Pages

02/11/2013

ஆரம்பம் (இதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு)


இது தான் நான் எழுதும் முதல் விமர்சனம் பிழை ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்.....


நான் விஜய் அஜித்தின் படங்கள் எதையும் முதல் காட்சி பார்க்க மாட்டேன் ஏன் என்று உங்களுக்கே தெரியும் இருவருமே எப்போது சொதப்புவார்கள் என்று தெரியாது. எனவே ஆரம்பம் படத்தை ரிசல்ட் தெரிந்து கொண்டு பார்க்கலாம் என்று நினைத்தேன் நானும் விமர்சனம் என்று நெட்டில் தேடினால் அஜித் ரசிகர்கள் மட்டும் தான் விமர்சனம் எழுதியிருகிரார்கள். அவர்கள் படத்தை விட அஜித்தை புகழ்ந்து எழுதியிருகிரார்கள் ஆனால் படம் எப்படி உள்ளது என்று தெளிவாக சொல்லவில்லை. சரி படம் பார்த்துவரும் நண்பர்களை கேட்கலாம் என்று கேட்டால் அதிலும் குழப்பம் தான். அஜித் ரசிகர்கள் படம் சூப்பர் என்று சொல்கிறார்கள். விஜய் ரசிகர்கள் படம் நன்றாக இல்லை என்று சொல்கிறார்கள் பொதுவான சிலர் பில்லா 2 படத்துக்கு இது பரவாயில்லை ஒரு தடவை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். எனக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது என்ன ஆனாலும் சரி படத்தை  பார்த்துவிடுவது என்று முடிவு செய்து பார்த்துவிட்டேன்.

 படத்தை பார்த்தபின்பு இதற்கு விமர்சனம் எழுதலாமா வேண்டாமா என்று எனக்கு குழப்பமாக  இருந்தது என்னடா முதல் விமர்சனம் எழுத போறோம் இதை பாசிடிவாக ஆரம்பித்தால் தானே நன்றாக இருக்கும் என்று நினைத்து எழுத வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் படத்திற்கு அஜித் ரசிகர்கள் எழுதிவரும் விமர்சனங்களை பார்த்தல் இவர்கள் நல்ல படம் பார்த்ததே இல்லையா ஏன் இப்படி எழுதுகிறார்கள் அஜித்தை புகழுகிரார்கள் அது சரி தான் ஆனால் படத்தை ஏன் இப்படி புகழுகிரார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கூட 3 ஸ்டார்கள் தான் தரப்பட்டுள்ளன.
இதற்க்கு ஏன் இவ்வளவு விளம்பரம் என்று நினைத்து எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

இதோ உங்களுக்கு விமர்சனம்...


கதை என்று பார்த்தல் நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் அதே பழைய கதை தான் அதில் ஹேக்கிங் போன்ற சில புது விஷயங்களை ஆங்காங்கே தெளித்து அஜித்தை வைத்து சமாளித்து இருக்கிறார். முதல் பாதியில் ஆர்யா காட்சிகள் எல்லாம் கண்றாவியாக இருகின்றன. அஜித்தை காட்டும்போது மட்டும் நன்றாக இருக்கிறது. அஜித் முதல் பாதியில் ஆர்யாவை கடத்தி செய்யும் வில்லத்தனமான காட்சிகளை பார்த்ததும் ஆஹா அதே கேட்டவன் கதையா என்று யோசிக்க தோன்றியது. ஆர்யா அஜித்தை போலீசில் சிக்கவைத்து விட்டபின் உனக்கு இது தான் முடிவு  என்று சொல்லும்போது அஜித் இனி தான் ஆரம்பம் என்று சொல்கிறார்.




அஜித்தே சொல்லிவிட்டார் இனிமேல் படம் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதும் இல்லை என்றாகிவிட்டது. அஜித்தை போலிஸ் கைதுசெய்தபின் அஜித் யார் இதெல்லாம் ஏன் செய்கிறார் என்று ஒரு பிளாஷ்பேக் காண்பிக்கபடுகிறது. கேப்டன் படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு வந்தது அஜித் போலிஸ் அதிகாரி ரானா அவரது நண்பர் ஒரு தீவிர வாத தாக்குதலில் ரானா இறந்துவிடுகிறார். அதற்கு பின்பு தான் தெரிகிறது புல்லட் ப்ரூப் உடையில் ஊழல் நடந்திருப்பது. அதற்க்கு பழி வாங்க தான் அஜித் இதனையும் செய்கிறார் என்று சொல்லி முடிக்கபடுகிறது. இதை ஆர்யா தெரிந்தகொண்டபின் அஜித்துக்கு உதவுகிறார்.



இதற்கு பின்பு நடப்பவை எதிலும் லாஜிக் இல்லை அஜித் நாடு ரோட்டில் ஒரோ ஆபிசரை கொன்றுவிட்டு ஹாயாக நடந்து வெளி நாடு செல்வார் சுவிஸ் பேங்க் லாக்கரை ஆர்யா சுலபமாக கைப்பற்றுவார். கடைசியில் ஊழல் பணத்தை திருப்பி தர வைத்து ஒரு மெசேஜ் சொல்லி படத்தி முடிகிறார்கள்.இதில் நயன்தார உள்ள ஒரு காட்சி ஆபாசதுக்காக கதைக்கு தேவையே இல்லாமல் தினிக்கபட்டிருகிறது. படத்தில் அஜித்தை தவிர சொல்வதற்கு ஒன்றுமே இல்லை முதல் பாதியில் அஜித்தை நடக்கவிட்டு ஒட்டியிருகிரார்கள். இரண்டாவது பாதியில் அதுவும் இல்லை.

மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் படத்தை அஜீத்துக்காக கொண்டாடலாம்  ஆனால் மற்றவர்கள் ஒரு தடவை பார்க்கும் வகையில் தான் உள்ளது. ரிபிட் ஆடியன்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அஜித் ரசிகர்கள் மட்டும் பார்த்து கொண்டாடும் வகையில் ஒரு ஆவரேஜ் படமாக வந்துள்ளது.

எனது மதிப்பெண்: 40/100

17 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே. நீங்களாவது உண்மையை எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. unnmaia? narayanan chrompet

    ReplyDelete
  3. ஜித்தன் மல்லு2 November 2013 at 17:00

    அந்த ரம்பத்த நேத்து பார்த்து பின்னாடியே சிரித்ததனால் ரத்த வாந்தி வந்துடுச்சு....
    இதுக்கு ஏண்டா இவ்வளவு பில்ட்அப்.....கொய்யாலே...

    ReplyDelete
    Replies
    1. பில்லா 2 படத்தை பார்த்து நொந்து போன அஜித் ரசிகர்களுக்கு அதை விட சற்று நன்றாக உள்ள இந்த படத்தை ஆஹா ஓஹோ என்று கொண்டாடுகிறார்கள்.... ஆனால் மற்றவர்களுக்கு இது ஒரு சராசரி படமே...

      Delete
    2. தம்பி நல்லா இருக்கேடிச்சேன்.. படம் ரிலிஸ் ஆனதுல இருந்து தூங்கியிரக்க மாட்ட உன்னை போன்ற காக்கா மாமாவின் ரசிகர்களை பார்த்தால் பரிதாபமா இருக்கு தம்பி எப்பிடு தம்பி சாப்பாடெல்லாம் எறங்குதா

      Delete
    3. ரஜினி ரசிகர்கள் சில சமயங்களில் ஓவராக பேசுவதை பார்க்கும் பொது எனக்கு எரிச்சலாக வரும்... ஆனால் இப்போது தான் புரிகிறது அவர்கள் பேசுவதில் தவறே இல்லை என்று. ஆரம்பம் படத்துக்கே வெள்ளை பன்றி மாமா ரசிகர்கள்( நானாக யாரையும் தவறாக பேசமாட்டேன் ஆனால் பிறர் என்னிடம் என்ன தருகிறார்களோ அதையே தான் நானும் திருப்பி தரமுடியும் ஒருவேளை உங்கள் மனம் புண்பட்டால் மன்னிக்கவும்) இப்படி பேசும்போது ரஜினி ரசிகர்கள் பேசுவது தவறே இல்லை... அப்பறம் நான் மிக அதிகமாக தூங்குகிறேன் என்று காலையில் கூட எங்கள் வீட்டில் என்னை திட்டினார்கள்.

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ எழுதியிருக்கும் லட்சணத்தை பார்த்தாலே தெரிகிறது உன் தகுதி நீயெல்லாம் மற்றவர்களை தகுதி இல்லை என்று சொல்கிறாய் முதலில் நாகரீகமாக பேசுவது எப்படி என்று உன் அம்மா அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டு வா... கேவலமான ஜென்மமே....

      Delete
  5. Aarambam all centers super hit...

    ReplyDelete
    Replies
    1. நான் படம் தோல்வியா வெற்றிய அன்பதை பற்றி ஏதும் பேசவில்லையே படத்துக்கு அன் பார்வையில் விமர்சனம் எழுதியிருக்கிறேன் அதில் தவறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்

      Delete
    2. தம்பி சிவகார்திகேயன் படத்தூக்கு விமர்சனம எழுதி அவர் ரசிகர்கள் கூட சண்டை போட டுரை பண்ணு உங்காலுக்கூ லட்டஸ்டா ஆப்பு அவர்தான் வைக்குறாரு மத்தபடு தல ரசிகர்கள் உன்னை போன்ற காக்கா மாமா ரசிகர்களை சீன்டகூட ;மாட்டாங் க எதுக்கு வெட்டுயா வயித்தெரிச்சலில் சாப்புடாம தூங்காம உன் உடம்பை கெடுத்துகிற

      Delete
    3. சிவகர்த்திகேயனே தொடர்ந்து ஹிட் கொடுதிருகாறு அவரை பற்றி பேச அஜித் ரசிகர்களுக்கு தகுதி கிடையாது. வயிதெரிச்சலா??? எதுக்கு அஜித் ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுதுட்டரா அதுக்காகவா??? ஹா... ஹா.... அவேரஜ் படம் கொடுத்ததுக்கே இந்த அளவு உளறுகிறீர்கள்.. தல ரசிகர்கள் சீண்ட மாட்டங்களா? தங்களுக்கு கண் தெரியவில்லையா? இங்கே இரண்டு அனானி கமெண்டை நீக்கியிருகிரேனே அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இரண்டு தறுதலைகள் வந்து ஆரம்பம் பார்த்துவிட்டு இங்கு வந்து வாந்தி எடுத்து வீட்டு சென்றுவிட்டது. அதும் கேவலமான வார்த்தைகளால்... அஜித் ரசிகர்கள் நல்ல நாகரீகம் அறிந்தவர்கள்... சரி வெள்ளை பன்றி மாமா ரசிகரே நீங்கள் அஜித் ரசிகர் இல்லையா.... நீங்கள் சீண்டாமல் போயிருக்கலாமே.... நல்ல படம் கொடுத்த விஷால் சும்மா இருக்கார் பில்லா 2 பார்த்து அதைவிட சற்று நன்றாக உள்ள ஒரு படம் வந்ததும் இவ்வளவு சத்தமா.... முடியல....

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. mokka rambam. padam waste.

    ReplyDelete
  8. thanku boss your comment is very true and nice. rambam rambam rambam.............................................................................................................................................rambam

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்