தீபாவளி வெளியிடாக பல படங்கள் முதலில் கூறப்பட்டன. அனால் பல படங்கள் ரிலீஸில் இருந்து பின் வங்கி கொண்டான இப்போதைக்கு ரிலிஸ் ஆககூடிய நிலையில் விஜயின் துப்பாக்கியும், சிம்புவின் போடா போடியும் மட்டுமே உள்ளது.
விஜய் தொடர் தோல்விகளுக்கு பிறகு காவலனில் தன்னை நிருபித்தார். அதற்கு பின் வந்த வேலாயுதம் அவருக்கு மிகபெரிய வெற்றியை கொடுத்தது. வசூலில் வெற்றி பெற்று தனக்கான இடத்தை நிலை நிறுத்திக்கொண்டார். நண்பன் அனைவருக்கும் பிடித்த படமாக அமைந்தது. வசூலிலும் முன்னிலை வகித்து அனைவராலும் பாராட்டப்பட்டது. கடைசி முன்று படத்தின் வெற்றி தந்த தெம்புடனும் பெரும் ரசிகர் பட்டாளதுடனும் முருகதசுடன் கை கோர்த்த படம் துப்பாக்கி. விஜயின் நடிப்பு, முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் இசை, என எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு கூகிள் என்ற பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிம்பு வானம், ஒஸ்தி போன்ற தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இரண்டு வருட எதிர்பார்ப்பு, சிம்புவின் துள்ளலான நடிப்பு, சரத்குமார் மகள் வரலட்சுமியின் முதல் படம் ஆகியவற்றுடன் வெளி வருகிறது போடா போடி. சிம்புவின் குரலில் லவ் பண்லாம பாட்டு ஹிட்டாகியுள்ளது குரிப்பிடதக்கத்.
தீபாவளி ரேசில் எது வெற்றி பெறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.