Pages

02/12/2013

வலைபதிவில் ரசிகர்களின் காமெடி


இப்பொழுதெல்லாம் நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்த இயக்குனர்கள் சிலர் நாம் பார்த்தால் தலைவலி வருகிற அளவுக்கு சில படங்களை எடுத்துவிட்டு அந்த படம் தோல்வி அடைந்த பின்னர் பேட்டி என்கிற பெயரில் நான் உலகத்தரமான படம் எடுத்திருக்கிறேன் ஆனால் அதை புரிந்துகொள்ள தமிழ் மக்களுக்கு அறிவு இல்லை என்று ஆவேசமாக பேசுவார்கள். அவர்கள் பேசுவதை பார்த்தல் நீ எடுத்த படம் ஓடுற தியேட்டரில் போய் இதை சொல்லு அப்பறம் தெரியும் உன் நிலைமை என்று நினைக்க தோன்றும்.

அதே போன்ற ஒரு காமெடி தான் நான் ஒரு அஜித் ரசிகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் போது நடந்தது. அது என்னவென்றால் பில்லா 2 தமிழ் சினிமாவில்  சிறந்த ஆக்க்ஷன் படங்களில் ஒன்றாம் அதை ரசிக்க நமக்கு தான் அறிவு போதவில்லை அதனால் தான் பில்லா 2 படம் படு தோல்வி அடைந்ததாம். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படம் வரும்போது கேவலமாக இருந்தாலும் அது சூப்பர், நல்ல படம், தாறுமாறு , இந்த வருடத்தின் நம்பர் ஒன் ஹிட் என்றெல்லாம் முகபுத்தகதிலும் , வலைபதிவிலும், ட்விட்டரிலும் எதாவது உளறுவார்கள். இதெல்லம எதற்காக என்றால் நாம் இப்படி சொன்னாலாவது இதை பார்த்து யாரவது படத்தை பார்க்க மாட்டார்களா என்று ஒரு நப்பாசை தான்.




ஆனால் பில்லா 2 வெளிவந்து தோல்வி அடைந்து பல நாட்கள் ஆகி அது அனைவருக்கும் தெரிந்த( இயக்குனர் சக்ரி டொல்ட்டி, அஜித் உள்பட) நிலையில் அஜித்தின்  ரசிகர்கள்  சிலருக்கு மட்டும் தெரியவில்லை போலும் அதனால் தான் இத்தகைய காமெடி நடந்திருகிறது. இதை சொன்னவர் பேஸ்புக்கில் தனக்கு பிடிக்காத நடிகரின் படங்களை வேண்டுமென்றே கேவலமாக எழுதும் சிறுவர் இல்லை என்னை விட வயதில் பெரியவர் அதுவும் வலைபதிவு  எழுதும் ஒரு ப்ளாக் சொந்தகாரர்( இருக்காத பின்னே வலைபதிவில் பொதுவான மக்களுக்கு பயன்படும் வகையில் எதாவது எழுதினால் இது போன்ற சில பொதுவான விஷயங்கள் தெரிந்திருக்கும் அதை விடுத்தது தனக்கு பிடிக்காத நடிகரை பற்றி தவறாக எழுதுவதற்காகவே ஒரு வலைப்பூ நடத்திவந்தால் அவருக்கு பிடித்த நடிகர் நடித்த படம் மொக்கையாகவே இருந்தாலும் அது சூப்பர் என்றும் பிடிக்காத நடிகர்  நடித்தது நல்ல படமாக இருந்தாலும் மோசமான படமாக தானே தெரியும்) இப்படி ஒரு பெரிய மனுஷன்??? எழுதினால் என்னை போன்ற சிறுவர்கள் என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள்.

சரி இதே போன்று மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகரின் மோசமான படங்களை சிறந்த படம் என்று சொன்னால் எப்படி இருக்கும்??? இதோ நீங்களே பாருங்கள்....

ரஜினி ரசிகர்கள்





பாபா ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் ஜப்பானில் மட்டும் ரிலிஸ் செய்திருந்தால் கூட படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் ஆனால் தமிழ் நாட்டில் ரிலிஸ் செய்ததால் தான் படம் தோல்வி அடைந்தது. தமிழர்களுக்கு வித்தியாசமான(???) படங்களை ரசிக்க தெரியவில்லை...

