Pages

23/10/2013

அஜித் ரசிகர்களே என்ன தான் வேண்டும் உங்களுக்கு?


இந்த பதிவு பொதுவான விஷயங்களை பற்றியோ அல்லது எல்லாரும் படிக்க கூடிய பொதுவான பதிவு அல்ல ஒரு விஜய் ரசிகனாக விஜயை எதிர்க்கும் அஜித் ரசிகர்களுக்காக நான் எழுதும் பதிவு.

இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் சமீபத்தில் விஜய் பற்றி வந்த இரண்டு செய்திகளும் அவற்றை படித்த அஜித் ரசிகர்கள் நடந்துகொண்ட விதமும் தான். என்ன அந்த இரண்டு செய்திகள்? எப்படியும் பலரும்  படித்திருப்பீர்கள் படிக்காதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

1. விஜய் இனிமேல் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

2. தனக்கு இப்போது அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க உழைத்து கொண்டிருக்கிறேன் என்றும்  சொன்னார்.


மேல உள்ள இரண்டு செய்திகளும் பொதுவாக பார்க்கும் பொது அதில் தவறு என்று சொல்வதற்கு என்றும் இல்லை. அதிலும் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுப்பேன் என்று சொன்னதை திரையரங்கு உரிமையாளர் சங்கம்
நல்ல முயற்சி என்று சொல்லி பாராட்டியுள்ளது. ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் அது எப்படி தவறு என்று தோன்றுகிறது  என்று எனக்கு தெரியவில்லை. நான் எல்லா அஜித ரசிகர்களையும் சொல்லவில்லை அஜித் படம் வந்தால் உற்சாகமாக பார்த்து நன்றாக இல்லை என்றாலும் படம் தாறுமாறாக உள்ளது என்றும் மற்ற நடிகர்களின் படம் வந்தால் பிடித்தால் நன்றாக உள்ளது பிடிக்கவில்லை என்றால் நன்றாக இல்லை என்று சொல்லும் அஜித் ரசிகர்களை நான் இங்கு சொல்லவில்லை.

விஜய் படம் வந்தாலோ அல்லது விஜய் பற்றி எதாவது செய்தி வெளியானலோ அது நல்லதோ கேட்டதோ விஜயை கிண்டல் செய்வதாலேயே தன்னை  அறிவாளியாக நினைத்துகொள்ளும் சிலருக்கு தான் இந்த பதிவு.

விஜய் அஜித் படங்களில் அஜித்தை விட விஜய் சற்று அதிகமாக ஹிட் கொடுத்துள்ளார் என்று யாராவது சொன்னால் போதும் உடனே இவர்களுக்கு மூக்கு வியர்த்துவிடும், சாப்பாடு இறங்காது தூக்கம் கூட வரத்து போலும் அங்கு வந்து அணைத்து படங்களும் ரீமேக் சொந்தமாக விஜயால் ஹிட் கொடுக்க முடியாது என்று சொல்லி ஆறுதல் அடைவார்கள். ரீமேக் படங்களில் நடித்தாலே படம் ஹிட் என்று மக்கள் நினைப்பது போலும் நல்ல இல்லை என்றாலும் ரீமேக் படங்களை மக்கள் ஹிட் ஆக்கிவிடுவார்கள் என்றும் ரீமேக் படங்களில் நடிப்பது என்னவோ பெரிய பாவச்செயல் போலவும் பேசுவார்கள். ரீமேக் படம் நடித்து ஹிட் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை என்றால் தமிழ் நாட்டில் நிறைய ரீமேக் படம் வந்திருக்கிறது அவை அனைத்தும் ஹிட் ஆகியிருக்க வேண்டுமே? ஆனால் ரஜினி விஜய் நடித்த ரீமேக் படங்கள் மட்டுமே அதிகமாக ஹிட் ஆகியிருக்கின்றன. ரீமேக் படமே என்றாலும் அதையும் மக்கள் விரும்பும் வன்னம் எடுத்தால் தான் ஹிட் ஆகும். அஜித் கூட பில்லா,ஏகன், கிரீடம் போன்ற ரீமேக் படங்களில் நடித்தார். அவை அனைத்தும் ஹிட் ஆகிவிட்டனவா என்ன?... ஆங்கிலத்தில் வெளியான ஹிட் படமாகிய ஸ்கார் பேஸ் படைத்தை அப்படியே ஸ்டில் முதற்கொண்டு காப்பி அடித்து எடுத்தார்கள் அதுவும் ஹிட் ஆகவில்லை. இந்நிலையில் ரீமேக் படங்களில் நடிப்பது என்னவோ அவ்வளவு எளிமையான செயல் போன்று இதுவரை வந்தார்கள் அவர்கள் வாயை அடைக்கும் விதமாக தான் விஜய் இனிமேல் ரீமேக்  படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னார்.


