பதாக இல்லை அந்த நபரின் புகைப்படம் மற்றும் அவரது வீட்டு முகவரி போன்றவற்றை சமூக வலை தளங்களில் வெளியிட்டு அவதூறாக திட்டி வருகிறார்கள். அந்த நபரை மட்டும் அல்லாமல் அஜித் தன் ரசிகர்களுக்கு இததகைய நாகரீகத்தை தான் சொல்லிதந்திருகிரார். தன் திரைப்படங்களில் நெகடிவ் ரோலில் நடித்து கெட்டவார்த்தைகள் பேசி நாம நல்ல இருந்த போதும் எத்தனை பேரை வேணுன்னாலும் கொள்ளலாம் போன்ற தவறான வசனம் பேசி நடித்து அதையே தன் ரசிகர்களும் பின்பற்ற செய்கிறார் என்று அஜித்தையும் தவறாக பேசி வெளியிட்டு இருகிறார்கள்.
இதை அறிந்த விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த நபர் செய்த தவறை மன்னித்துவிடுங்கள் அவர் புகைப்படத்தை பகிர்ந்து திட்டுவதையும் குறிப்பிட்ட நடிகரை( அஜித் ) பற்றி தவறாக பேசுவதையும் நிருந்துங்கல் என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட நடிகர்( அஜித்) எனக்கு போன் செய்தார் தன் ரசிகர் நடந்துகொண்டது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார் நாங்கள் இருவரும் வெகுநேரம் பேசினோம் நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் இருக்கிறோம் எனவே அஜித் ரசிகர்களுடன் மோதுவதை நிருந்துங்கல் என்று விஜய் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதில் சிலவற்றை நாம் கவனிக்கலாம். ஒருவர் ஆன்லைனில் இருக்கும்போது அவரிடம் நேரடியாக தவறாக பேசுவது நாகரீகமற்ற செயல் இதற்க்கு முழு பொறுப்பும் அந்த நபர் தான் என்று சொல்லமுடியாவிட்டாலும் அதிக பொறுப்பெர்க்ககூடியவர் அந்த நபர் தான். அந்த தவற்றுக்கான மீதி பொறுப்பை விஜய்,அஜித்,விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் ஆகியவர்களிடம் பகிர்ந்து அளிக்கலாம். ஆம் இந்த நாகாரீகமற்ற செயலுக்கு காரணமாக இவர்கள் அனைவருமே உள்ளனர். விஜய் அஜித் இருவருமே ஆரம்பத்தில் தங்கள் ரசிகர்கள் போட்டி பொட்டுகொள்வதை விரும்பினர். அவர்களது பேட்டிகளும் ரசிகர்கள் போட்டிபோட்டுகொள்வதர்க்கு ஆதரவாக தான் இருந்தன ஏனென்றால் அப்போது தான் தங்களது படங்கள் ஹிட் ஆகும் தாங்கள் வளர முடியும் என்று நம்பினார். அவர்கள் நிணைதார்போலவே இருவரும் இன்று முன்னனி ஸ்டார்களாக மாறியிருகிறார்கள். அதே போல அவரது ரசிகர்களின் போட்டியும் வளர்ந்துவிட்டது. போட்டியாக இருந்தது இன்று ரசிகர்களிடம் பகைமையாக மாறிவிட்டது. தெருக்களில் சண்டையிடும் அளவிற்கும் தன் நண்பர்களை இழக்கும் அளவிற்கும் எல்லாவற்றிற்கும் உச்சமாக தன் தாய் மற்றும் அக்கா தங்கைகளை இழிவுபடுத்தும் அளவிருக்கும் மாறியுள்ளது.
இன்று சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் விஜயையும் விஜய் ரசிகர்கள் அஜித்தையும் திட்டுவதை தவிர்த்து அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் குடும்பத்தை திட்டுவதையும் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் குடும்பத்தை திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ரசிகர்களின் போட்டியை ஆதரித்த விஜயும் அஜித்தும் இன்று அதை எதிர்த்து சண்டையிடாதீர்கள் என்று சொல்லிவருகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களின் சண்டையை தங்கள் வளர்சிக்காக பயன்படுத்திய விஜயும் அஜித்தும் இன்று நிறுத்த சொல்வதனால் என்ன பயன் அல்லது இப்போது ரசிகர்கள் இவர்களின் பேச்சை கேட்டு நிறுத்திவிடுவார்களா?... ஆபத்தை ஆரம்பத்தில் தங்கள் சுயலாபத்துக்காக வளரவிட்டு இப்போது ரசிகர்களின் செயலால் தங்களுக்கு கெட்டபெயர் வருபோது மட்டும் கைவிட சொல்வது ஏற்புடையது அல்ல.
இனிமேல் சிந்திக்க வேண்டியது ரசிகர்கள் தான் ஆரம்பத்தில் உங்கள் அபிமான நடிகரின் வளர்சிக்காக பாடுபட்டீர்கள் இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். எந்த அளவிற்கு வளந்துள்ளார்கள் என்பது ஜில்லா வீரம் இரண்டு படத்திற்கும் கிடைத்த பிரம்மாண்ட ஒபெநிங்கை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் இனிமேலாவது உங்கள் வளர்ச்சியை பாருங்கள். அந்த நபர் செய்தது தவறு அதற்காக அவர் கைது செய்யப்பட்டார் ஆனால் அவருக்காக விஜய் மக்கள் இயக்கத்திடம் கேஞ்சினார்களே அந்த நபரின் பெற்றோர் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஒரு பிள்ளையை பெத்து படிக்க வைத்து ட்விட்டரில் இது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடும் அளவிற்கு சுதந்திரமாக பாசத்துடன் வளர்த்தது தான் அவர்கள் செய்த தவறா? தன்னை வளர்த்த பெற்றோருக்கு அந்த நபர் தேடித்தந்த பெருமை மற்றவர்களிடம் தன் பெற்றோரை கெஞ்சவைத்தது தான். இதை தானே விரும்புகிறீர்கள் விஜய் அஜித் ரசிகர்களே. இன்று விஜய் ஆன்லைன் வந்தார் அவருக்கு இது நடந்தது இதனால் ஒரு அஜித் ரசிகரின் பெற்றோர் பாதிக்கப்பட்டனர். என்றாவது அஜித் ஆன்லைன் வந்தால் அவருக்கு இது நடக்காலம் அதனால் ஒரு விஜய் ரசிகரின் பெற்றோர்கள் பாதிக்கப்படலாம். கண்டிப்பாக இதனால் விஜயோ அஜித்தோ பாதிக்கபடபோவது இல்லை கேவலமான ரசிகர்களும் அவர்களின் அப்பாவி பெற்றோர்களும் தான் பாதிக்கப்பட போகிறார்கள்.
ரசிகர்களே உங்கள் அபிமான நடிகருக்காக அவரின் படம் பார்ப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் அதை விடுத்தது நடிகருக்காக உழைத்து உங்கள் பெற்றோரை அக்கா தங்கைகளை அசிங்கபடுதாதீர்கள் உங்கள் நண்பரை இழக்காதீர்கள்.