:கவுண்டமணி  டேய் கரடி தலையனுங்களா பாபா எந்த அளவுக்கு சிறந்த படம்னு அமெரிக்காவில் இருந்த ஒரு சாமியாரை சத்யம் தியேட்டரில் முதல் ஷோ காட்டி அவர் உயிரையே பரித்தாரே ரஜினி அவரை கேட்டு பாருங்கள் தெரியும்...

கமல் ரசிகர்கள்




மன்மதன் அம்பு சிறந்த படம் அது எங்கள் உலக நாயகனின் கமல் கை வண்ணத்தில் உருவாகிய படம். அதன் அருமை தமிழ்நாட்டில் உள்ள சிறு அறிவு படைததவர்களுக்கு தெரியாது இவர்களுக்கெல்லாம் 4 சண்டை, 5 பாடல் இருந்தால் போதும் எங்கள் கமல் படத்தை ரசிக்கும் அளவுக்கு தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அறிவு போதவில்லை எனவே இனிமேல் கமல் படத்தை நாங்கள் அமெரிக்காவில் ரிலிஸ் செய்யபோகிறோம்.

கவுண்டமணி: அவர் படத்துல அவருக்கே புரியாத சீன்ஸ் எல்லாம் உங்களுக்கு தான் விளகக்கமா புரியுது பேசாமல் நீங்கள் படம் எடுக்க போய் விடுங்கள். ஆனால் ராசாக்களா கமல் ஆசிர்வாதத்தில் படம் எடுக்கிறேன் என்று கள்ளத்துப்பாக்கி என்ற ஒரு உலக மகா படத்தை எடுத்தாரே ஒருவர் அவரை போல எடுத்துவிடாதீர்கள் அப்பறம் கமல் சொன்னதை போல நாங்களும் தமிழ் நாட்டை விட்டு வெளியேரப்போறோம் என்று சொல்லவேண்டி வரும்.

விஜய் ரசிகர்கள் 




தளபதி நடித்த சுறா படம் இந்தியாவிலேயே கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த மாதிரியான மக்களுக்காக   உழைக்கும் படங்களில் நடித்து எங்கள் தளபதி அரசியலில் உயர்வடைய கூடாது என்று  சதி நடக்கிறது. எங்கள் தளபதி தடைகளை உடைத்து முன்னேறுவார்.

 கவுண்டமணி:  சுறாவா!!!!!.... ஆஆஆ...... கேக்கும்போதே காதுல கடப்பாறைய விட்டமாதிரி இருக்கு... ஏன்டா டேய் கருவாட்டு தலையா நானே இப்பதான் அந்த அதிர்ச்சியில இருந்து வெளிவந்து ஒன்னு ரெண்டு விஜய் படம் பாக்க ஆரம்பிச்சிருக்கேன் அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்குறியா ? டை என் கண்ணுல நீ மாட்டுன திரும்பவும் வில்லு படத்த உனக்கு போட்டு காட்டுவேன்  போடா டா ...

முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சொல்வதை பார்த்தீர்கள் இப்போது முன்னனணி நடிகராக தன்னை நினைத்து கொண்டு நம் உயிரை வாங்கும் சிலரின் ரசிகர்கள் சொல்வதை விட அந்த நடிகர்களே அதை விட நன்றாக காமெடி பண்ணுவார்கள் பாருங்கள் ...

பவர் ஸ்டார்




நான் எடுத்த லத்திகா படம் அணைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்ர்து உள்ளது அதனால் தான் அந்த படம் 200 நாள் ஓடியது(???). லத்திகா படத்தை பார்த்து என் நடிப்பை பாராட்டி ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பாராட்டினார்கள் அவ்வளவு ஏன் சல்மான் , ஷாருக், ஹிருத்திக்ரோஷன் போன்ற ஹிந்தி நடிகர்கள் எல்லாம் தனது படங்களில் நடிக்க கூப்பிட்டனர் நான் தான் வேண்டாம் என் சேவை தமிழ் நாட்டு மக்களுக்கு தான் தேவை என்று ஒதுங்கிவிட்டேன்.