சரி இதோடு விட்டு விடுவார்கள் என்று நினைத்தால் விஜய்க்கு அதிகமாக ஹிட் கொடுத்ததே ரீமேக் படம் தான் இனிமேல் அவர் படம் ஓடாது என்று கிண்டல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். ரீமேக் படங்களில் நடித்தாலும்  குற்றம் நடிக்க மாட்டேன் என்று சொன்னாலும் குற்றமா என்ன தான் வேண்டும் அஜித் ரசிகர்களே???....

விஜய் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வந்தபோது இவர்கள் விஜய்க்கு அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது?, இவரால் தமிழ் மக்களுக்கு என்ன நல்லது செய்யமுடியும்? என்றெல்லாம் கேட்டார்கள். இப்போது என்னவோ தகுதியானவர்கள் மட்டும் தான் அரசியலில் இருப்பது போலவும், விஜய் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு எதுமே செய்யமாட்டார் என்று இவர்களுக்கு அசரிரி வந்து சொன்னது போலவும் பேசுவார்கள். இப்பொது விஜய் தனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று சொன்னதும் அதை வைத்து கிண்டல் செய்கிறார்கள். அரசியலுக்கு வருவதாக இருந்த்காலும் தவறு அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தவறா என்ன தான் வேண்டும் அஜித் ரசிகர்களே???...

விஜய் வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க விரும்புகிறேன் என்று சொன்னார் அதற்க்கு அழிந்து வரும் திரையரங்குகளை காப்பாற்ற ஒவ்வொரு பெரிய நடிகரும் மூன்று படங்களாவது நடிக்க வேண்டும் நல்ல முடிவு என்று
திரையரங்கு உரிமையாளர்கள் பாராட்டினார்கள். சும்மா விடுவார்களா அது எப்படி விஜயை பாராட்டலாம் இந்த உலகிலேயே அவர் மட்டும் தானே கேட்டவர் அவரை பாராட்டுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும் இவர்களால். அங்கேயும் வந்து விஜய் எதனை படம் படித்தாலும் பிளாப் தான் ஆகும் இதுக்கு எதுக்கு பாராட்டு என்று குலைத்து விட்டு போகிறார்கள். அதாவது விஜய் நடித்தால் படம் ஹிட் ஆகும் அதிக வசூல் வரும் என்று நினைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் எல்லாம் முட்டாள்கள் அவர்கள் எல்லாம் எதுவும் தெரியாமல் விஜயை வைத்து படம் எடுக்கிறார்கள் இவர்கள் மட்டும் தான் அறிவாளிகள் இவர்களுக்கு தான் யார் நடித்தால் படம் ஹிட் ஆகும் யார் நடித்தால் தோல்வி பெரும் என்று நன்றாக தெரியும் என்பது போல பேசுவார்கள் நீங்கள் எதிர்த்து நியாயமான கேள்விகளை கேட்டுபாருங்கள் உடனே நீ  விஜய் ரசிகன் அறிவில் குறைந்தவன் நீங்கள் எல்லாம் இப்படி தான் முட்டாள் தனாமாக இருப்பீர்கள் என்று அவர்கள் உங்களுக்கு சான்றிதழ் தருவார்கள். விஜய் நடித்த படம் நன்றாக இருந்தால் பாருங்கள் இல்லை எனக்கு விஜயை பிடிக்காது என்றால் விட்டுவிடுங்கள் உங்களை விஜய் கையை பிடித்து இழுத்து வந்து படம் பாக்க சொல்கிறாரா நீங்களாகவே படம் பார்க்க போகும் முன்பே படம் நன்றாக இருக்காது இருக்க கூடாது என்று நினைத்து போனால் படம் நன்றாக இருந்தாலும் உங்களுக்கு அப்படி எதிர்மறையாக தான் தோன்றும். பிடிக்காதவர்கள் படம் பார்க்காமல் இருக்க வேண்டும் குறை கூற வேண்டும் என்றே பார்த்துவிட்டு பின்பு குறை கூறுகிறீர்கள் என்ன தான் வேண்டும் அஜித் ரசிகர்களே???...






