இப்பொழுது இதற்க்கு தங்க மகன் என்று பெயர் வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சத்யா மூவீஸ் எடுத்த இப்படம் ரஜினியின் நடிப்பில் ஹிட்டானது. அதே தலைப்பை விஜய் டீம் பயன்படுத்த போவது குறித்து பலரும் இணையங்களில் கருத்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
விஜய் நாளையதீர்ப்பு படத்தில் அறிமுகமாகி 20 வருடங்கள் கடந்துள்ளார். ஆரம்பத்தில் காதல் கதைகளில் நடித்து பெண்கள் மனதை கொள்ளை கொண்ட இவர். திருமலை படத்தின் மூலம் அதிரடி நாயகனாக மாறினார். அதற்கு பிறகு வந்த கில்லி இவரின் தலைசிறந்த படமாக அமைந்தது. விஜய்க்கு ஸ்டார் என்ற பட்டதையும் பெற்று தந்தது . இந்த படத்திலிருந்து இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர் இவரின் படத்தை குடும்பத்துடன் பார்க்கும் படம்மகவும் இளைனர்களுக்கு பிடித்த விதமாகவும் அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் அமைந்தது. அதற்கு பிறகு திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, சச்சின் போன்ற தொடர் வெற்றி படங்களில் நடித்தார்.ரஜினியின் பார்முலாவை பின்பற்றிய இவர் படங்கள் பெரிய வெற்றி படமாக அமைந்தன. இவருக்கு ரசிகர்கள் அதிகமாக பெருகினர்.
அதற்கு பிறகு ஏற்பட்ட சருக்களால் காவலன் படத்தில் மீண்டும் காதல் கதையில் நடித்தார். விஜயை வித்தியாசமாக அந்த படம் காட்டினாலும் அது மற்ற விஜய் படங்களை போல் பெரிய வெற்றி பெறாமல் சுமார் வெற்றி பெற்றது. வேலாயுதம் மூலம் மீண்டும் தனது ஸ்டைலில் அதிரடியாக நடித்து வெற்றியும் பெற்றார். தொடர் தோல்வியில் இருந்த அவருக்கு காவலனை விடவும் வேலாயுதம் பெரும் வெற்றியை தந்தது.இதன் மூலம் மீண்டும் அவர் தன்னை நிருபித்தார் அதற்கு பின் வந்த நண்பன் பலரின் நல்ல விமர்சனங்களுடன் வந்து அனைவருக்கும் பிடித்த வண்ணம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய் நடிப்பில் மற்றொரு பரிமாணத்துக்கு சென்றார்.
அனால் அது ஷங்கர் இயக்கியதால் அந்த வெற்றியின் பெரும் பங்கு அவருக்கு சென்றது. நண்பன் விஜய் படம் என்பதை தாண்டி ஷங்கர் படம் என்றும் கூறப்பட்டது. விஜய் மிலிட்டரி ஆபிசராக நடித்த துப்பாக்கி பெரும் வெற்றி பெற்றது. வேகமான முருகதாசின் திரைகதை விஜயின் ஸ்டைலான நடிப்பு என துப்பாக்கி 2012-இன் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.
ரஜினி துப்பாக்கி படத்தை இரண்டு தடவை பார்த்து நன்றாக இருப்பதாக கூறினார். துப்பாக்கி தந்த வெற்றியுடன் தெய்வதிருமகள் விஜய்யுடன் நடிக்க சென்றார் விஜய். விஜயின் 20 வருட சினிமா துறை சாதனைக்கு பொருத்தமாக தங்க மகன் இருப்பதாகவும் கருதுகிறார்களாம் விஜய் தரப்பு.