தென்னிந்தியா சினிமா நூற்றாண்டு விழா நேரு அரங்கில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவின் முன்னனணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு நடந்த அவமானம் தமிழ் சினிமா எந்த நிலையில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
தலைவா படத்தால் ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் நூற்றாண்டு விழாவிற்கு அழைக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்டது கடைசி நேரத்தில் விஜய் விழாவில் கலந்துகொண்டார். விழாவில் தமிழ் சினிமா பற்றி திரையிடப்பட்ட ட்ரைலரில் முன்னணி நடிகராகிய விஜய் பற்றிய காட்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன.
தமிழ் சினிமாவின் சாதனை படங்களில் விஜயின் துப்பாக்கி படம் மட்டுமே காட்டப்பட்டது மற்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டன. மற்ற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களுக்கு வி ஐ பி வரிசையில் முன் வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த முன்னணி நடிகர் விஜய்க்கு கடைசி வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து பேச தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாருக்கும் தைரியமில்லை அனைவரும் வாயை மூடிகொண்டிருக்கும் பொது இளம் நடிகர்கள் பலர் விஜயை முன் வரிசையில் வந்து அமருமாறு அழைத்தனர் ஆனால் விஜய் தான் இங்கயே அமர்ந்து கொள்வதாக சைகையின் மூலம் தெரிவித்தார். விக்ரம் மட்டும் இவை எதையும் பொருட்படுத்தாமல் விஜயின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார். விஜயும் விக்ரமும் நெடு நேரம் பேசிகொண்டிருன்தனர்.
விஜயை அவர்கள் ஒதுக்கிய போதும் இன்று 100வது விழா பற்றி வெளியான அணைத்து நாளிதழ்களிலும் விஜய் முன்னிலை பெற்று இருந்தார். ட்விட்டரில் விஜய் இன் 100 தமிழ்சினிமா என்பது உலக அளவில் ட்ரண்டில் இருந்தது. விஜயை திட்டமிட்டு அவமானப்படுத்த முயன்றவர்கள் இதை பார்த்து விஜயின் தகுதியை தெரிந்து கொள்ளட்டும்.
இதை நான் எழுதுவதற்கு காரணம் விஜய் அவமானப்படுத்தப்பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. முன்னால் ஆட்சியில் அஜித் தன் மனதில் பட்டதை கூறியதற்காக அவரும் இதே நிலைக்கு தள்ளப்பட்டார். கோபால புறம் சென்று மன்னிப்பு கேட்டார் இருப்பினும் கோவை செம்மொழி மாநாட்டில் அவர்க்கும் ஷாலினிக்கும் கடைசி வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது அப்போது விஜய் மாதிரியே அவரும் அமைதியாக அமர்ந்து சென்று விட்டார். கமலுக்கு விஸ்வரூபம் பிரச்சனையில் பல முன்னணி நடிகர்களும் இதே போன்று அமைதி காத்தனர் ஆனால் விஷால் மட்டுமே தைரியமாக நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு ராதாரவியும் சரத்குமாரும் தாங்கள் என்னவோ பிற நடிகர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்பது போல விஷாலிடம் பல கேள்விகளை கேட்டனர். ஆனால் பின்னர் ஏற்பட்ட தலைவா பிரச்சனையில் விஷால் கூறியது சரியானதே என்று தெளிவாக தெரிந்தது.
தமிழ் நாட்டில் இனிமேல் படம் எடுத்தால் முதலில் முதலமைச்சர் பின்பு அணைத்து மத தலைவர்கள் அப்படி அனைவருக்கும் போட்டு காண்பித்து அவர்கள் அனுமதி பெற்ற பின் தான் படம் வெளியிட வேண்டும் போல் இருக்கிறது அப்படி ஒரு நடிகன் தன் விருப்பம் போல வெளியிட்டால் விஜய்க்கு ஏற்ப்பட்ட நிலை தான் போல இந்த லட்சணத்தில் தமிழ் சினிமா சுதந்திரமாக செயல் படுகிறது என்று வாய்கூசாமல் பொய் வேறு சொலிக்கொண்டு திரிகிறார்கள். இது அஜித் விஜயோடு நின்று விட போவது இல்லை மற்ற நடிகர்களுக்கும் தொடரும் அன்று அஜித்துக்கு இந்த நிலை ஏற்ப்பட்ட பொது அவர் ரசிகர்கள் மட்டுமே போராடினர் இன்று விஜய்க்கு ஏற்பட்ட பொது விஜயின் ரசிகர்கள் மட்டுமே போராடுகின்றனர்.
இந்த நிலை மற்ற நடிகர்களுக்கு வரும் போதும் இதே தான் நடக்க போகின்றது இதனால் தமிழ் சினிமாவின் நிலை என்ன ஆகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகிய கமல், விஜய் , அஜிதுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற இளம் நடிகர்களின் நிலை என்ன என்று தமிழ் சினிமாவை சேர்ந்த அனைவரும் யோசித்து பார்க்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தாள் அரசியல் வாதிகளுக்கு அடிமைகளாக தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்ப்படும்.