இதை படிப்பவர்கள் மற்றவர்கள் விஜய் படங்களை பற்றி பேசவே கூடாத விஜய் ஒரு நடிகர் தானே அவரை பற்றி விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை உள்ளது என்று கேட்கலாம்.
நான் விஜய் படங்களை பற்றி எதுமே சொல்ல கூடாது என்று சொல்லவில்லை. சுறா படத்தை நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஏன் என்றால் காசு கொடுத்து பார்த்து தலை வலி வந்தால் கோபம் வரும்தான் எனக்கும் வந்தது ஆனால் துப்பாக்கி படத்துக்கு வந்து இந்த மாதிரி படத்தை என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது அவ்வளவு மோசமாக உள்ளது என்று சொன்னால் அவர்களை என்ன செய்யலாம் அவர்களே பில்லா 2 மாதிரியான படங்களை உலகத்தரம் என்று புகழ்ந்தால் நமக்கு எவ்வளவு கோபம் வரும். அப்படி தான் சில அஜித் ரசிகர்கள்           பில்லா 2,ஏகன்,அசல்,ஆழ்வார்,ஜனா, போன்ற அஜித் படங்களை படங்களை துப்பாக்கி, நண்பன், வேலாயுதம், காவலன் போன்ற விஜய் படங்களை விட நன்றாக இருக்கிறது என்று கோபம் வர மாதிரி காமெடி பண்ணும்போது சிரிப்பு வர மறுக்கிறது.

20 comments:

  1. நாட்டுக்கு முக்கியமான பதிவு இது...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது நாட்டுக்கு முக்கியமான பதிவு இல்லை தான் அதே போல விஜயை கிண்டல் செய்து எழுதுவதும் நாட்டுக்கு முக்கியமான பதிவு இல்லை தான் ஆனால் அதையே ஒரு வேலையாக சிலர் செய்யும் பொழுது உங்களை போன்ற நல்லவர்கள் எல்லாம் எங்கே போனீர்கள் என நான் தெரிந்து கொள்ளலாமா???

      Delete
  2. vijay anna always rocks and cute

    ReplyDelete
  3. Replies
    1. வருகைக்கு நன்றி மேடம்

      Delete
  4. ada ara loosu.....poi pozhappa paaruda

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி முழு லூசு அவர்களே...

      Delete
  5. Podang koyala.. poi pozhappa paaruda

    ReplyDelete
    Replies
    1. சொல்ல வருவதை நாகரீகமாக சொல்லுங்கள் அனானி அவர்களே

      Delete
  6. இந்த சினிமாகாரனுங்களுக்கு ஏன் இவ்வளவு பரிஞ்சு பேசுரீங்க...

    இத விட ஒரு முக்கியமான பிரச்சனை நம்ம நாட்டுல இல்லையா.

    சினிமால ஸ்டார் நு சொல்லிடு அலையுற எல்லா பொறம்போக்குகளும்(இதுல யாரயும் குறிப்பிட்டு சொல்லல, விஜய், அஜித் சேர்த்து தான்.) தனக்கு மட்டும் நல்லது நடந்தா போதும், அடுத்தவன் வாழ்க்கைல சுயமா யோசிச்சி முன்னேற விட மாட்டானுங்க.



    தயவுசெய்து திருந்துங்கள் நண்பர்களே.....