கவுண்டமணி: ஆமா ஜாக்கி ஜான் கூப்டாகோ, வில்ஸ்மித் கூப்டாகோ, டாம்க்ரூஸ் கூப்டாகோ என்னடா கலர் கலரா ரீல் விடுற அந்த மூஞ்சிய அந்த பக்கம் திருப்புடா உன்னயெல்லாம் எப்படி தான் மக்கள் சகிசிக்ரான்களோ!!! பல்ல பாரு மண்வெட்டி மாதிரி இதுல சிரிப்பழகன் மாதிரி அத எப்பவுமே வெளிய தான் காட்டினு இருபியா வாய மூட்ரா ... வாயா மூட்ரா செனப்பணி நாயா பிரசவத்துக்கு இலவசமா போற மாதிரி வயிர வச்சிக்கிட்டு படத்த பத்தி பேசறான்.

 சாம் ஆண்டர்சன்




நான் நடித்த யாருக்கு யாரோ படத்தில் நான் ஆடியிருக்கும் நடனத்தை பார்த்து விஜய், சிம்பு தனுஷ் போன்றோர் என்னை பாராட்டியது மிகவும் மகிழிசியாக உள்ளது அதிலும் மைகேல் ஜாக்சன்( சார் அவர் இறந்து விட்டார். ஓ அமா இல்ல மறந்துட்டேன்) மற்றும் பெரிய நடன கலைஞர்கள் எல்லாம் என்னை பாராட்டிய பொழுது எனக்கு அப்பவே இறந்து விடலாம் போல அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

கவுண்டமணி:   உரத்த குரலில் அப்பறம் ஏன்டா நாயே சாகல???... இருந்து ஏன்டா எங்க உயிர வாங்குறிங்க... 

சாம் ஆண்டர்சன்:   அண்ணே அது வந்து.....

கவுண்டமணி: (நக்கலாக) டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியாதுன்னு நெனைக்றேன்... 

செந்தில்: அண்ணே யாருனே இது ஹாலிவுட் ஹீரோ மாதிரியே இருக்காரு உங்க relative வா ன்னே???

கவுண்டமணி:  (சாம் ஆண்டர்சன் கவுண்டரை பார்த்து சிரிக்கிறார்.... ஹிஹிஹி... ) சாம் ஆண்டர்சனின் வாயை கைவைத்து மூடிவிட்டு நீ போ உன்ன அப்பறம் பாத்துகறேன் முதல்ல இந்த கொசுவ அடிக்றேன்... 
( கவுண்டமணி செந்திலை பார்த்து சிரிக்கிறார்)

செந்தில்: என்னென்னெ ரொம்ப சந்தோஷமாக இருக்றீங்க போல இருக்கு?

கவுண்டர்: அமா ராசா வா வா இப்படி வந்து ஒக்காரு... ஏன்டா பரதேசி நாயே அவன பாத்தா என் சொந்தக்காரன் மாதிரி தெரியுதா? (எட்டி எட்டி உதைக்கிறார்... செந்தில் அண்ணே அண்ணே என்று அலறுகிறார்.)
அதுல இங்கலிசு வேற சொல்லுவியா சொல்லுவியா...
( செந்தில் எழுந்து ஓடுகிறார்)
போ போ... இனிமே என்கிட்டே வந்த படுக்க வச்சு குறுக்கெலும்ப மிதிச்சிபுடுவேன் டப்சா தலையா ....

( செந்திலும் சாம் ஆண்டர்சனும் ஒன்றாக கை கோர்த்து இளித்துகாட்டிவிட்டு ஓடுகின்றனர்) 

கவுண்டமணி: ( கல்லை எடுத்து எரிந்து ) அடிங்க டேய் இனம் இனத்தோட சேந்துட்டீங்கலாடா படுவா உங்கள அப்பறம் பாத்துகறேன்... நீங்க மட்டும் கைல கெடச்சிங்க உங்கள.... ஐயோ தனிய பொலம்ப விட்டுடாநுங்களே என்ன...