நான் இளையதளபதி விஜயின் தீவிர ரசிகன் அவரது ஒவ்வொரு படம் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது தெரிந்து வைத்துகொள்வேன். ஏற்கனவே துப்பாக்கி என்ற மிக பெரிய 100 கோடி வசூல் செய்த ஹிட் படம் கொடுத்த விஜய்-முருகதாஸ் கூட்டணியில் கத்தி என்று மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. இது என்னை போன்ற அணைத்து விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துவந்தது. அதனால் கத்தி படத்தின் ஒவ்வொரு தகவல்களையும் ஆவலாக படித்து வந்தேன். ஆனால் சமீபத்தில் அதை பற்றி வந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அது உங்கள் கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர் இலங்கையில் பல தமிழ் மக்களை கொன்றுகுவித்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதாகும். இது விஜய்க்கு தெரிந்தோ தெரியாலமலோ நடந்திருக்கலாம் அது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் இப்போது ஈழத்தமிழர்களால் அவர் இலங்கை அரசுக்கு நெருங்கியவர் என்பதற்கு ஆதாரம் தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. இப்போதும் விஜய் அமைதியாக இருப்பது நல்லது இல்லை.
விஜய் அண்ணா...
உங்களை ரசிக்கும் பல தமிழ் மக்களில் நானும் ஒருவன் என்னை போன்று உங்களுக்காக பல தமிழ் மக்கள் உங்களுக்காகவும் உங்கள் வெற்றிக்காகவும் உழைதிருகிறார்கள் அத்தகைய நல்ல உள்ளங்களை நீங்கள் புண் படுத்தலாமா? இந்த படத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஒரு வெற்றி தான் உங்களை இந்த சினிமா உலகில் உயர்த்தி விட போகிறதா? தொடர்ந்து 5 தோல்விகள் கொடுத்தும் உங்களை ஆதரித்திருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். இன்னும் உங்களிடம் அவர்கள் தொடர்ந்து வெற்றியை மட்டுமே எதிர்பார்கவில்லை நீங்கள் படம் நடித்தால் மட்டுமே அதை பார்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது அத்தகைய அன்பு ;உள்ளங்களை ஒரு வெற்றி படத்திற்காக நீங்கள் புண்படுத்துவது நியாயம் ஆகாது? இணையங்களில் வரும் உண்மை தான் என்றால் உடனடியாக நீங்கள் அந்த படத்தின் தயாரிப்பை வேறு ஒருவரின் கைக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் அப்படி முடியவில்லை என்றால் படத்தை விட்டு விலகுங்கள். உங்களுக்கு இழப்பு ஒரு படம் மட்டுமே ஆனால் நீங்கள் அப்படி செய்தால் கோடிகணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களை நீங்கள் அடைவீர்கள் இத்தனை நாள் உங்களை தவறாக பேசிய உங்கள் எதிர்பாளர்களும் உங்களை நேசிக்க இது வழி வகுக்கும். ஒரு படத்தை இழந்து இவை அனைத்தையும் அடையலாம்.
அப்படி இல்லாமல் ஒரு வெற்றி படம் தான் உங்களுக்கு முக்கியம் என்றால் பல தமிழ் ரசிகர்களை இழக்க நேரிடும். அந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தொடர்ந்து அந்த படத்தில் நடிப்பது எங்களின் மனதை புண் படுத்துவதற்கு சமம். சிந்தியுங்கள் உங்கள் மனைவி ஒரு இலங்கை தமிழச்சி என்பதை தெரிந்தபோது நான் மகிழ்ச்சியடைதேன். நான் ஏன் இலங்கை தமிழருக்கு அதரவாக பேச வேண்டும் என்று அஜித் போன்ற சில நடிகர்கள் கேட்டதற்கு மத்தியில் நீங்கள் தமிழருக்காக கூட்டம் போட்டு இலங்கை அரசை பார்த்து சவால் விட்டபோது நான் பெருமையடைந்தேன். ஆனால் இன்று என்னவாயிற்று ஏன் இந்த தயக்கம் முருகதாசின் ஒரு படத்தை மட்டும் நம்பி நீங்கள் இல்லை. உங்களுக்காக கோடிகணக்கான ரசிகர்கள் இருகிறார்கள். அவர்களின் மனதை புரிந்து செயல்படுங்கள். அமைதியாக இருந்து எதிர்கொள்வதற்கு உங்களின் எதிரிகள் உங்களை எதிர்கவில்லை மாறாக உங்கள் ரசிகர்கள் உங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்கிறார்கள். இப்போதும் அமைதி காப்பது ரசிகர்களை அவமானபடுத்தும் செயல். உங்களை நாங்கள் இலங்கைக்கு எதிராக போராட சொல்லவில்லை தமிழரின் உணர்வுக்கு எதிராக செயல் படாதீர்கள் என்று தான் சொல்கிறோம். இது என்னை போன்ற பல ரசிகர்களின் ஆசை.
நிறைவேற்றுங்கள் அண்ணா இல்லையெனில் உங்களின் ஒரு ரசிகனை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று நினைத்துகொள்ளுங்கள். நான் ஒருவன் உங்களை எதிர்த்தால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வரபோவது இல்லை ஆனால் என்னை போன்ற பல ரசிகர்கள் உங்களுக்கு இருகிறார்கள் அவர்கள் அனைவரும் இதே முடிவை எடுத்தால் உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனை சிந்தித்து பாருங்கள் இது உங்களை மிரட்டி அடிபணியவைக்கும் முயற்சி இல்லை உங்கள் ரசிகர்களின் அன்பு வேண்டுகோள் நிறைவேற்றுங்கள் அண்ணா...
உங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்...
முருகதாஸ் சார் ஏழாம் அறிவில் நீங்கள் காட்டிய தமிழ் உணர்வுகள், தமிழ் உணர்ச்சி வசனங்கள், ஈழத்தமிழருக்கு ஆதரவான வசனங்கள் அனைத்தும் அந்த படம் ஓட வேண்டும் என்பதற்காக என்று நிருபித்துவிடீர்களே. உங்களின் என்னதிர்காகவே தான் அந்த படம் நீங்கள் நினைத்தது போல சரியாக போகவில்லை.