    ReplyDelete
    Replies
    1. நான் சினிமா காரங்களுக்கு மட்டும் இல்லை எனக்கு யார் யாரெல்லாம் பிடிக்கிறதோ அவர்களுக்காகவும் பேசுவேன் நண்பரே. எனக்கு பிடித்தவர் என்பதற்காக அவர் தவறு செய்தாலும் அவருக்கு சார்பாக் பேச மாட்டேன் இதே விஜய் தவறு செய்து அதை யாரவது சொன்னால் நான் எதுவும் கேட்க போவது இல்லை ஆனால் நல்லதோ கேட்டதோ அது விஜய் பற்றி இருந்தால் உடனே அதை தவறாகவே பேசும் சிலருக்கு தான் இந்த பதிவு.

      Delete
  7. ANTHA VESI MAKAN VIJAI KKU NEE JAALRAA PAADURAAYAA ?

    ReplyDelete
    Replies
    1. பிறரை இப்படி கேவலமாக பேசும் நீயும் அந்த மாதிரி ஒரு மகனுக்கு தான் ஜால்ரா போடுகிறாய்.

      Delete
  8. விஜய் கிட் கொடுத்திருக்கான் தான். எப்படி ??
    உன்னை மாதிரி முட்டா பயல்கள் அந்த வேசி மகன் விஜய் க்கு அல்லக்கைகளாக இருக்கும் போது ஒரு கிட் என்ன ஆயிரம் கிட் கூட கொடுக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. விஜய் என்னை மாதிரி முட்டாள்களை வைத்து ஹிட் கொடுத்தார் என்றால் அஜித் சூர்யா மற்ற நடிகர்களெல்லாம் யாரை வைத்து ஹிட் கொடுத்தார்கள். எங்களை போன்ற முட்டாள்களை வைத்து ஹிட் கொடுத்தார் என்றால் அஹே வெற்றியை ஏன் அவரது சுறா குருவி போன்ற படங்களுக்கு அவரால் தர முடியவில்லை. ரஜினியாகவே இருந்தாலும் அவரது ரசிகர்கள் மட்டும் பார்த்தல் படம் ஹிட் ஆகாது படம் நன்றாக இருந்தால் தான் ஹிட் ஆகும் அதை உங்களை போன்ற அறிவாளிகள் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

      Delete
  9. விஜயை தவறாக எழுதும் போது அவரது ரசிகர்கள் தவறாக திட்டினால் கேவலமாக பேசுகிறாய் நீயும் உன் விஜயை போல தானே இருப்பாய் என்கிறார்கள் சில அறிவு கொழுந்துகள் இங்கே வந்து விஜயை பற்றி கேவலமாக பேசும் அஜித் ரசிகர்களை நாங்கள் என்ன சொல்வது நீயும் உன் தறுதலையை போல தானே இருப்பை என்று சொல்லலாமா? நாங்கள் ஒன்றும் அப்படி சொல்ல போவது இல்லை சில நாய்கள் குலைப்பதற்கு அஜித் என்ன செய்வார் ஆனால் விஜயை பற்றி பேசும் சில அஜித் ரசிகர்களுக்கு இது புரிவது இல்லை.

    ReplyDelete
  10. என்ன இருந்தாலும் விஜயை விட அஜித் நல்லவர்.இதை ஒரு அஜித் ரசிகனாக சொல்லவில்லை பொதுவாக சொல்லுகிறேன்.ஏனெனில் அஜித் செய்த சில விசயங்களை வைத்தே சொல்லலாம்.உதாரணம் ஒரு நடிகன் ரசிகர் மன்றத்தை கலைக்க மாட்டன்,ரசிகர்மன்றம்தான் அவர்களின் முதுகெலும்பு.

    ReplyDelete
  11. நான் இங்கு அஜித்தை பற்றி தவறாக சொல்லவில்லை நண்பரே அவரது ரசிகர்கள் செய்யும் செயல்களை பற்றி தான் சொல்லியிருக்கேன்... அஜித் செய்ததை கமல் என்றோ செய்தார் ஆனால் நாம் இன்னும் ரஜினியை தானே சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறோம்.

    ReplyDelete
  12. Vijay is always great. it is very difficult to stand in action only but our thalapathy is standing in action flims only is great thing. any one can act in acting scop movie but it is impossible to stand in action flims only. ajith contain his fans in his personal life more than his movie but our thalapathi contain his fans in his movie only. ajith only is not good persion there are many peoples.

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்